பாட்டின் இயல்பு என்ன? 3/3 – மறைமலையடிகள்

(பாட்டின் இயல்பு என்ன? 2/3 தொடர்ச்சி)   பாட்டின் இயல்பு என்ன? 3/3   இனி, இங்ஙனம் இயற்றப்படுகின்ற பாட்டு உலக இயற்கையழகுடன் பெரிதும் பொருந்தி நடத்தல் வேண்டும். இன்னும் இதனை நுணுகி நோக்குமிடத்துப் பாட்டுப் பாடுதலில் வல்லவனான நல்லிசைப் புலவனுக்கும் உலக இயற்கையினைப் பலவகை வண்ணங்களாற் குழைத்து வரைந்து காட்டுகின்ற ஓவியக்காரனுக்கும் ஒற்றுமை மிக உண்டென்பது தெள்ளிதிற் புலப்படும். ஆயினும், ஓவியக்காரன் வரைகின்ற ஓவியங் கட்புலனுக்கு மட்டுமே தோன்றுவதாகும்; நல்லிசைப் புலவன் அமைக்கின்ற பாட்டோ கண் முதலான புலன்களின் அகத்தே விளங்கும் உள்ளத்திலே…

பார்வை இல்லார் வாழப் பாடுவோமா? – கெருசோம் செல்லையா

பார்வை இல்லார் வாழப் பாடுவோமா? உருவில் அழகு குறையுமானால், ஒப்பனை செய்ய ஓடுகிறோம்! தெருவில் அழுக்கு நிறையுமானால், தென்படுவோரைச் சாடுகிறோம்! எருவில்லாத பயிரைப் பார்த்து, ஏங்கலும் கொண்டு வாடுகிறோம். கருவிலிருந்தே பார்வை இல்லார், களிப்புடன் வாழப் பாடுவோமா? கெருசோம் செல்லையா

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 1.32 – இல்லமைத்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.31. தொடர்ச்சி)   மெய்யறம் இல்வாழ்வியல் 32. இல்லமைத்தல் அகல நீள மரைக்கான் மைல்கொளல். வீடு கட்டுவதற்கான மனை 20 புதுக்கோல்(மீட்டர்) நீளமும் 20 புதுக்கோல்(மீட்டர்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும். ஈரிரு புறமதி லெதிரெதிர் வழிசெயல். வீட்டின் நான்கு புறமும் மதில் சுவர்கள் கட்டப்பட வேண்டும். எதிரெதிராக வாசல்கள் (முன் வாசல், பின்வாசல்) இருக்கவேண்டும். மத்தியிற் புறமதின் மட்டமே லிற்செயல். மனையின் நடுவில் வீடு மதில் சுவர்களைவிட உயரமாகக் கட்டப்பட வேண்டும். இல்லிற் கீரா யிரமடி சதுரமாம். வீடு…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 6/9: பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 5/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்  6/9   தமிழ் தன் ஆற்றலால் செவ்வியல் மொழி ஆகவில்லை; சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிடமிருந்து கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் மொழி எனப்படுகின்றது என்றும் தொல்காப்பியம் பரத முனிவரைப் பின்பற்றி எழுதப்பட்ட நடனப் பாடல்களுக்கான தொகுப்பேயன்றி இலக்கண நூலன்று என்றும் தமிழரின் பா வகைகள் பரத முனியின் ‘யமகம்’ என்பதன் அடிப்படையில் உருவானவை என்றும் தமிழர்க்கு எந்த வாழ்நெறியும் இல்லை; வடமொழி வேதநெறி…

திருக்குறள் அறுசொல் உரை 108. கயமை : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 107. இரவு அச்சம் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 108. கயமை மானுட அறங்களைப் பின்பற்றாத கீழ்மை மக்களது இழிதன்மை.   மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன       ஒப்பாரி யாம்கண்ட(து) இல்.  மக்கள்போல், தோன்றும் கயவரோடு ஒப்பாவார், எவரும் இலர்.   நன்(று)அறி வாரின், கயவர் திருஉடையார்;       நெஞ்சத்(து) அவலம் இலர். நல்லாரைவிடக் கீழோர் பேறுஉடையார்; ஏன்எனில், கீழோர் கவலைப்படார்.   தேவர் அனையர் கயவர்,…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  [ஙு] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி     மேனாடுகளில் படிக்கும் பொழுதே பணியாற்றிக் கல்விச்செலவைத் தம் உழைப்பால் ஈடுகட்டும் நிலையை இக்காலத்தில் பார்க்கின்றோம். ஆனால், அக்காலத்திலேயே அதுவும் பள்ளிமாணவ நிலையிலேயே பேராசிரியர் கல்வி மீதுள்ள ஆர்வத்தினாலும் உழைப்பின் மீதுள்ள மதிப்பாலும் இந்நிலையை மேற் கொண்டார். பிறருக்குக் கல்வி கற்பித்து அதனால் பெறும் வருவாயைக் கல்விச் செலவிற்குப் பயன்படுத்திக் கொண்டார். தம் தமிழாசிரியர் பெரியவர் பொன்னண்ணாக் களத்தில்…

