ஏழாண்டில் நூற்றாண்டை எட்டஉள்ள கலைஞருக்குப் பிறந்தநாள் பெருமங்கல வாழ்த்து!

ஏழாண்டில் நூற்றாண்டை எட்டஉள்ள கலைஞருக்குப் பிறந்தநாள் பெருமங்கல வாழ்த்து!   வைகாசி 21, 1955 / சூன் 03, 1924 அன்று தட்சிணாமூர்த்தியாகப் பிறந்து கருணாநிதியாக மலர்ந்து கலைஞராக உயர்ந்துள்ள முதுபெரும் தலைவருக்கு  அதே வைகாசி 21 / சூன் 03 இல் 93 ஆம் பிறந்தநாள் பெருமங்கலம் வந்துள்ளது. தம் உரைகளாலும் எழுத்துகளாலும் படைப்புகளாலும் கோடிக்கணக்கான மக்களிடையே தமிழ் உணர்வை விதைத்து உரமூட்டியவர் என்ற நன்றிக்கடனால் மக்கள் இன்றும் அவருக்கு ஆதரவு தருகின்றனர். ஆளும் கட்சியாளராக ஆகவில்லை  என்ற வருத்தமும் வலிமையான எதிர்க்கட்சியாளரான…

தமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும்      தொன்மையான, சிறப்பான வரலாற்றுக்கு உரியவர்களாக இருந்தும் அவ்வரலாற்றை அறியாதவர்களாக வாழ்ந்து மடிவோர் யாரெனில் உலகிலேயே தமிழ் மக்களாக மட்டும்தான் இருக்க முடியும். நம் வரலாறு குறித்த அறிந்துணர்வு இல்லாததால்தான்,  மக்கள் நலன் குறித்த விழிப்புணர்வே நம் நாட்டவரிடம்  இல்லை. நம் பாடங்களும் நம் வரலாறு தெரியாதவர்களாகவே நம்மை உருவாக்குகின்றன. எனவே,  இப்பாடங்களின் அடிப்படையில் தேர்வுகள் எழுதி உயர் பொறுப்புகளுக்கு வருபவர்களுக்கும் தமிழ் மொழி, நாகரிகம், பண்பாடு, முதலான…

அதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே! – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே!    அதிமுக வெற்றி பெற்றதற்கு “வைகோவிற்கு நன்றி கூற வேண்டும்”, “விசயகாந்திற்கு நன்றி கூற வேண்டும்”, “இராமதாசிற்கு நன்றி கூற வேண்டும்” என்றெல்லாம் வஞ்சப்புகழ்ச்சியாகத் திமுக அன்பர்கள் கூறி வருகின்றனர். உண்மையில்,  ‘அதிமுகவின் ஆ அணி’ என மக்கள்  நலக்கூட்டணியைக் கூறிவந்த திமுகதான் அதிமுக துணை அணியாகச்  செயல்பட்டு அதனை வெற்றி பெறச் செய்துள்ளது என்பது வெள்ளிடை மலை.   அதிமுக, திமுக நேரடியாக மோதிய தொகுதிகள் 172இல்  அதிமுக 83 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. திமுக…

செய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்

செய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம்     முதலமைச்சர் செயலலிதாவின் நடைமுறைப்போக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அனைத்துத்தரப்பாராலும் பாராட்டத்தக்கனவாக உள்ளன. இந்நிலை தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர்.   முதல்வர் செயலலிதா பதவி யேற்பின் பொழுது வழக்கமான வெட்டுருக்கள் வழி நெடுக வீற்றிருக்கும் காட்சியைக்காண முடியவில்லை.   கூட்டுப் பொறுப்பிலுள்ள அமைச்சராக இருந்தாலும் அடிமட்டத் தொண்டனாக இருந்தாலும் அடி வீழ்ந்து தெண்டனிடும் அடிமைத்தனம்தான் மேலோங்கியுள்ளது. இத்தகைய, தன்னலம் சார்ந்த போலித்தனமான பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி இட நாம் வேண்டியிருந்தோம். மக்களுக்குச் சிறிதும் விருப்பமில்லா…

முன்மொழிவுப் பணத்தை வழங்க அறவழிப் போராட்டம் – பா.திருஞானம்

அறவழிப் போராட்டம்   பெருந்தோட்டத் தொழிற் சங்கப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, வைகாசி 13, 20147 / மே 26, 2016  அன்று கொழும்பு புறக்கோட்டை  தொடரிநிலையத்தின் முன்னால்   அறவழிப்போராட்டம் ஒன்றினை நடாததினர்.  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு செலவுத் திட்டதில் முன்மொழியப்பட்ட 2500.00  உரூபா வழங்கப்படாமை குறித்துப் பெருந்தோட்ட முதலாளிமார்  பேரவைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும். சம்பளப்பேச்சினை உடனடியாக  விரிவுபடுத்துமாறு கோரியும்  . அறப்போராட்டம் நடைபெற்றது. இதன் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண  அவை உறுப்பினர்கள்  முதலானோர்  கலந்து கொண்டார்கள். (பெரிதாகக்…

தெற்காசிய மண்டல அமைதி, கல்விக்கான ஆய்வரங்கு – பா.திருஞானம்

தெற்காசிய  மண்டல  அமைதி,  கல்விக்கான ஆய்வரங்கு   தெற்காசிய  மண்டலத்தின் தொடர்ச்சியான  அமைதியும் கல்வியும் : இலங்கை அரசும்  பன்னாட்டுச் சிறார் நிதியமும்(யுனிசெப்) இணைந்து நடத்திய ஆய்வு அரங்கு   வைகாசி 14, 2047 / மே 27, 2016 அன்று கொழும்பு இல்டன் உறைவகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம்,  மாநிலக் கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன்,  மாநிலஅமைச்சர் பௌசி,  ப.சி.நி. (யுனிசெப்) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள்  முதலான பலரும் பங்தேற்றனர்.  பர்பிங்காம் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி  இலின்டேவிசு, சசெக்சு பல்கலைக்கழகத்தினைச்…

எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது!

எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது!   தங்கள் ஆசைகளை மக்கள் கருத்துகளாகவும் கட்சித் தொண்டர்கள்  அல்லது பொறுப்பாளர்கள் கருத்துகளாகவும் கதைவிடும் இதழ்களில்,  செயலலிதா, எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு  மாநிலங்களவை உறுப்பினர் பதவி தந்து,  வாசனுக்குப் புத்தி புகட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 அகவை முதியவரான எசு.ஆர்.பாலசுப்பிரமணிம்போல் பதவி ஆசை கொள்ளாமல் கட்சி நலன் கருதுபவர் என இதன் மூலம் வாசனுக்குப் பெருமைதான் சேர்ந்துள்ளது.  காங்கிரசு அல்லது தமாகா வில் இருந்துகொண்டே அதிமுகவாக நடந்து கொண்ட எசு.ஆர்.பாலசுப்பிரமணியம் அக்கட்சியில் சேர்ந்ததே நல்லது. ஆனால், முதலில் அக்கட்சியில்…

குணக்குன்றர் குருமூர்த்தி வாழ்க நூறாண்டு! – இலக்குவனார் திருவள்ளுவன்

குணக்குன்றர் குருமூர்த்தி வாழ்க நூறாண்டு!    பதிப்பகங்கள், பணப்பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டும் செயல்படலாம். எனினும் தொடக்கக்காலப் பதிப்பகங்கள் இலக்கியப்பணிகளுக்கே முதன்மை யளித்தன. பழைய இலக்கியங்களையும் புதிய இலக்கியங்களையும் புலவர்களையும் இலக்கியவாணர்களையும் கவிஞர்களையும் கட்டுரையாளர்களையும் நூலாசிரியர்களையும் மக்களுக்கு அறிமுகப் படுத்துவன பதிப்பகங்களே! இலக்கியங்களின் தொடர்ச்சிக்குப் பாலமாகச் செயல்படுவன பதிப்பகங்களே! அத்தகைய பதிப்பகங்களில் குறிப்பிடத்தக்க சிறப்புடையது மணிவாசகர் பதிப்பகம்.  சீர்மிகு மணிவாசகர் பதிப்பகத்தில் ஒருவர் 40 ஆண்டுகளாகப் பணியாற்றுகின்றார் எனில், மிகச்சிறந்த இலக்கியத் தொண்டினைத் தொய்வின்றி ஆற்றுவதாகத்தானே பொருள்! அததகைய அருந்திறலாளர் குணக்குன்றர்  இராம.குருமூர்த்தி ஆவார்.  …

இலக்கியவீதியின் மறுவாசிப்பில் சுகி.சுப்பிரமணியன்

வைகாசி 25, 2047 / சூன் 07, 2016 இதயத்தில்வாழும் எழுத்தாளர்கள் : சுகி.சுப்பிரமணியன்   இலக்கியவீதி பாரதியவித்யாபவன் சிரீ கிருட்டிணா இனிப்பகம்

மானுடப்பேரவல நினைவேந்தல் – அ.ஈழம் சேகுவேரா

காலப்பெருந்துயர் பகிர்வும், மானுடப்பேரவல நினைவேந்தல் அறிக்கையிடலும்,     ஈழத்தின் இதயப்பண் போராளிக்கலைஞன்  மாநாயகர்(மேசர்) சிட்டு அவர்களின் குரலில், ‘நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது, அந்த நிலவும் வானில் இரவு நேரம் அழுதது. நத்திக்கடல் மௌனமாகக்கரைந்தது. வங்கக்கடல் கோபமாக இரைந்தது…’ என்று ஒலிக்கும் முல்லைத்தீவு வெற்றிச்சமர் நாயகர்களின் நினைவேந்தல் பாடல் காற்றைக்கிழித்து இசைக்க ஆரம்பித்ததும், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு  முதன்மைச் சாலையில் பயணித்தவர்கள் அனைவரும் தமது போக்குவரத்து ஊர்திகளை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, ‘விடுதலை’ எனும்  மாபெரும் மரத்திற்காகத் தமது உடல்களை இலட்சிய…

பிரித்தானியத்தலைமையர்(பிரதமர்) வாயிலில் அணிதிரண்ட தமிழர்கள் !

தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு விடை என்ன ? பிரித்தானியத்தலைமையர்(பிரதமர்) வாயிலில் அணிதிரண்ட தமிழர்கள் !   நல்லாட்சி என்ற பெயரில் சிறிலங்கா அரசினால் மூடி மறைக்கப்படும், நீடிக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் நோக்கில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது.   கடந்த ஞாயிறன்று (வைகாசி 09 / 22-05-2016) பிரித்தானியத்தலைமையர்(பிரதமரது) வாயில் தளத்துக்கு முன்னால் இடம்பெற்றிருந்த இக்கவனயீர்ப்புப் போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு செய்திருந்தது.  வெள்ளையூர்தி கடத்தல்கள், கைதுகள் எனச் சிறிலங்காவில் நீடிக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி இடம்பெற்றிருந்த…

1 2 14