அ.கருப்பன்(செட்டியார்) (ஏ.கே.செட்டியார்) : படம், பயணம், பதிவு

தமிழ்ப்பரம்பரை மையத்தின் (Tamil Heritage Trust)நிகழ்வு  அ.கருப்பன்(செட்டியார்) (ஏ.கே.செட்டியார்) : படம், பயணம், பதிவு  வழங்குநர் : ஆ.இரா.வேங்கடாசலபதி ஆவணி 18, 2047 / செட்டம்பர் 03, 2016 மாலை 5.30 ஆர்.கே.மையம், 146/3,  இராயப்பேட்டை நெடுஞ்சாலை, (ஓம்சுஇலக்சனா, சா மின்பொருள்கடை மாடியில்), மயிலாப்பூர், சென்னை 600 004 தமிழ் பாராம்பரியம் சார்பாக நடைபெறும் மாத உரை நிகழ்ச்சியில், செட்டம்பர் 2016 நிகழ்வாக,  ஏ.கே. செட்டியார் குறித்த உரை இடம்பெறுகிறது. ‘உலகம் சுற்றும் தமிழன்‘ என்று போற்றப்படும் ஏ.கே. செட்டியார்(1911–1983) அரிய பலஅருந்திறல்களை நிகழ்த்தியவர்….

நிலா நிலா – அழ.வள்ளியப்பா

நிலா நிலா   ‘நிலா, நிலா, ஓடிவா. நில்லாமல் ஓடிவா’ பல காலம் இப்படிப் பாடிப் பயன் இல்லையே ! மலை மேலே ஏறி நீ வருவாய் என்றே எண்ணினோம். மல்லி கைப்பூக் கொண்டுநீ தருவாய் என்றும் பாடினோம்.   எத்த னைநாள் பாடியும் ஏனோ நீயும் வரவில்லை. சத்தம் போட்டுப் பாடியும் சற்றும் நெருங்கி வரவில்லை. உன்னை விரும்பி அழைத்துமே ஓடி நீ வராததால் விண்க லத்தில் ஏறியே விரைவில் வருவோம் உன்னிடம் !   குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா : சிரிக்கும்…

தேவகோட்டை : சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவருக்குப் பாராட்டு

வட்டார அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவருக்குப் பாராட்டு  தேவகோட்டை – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை குடியரசு  நாள், பாரதியார்நாள் குறுவட்டு அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.  தமிழக அரசு 2016-2017ஆம் ஆண்டிற்கான குடியரசுநாள், பாரதியார்நாள் குறுவட்டு அளவிலான சதுரங்கப் போட்டிகளைத் தமிழகம் முழுவதும் நடத்தியது. தேவகோட்டை குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 11  அகவைக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இப்பள்ளியின் 5 ஆம் வகுப்பு அசய் பிரகாசு…

தமிழ் வாழ்த்து- முடியரசன்

தமிழ் வாழ்த்து வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக் கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ் நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே – முடியரசன் (கவிஞர் இறுதியாக இயற்றிய கவிதை) பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) பக்கம் 20

இன்று .. இளைஞர் .. இலக்கியம் – குவிகம் நிகழ்வு

ஆவணி 25, 2047 /  செட்டம்பர் 10, 2016  சனிக்கிழமை   மாலை 6.30 மணி     சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் சாலை, ஆழ்வார்பேட்டை சென்னை 600018 குவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வாக முழுவதும் இளைஞர்கள் வழங்கும் கதை, கவிதை, கருத்து நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையின் இலக்கியப் பார்வையினை அறிய    இஃது ஒரு சாளரமாக அமையுமோ? நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். குவிகம் மின்னிதழ் படிக்க வலைப்பூ பார்க்க

தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும்!

தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும்! ஆங்காங்கு நாட்டில் தாய்மொழி வழிக்கல்வியே அடிப்படைக் கல்வி! ஆங்காங்கு தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்.   தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்காங்கு நாட்டின் பதிவு பெற்ற பொறியாளரும், தமிழ்க் குமுகத்தின் (சமூகத்தின்) புள்ளியுமான மு.இராமநாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.   நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் சஞ்சீவு வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆங்காங்கு நாட்டில் பதிவு பெற்ற…

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 1 – 5: தி.வே.விசயலட்சுமி

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! பொய்தீர் ஒழுக்க நெறிபுகன்ற வள்ளுவனார் செய்தார் குறள்நூல் செறிந்து.   குற்றமிலா வாழ்நெறியைக் கூறும் குறள்நூலைப் பற்றியே வாழ்வோம் பணிந்து.   எம்மொழிக்கும் இல்லாத ஏற்றமிகு இன்குறளால் செம்மொழிக்குச் சேரும் சிறப்பு.   வேதத்தின் வித்தாய் விளங்கும் குறளமுதின் நீதியை நெஞ்சே நினை.   வள்ளுவர் உண்மையை விள்ளுவர் பொய்ம்மையைத் தள்ளுவர் சீர்அள் ளுவர்.   -புலவர் தி.வே.விசயலட்சுமி (பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 – 10)

கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் இலக்குவனார் நினைவரங்கம்,சென்னை

ஆவணி 21, 2047 / செட்டம்பர் 06, 2016 மாலை 6.00 இதழாளர் ஞாலன் சுப்பிரமணியன் கவிஞர் முத்துலிங்கம்  

இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே? – கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

அனைத்துலகக் காணாமற்போனோர் நாளில் (ஆகத்து 30) ஈழத் தமிழருக்கு நீதிகோரி காலை 10:30 மணிக்கு, அடையாறு ஐ.நா. (கஅபபஅ /யுனெசுகோ) அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.       இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே?    அனைத்துலகக் காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஒவ்வோர் ஆண்டும் ஆகத்து 30 ஆம் நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது. கோசுடோரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமல் போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of…

திருக்குறள் அறுசொல் உரை – 99. சான்றாண்மை : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 098. பெருமை தொடர்ச்சி) திருக்குறள் 02. பொருள் பால் 13. குடி இயல் 99. சான்றாண்மை        அறவழியில்  நிறையும்  பண்புகளைத்        தவறாமல்   ஆளும் பெருந்தன்மை.   கடன்என்ப நல்லவை எல்லாம், கடன்அறிந்து,      சான்(று)ஆண்மை மேற்கொள் பவர்க்கு. கடமைகள் உணரும் பண்பர்க்கு,         நல்லவை எல்லாம் கடமைகளே.   குணநலம், சான்றோர் நலனே; பிறநலம்,      எந்நலத்(து) உள்ளதூஉம் அன்று. சான்றோர்க்கு, உயர்பண்பே சிறப்பு;         மற்றவை, சிறப்புக்களே அல்ல.   அன்பு,நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு,      ஐந்துசால்(பு)…

மக்கள் தந்தைக்குச் செய்யும்கடன், புரோகிதர்களுக்குப் பொன்னும் பொருளும் அளிப்பதல்ல – சி.இலக்குவனார்

மக்கள் தந்தைக்குச் செய்யும்கடன்,  புரோகிதர்களுக்குப் பொன்னும் பொருளும் அளிப்பதல்ல!   மக்கட்பேறு எற்றுக்கு என்ற வினாவுக்கு விடையாகப் பரிமேலழகர் கூறுகின்றார் : “புதல்வரைப் பெறுதல்,  அஃதாவது இரு பிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படும் கடன் மூன்றனுள் முனிவர் கடன் கேள்வியானும் தேவர் கடன் வேள்வியானும் தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லாது இறுக்கப்படாமையின், அக்கடன் இறுத்தற் பொருட்டு நன்மக்களைப் பெறுதல். ஆகவே, மக்களின் கடன் தென்புலத்தார்க்குக் கடன் செலுத்துதல் ஆகும் என்று நம்பி வந்தனர் என்று தெரிகின்றது. தென்புலத்தார் என்பவர் பிதிரர் ஆவார். படைப்புக்…