திருக்குறள் உலகிற்குரியது – வ.சுப.மாணிக்கம்

  செயலுக்கு வரும் அறம் கரைவது திருக்குறள்; மக்கள் வாழ வழிவகுப்பது திருக்குறள்; பல நிலை அறம் தழுவியது திருக்குறள்; எந்நிலைய மாந்தரையும் முன்னேற்றுவது திருக்குறள்; உலகு ஒட்டும் நெறிகாட்டுவது திருக்குறள்; ஒருவன் வாழ்க்கை அவனைப் பொறுத்தது என்ற உண்மை அறைவது திருக்குறள்; செயல், செயல், செயல். சொல்வது செயலுக்கு வரவேண்டும். செயலுக்கு வருமாறு சொல்ல வேண்டும் என்னும் ஓர் அடிப்படைக் கருத்தினைத் தம் நெஞ்சில் நீள இருத்திக் கொண்டே குறள் எழுதியவர் வள்ளுவர். செயல் அடிப்படையை யாண்டும் மறவா உள்ளத்தினர் அப்பெருமகன். ஆதலால்…

தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள் – மறைமலையடிகள்

தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள்!   திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூலாகும். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஓர் அயற்கொள்கையையும் உடன்பட்டுக் கூறும் நூல் அன்று, ‘தமிழர் வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு’ என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள். தீங்கனியாகிய ஒரு மாம்பழத்தைப் பிழிந்தால் எவ்வளவு சாறு தேறும்? தேறும் சிறு அளவிற்றாய சாற்றினைச் சுண்டக் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்துத் துண்டாக்கினால் ஒக்க, திரண்ட காப்பியங்களையெல்லாம் பிழிந்து வடித்துக் காய்ச்சித் திரட்டி தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள். –…

திருவள்ளுவர் நூல் முப்பால் உலகுக்குப் பொது – தமிழ்த்தென்றல் திரு.வி.க.

திருவள்ளுவர் நூல் முப்பால் உலகுக்குப் பொது திருவள்ளுவர் நூல் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற முப்பாலால் ஆக்கப்பட்டது. அறமும் பொருளும் காதலும் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியன அல்ல. அவை மன்பதைக்கு – உலகுக்குப் பொது. திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும் போதே, உலகமும் உடன் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றுதற்குக் காரணமென்ன? திருவள்ளுவர் உலகையே குறளாக எழுதினார். உலகின் எழுத்தோவியம் திருக்குறள் என்று கூறலாம். திருவள்ளுவர் உலகுக்கு என்றே பயின்றார்; உலகுக்கு என்றே வாழ்ந்தார்;…

திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ்நெறியே! – மு.வை.அரவிந்தன்

திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ்நெறியே! திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியம்; அகப்பாடல்களின் சாறு; பழந்தமிழ் மரபை ஒட்டி எழுந்த தீஞ்சுவைக் காதற் களஞ்சியம்; கற்பனை வளமும் இலக்கியச் சுவையும் சேர்த்து அமைக்கப்பட்ட கலைக்கோயில்; அன்பும் அறனும் ஒன்றிய இன்ப நெறி.   வாத்சயாயம் அறிவு நுட்பத்துடன் உலகியலை ஆராய்ந்து எழுதிய நூல். அதில் மாசற்ற உள்ளத்தில் ஊறிச் சுரக்கும் அன்புக்கும் முறை திறம்பாத அறநெறிக்கும் இடமில்லை. எனவே, திருவள்ளுவரின் காமத்துப் பாலுக்கு வாத்சயாயனத்தை இலக்கணமாகக் கொள்வது பொருந்தாது. ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்:…

திருக்குறள் போன்ற ஒரு நூலை எத்தேயத்திலும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை!

திருக்குறள் போன்ற ஒரு நூலை எத்தேயத்திலும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை!   திருக்குறள் ஏறக்குறைய இப்பொழுது எஞ்சி நிற்கும் இலக்கியங்கள் எல்லாவற்றினும் முற்பட்டதாகக் காண்கின்றது. எங்ஙனமாயினும், இதற்கு முன்னே இன்னோரன்ன நூல் தமிழில் இருந்ததாகக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. வடமொழியில் உள்ள மிருதிகளும் வருண சமயச் சார்புடனே நியாயப்பிரமாணங்களை அவ்வக்காலத்துக்கேற்றபடி கூறிய நூல்களாயின. நாம் கண்ட கேட்ட பிற தேயங்களிலும் இவ்வகையான நூல் யாதொன்றும் இருப்பதாக இதுகாறும் கேட்டிலோம். ஆகவே, இஃது இணையில்லாத நூலாயிற்று. நூற்பாகுபாடுகளும் நூற்போக்கும் நுதலிய பொருளும் நமதாசிரியர் தமது கல்வி கேள்விகளினாற்றலால் தாமே…

ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! – கோதமனார்

ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் நான்மறையைப் போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று கோதமனார்: திருவள்ளுவ மாலை

