மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு ஓவியப் போட்டி

  [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] தேவகோட்டை – பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது.   விழாவிற்கு வந்தவர்களை மாணவர் புகழேந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   அப்துல் கலாம்  நினைவு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, மாணவ மாணவியர் முத்தையன், செயசிரீ, பாலமுருகன், கிசோர்குமார், அசய் பிரகாசு, காயத்திரி, அரிகரன், பரமேசுவரி ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.   ஒன்றாம் வகுப்பு…

அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப் பூரத் திருவிழா

ஆடிப் பூரத் திருவிழா    ஆடிப் பூரத்திருவிழா புசசல்லாவை வாடித்துரை தோட்டம்  அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது.  அம்மனின் திருவுருவம் உள்வீதி வலம் வந்தது. இவ் விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் இலங்கைத் தொழிலாளர்  பேராய(காங்கிரசு) துணைத்தலைவரும் முன்னாள் பகுதிஅவை சபை உறுப்பினருமான எம்.எசு.எசு.செல்லமுத்து  கலந்து சிறப்பித்தார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

தேவகோட்டை, மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியில்ஊர்தி

தேவகோட்டை – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல்  ஊர்தி மூலம் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.    நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   அகத்தியா அறக்கட்டளையும் அமுமு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் அறிவியல் ஊர்தி யில் துணைக்கருவிகளைக் கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி  ஆய்வு மூலம் சென்னையைச் சார்ந்த பயிற்சியாளர் கவியரசு செய்து காண்பித்தார். வளிமண்டலக் காற்று, காற்றின் அழுத்தம், காற்றின்…

கவிஞர் வலிமை – விவேக்பாரதி

கவிஞர் வலிமை (அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்) ஊரினிலே உள்ளோ ரெல்லாம் ஊதாரித் தனமாய்த் தம்மில் பாரினையே தூக்க வல்ல பலமதுவு முள்ள தென்பார் பேரினிலே பலத்தை வைத்துப் பிதற்றிடுவோ ரல்லோம் நாங்கள் நேரினிலே நேராய் நிற்கும் நேர்மையே பலமாய்க் கொண்டோம் ! தூணையும் பிளக்க வல்லோம் துயர்தமைத் துடைக்க வல்லோம் ஆணையும் பெண்ணென் றாக்கி அழகுகள் சமைக்க வல்லோம் ! நாணையே ஏற்றி டாமல் நற்கணை பாய்ச்ச வல்லோம் ! ஏனைய செய்தி யெல்லாம் எடுத்துநான் எழுது கின்றேன் ! நரியினை வாச கன்தன்…

பாரதி கலைக்கழகத்தின் இலக்கியச்சங்கமம்

கவிமாமணி புதுவயல் ந.செல்லப்பன் 90ஆவது பிறந்தநாள் பெருமங்கலம் ஆவணி 12. 2047 / ஆகத்து 28, 2016 காலை 9.00 திருவள்ளுவர் இலக்கிய மன்றம் ஆதம்பாக்கம் திருக்குறள் அறத்துப்பால் முற்றோதல் உரையரங்கம் கவியரங்கம் முனைவர் கோ.மோகனராசு முனைவர்  குமரிச்செழியன்    

பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு – 15, வண்டலூர்

ஆடி 30, 2047 / ஆகத்து 14, 2016 பிற்பகல் 3.00 தலைநகர்த்தமிழ்ச்சங்கம் பேரா.முனைவர் முகிலை இராசபாண்டியன் : குங்கிலியக் கலய நாயனார்

திருக்குறள் அறுசொல் உரை – 096. குடிமை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 095. மருந்து தொடர்ச்சி) 02. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 096.  குடிமை உயர்குடியில், குடும்பத்தில் பிறந்தாரின் இயல்பும், பெருமையும், சிறப்பும்.   இல்பிறந்தார் கண்அல்லது இல்லை, இயல்பாகச்      செப்பமும், நாணும் ஒருங்கு.   நேர்மையும், பழிக்கு நாணலும்,         நல்குடிப் பிறந்தார்தம் இயல்புகள்.   ஒழுக்கமும், வாய்மையும், நாணும்இம் மூன்றும்      இழுக்கார் குடிப்பிறந் தார்.     ஒழுக்கத்தில், உண்மையில், நாணத்தில்,         உயர்குடிப் பிறந்தார் தவறார்.   நகை,ஈகை, இன்சொல், இகழாமை நான்கும்      வகைஎன்ப, வாய்மைக் குடிக்கு.  …

