தலைநகர்த் தமிழ்ச்சங்கம் : பெரியபுராணத் தொடர்சொற்பொழிவு – 18

தலைநகர்த் தமிழ்ச்சங்கம் பெரியபுராணத் தொடர்சொற்பொழிவு – 18 ஆனாய நாயனார் ஐப்பசி 28, 2047 / நவம்பர் 13, 2016 மாலை 4.30   தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் பொழிவாளர்:  பேரா.முகிலை இராசபாண்டியன்

அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்!     நண்பர்  நந்தவனம் சந்திரசேகர் அழைப்பால்,  இரு வாரம் முன்னர் எனக்குப் பருமாவிற்குச்செல்லும் வாய்ப்பு வந்தது. எனவே, பேசுவதற்குக் குறிப்புகள் எடுப்பதற்காகப் பருமாவில் உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை, தமிழர், தமிழ் நிலைமைகள் ஆகியவற்றை அறிவதற்காக இணையத் தளங்களில் விவரங்கள் தேடினேன். ஆனால், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.   தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும்  ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும்…

திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

கார்த்திகை 22, 2047 / 07.12.2016 அன்று கே.எசு.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள, திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்துக்குப் பல்வேறு மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகளையும் பல்வேறு உரையாசிரியர்களின் உரை நயங்களையும் ஒப்பீட்டு முறையிலும் திறனாய்வு முறையிலும் எடுத்துரைக்கும் ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன. கட்டுரை அனுப்பிய பேராளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் கட்டுரை வழங்குவதற்கான இறுதி நாள்  ஐப்பசி 22, 2047 / 07.11.2016. திருக்குறள் மொழிபெயர்ப்புகள் குறித்தோ உரைகள் குறித்தோ எழுதப்படும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. சிறந்த கட்டுரைகளுக்குப்…

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : கரிச்சான்குஞ்சு

அன்புடையீர் வணக்கம்.  இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘  வரிசையில் இந்த மாதம் –  08.11.2016  செவ்வாய் அன்று  மாலை 06.30 மணிக்கு –   ‘மறுவாசிப்பில் கரிச்சான்குஞ்சு‘ இடம் : பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர் தலைமை: திரு தி.அருணன்  சிறப்புரை : திரு மாலன்  அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் என். சிரீராம்   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன்  இணைப்புரை: முனைவர் ப.சரவணன்  உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்

சிறாருக்கான மாநில அளவிலான முதல் சதுரங்கப் போட்டி,கீழக்கரை

சிறாருக்கான மாநில அளவிலான  முதல் சதுரங்கப் போட்டி   மொத்தப் பரிசுத் தொகை :உரூ. 48,000/ + 84 வெற்றிக்கிண்ணங்கள்   இராமநாதபுரம் மாவட்டச் சதுரங்கக் கழகமும் கீழக்கரை முகம்மது சதக்கு பொறியியற் கல்லூரியும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான  குழந்தைகளுக்கான முதல் சதுரங்க விளையாட்டுப் போட்டி   கீழக்கரை முகம்மது சதக்கு பொறியியற் கல்லூரியில்   கார்த்திகை 04 & 05, 2047 19.11.16 &20.11.16 இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. 4 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் 9, 11, 13, 15, ஆகிய  அகவைக்குட்பட்ட பள்ளி…

அணிதிரள்வோம் ஆர்ப்பாட்டத்தில்! – சுப.வீ.

அணிதிரள்வோம் ஆர்ப்பாட்டத்தில்!  இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.).,பா. ச.க. முதலான சங்கப் பரிவாரங்களின் அடாவடித்தனமும், மிரட்டல்களும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றன. அதன் ஒரு பகுதிதான் மூத்த இ.ஆ.ப. அதிகாரி கிருத்துதாசு காந்தியின் மீது ஏவி விடப்பட்ட வன்முறை மிரட்டல்கள்.  யாருக்கோ நிகழ்ந்த ஒன்று என எண்ணி நாம் கவலையற்று இருந்தால் அது நாளைக்கு நம் ஒவ்வொருவருக்கும் நடக்கக்கூடும். எனவே கருத்து வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள்  அனைத்தையும் தாண்டி,மதவாத வன்முறைகளுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய நேரமும், நெருக்கடியும் இப்போது வந்துள்ளது.  எங்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்கும், கிருத்துதாசு…

