நீதி தோற்றுவிடக்கூடாது! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! – இறுதி

(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி!- பாகம் – 10 தொடர்ச்சி) நீதி தோற்றுவிடக்கூடாது! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! – இறுதி வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது! நிறைய உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றுதான் இந்தத் தொடரின் தொடக்கத்தில் நினைத்தேன். நடைமுறைச் சிக்கல்கள் அதற்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பது தெரிந்தேதான் அவ்வாறு ஆசைப்பட்டேன். இருப்பினும், அந்த இடையூறுகளை என்னால் கடக்க முடியவில்லை. அந்தத் தடைகளை…

மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை – வாய்ப்புள்ளவர்கள் உதவுக!

தமிழன்புடையீர் தனித்தமிழியக்கத் தந்தை, பன்மொழியறிஞர் எனப் போற்றப்பெறும் மறைமலையடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம்(1916-2016) நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையில் தமிழ் அறிஞர் பெருமக்களால் தனித் தமிழ்இயக்க நூற்றாண்டு விழா பொலிவுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்பொருட்டு தனித்தமிழ் இயக்கநூற்றாண்டு விழா, திருவள்ளுவராண்டு       2047 கன்னி 09 (25-9-2016) ஞாயிறு அன்று மாலை 5.00 மணிக்கு  அடிகளார் வாழ்ந்த பல்லவபுர மாளிகையில் சிறப்பாக நடை பெறவுள்ளது.    அவ்வமயம் புகழ்பெற்ற இக்குடும்பத்தின் பிறங்கடையினர்கள் (வழித் தோன்றல்கள்) கலந்துகொண்டு அடிகளார் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றிய தொண்டினை மகிழ்வுடன் நினைவுகூர…

தமிழர் ஓவியங்களும் நவீன மாற்றங்களும் – தகவலாற்றுப்படை

ஆவணி 24, 2047 / செட்டம்பர் 09, 2016 மாலை 4.30 தமிழ் இணையக்கல்விக்கழகம் தொடர் சொற்பொழிவு 17 : ஓவியர் புகழேந்தி ஓவியர்  திரு. புகழேந்தி  குறித்து  ஓவியர், எழுத்தாளர் மற்றும் பேராசிரியர்.  குடந்தை  கவின் கலைக்கல்லூரியில் வண்ண ஓவியத்தில் இளங்கலைப் பட்டமும் ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் வண்ண ஓவியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சென்னை கவின் கல்லூரியில் தற்போது ஓவியத்துறைப்  பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார். தமிழில் முதல் வண்ண ஓவியப் புத்தகமான ‘எரியும் வண்ணங்கள்’ என்னும் நூலை வெளியிட்டுள்ளார். அதனைத்…

திருக்குறள் அறுசொல் உரை – 100. பண்பு உடைமை : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 99. சான்றாண்மை  தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால்   13.குடி இயல்    அதிகாரம் 100. பண்பு உடைமை  உலகத்தார்  இயல்புகளை   நன்குஅறிந்து   நலஉணர்வுடன் பழகுதலைப் பெறுதல்   எண்பதத்தால் எய்தல், எளி(து)என்ப, யார்மாட்டும்,      பண்(பு)உடைமை என்னும் வழக்கு.         பண்புஉடைமை என்னும் வழக்கம்,         எளிமையாய்ப் பழகுவதால் வரும்.   அன்(பு)உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், இவ்இரண்டும்,      பண்(பு)உடைமை என்னும் வழக்கு.         பண்பாளரின் இரண்டு சிறப்புகள்:         அன்பும்,…

இனிய தமிழ்மொழி – அழ.வள்ளியப்பா

   இனிய தமிழ்மொழி     தாய்சொல்லித் தந்த மொழி தாலாட்டில் கேட்ட மொழி சந்திரனை அழைத்த மொழி சாய்ந்தாடிக் கற்ற மொழி பாட்டிகதை சொன்ன மொழி பாடிஇன்பம் பெற்ற மொழி கூடிஆட உதவும் மொழி கூட்டுறவை வளர்க்கும் மொழி மனந்திறந்து பேசும் மொழி வாழ்க்கையிலே உதவும் மொழி எங்கள் தாய்மொழி-மிக இனிய தமிழ்மொழி. இனிய தமிழ்மொழி-அது எங்கள் தாய்மொழி. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா : சிரிக்கும் பூக்கள்

