உழப்பின் வாரா உறுதிகள் உளவோ? – பட்டினத்தடிகள்

உழப்பின் வாரா உறுதிகள் உளவோ? உழப்பின் வாரா உறுதிகள் உளவோ கழப்பின் வாராக் கையற வுளவோ அதனால் நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து அன்பென் பாத்தி கோலி முன்புற ……(5) மெய்யெனும் எருவை விரித்தாங் கையமில் பத்தித் தனிவித் திட்டு நித்தலும் ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும் பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று …..(10) சாந்த வேலி கோலி வாய்ந்தபின் ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக் கருணை இளந்தளிர் காட்ட அருகாக் காமக்…

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16-20 : தி.வே.விசயலட்சுமி

(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16-20   16.பெருவாழ்வு வேண்டின் குறள்நயம் பேணித் திருவுடன் வாழ்தல் திறம்.   17.வாழ்வாகி மெய்யாய் வளரொளியாய் நெஞ்சினில் வாழும் குறளை வழுத்து.   18. தேடுகின்ற மெய்ப்பொருள் யாவும் குறள்நூலில் ஓடிவந்து நிற்கும் உணர்.   19. வள்ளுவன்சொல் ஓவியம் வண்ணமாய்த் தீட்டுவார் தெள்ளிய நெஞ்சுடை யார்.   20. எப்பாலும் ஏற்கும் எழிலான இன்குறளைத் தப்பாமல் கற்போம் தெளிந்து. – புலவர் தி.வே.விசயலட்சுமி பேசி…

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5 – கருமலைத்தமிழாழன்

 (மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 : தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5    அமைச்சரினை   வரவழைத்து   இதயா  ரிசுவி அரும்விருதை   ஒட்டமா  வடியில்  தந்தே எமையெல்லாம்   பெருமைசெய்த   சிறப்பெல்  லாமே எமையிணைத்த  பேனாவின்   நட்பா  லன்றோ அமைதியான   கொட்டகலா   மலையின்  ஊரில் அமைந்திருக்கும்   கல்லூரி   தனில  மர்த்தி எமையெல்லாம்  சிறப்பித்த   சுமதி   என்னும் எழிற்கவிஞர்   நட்பெல்லாம்   பேனா  வாலே !!   நல்லமுத   பேனாநண்பர்  பேரவை  யாலே நல்லவர்கள்  பன்னூறு   நட்பாய்  ஆனார் சொல்லமுத   உரைகளாலே   நெஞ்சை …

சிறகுகள் தேவையில்லை – மரு.பாலசுப்பிரமணியன்

பறக்கத் துணிந்தவர்க்கு இறகுகள் பாரமில்லை சிறக்கத் துணிந்தவர்க்கு சிறகுகள் தேவையில்லை இறக்கத் துணிந்தவர்க்கு மரணமொரு அச்சமில்லை துற‌க்கத் துணிந்தவர்க்குத் துணியுமொரு மானமில்லை மறக்கத் துணிந்தவருக்குப் தோல்வியொரு துக்கமில்லை நடக்கத் துணிந்தவர்க்குப் பாதையொரு தூரமில்லை அடக்கத் துணிந்தவர்க்குக் காமமொரு கடினமில்லை மடக்கத் துணிந்தவர்க்கு நாவுமொரு நீளமில்லை படிக்கத் துணிந்தவர்க்கு வறுமையொரு விலக்கில்லை முடிக்கத் துணிந்தவர்க்கு யுத்தமொரு சத்தமில்லை அகழத் துணிந்தவனுக்கு அடர்பாறையொரு தடையில்லை பழகத் துணிந்தவனுக்கு மொழியுமொரு தடங்கலில்லை கொடுக்கத் துணிந்தவனுக்கு பொருளொரு குறையில்லை தடுக்கத் துணிந்தவனுக்குப் புனலுமொரு பொருட்டில்லை வாழ்த்தத் துணிந்தவனுக்கு வார்த்தையொரு பஞ்சமில்லை…

கேளேன்! – கெர்சோம் செல்லையா

நீர் காண்பதுபோல் நான் காண …. ஊர் முழுதும் சொத்தும் கேளேன்; உணவு, உடை, வீடும் கேளேன்; பார் புகழும் பேரும் கேளேன்; பரிசு, பொருள் என்றும் கேளேன். நீர் காணும் காட்சியைத்தான், நான் காண விரும்புகின்றேன். நேர்மையாய் பார்க்கும் இறையே, நெஞ்சில் உம் ஆவி கேட்டேன். -கெர்சோம் செல்லையா.

