நியூ யார்க்கில் சூரிய வெளிச்சத்தில் பொங்கல் பொங்கும் விழா

அன்புடையீர்!   வரும் சனவரி மாதம் 14 ஆம்நாள் இலங்கைத் தமிழ்ச் சங்கம், அமெரிக்காவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கமும்  இணைந்து தமிழர் திரு நாளான பொங்கல் திரு நாளை  புதுயார்க்கு/நியூயார்க்கு  அரசி/குயின்சு நகரில் வெகு  சிறப்பாகக்  கொண்டாட  உள்ளன.   காலையில் தமிழரின்  பண்பாட்டு முறையில் சூரிய வெளிச்சத்தில் பொங்கல் பொங்கும் நிகழ்ச்சி  அனுமான் ஆலயத்தில் நடை பெறும்.   மாலையில் நாவலர் தமிழ்ப் பாடசாலை சிறுவர் நிகழ்ச்சிகளுடன்   உச்சப்பாடகர்(சூப்பர் சிங்கர்)கள்  வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி  கிளென் ஓக்சு நகரில் உள்ள(…

திருக்குறள் அறுசொல் உரை: 110. குறிப்பு அறிதல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் அதிகாரம் 110. குறிப்பு அறிதல் பார்வை, செயல்களால், காதலியின் ஆழ்மனக் குறிப்பினை அறிதல் (01-10 தலைவன் சொல்லியவை)   இருநோக்(கு), இவள்உண்கண் உள்ள(து); ஒருநோக்கு       நோய்நோக்(கு),ஒன்(று) அந்நோய் மருந்து. இவளிடம் இருபார்வைகள்; ஒன்று, நோய்தரும்; மற்றுஒன்று, மருந்து.   கண்களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில்       செம்பாகம் அன்று: பெரிது. காதலியின் கள்ளப் பார்வை, காதலில் பாதியைவிடப்…

மொய் எழுதும் பழக்கம் புதியதல்ல – மாணவி விசாலி : முகம்மது இராபி

மொய் எழுதும் பழக்கம் புதியதல்ல – மாணவி விசாலி  நூறு ஆண்டுகளுக்கு முன்பே மொய் எழுதும் வழக்கம் உள்ளதை ஓலைச்சுவடி மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அரசுப் பள்ளி மாணவி விசாலி ஆவணப்படுத்தி உள்ளார்.   பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழி உருவாகத்  தொடங்கியது முதல் மனிதர்கள் கல், பாறைகள், களிமண் பலகை,  மாழை(உலோக)த்தகடு, துணி, இலை, மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில் பத்தை, பனை ஓலை போன்றவற்றை எழுதக் கூடிய பொருட்களாகப் பயன்படுத்தினர்.   தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பனை மரங்கள்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 40(2.10) பெரியாரைத் துணைக்கொளல்

  (வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 39(2.09).  தொடர்ச்சி)    மெய்யறம் இல்வாழ்வியல்   பெரியாரைத் துணைக்கொளல் பெரியா ரரியன பெரியன செய்பவர்; பெரியவர் என்பவர் செய்வதற்கு அரிய, மிக உயர்ந்த செயல்களைச் செய்பவர்; பொறியா ளுளத்தை யறிவா லாள்பவர்; மேலும் ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் உள்ள மனத்தைத் தமது அறிவின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்; இகபர வியலெலா மெண்ணிநன் கறிந்தவர்; மேலும் இவ்வுலகத்தின் இயல்பினைப் பற்றியும் இறைவனைப்பற்றியும் நன்கு அறிந்து இருப்பவர்; 394.நல்லின வியலெலா நண்ணி நிற்பவர்; மேலும் நல்லினப் பண்புகளை எல்லாம் பெற்றிருப்பவர்; பின்னுறுந் தீங்கெலா முன்னறிந்…

கி.இ.க. / ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் வைணவத் தமிழ் வளப் பொழிவு 13,சென்னை

  மார்கழி 12, 2047 செவ்வாய்  27.12.2016 மாலை 6.00 கி.இ.க. / ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தின் வைணவத் தமிழ் வளப் பொழிவு 13   திருமங்கை ஆழ்வாரின் தமி்ழ்நயம்: முனைவர்  சிலம்பொலி  சு.செல்லப்பன்   தலைவர்: கவிஞர் அரிமா  இளங்கண்ணன்  

அம்மணமா நிற்க வைத்து விசாரித்தால்தான் பிடிக்குமோ’! நளினி மீதான சித்திரவதையின் உச்சக்கட்டம்

 (இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் 01 தொடர்ச்சி) ஏண்டி உன்னை அம்மணமா நிற்க வைத்து விசாரித்தால்தான் பிடிக்குமோ’! நளினி மீதான சித்திரவதையின் உச்சக்கட்டம்    ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் இராசீவு கொலை வழக்கு குற்றவாளி நளினி எழுதியிருக்கும் புத்தகத்தின் இரண்டாவது பகுதி இது! ‘ஏண்டி உன்னை அம்மணமா நிற்க வைத்து விசாரித்தால்தான் பிடிக்குமோ’ என்று சொல்வதே அப்போதைக்கு அவர்களிடம் இருந்த ஓரளவு நாகரிகமான  தொடர் எனலாம். அதைவிட இன்னும் கொச்சையாக இருந்தன…

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6

(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6 தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6     ‘குறள்நெறி பரவின் குடியெலாம் சிறக்கும்                                    140 அமைதி நிலவும் அன்பு தவழும் போர்முறை ஒழியும்; பொய்மை மறையும் செம்மை ஆட்சி சீர்பெற் றோங்கும்’ என்றே கூறி இன்குறள் பாக்களை தெருவெலாம் பரப்பச் செய்யும் தொண்டில்                                 145 உளம்உரை உடல்பொருள் ஒல்லுவ வெல்லாம் அளித்திடக் காண்பாய் அகம்மிக மகிழத் திங்கள் தோறும் திருக்குறள் கழகக் கூட்டம் நடாத்தி நாட்டின் உயர்வைப் பெருக்கிடும்…

தண்டமிழ் வேலித் தமிழகம் – புலவர் குழந்தை

தண்டமிழ் வேலித் தமிழகம் – புலவர் குழந்தை   தெண்டிரை மூன்று திசையினுங் காப்ப வண்டமிழ் விந்த மலைவடக் கார்ப்பப் பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம்.   நனிமிகு பண்டுநற் நற்றமிழ்ச் செல்வி பனிமலை காறும் பகைசிறி தின்றி இனிதுயர் வெண்குடை நீழ லிருந்து தனியர சோச்சித் தமிழகங் காத்தாள்.   சீரியல் வாய்ந்த செழுந்தமி ழன்னை மாரி வழங்கும் வடதலை நாட்டை ஆரிய ரென்னு மயலவர் தங்கள் பேரறி யாத பெருமையி னாண்டாள்.     விந்த வடக்கு…

மறக்க முடியுமா? – புலவர் குழந்தை: எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? – புலவர் குழந்தை   அறிவில் முதிர்ச்சி, உணர்வில் முதிர்ச்சி, புலமையில் முதிர்ச்சி, பாக்களைப் புனைவதில் முதிர்ச்சி-ஆனால், பெயர் மட்டும் குழந்தை! புலவர் குழந்தை, ஈரோடு நகரத்திற்கு அருகில் ‘ஒல வலசு’ என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி. ஆனி 18, 1937 / 1906ஆம் ஆண்டு  சூலை 1ஆம்  நாள் பிறந்த இவரின் கல்வி, திண்ணையில் தொடங்கி, 1937ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெறுவதில் போய் நின்றது. இவரின் வாழ்க்கை ஆசிரியர் பணியில்…

ஏழாம் ஆண்டில் கற்க கசடற – திருக்குறள் போட்டி , இலண்டன்

  தமிழ் இளையோர் அமைப்பு 7  ஆவது வருடமாகக் கற்க கசடற  – திருக்குறள் போட்டி   வணக்கம்.   தமிழ் இளையோர் அமைப்பின் கற்க கசடற நிகழ்வின் 7 ஆம் ஆண்டு நிரல்   வடகிழக்கு  – ஞாயிறு,  சனவரி 29, 2017 காலை து.மெ.நி இல்லம்,மனோர் பூங்கா, இலண்டன் (TMK House, 46A East Avenue, Manor Park, London E12 6SQ) வடமேற்கு – ஞாயிறு,  சனவரி 29, 2017 காலை   ஈலிங்கு அம்மன் கோயில், இலண்டன் (Ealing…