மாவீரர் நாள், வவுனியா : ஒளிப்படங்கள்

  தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ இல், விழி ஊறி நதியாகிய வவுனியா உறவுகள்!   [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்]  

ஈழ இளையோரே நெறி தவறாதீர்!

ஈழ இளையோரே நெறி தவறாதீர்!     2009 மே காலப்பகுதி வரை தமிழ் மக்களின் வாழ்விலும் வளத்திலும் கோலோச்சிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கைக்குள் செயல்பாட்டு தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில், தமிழ்ப் பண்பாட்டுக் குமுகம் ‘ தன்னொழுக்கம் –  தற்கட்டுப்பாட்டை’ இழந்து, தரம் தாழ்ந்துவரும் மோசமான நிலைமைகள் மிகுந்த கவலையையும் – பயத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.  ‘2009 மே’க்குப்பின்னர் கடந்த ஏழு வருடங்களாகத் தாராளமாகப் புழக்கத்தில் விடப்பட்டுள்ள போதைப்பொருள்கள் – அருவருக்கத்தக்க(ஆபாசக்) காணுரைகள், மடைதிறந்து விடப்பட்டுள்ள கொலை, கொள்ளை, வழிப்பறி, குடும்ப வன்முறைகள்,…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 36 (2.06) காமம் விலக்கல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 35 (2.05) தொடர்ச்சி]     மெய்யறம் இல்வாழ்வியல் 36. காமம் விலக்கல்    351. காம மகத்தெழு மாமத வெறியே. காமம் உள்ளத்தில் எழுகின்ற மிகப் பெரிய வெறி ஆகும். இன்ப மறிவோ டிருந்ததுநு பவிப்பதே. இன்பம் என்பது சுய நினைவோடு அநுபவிப்பது ஆகும். இராச்சில குறித்தறை யியைந்திட லின்பம். சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அநுபவிப்பது இன்பம் ஆகும். 354.எண்ணிய பொழுதிடத் தியைந்திடல் காமம். நினைத்த பொழுது நினைத்த இடத்தில் அநுபவிப்பது காமம் ஆகும். காம மகப்புறக் கண்களைக் கெடுத்திடும்….

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 3/7   “சி.இலக்குவனாரின் தமிழ்மொழிச் சிந்தனை”கள் யாவை என ஆய்வாளர் மு.ஏமலதா அருமையாக விளக்கியுள்ளார். சமற்கிருதச் சார்புடையதாகத் தொல்காப்பியத்தைப் பிறர் தவறாகச் சொல்லி வந்ததை மாற்றித் தமிழ்மரபில் தமிழ் மரபு காக்க உருவாக்கப்பட்டது தொல்காப்பியம்;  தமிழில் தூய்மை பேணுவதே தமிழையும் தமிழரையும் காக்கும்; வீட்டுச் சமையல் போன்ற கலப்பில்லாத தூயதமிழே தேவை;…

புதிய மாதவியின் ‘பெண்வழிபாடு’ : சிந்தனையைத் தோற்றுவிக்கும் சிறுகதைத்தொகுப்பு – வளவ. துரையன்

புதிய மாதவியின் பெண்வழிபாடு: சிந்தனையைததோற்றுவிக்கும் சிறுகதைத்தொகுப்பு   சுட்ட பழங்களும் சுடாத பழங்களும்  மும்பையை வசிப்பிடமாகக் கொண்ட புதிய மாதவி புதிய இலக்கியத்தில் முதன்மையான இடத்தை வகிப்பவர். கவிதை, சிறுகதை,  திறனாய்வு எனப் பல வகையான தளங்களில் இயங்கி வருபவர்.  ‘பெண் வழிபாடு’ எனும் அவரது சிறு கதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் பல்வேறு தளங்களில் இயங்கும் கதைகள் இடம் பெற்றிருப்பதால் வாசிக்கக் களைப்பில்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.   பெண் தலைமை தாங்கும் மன்பதை மறைந்து ஆணை முதலாகக் கொண்ட மன்பதை…

தொடக்கப்பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி, துபாய்

   துபாயில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான + அனைத்துலகப் பேச்சுப் போட்டி 2016 தொடக்கப் பள்ளி மாணவர்களின் நாவன்மைக்கு நல்லதொரு களமாக மலர்ந்து வரும் ‘மாணவர் முழக்கம்’ எனும் அனைத்துலகத் தமிழ்ப் பேச்சுப் போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்று இம்முறை எழில்மிகு துபாயில் இடம் பெறுகிறது. மலேசியாவின் ஆத்திரோ தொலைக்காட்சியும் ‘வணக்கம் மலேசியா’ இணையச் செய்தித் தளமும் இணைந்து, தமிழகம் வேலம்மாள்  உலகப்பள்ளி நிறுவனத்தாரின் ஆதரவுடன் நடத்துகின்றன. எதிர்வரும்  கார்த்திகை18, 2047 / திசம்பர் 3ஆம் தேதி சனிக்கிழமை துபாயின் அல் சபாவில்  சே.எசு.எசு. (JSS Private…