மாணிக்கவாசகம் பள்ளியில் பாரதியார் விழா

மாணிக்கவாசகம் பள்ளியில்  பாரதியார் விழா தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் விழா  நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை மாணவர்  சீவா வரவேற்றார். பள்ளித்தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். விழாவில் மாணவர்கள்  சனசிரீ, ஐயப்பன்   “பாரதியாரின் கண்ணம்மா என் குழந்தை” என்கிற பாடலையும், மாணவர்கள் கார்த்திகேயன், இராசேசுவரி, “பாரதியாரின் புதுமைப் பெண்” என்கிற தலைப்பில் அமைந்த கவிதையையும் பாடினார்கள். மேலும் பாரதியார் படத்துக்கு வண்ணம் தீட்டுதல், பாரதியார்  படம் வரைதல் ஓவிய போட்டியில் ஆகாசு, பாலமுருகன், அம்முசிரீ,…

போராடத் தூண்டியவன் மாக்கவி பாரதி – மு.முருகேசு

குமுகாய அநீதிகளுக்கு எதிராகப் போராடத் தூண்டியவன் மாக்கவி பாரதி                  – பாரதியாரின் 95-ஆவது நினைவு நாள் விழா –       வந்தவாசி. வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மாக்கவி பாரதியாரின் 95-ஆவது நினைவு  நாள் சிறப்புக் கவியரங்கம் வந்தவாசி எசு.ஆர்.எம். இன்போடெக் கணிணிப் பயிற்சி மையத்தில் ஆவணி 27, 2047 / செட்டம்பர் 12, 2016  நடைபெற்றது.      இந்நிகழ்விற்கு, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார். பொருளாளர் எ.தேவா அனைவரையும் வரவேற்றார். கவிஞர்கள் பா.சீனிவாசன்,…

தேவகோட்டையில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

  தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவி சக்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  கண் தானம் ஏ.சி. அறக்கட்டளை பொறுப்பாளர் அருணாச்சலம் கண்தானம் குறித்துப் பேசுகையில், “இந்தியக் கண் வங்கிகளின் கூட்டமைப்பின் அறிக்கைக்கிணங்க நமது நாட்டில்   நூறாயிரக்கணக்கானவர்கள் கருவிழி குறைபாட்டால் பார்வையற்றவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் அகவையினர். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கில்தான் கண்தானம் பெறப்படுகிறது. நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற…

இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? – தமிழ்நெஞ்சன்

இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? காலில் முள் குத்தினால் கைபோகும் எடுக்க கண்களில் கண்ணீர் வரும் வலி உணர்த்தும் மூளை இது உடலியக்கம் உயிரியக்கம் ஆனால் இந்தியா ஒரே நாடு என்றே கூப்பாடு இருந்தும் ஏன்வரவில்லை காவிரி? பாலாறு? முல்லை பெரியாறு? இந்தியா நாடல்ல துணைக்கண்டம் தமிழகம் மாநிலமல்ல தனிநாடு ஒரேநாடென்றால் கருநாடகாவில் இருந்து தமிழன் ஏதிலியாய் தமிழ்நாட்டிற்கு வருவதேன்? ஆங்கிலேயன் வருவதற்கு முன் இந்தியா இல்லை 56 தேசமாக இருந்தது இந்து ×தமிழன் இந்தி ×தமிழ்மொழி இந்தியா × தமிழ்நாடு…

தமிழ் நாட்டு வரலாறு – பா.இறையரசன்; நூலாய்வு

தமிழ் நாட்டு வரலாறு – நூலாய்வு பக்.352; உரூ.250; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108;  044-2526 7543.   மூன்றாம் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூலில், முந்தைய பதிப்பில் உள்ள பழைய வரலாற்றுச் செய்திகளோடு அண்மைக்காலச் செய்திகளும் (இக்காலத் தமிழகம்) சேர்ந்துள்ளன. உலகம் தோன்றியது தொடங்கி, தொல் பழங்காலம், கற்காலம், சங்ககாலம், மூவேந்தர் காலம், இருண்ட காலம், பல்லவர் காலம், நாயக்கர் காலம், மராத்தியர் காலம், ஆங்கிலேயர் காலம், தற்காலம் எனத் தமிழக வரலாற்றைத் துல்லியமாகப் பல சான்றுகளோடு சுவைபட விளக்குகிறது.   தொன்மையும் பழைமையும் உடைய…

தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது.

 தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது.  தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் செயல்படும் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது.   திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். இவரது எழுத்து முயற்சியில் இதுவரை 15 கவிதை நூல்கள், 6 கட்டுரை நூல்கள், 6 தொகுப்பு நூல்கள், ஒரு சிறுகதை நூல், 100-க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. வந்தவாசி நூலக…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – நூற்றொடர் அறிவிப்பு

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் –  நூற்றொடர் அறிவிப்பு   கோவை ஞானி அவர்களின் தமிழ்நேயம் 49 ஆவது வெளியீடாக  மாசி, தி.பி. 2043/ பிப்.கி.பி. 2012 வெளியீடாக வந்த நூல் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார். அடுத்த வாரம் முதல்  வெளிவரும் இவ்விதழின் முன்அட்டை,  உள் குறிப்பு (திருமணப்பரிசு என்ற முறையில் நன்றி அறிவிப்பு), பின் அட்டை (நூலாசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன்  எழுதிய இந்நூல் பற்றிய கோவை ஞானி அவர்கள் குறிப்பு) ஆகியன விவரங்களுக்காகத் தரப்படுகின்றன. வருமிதழ் முதல் படைப்பு தொடரும்.

1 3 4 5 9