பருமாப்பயணம் உணர்த்தும் கசப்பான உண்மைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

பருமாப்பயணம் உணர்த்தும் கசப்பான உண்மைகள்  பருமா நாடானது, மியன்மா என இப்பொழுது அழைக்கப்பெறும். (சங்கக்காலத்தில் காழகம் என அழைக்கப்பெற்றது.) இங்குள்ள தமிழ்க்கல்வி வளர்ச்சி  மையத்துடன் இணைந்து நந்தனம் அமைவம் இணைந்து இலக்கியப் பெருவிழா விழாவை நடத்தியது. அமைப்பாளர் சந்திரசேகர் தமிழ்நாட்டிலிருந்தும்  ஈழத்திலிருந்தும் தமிழன்பர்களை  அழைத்துச் சென்றார். இந்நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் இருந்து இலக்கியக் குழு பங்கேற்ற முதல் இலக்கிய விழாவாகும். (இவ்விழாவில் சிறப்புரையாற்ற நான் சென்றிருந்தேன். இவ்வுரையைப் பின்னர்த் தனியே அளிக்கின்றேன்.)  இவ்விழாவில் மேனாள் அமைச்சர் நல்லுச்சாமி, நீதியாளர் வள்ளிநாயகம், மரு. இராமேசுவரி நல்லுச்சாமி, மூத்த…

அகவை பத்துதான். ஆனால், அறிந்தனவோ 400 மொழிகள்! – கலக்கும் அக்கிரம்!

அகவை பத்துதான். ஆனால், அறிந்தனவோ 400 மொழிகள்! – கலக்கும் அக்கிரம்!   அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன் முறையாகத் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.   சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 10 அகவையுள்ள அக்கிரம் என்கிற மாணவர் கலந்து கொண்டு 400 மொழிகளில் சரமாரியாகப் பேசி அனைவரையும் திகைக்கச் செய்தார். அறிவுக் கூர்மையை மேம்படுத்துவது எப்படி?  …

தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 2/4 : மயிலை சீனி.வேங்கடசாமி

(தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 1/4 தொடர்ச்சி) தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 2/4 தீயில் எரிந்த ஏடுகள் வரகுணராம பாண்டியன், அதிவீரராம பாண்டியன் என்பவர்கள் திருநெல்வேலியில் அரசாண்டிருந்த பாண்டிய அரசர்கள். இருவரும் தமையன்தம்பி முறையினர். பாண்டியப் பேரரசு வீழ்ச்சியடைந்து பாண்டி நாடு அயல் நாட்டவர் கையில் சிக்கியபோது, அவர்களின்கீழ்ச் சிற்றரசராக இருந்தவர்கள். இவர்களில் அதிவீரராம பாண்டியன் தமிழில் நைடதம் என்னும் காவியத்தையும், வேறு நூல்களையும் இயற்றிப் புகழ் படைத்தவர். இவர் இயற்றிய நைடதத்தைப் பற்றி ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ (ஒளடதம் – அமிர்தம்)…

வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம்

வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம் பூம்புகார் நிறுவனம் – ஓர் அறிமுகம்  தமிழக அரசின் தமிழ்நாடு  கைவினைஞர்கள் மேம்பாட்டுக்  கழகத்தின் விற்பனை நிறுவனம் ‘பூம்புகார்.’  தமிழர்களின்   மரபார்ந்த  பண்பாட்டினைச், சிற்பம், ஓவியம், எழுத்து போன்ற பல்வேறு கலைகளில் பதிவு செய்து, பழமைகளை மீட்டெடுத்துப் பாதுகாத்து, வளர்த்து அவற்றை இன்றைய தலைமுறையினருக்கும் வெளி உலகுக்கும்  வணிகமுறையில் கொண்டு செல்லும் பணியில் 1973 ஆம் ஆண்டிலிருந்து  பூம்புகார் நிறுவனம் திறம்படச் செயல்படுகிறது. தெய்வப்புலவர் திருவள்ளுவர்  திருக்குறள் மனித வாழ்வின் இலக்கண நூல்  [Thirukkural is the…

கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் இணைய வலைப் பதிவர் போட்டி 2017’

‘காக்கைச் சிறகினிலே‘ மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் இணைய வலைப் பதிவர் போட்டி 2017 / தி.பி.2048′ –    ‘காக்கைச் சிறகினிலே’ இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி.  பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று. புலம்பெயர் இலக்கியப்…

மாணிக்கவாசகம் பள்ளி : அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்குப் பாராட்டு

தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  தமிழ்நாடு அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கு பெற்றுச் சான்றிதழ்கள் பதக்கங்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  நிகழ்விற்கு வந்தவர்களை மாணவர் நந்தகுமார் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர்நாள் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றுச் சான்றிதழ், பதக்கம் தனலெட்சுமி, இரஞ்சித்து, உமா மகேசுவரி , சீவா, பரமேசுவரி, பார்கவி இலலிதா, இராசேசுவரி, நித்திய கல்யாணி, காயத்திரி ஆகிய மாணவர்களுக்கும், இரோசிமா…