துபாயில் நடைபெற்ற நடன அரங்கேற்ற நிகழ்ச்சி

துபாயில் நடைபெற்ற செல்வி சிரத்தாவின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி    துபாய் : ஐப்பசி 26, 2047 / நவம்பர் 11, 2016 வெள்ளிக்கிழமை அன்று செல்வி சிரத்தா  சிரீராம(ஐய)ரின்  பரதநாட்டியம்  அரங்கேற்றம் மரு. இராசசிரீ(வாரியர்) தலைமையில் வெல்லிங்டன் அரங்கத்தில் வெகுசிறப்பாக  நடைபெற்றது.   குரு திருமதி மதுராமீனாட்சி சினீவாசு பாட்டும், நட்டுவாங்கமும் திரு  சிரீனி கண்ணூர் மிருதங்கம் , திரு சுரேசு நம்பூதிரிவில்யாழ்(வயலின்) , திரு பிரியேசு  புல்லாங்குழல் அனைத்தும் வெகு இனிமையாக  இருந்தன.  மலர் வணக்கம், அலாரிப்பில்  தொடங்கிக் கௌத்துவம், வண்ணம், பதம்,…

தமிழ்த்தேசியத் தலைவர் 62 ஆவது பிறந்தநாள் விழா – நாம் தமிழர் கட்சி

தமிழ்த்தேசியத் தலைவர்  62 ஆவது பிறந்தநாள் விழா –  நாம் தமிழர் கட்சி  தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாளையொட்டி கார்த்திகை 11, 2047 / 26-11-2016 சனிக்கிழமை, மாலை 5 மணியளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமைஅலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் தலைமையில் தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முதன்மைப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.   முன்னதாக அனைவருக்கும் இனிப்பும் பொங்கலும் வழங்கப்பட்டன, இவ்விழாவில், குழந்தைகளுக்கு அழகு தமிழில் பெயர் சூட்டுவதற்காக ஆட்சிமொழிப்பாசறைப் புலவர் மறத்தமிழ்வேந்தன் எழுதிய  62000 தமிழ்ப் பெயர்கள் கொண்ட ‘அகரமுதலி’ என்ற  புத்தகத்தை சீமான் வெளியிட்டார்; ‘தமிழன்’ தொலைக்காட்சி…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 3/6

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை :  திருக்குறள் ஆராய்ச்சி 2/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 3/6 பெண்களும் அறியும் ஆற்றல் உடையவர்களே! பெண்மைக்கு எதிராக எங்குக் களை தோன்றினாலும் அதனைக் களையும் காவலராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். எனவேதான் கல்வி ஆண் பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். இதனை ‘அறிவறிந்த மக்கட்பேறு’ (குறள் 71) என்பதை விளக்கும்பொழுதும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: ‘‘மக்களாய்ப் பிறப்போர் அனைவரும் ‘அறிதற்குரியர்’தாம். அறிதற்குரியோருள்தான் சிலர் அறிவுடையோராகவும் சிலர் அறிவற்றவராகவும் வளர்ந்து விடுகின்றனர். அறிவறிந்தவர்தாம்…

உலகத் தமிழர் பேரவை சார்பில் மாவீரர்களுக்கு வீர வணக்கம்

உலகத் தமிழர் பேரவை சார்பில்  மாவீரர்களுக்கு வீர வணக்கம் உலகத் தமிழர் பேரவை சார்பில் தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது! http://worldtamilforum.com/forum/forum_news/maaveerar_naal_27112016/   உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், தங்கள் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகம் செய்தோரை நினைக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வகையில் (கார்த்திகை 12, 2047/27.11016 காலை 11 மணியளவில்,)  சென்னையில் அண்ணா சாலையில் உள்ள உலகத் தமிழர் பேரவையின் அலுவலகத்தில் தமிழறிஞர் அரு. கோபாலன் தலைமையில் உறுதி மொழியும், உரையும் நிகழ்த்தப்பட்டன.  ஈகை…

இலக்கிய நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

கார்த்திகை 19, 2047 / திசம்பர் 04, 2016 பிற்பகல் 3.00 கருத்தரங்கம் புலவர் செம்பியன் நிலவழகன் கவியரங்கம் புலவர் தில்லைக்கல்விக்கரசன் திருமதி சே.விசயபாரதி கோ.தக்சிணாமூர்த்தி த.மகாராசன்

புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் : கவிதைப் போட்டி, கவியரங்கம், விவாத அரங்கம்

புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் நடத்தும்  கவிதைப் போட்டி, கவியரங்கம் & விவாத அரங்கம் ஆர்வமுள்ள கவிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் வரும் திசம்பர் திங்களில் தமது 72ஆம் திங்கள் நிகழ்வைச் சமூக விழிப்புணர்வு நிகழ்வாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அவ்வகையில், தற்போது நாட்டில் நிலவுகின்ற பணப்புழக்கம் மற்றும் பணக்குழப்பம் தொடர்பாகக் கவிதைப் போட்டியுடன் கூடிய கவியரங்கம், விவாத அரங்கம் நடத்த உள்ளது. கவிதைப் போட்டித் தலைப்பு: “அலைக்கழிக்கும் 500, 1000 “ மரபுப்பா எனில் 16 அடிகளுக்குள்ளும் புதுக்கவிதை எனில்…

1 2 9