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.13. களவு விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் –1.12.  தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 13. களவு விலக்கல் (களவு- திருட்டு) களவுடை யவர்தரா துளமொடொன் றெடுத்தல். களவு என்பது பொருளுக்கு உரிமையானவர் கொடுக்காமல் நம் மனம் அறிய ஒன்றை எடுத்தல் ஆகும். வஞ்சித்துக் கொளல் வாங்கிக் கொடாமை. ஏமாற்றிப் பொருளை எடுத்தல், வாங்கியதைக் கொடுக்காமல் இருத்தல் ஆகியவையும் களவு ஆகும். களவினை யேவுதல் களவிற் குதவுதல். களவினைத் தூண்டுதல், களவு செய்ய உதவுதல் ஆகியவையும் களவு ஆகும். தடுக்கக் கூடிய விடத்ததைத் தடாமை. தடுக்க முடிந்த போதும் களவினைத் தடுக்காவிடில்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 – இலக்குவனார் திருவள்ளுவன்

  (பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 10  தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 ஈந்து மகிழ்க!  இவ்வாறு பலநூல் கற்று, வினைத்திட்பத்துடன் தொழில் ஆற்றிப் பணத்தைப் பெருக்குவது எதற்காக? ‘மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ (பக்கம் 112 | நல்லதோர் வீணை) அன்றோ – எனவே “ஈகைத்திறன்” (4) கொண்டு வாழுமாறு கூறுகிறார். ‘சிறுதுளி பெரு வெள்ளம்’ என்பதால் சேமிக்க வேண்டி ‘(இ)லவம் பல வெள்ளமாம்’ (97) என்கிறார். ‘ஞிமிரென இன்புறு’ (39) ‘ஞெகிழ்வது அருளின்’ (40) ‘ஞேயங் காத்தல் செய்’ (41) ‘வருவதை மகிழ்ந்துண்’…

வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 2/3 – முனைவர். ப. பானுமதி

(வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 1/3  தொடர்ச்சி) 2    ஈழத் தமிழர்களின் மரணம் இவரது மனத்தைப் பல்லாயிரச்சுக்கலாக உடைத்துப் போட்டுள்ளது. அந்த உடைந்த சில்லுகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதையாகக் கண்ணீர் சிந்துகின்றன. மரணம் பேசியதைப் போலவே இவரது கவிதைகளில் மயான பூமியும் பேசுகிறது. மனிதனின் மரணத்தைத் தன் மடியில் தாங்குவது மயானம். அம்மயானமே, மனித எச்சங்களெல்லாம் மக்கிப் போனவுடன் தூது அனுப்புகிறேன்   அதுவரை உங்கள் துப்பாக்கி முனையை குத்தகைக்கு விடுங்கள் குருவிகள் கூடு கட்டி குடும்பம் நடத்தட்டும் ! என்று…

சிந்தனைச் செம்மல் கன்னடப்புலவர் தமிழர் வேமண்ணா – கி.சு.இளங்கோவன்

கன்னடப்புலவர்  தமிழர் வேமண்ணா   1927இல் தமிழ்நாட்டு வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகில் உள்ள விரிஞ்சிபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர்தாம் கருநாடக மாநிலத்தில் தந்தை பெரியார் கருத்துகளைப் பரப்பிடத் தோற்றுவாயாக வாய்த்த பெரியவர் மானமிகு வேமண்ணா என்கிற வி.சி.வேலாயுதன் அவர்கள். முதலாம் உலகப் பெரும்போர் சமயத்தில் பெங்களூரு பிரிகேடு சாலைக்கு ஓடோடி வந்த இவர் படித்தது என்னவோ ஏழாம் வகுப்பு வரை மட்டுமே.   பெங்களூரு பின்னி நூற்பாலைப் பள்ளிக்கூடத்தில்தான் இவரது படிப்பு தொடங்கித் தொடர்ந்தது. ஆயின், தந்தை பெரியார் அவர்களை முதன்முதலில் இவர்…

படைமுகாம்களில் இன்னும் நூறாயிரம் பேர்! – மு.நியாசு அகமது

  ஈழம் இன்று – இளையவிகடன் செய்தியாளரின் நேரடி அலசல் இராணுவ முகாமில் இன்னும்  நூறாயிரம் பேர்!   இலங்கை இறுதிப் போரை நிச்சயம் எவராலும் மறக்க முடியாது. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன, எழுத்தில் வடிக்க முடியாத துயரம் நிகழ்ந்து. இப்போது எப்படி இருக்கிறார்கள் தமிழ் மக்கள்? அவர்கள் கோரிக்கையாக என்னவெல்லாம் இருக்கிறது? அவர்களது வாழ்வாதாரம் மேம்பட்டு இருக்கிறதா? அவர்கள் தமிழக மக்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கி றார்கள்?… இந்தக் கேள்விகளுக்கான விடை தேடி இலங்கைக்குப் பயணமானோம்.   யாழில் பரவிய தமிழக ஒழுகலாறு!   தீவு…

இராம.குருமூர்த்தி – உமாராணி இணையர் மணிவிழா – ஒய்எம்சிஏ: படங்கள்

   மணிவாசகர் பதிப்பக இராம.குருமூர்த்தி – உமாராணி இணையர் மணிவிழா – ஒய்எம்சிஏ:படங்கள்