ச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மதுரைத்தமிழ்ச்சங்கம்குறித்துத் தவறான தகவலைச் சட்டமன்றத்தில் தெரிவித்த ச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!   தமிழகச் சட்டமன்றத்தில்(ஆடி12, 2047/சூலை27, 2016) மதுரை மத்தியத்தொகுதி தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராசன் ஆங்கிலத்தில் பேசினார். அதற்குத் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் நிறுவனத் தலைவர், கருணாசு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கான விளக்கம் தருவதாகச் சட்டமன்றத்திலும் ஊடகங்களிலும் பழனிவேல் தியாகராசன் தமிழால் முடியாது என்பதுபோல் தெரிவித்துள்ளது தமிழன்பர்களிடையே கோபக்கனலை எழுப்பியுள்ளது. தனக்கு எதிர்ப்பு மிகுந்ததும் தான் தெரிவித்ததைத் தானே மறுத்து மழுப்பியுள்ளார். ஊடகங்களில்…

தொறன்றோ தமிழ்ச்சங்கத்தின் செங்கை ஆழியானின் இலக்கிய ஆளுமை : கலந்துரையாடல்

தொறன்றோ தமிழ்ச்சங்கம் மாத இலக்கியக் கலந்துரையாடல் “செங்கை ஆழியானின் இலக்கிய ஆளுமை – பல்கோணப் பார்வைகள்” சிறப்புபேச்சாளர்கள் உரை: “செங்கை ஆழியான் என்ற கல்வியாளர்”- கவிநாயகர் வி.கந்தவனம் “என் பார்வையில் செங்கை ஆழியான்” – திரு.வ.ந.கிரிதரன் “ஈழத்தின் நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் செங்கை ஆழியானுக்குரிய இடம்” – கலாநிதி நா. சுப்பிரமணியன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்:  ஆவணி 11, 2047 / 27-08-2015 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: தொறன்றோ தமிழ்ச்சங்க மண்டபம் [3A, 5637, Finch avenue East,…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.20 அழுக்கா றொழித்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.19. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 20. அழுக்கா றொழித்தல் (அழுக்காறு- பொறாமை) அழுக்கா றயலா ராக்கத்திற் புழுங்கல். அழுக்காறு என்பது அடுத்தவர் பெற்றுள்ள செல்வத்தை நினைத்து உள்ளூர வருந்துதல் ஆகும். அழுக்கா றுறலினோ ரிழுக்கா றிலதே. அழுக்காறு கொள்வதைவிடப் பெரிய குற்றம் இல்லை. அழுக்கா றதுபோ லழிப்பதொன் றின்றே. பொறாமையைப் போல் அழிவை ஏற்படுத்தக் கூடியது வேறு ஏதும் இல்லை. அழுக்கா றுளவரை யொழுக்கா றிலையே. பொறாமை உள்ளவனிடத்தில் நல்லொழுக்கம் இருக்க இயலாது. அழுக்கா றுடையார்க் காக்கமின் றாகும். அழுக்காறு…

தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 4/4 – சி.சேதுராமன்

(தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 3/4 தொடர்ச்சி) தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 4/4   மே  நாளைப் போற்றி அதில் தொழிலாளர்களின் நிலையைத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார் கவிஞர். அத்துடன் சீனப் புரட்சியையும்-ஆசிய நாடுகளின் விடுதலைச் சூழலையும் பாடினார். பொதுவுடைமை என்றால் பாமர மக்கள் அறியாத காலத்தில் இலெனினைப் போல, ஏங்கல்சு போலத் தாமாகவே சிந்தித்து முடிவுகள் மேற்கொண்டு எதிர்நீச்சல் போட்டுப்  பொதுவுடைமை இயக்கத்தின் பாவலனாகத் தமிழ்ஒளி விளங்கினார்.  தமிழ்ஒளியின் கவிதைகளில் நேரடியாகவே ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றி பேசப்பட்டிருக்கும். மேலும், சமூக-பொருளாதாரத்திற்குத் தனியிடம் கொடுத்து…