எக்காலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளைத் திருவள்ளுவர் வகுத்தளித்துள்ளார்

எக்காலத்திற்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளை நமக்குத் திருவள்ளுவர் வகுத்தளித்துள்ளார்   திருக்குறள் என்னும் உலகப் பொதுமறை, கி.மு. முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட முதுபெரும் படைப்பாகும். அதனில், உலக வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் உரைக்கப்பட்ட கருத்துகள் இன்றளவும் மிகச் சிறந்த வாழ்வியல் கோட்பாடுகளாக விளங்கி வருவது கண்கூடு. வள்ளுவர் தனது நூலினை அறம், பொருள், இன்பம் என முப்பாலாகப் பிரித்து மக்களுக்கு இக்காலத்திற்கும், பிற்காலத்திற்கும், ஏன், நம்பிக்கை இருக்குமெனின் மேலுலக வாழ்க்கைக்குமெனப் பல்வேறு கருத்துகளை வழிகாட்டு நெறிகளாய், வாழ்வியல் முறைகளாய் வகுத்தளித்துள்ளார். 133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள்…

உயர்நிலை பெறும் வகையினை வள்ளுவர் உணர்த்தியுள்ளார் – பெ.(உ)லோகநாதன்

உயர்நிலை பெறும் வகையினை வள்ளுவர் உணர்த்தியுள்ளார்.   மனித வாழ்வின் நோக்கமே உயர்தல், உயர்நிலை அடைதல். இவ் இலக்குகள் தனி மனிதனுக்குப் பொருந்துவது போன்றே குழுக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். தனிமனித இலக்கு அடையப் பெற்றால் குழுவின் இலக்கோ நிறுவனத்தின் இலக்கோ அடைவது எளிது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் தனிமனித இலக்கினை அடைய முடியும் என்ற எண்ணமே குழு இலக்கு அல்லது நிறுவன இலக்கினை அடையப் போதிய உந்து விசையாக ஊக்கியாகச் செயல்படுகிறது. பொதுவாக, உயர்நிலை பெறும் அல்லது அடையும் வகையினை வள்ளுவர் தனது…

தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்: இலக்கிய நிகழ்ச்சி

ஆடி 23, 2047 / ஆக. 07, 2016 பிற்பகல் 3.00 த.மகாராசன் முனைவர் குமரிச்செழியன் ஆலந்தூர் செல்வராசன் சா.கோவிந்தராசன்

நூலறிமுகம் : கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்

நூலறிமுகம் : கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி)   ஓவியர் ப.தங்கம்(91595 82467)  ‘கல்கியின் பொன்னியின் செல்வன்’ என்ற தலைப்பில் சித்திரக்கதையைப் படைத்துள்ளார். முதல் பகுதியாக உருப்பெற்றுள்ள இந்நூல் மூலமாக நாம் நேசித்த கல்கியின் கதைப்பாத்திரங்களை நம் முன் ஓவியங்களாகக் கொண்டுவந்துவிடுகிறார் நூலாசிரியர். இந்நூலானது பொன்னியின் செல்வன் புதினத்தின் ஆடித்திருநாள், ஆழ்வார்க்கடியான் நம்பி, விண்ணகரக்கோயில், கடம்பூர் மாளிகை, குரவைக்கூத்து, நடுநிசிக்கூட்டம், சிரிப்பும் கொதிப்பும், பல்லக்கில் யார்?, வழிநடைப்பேச்சு, குடந்தை  சோதிடர், திடும் பிரவேசம் என்ற 11 அத்தியாயங்களில்  முதன்மையான நிகழ்வுகளைக் கொண்டு…

காப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலை அணிவித்து வணக்கம்

காப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர்  மாலை அணிவித்து வணக்கம்     தமிழ்வளர்ச்சி இயக்குநர் (பொ) – உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் நாகர்கோயிலுக்கு வந்திருந்ததை அறிந்த தமிழ்க்காப்புக்கழகத் தலைவர்  இலக்குவனார் திருவள்ளுவன் காப்பிக்காட்டில் அண்மையில் திறக்கப்பட்ட தொல்காப்பியர் சிலையை வணங்கி வருமாறு தெரிவித்தார்.   இவர் வருகையைத் தலைநகர்த்தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர்  த.சுந்தரராசனிடம் இலக்குவனார் திருவள்ளுவன்  தெரிவித்து இயக்குநரிடம் வழி விவரம் தெரிவிக்கவும் பிற  நண்பர்களுடன் வரவேற்கவும் வேண்டினார். இயக்குநரிடம் பேசியபின் புலவர் த. சுந்தரராசன், இயக்குநர் கன்னியாகுமரி…

கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் 89ஆம் ஆண்டு பிறந்த நாள்

மா. செங்குட்டுவன் 89ஆம் ஆண்டு பிறந்த நாள்; ‘ஓர் அரிமா நோக்கு’ நூலினைப் பேராசிரியர் வெளியிட்டார். புரட்சிக் கவிஞர் விழாவினைப் பெரியார் திடலில் நடத்த காரணம் கவிக்கொண்டல் : தமிழர் தலைவர் புகழாரம்!   சென்னை அண்ணாசாலை உமாபதி கலையரங்கில் ஆடி 14, 2047 / சூலை 29, 2016 மாலை நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் சிறப்பு விழாவில் தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

புதிய கல்விக் கொள்கையைத் தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் – கனிமொழி

  சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையைத் தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்  –  நெல்லையில் கனிமொழி   மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்துச் சமத்துவக் கல்விக்கான கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் கலந்து கொண்டு  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  பின்வருமாறு பேசினா் : சிறுபான்மை-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு வேண்டா என்று ஆர்.எசு.எசு. அமைப்பினர் கூறியது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது.   கல்வியில் மாநில அரசின் உரிமையில்…

மொரிசீயசு நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு வந்தவாசியில் வரவேற்பு விழா

மொரிசீயசு நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு வந்தவாசியில் வரவேற்பு விழா    மொரீசியசு நாட்டின் மோக்கா நகரிலுள்ள மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் நிறுவப்படவிருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு வந்தை வட்டக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வந்தவாசி நகரில் ஆடி 09, 2047 /  சூலை 24, 2016 அன்று சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது.    இவ்விழாவிற்குப் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையேற்றார். செயலாளர் ப.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம்  குழுமம் உரிமையாளர் இரா.சிவக்குமார், அரிமா சங்க…

பதுளை சரசுவதி தேசியக் கல்லூரி : கட்டடத் திறப்பு விழா & அடிக்கல் நாட்டு நிகழ்வு

  பதுளை சரசுவதி தேசியக் கல்லூரியின் புதிதாக அமைக்கபட்ட மாடிக் கட்டடத் திறப்பு விழாவும் ஆசிரிய விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று (ஆடி09, 2047 / சூலை 24, 2016) சீரும் சிறப்புமாக நடைபெற்றது.   நிகழ்வில், மாநிலக் கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன், அமைச்சர்  அரீன் பெர்ணான்டோ, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத்து,  தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், வடிவேல் சுரேசு, ஊவா மாகாண  அவை உறுப்பினர்களான ஆ.கணேசமூர்த்தி, வே.உருத்திரதீபன், எம்.சச்சிதானந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக்  கலந்துகொண்டனர். [படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.]

மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும் – இராதாகிருட்டிணன்

மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும். மாநிலக்கல்வியமைச்சர் இராதாகிருட்டிணன்     இலங்கையின் முன்னணி நகைச்சுவை நடிகரும் நாடக ஆசிரியருமான மரிக்கார் எசு. இராமதாசு  சென்னையில்  ஆனி 29, 2047 / சூலை 13, 2016 அன்று காலமானார்.    இது குறித்த இரங்கல் செய்தியில் மாநிலக் கல்வியமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:   இலங்கையின் பழம் பெரும் நடிகரான கோமாளிகள் புகழ் மரிக்கார் எசு.இராமதாசின் மறைவு இலங்கைக் கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவருடைய துணிச்சல், அவருடைய ஆளுமை, திறமை, என்பன…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.18 : புறஞ்சொல்லல் விலக்கல் :

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.17. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 18. புறஞ்சொல்லல் விலக்கல் புறஞ்சொலல் பிறரைப் புறத்திழித் துரைத்தல். புறஞ்சொல்லல் என்பது ஒருவரை அவர் இல்லாதபோது இழிவாகப் பேசுதல் ஆகும். அறங்கொலு மறத்திற் புறஞ்சொலல் கொடிது. புறஞ்சொல்லல் அறத்தைக் கொல்லும் தீய செயல்களில் மிகக் கொடியது ஆகும். புறஞ்சொலல் பொய்முதற் புரையெலாம் வளர்க்கும். புறஞ்சொல்லல் பொய் முதலான குற்றங்களை வளர்க்கும் தன்மை உடையது. புறஞ்சொலல் புறனெலாம் பொருபகை யாக்கும். புறஞ்சொல்லல் ஒருவனுக்கு விரோதிகள் ஏற்படக் காரணமாக அமையும். புன்மகார் செயல்களுட் புறஞ்சொல லொன்று. புறஞ்சொல்லல்…