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 : தி.வே.விசயலட்சுமி

(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 1 – 5  தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6-10   நயங்கண்ட வள்ளுவர் நன்மணிபோல் நாமும் வயங்கண்டு கற்போம் விழைந்து.   குறளே கொடுமை களைந்திடும் கூர்வாள், திறனை அறிவோம் தெளிந்து.   போரற்று வையம் புதுவையம் ஆவதற்கே சீர்பெற்ற தீங்குறளே சிறப்பு.   குறள்நெறி பேணின் குறையா வளங்கள் திறம்படப் பெறுவோம் தேர்ந்து.   ஒன்றேமுக் காலடிநூல் காட்டும் அறநெறியால் வெல்வோம் விதிப்பயனை நாம். -புலவர் தி.வே.விசயலட்சுமி (பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11…

பெரியார் நூலக வாசகர் வட்டம்: 2191 ஆம் நிகழ்வு, சென்னை-7

ஆவணி 23, 2047 / செட்டம்பர் 08, 2016 மாலை 6.30 கலைஞர் தந்த மறுமலர்ச்சிகள் தொடர்பொழிவு 6 முனைவர் பொற்கோ முனைவர் ம.இராசேந்திரன்

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41   தமிழ்நாட்டின் முதலமைச்சர் காமராசர் தமிழர். தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடுதல் அவர் கடமையாகும். தமிழ் வளர்ச்சிக்கு உதவும் அவரைப் பாராட்டுவதும் எம் கடமைகளுள் ஒன்றாகும் என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.   ‘கருமவீரர் காமராசர் நூலினைப் படித்த நுண்ணறிவுடையீர்’ என்ற தொடங்கும் கவிதை பொருண்மொழீக் காஞ்சி என்னும் துறையில் பாடப் பெற்ற கவிதையாகும். முனிவர் முதலியோர் தெளிந்த பொருளைச் சொல்லுதல் பொண்மொழிக் காஞ்சித் துறையாம்.    இக்கவிதை…

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு – சென்னை

தனித்தமிழ் காப்போம்!                                                                                          தமிழராய் வாழ்வோம் ! தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு –  சென்னை அன்புடையீர் வணக்கம்   தனித்தமிழ்இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டுக் கருத்தரங்கு ஒன்றை நடத்தவிருக்கிறோம்….

சட்டமன்றத்தில் அம்மணச் சாமியாரை அமர வைத்து ஆசி பெறுவோர் – கி.வீரமணி கண்டனம்

அம்மணச் சாமியாரைச் சட்டமன்றத்தில் அமர வைத்து ஆசி பெறுவோர் – வெளிநாட்டுப் பெண்களின் உடையைப்பற்றி பேசலாமா?  அமைச்சர்களை ஆர்.எசு.எசு.எசு. ஊதுகுழலாக்காமல் நாட்டு வளர்ச்சியின் பக்கம்  தலைமையாளர்(தலைமையமைச்சர்) திரும்பச் செய்யட்டும்!  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை    வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பெண்கள் எத்தகைய உடை அணிந்து வரவேண்டும் என்று  பா.ச.க. அமைச்சர் தலையிட்டுப் பேசுவது  சரியா?  அம்மணச் சாமியாரை அரியானா சட்டப் பேரவையில் அமர்த்தி ஆசி பெற்றுக் கொள்ளும் பா.ச.க., வெளிநாட்டுப் பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது குறித்தெல்லாம் பேசலாமா? சக அமைச்சர்கள்…

குறள் மலைச்சங்கத்தின் கருத்தரங்கமும் நூல் வெளியீடும் – ப.இரவிக்குமார்

பேரன்புடையீர் வணக்கம்.   1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலையில் கல்வெட்டுகளாகப் பதிக்க குறள் மலைச்சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே.   தொடர் முயற்சியாக “திருக்குறள் ஏன் கல்வெட்டில் பதிக்கப்படவேண்டும்” என்பது பற்றிய கருத்தரங்கமும், “கல்வெட்டில் திருக்குறள் – பாகம்3” என்ற நூல் வெளியீட்டு விழாவும், மார்கழி 01, 2047 / 16.09.2016 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எசு.எசு.எம். கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதுசமயம் தாங்கள் தவறாது விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.   விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு…