இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26: ம. இராமச்சந்திரன்

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26 3.1 திருமண வாழ்த்து  ஆய்வாளர்க்குக் கிடைத்துள்ள கவிதைகளுள் காலத்தால் முற்பட்டது. திரு. அ. கிருட்டிணமூர்த்தி திருமண வாழ்த்துக் கவிதையாகும்.62 தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் நடைபெற்ற தருமணத்தின்போது பாடியது. பாடிய ஆண்டு ஒன்று ஒன்பது ஆயிரத்துக்தொள்ளாயிரத் முப்பத்தைந்து. இக்கவிதை நேரிசை ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது. முப்பத்திரண்டு அடிகளையுடைது. இக்கவிதை. திரு. அ. கிருட்டிணமுர்த்தி தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டை என்னும் ஊரைச் சார்ந்தவர். அருணாசலம் என்பவருக்கு மகனாகத் தோன்றினார். இளவயது முதலே தமிழை நன்கு கற்றவர். பிறமொழிகள்,…

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 : இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225:  தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250   226. அருந் தமிழ் மாலை புனைந்தார் அளவு இல் ஞானத்து அமுது உண்டார். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 295.4 227. பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவிப் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 297.2 228. புந்தி…

பாடம் சொல்லும் முறை – நன்னூல்

பாடம் சொல்லும் முறை ஈதல் இயல்பே இயம்பும் காலை காலமும் இடமும் வாலிதின் நோக்கி சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங் கொளக் கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல் என்ப நன்னூல்   பாடம் சொல்லும்பொழுது உரிய காலத்தையும் உரிய இடத்தையும் தூயதாகத் தெரிவுசெய்து சிறந்த இடத்திலமர்க; தான் வழிபடும் கடவுளை வணங்கிப், பாடம் சொல்ல வேண்டிய பொருளை உள்ளத்தில் இருத்துக; விரைந்து சொல்லாமலும் சினந்து…

கேட்டல் முறை – பவணந்தி முனிவர்

கேட்டல் முறை ஒருமுறை கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபாடு இலனே முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும். ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் கால்கூறு அல்லது பற்றலன் ஆகும். அவ் வினையாளரொடு பயில்வகை ஒரு கால் செவ்விதின் உரைப்ப அவ்இரு காலும் மை அறு புலமை மாண்பு உடைத்தது ஆகும். பவணந்தி முனிவர் : நன்னூல்   பாடங்கேட்பவன் ஒரு முறையுடன் நில்லாது இரண்டாம் முறையும் கேட்டானாயின்,  மிகுதியும் பிழையின்றிக் கற்றவனாவான். மூன்றாம் முறையும் கேட்டனாயின், ஆசிரியர் கற்பித்ததை உணர்ந்து பிறர்க்குச் சொல்லும்திறன்பெற்றவனாவான். …

குதித்தெழுந்து வாருங்கள் ! – மெல்பேண் செயராமர்

குதித்தெழுந்து வாருங்கள் !   படித்தவரும் குடிக்கின்றார் பாமரரும் குடிக்கின்றார் அடுத்துவரும் விளைவுபற்றி ஆருமே மனத்திலெண்ணார் குடிபற்றித் தெரிந்திருந்தும் குடியொழிக்க மறுக்கின்றார் அடியோடு குடியொழித்தால் அனைவர்க்கும் ஆனந்தமே !   குடித்திவிடும் வேளையிலே குணமெல்லாம் மாறிவிடும் அடித்துடைத்து அத்தனையும் அவர்நாசம் செய்திடுவார் பிடித்தமுள்ளார் முன்னாலும் பேயாக மாறிடுவார் எடுத்துரைக்கும் எச்சொல்லும் ஏறிவிடா அவர்களுக்கு !   அம்மாவை மதியார்கள் அப்பாவை மதியார்கள் ஆர்வந்து நின்றிடினும் அவர்மதிக்க மாட்டார்கள் என்னதான் செய்கின்றோம் என்பதையும் அறியாது ஈனத்தனமாக எத்தனையோ செய்து நிற்பார் !   கொலைகூடச் செய்திடுவார்…

புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் மண்சரிவுப் பேரிடர்

புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் மண்சரிவுப் பேரிடர்! பெற்றோர்கள் மாணவர்கள் அச்சத்தில்!   தொடர்ந்து மலையகத்தில் காணப்படும் சீரற்ற காலநிலையில் புசல்லாவ இந்து தேசியக்கல்லூரி மண்சரிவு  கண்டத்தை எதிர்நோக்கியுள்ளது. குறித்த கல்லூரியின்  திடலில் இடி மின்னலுடன் மழை பெய்த வேளையில் ஏறத்தாழ 25 அடி ஆழமான குழி ஒன்று உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாகப் பாடசாலை கட்டடங்களில் சிறு சிறு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். நிலைமை தொடர்பாக   ஊர்ச்சேவகர் ஊடாக உடபளாத்த  பகுதிச் செயலாளருக்கும்   பேரிடர் முகாமைத்துவ நிலையத்திற்கும்…

உருத்திரகுமாரனின் முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு நினைவுரைக் காணொளி

  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர்  உருத்திரகுமாரன் வழங்கிய நினைவுரைக் காணொளி https://www.youtube.com/watch?v=kp6pzZ2PAjY

முள்ளி வாய்க்காலும் நமது முன்னேற்றமும்! – சோம இளங்கோவன்

முள்ளி வாய்க்காலும் நமது முன்னேற்றமும்!   அருமைத் தமிழ் நெஞ்சங்களே !   ஆறாத வடு ! மாறாத அவமானம் ! சொல்லொன்னாத் துயரம் ! அதன் பெயர் முள்ளிவாய்க்கால். இன்று தமிழர்கள் வெறி பிடித்தத் தீவிரவாதிகள் அல்லர்; இனப் போராட்டதின் அடையாளங்கள் என்பதை உலகைப் புரிந்து கொள்ள வைத்துள்ளோம். அடைந்த  இன்னல்களைக் கேலம் மெக்ரேவின் உதவியுடன் உலகுக்குக் காட்டியுள்ளோம். இன்றைய தேவை, இனி என்ன செய்யப் போகின்றோம் என்பது தான்! துன்பத்தில் வாழும் உடன் பிறப்புகளைத் தத்தெடுத்துக் கொள்வோம். ஈழத்தில் தமிழர் முன்னேற…

இளவரசு நூல்கள், நினைவுமலர் வெளியீடு, சென்னை

வைகாசி 16, 2047 / மே 29, 2016  காலை 10.00:  நூல்கள் வெளியீடு நினைவரங்கம்: பிற்பகல் 2.30 த.இ.க.க. கலையரங்கம், கோட்டூர், சென்னை 600 025   பேராசிரியர் இரா.இளவரசு நினைவு அறக்கட்டளை

மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பிற பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி

முதலாம் ஆண்டு ஓவியப் போட்டி    தேவகோட்டை: – தேவகோட்டை   பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பிற  பள்ளி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு ஓவியப் போட்டி நடைபெற்றது.   போட்டிக்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். இளமழலை மாணவர்களுக்குத் தனியாகவும், 1முதல் 3ஆ ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல்  பிரிவாகவும், 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம்  பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன.   பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். இப்போட்டிகளில் தேவகோட்டையில் உள்ள பல்வேறு அரசு,…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 9.மனத்தை யாளுதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 8 தொடர்ச்சி)   9 9. மனத்தை யாளுதல் மனமுத் தொழில்செயு மாபெருஞ் சத்தி. ஆக்குதல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களையும் செய்யவல்ல மிகப்பெரிய சக்தி மனம் ஆகும். நினைக்குந் தொழிலை நிதமுஞ் செய்வது. மனம் எப்பொழுதும் எண்ண அலைகளில் மூழ்கி இருக்கும் இயல்பினை உடையது. அறனு மறனு மறிதிற னிலாதது. மனம் புண்ணிய பாவங்களைப் பிரித்து அறியும் திறனற்றது. அதனெறி விடுப்பி னழிவுடன் கொணரும். மனத்தை அதன் வழியில் செல்லவிட்டால் உடனடியாக அழிவை ஏற்படுத்தும். அதனெறி விடாஅ…