அடையா ளத்தை இழப்பதற்கா பாடுபட்டோம்! – கவிஞர் அம்பாளடியாள்

அடையா ளத்தை  இழப்பதற்கா பாடுபட்டோம்!   என்னுயிரே! பொன்மொழியே! உப்பில்லாப் பண்டமென ஒதுக்கி வைக்கும் ஊராரின் கண்களுக்கு விருந்து வைக்க இக்கணமே நீவருவாய் என்றன் நாவில் இன்றமிழின் ஆட்சியோங்கத் தடைகள் நீங்கும்! எப்பொழும் உன்னையன்றி என்றன் கண்கள் ஏறெடுத்துப் பார்த்ததில்லை எதையும் இங்கே! தப்பான பாடலுக்கோர் பரிசு தந்தால் தமிழ்மீதே ஆணையதை வாங்க மாட்டேன்! நக்கீரன் பரம்பரையில் உதித்த என்றன் நரம்பறுந்து போனாலும் உறங்க மாட்டேன்! திக்குமுக்காய் ஆடவைக்கும் கேள்விக் கெல்லாம் திமிராகப் பதிலளிக்கும் திறனைத் தந்து பக்கத்தில் நீயிருந்து காக்கும் போது பைந்தமிழே…

வலைப்பூக்கள் வழியே வாசிப்புப் போட்டி 2016

வலைப்பூக்கள் வழியே வாசிப்புப் போட்டி 2016   யாழ்பாவாணன் வெளியீட்டகம்(http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாகப், பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர்.   எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் வாசித்ததை வைத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடைகள‌ை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும். கேள்வி கேட்கப்படும் நாளன்று, பொத்தகங்களைப் படித்தாயினும் (நூல்களை வாசித்தாயினும்) விடையை அனுப்பமுடியும்….

பெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்! – தி. வே. விசயலட்சுமி

பெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்! கண்ணின் மணியொக்கும் காரிகையர் தம்முரிமை திண்ணமுறக் காப்போம் தெளிந்து. மங்கையர் மாண்பை மதித்துணராப் பேதையர் மங்கி யழிவரே தாழ்ந்து. பெண்ணின் பெருமையைப் பேணாதார் புல்லர்கள் கண்ணிருந்தும் கண்ணற் றவர். இருவர் மனம்இணைந்தால் பெண்ணடிமை எண்ணம் வருமா? ஆய்ந்துநீ பார் பெண்ணை மதியாத பேதையைப் பாவியாய் மண்ணாய் மரமாய் மதி. ஆடாக அஞ்சியஞ்சி வாழ்தலினும் சிங்கமெனப் போராடி வாழ்பவளே பெண். மகளிரைத் தாயுருவில் வைக்காத பேதையை மக்களாய் எண்ணோம் மதித்து. நெருப்பும் பொறுப்புமே பெண்ணாம்; வெறுப்பால் செருப்பாக்கின் சேரும் இழிவு….

தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 3/4 : மயிலை சீனி.வேங்கடசாமி

(தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 2/4 தொடர்ச்சி) தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 3/4 செல் அரித்தல்   நமது நாட்டுக்குச் சாபக்கேடாக இயற்கையில் அமைந்துள்ள சிதல் என்னும் பூச்சிகள், ஏட்டுச் சுவடிககளுக்குப் பெரும்பகையாக இருக்கின்றன. வன்மீகம் என்றும், செல் என்றும் பெயர்பெற்ற எறும்பு இனத்தைச் சேர்ந்த இப்பூச்சிகள் துணிமணிகள், மரச்சாமான்கள் முதலியவற்றை அரித்துவிடுவது போலவே, ஏட்டுச் சுவடிகளையும் தின்று அழித்துவிட்டன. இப்படி அழித்த சுவடிகளுக்குக் கணக்கில்லை. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் இயற்றிய தேவாரப் பதிகங்களில் நூறாயிரம் பதிகங்களுக்குமேல் செல்லரித்து…

1 2 10