மக்கள் கலைஞர் கே.ஏ. குணசேகரன் நூல்வெளியீட்டு நிகழ்வு, சென்னை

  தோழமை கொண்டோருக்கு, “ மக்கள் கலைஞர்” கே.ஏ. குணசேகரன் நூல்வெளியீட்டு நிகழ்வு சென்னையில் கவிக்கோ மன்றத்தில் மார்கழி 16, 2047 / 31-12-2016 அன்று நடைபெற உள்ளது.    நட்புடன் பா.செயப்பிரகாசம்

இருந்தபோது நாடு தொழுதது! இறந்த பின்பு நாடு அழுதது! – கவிஞர் வாலி

இருந்தபோது நாடு தொழுதது! இறந்த பின்பு நாடு அழுதது!   பொன்மனச்செம்மலே! என் பொழுத்து புலரக் கூவிய சேவலே! உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில்தான் உலகுக்கு என் முகவரி தெரிய வந்தது!   என் கவிதா விலாசம் உன்னால்தான் விலாசமுள்ள கவிதையாயிற்று!   இந்த நாட்டுக்குச் சோறிடு முன்னரே என் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ!   என்னை வறுமைக் கடல்மீட்டு வாழ்க்கைக் கரை சேர்த்த படகோட்டியே! கருக்கிருட்டில் என் கண்களில் தென்பட்ட கலங்கரை விளக்கமே!   நான் பாடிய பாடல்களை நீ பாடிய…

தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார் – சுப.வீ.

தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார்!   விளக்கை ஏற்றி வெளிச்சம் தந்தவர்கள் உண்டு நீயோ உன்னையே எரித்து வெளிச்சம் தந்தாய்! எங்களுக்கு நீதான் எழுதவும் படிக்கவும் அடித்தளமிட்டாய்! நாங்களோ இன்னும் நன்றி சொல்லவே கற்றுக்கொள்ளவில்லை! எங்களுக்காகவே நீ வாழ்ந்தாய்! மன்னித்துவிடு தந்தையே! நாங்களும் எங்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!   – சுப.வீ. சுப.வீ.வலைப்பூ http://subavee-blog.blogspot.in/2012/04/blog-post_983.html

சிறந்தது தாய்ச்செல்வம் – கி.ஆ.பெ.விசுவநாதம்

  சிறந்தது தாய்ச்செல்வம்   செல்வம் பலவகைப்படும். “பதினாறும்’பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்” என்று வாழ்த்துவதில் ‘பதினாறு பிள்ளைகள்’ என்று பொருளல்ல. அது மனை, மக்கள், தாய், நெல், நீர், நிலம், கால்நடை, கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், வலிமை, பொன், பொருள், போகம் என்பனவையாகும்.  இந்தப் பதினாறிலும் சிறந்தது தாய்ச்செல்வம். பிற செல்வங்களை இழந்து விடுவோமானால் முயன்றால் அவற்றைத் திரும்பப் பெற்று விடலாம். தாய்ச் செல்வத்தை இழந்து விட்டால் அதனை எவராலும் எவ்விதத்திலும் பெற முடியாது.  – முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்: ஐந்து செல்வங்கள்

கிறித்து பிறப்பு வாழ்த்து ​- கெருசோம் செல்லையா

கிறித்து பிறப்பு வாழ்த்து! ​   இல்லா நிலையில் யாவும் படைத்த இணையற்றவரே இறைவன். எல்லோருக்கும் மீட்பின் பொருளாய் இப்புவி வந்தவர் மைந்தன். வல்லோன் விரிக்கும் வலையை அறுத்து, வாழ வேண்டுமே மனிதன். நல்லாவியரால் நடத்தப்பட்டு, நன்மை செய்வான் புனிதன்.   கிறித்து பிறப்பின் மகிழ்ச்சி,  புத்தாண்டு முழுதும் நிலைக்க வேண்டும்!   -செல்லையா,  இறையன்பு இல்லம், செயலகக் குடியிருப்பு, இரட்டை ஏரி, சென்னை. www.iraiyanbuillam.com  

கடவுள் எப்போது கவலைப் பட்டார் ? – துரை வசந்தராசன்

கடவுள் எப்போது கவலைப் பட்டார் ? உண்டு என்றால் ஒற்றை மகிழ்ச்சி ! இல்லை என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி! ஆன்மீ கத்தில் அகப்படும் கடவுள் நாத்திகத்தில் விடுதலையாகிறார் ! தோண்டிப்பார்த்தும் கிடைக்காதோர்க்குத் தொண்டின் வழியாய்த் தொடர்புகொள்கிறார்! உண்டெனச்சொல்லிஉடைகிற மண்டையில் ஔிந்துகிடந்து உருக்குலைவதனால் தன்னம்பிக்கை என்னும் பெயரில் தளர்வறியாமல் தாவிக்குதித்து நாத்திகக் கடவுள் நலமாய் இருக்கிறார்! நாத்திகக் கடவுள் நலமாகவே இருக்கிறார் ! நாத்திகம் அவரைப் பூட்டுவதில்லை! நடைகளைச் சாத்தும் தனிமையுமில்லை! காத்திருந்துவரம் கேட்பதுமில்லை! காதுகள் வலிக்கும் கோரிக்கையில்லை! ஆத்திரம்தீர அழுவதுமில்லை! அடிக்கடி அழைத்து அலைக்கழிப்பதில்லை!…

இவை தொடர வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

  இவை தொடர வேண்டா!     கடந்த ஆட்சிகளில் காணப்பெறும் நிறைகளைப் பின்பற்றியும் குறைகளைக் களைந்தும் புதிய அரசு செயல்பட வேண்டும். அதற்குப் பின்வரும் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி தேவை. ‘நான்’ என்னும் அகந்தை எண்ணம். எல்லாமே முதல்வரின் செயல்பாடு என்ற மாயத்தோற்றத்தை  உருவாக்கல். காலில் விழும் ஒழுகலாறு. ஈழத்தமிழர்களை உரிமையுடன் வாழ விடாமை. அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அஞ்சுதல். ஊழற் செயல்பாடுகளுக்கு முதன்மை அளித்தல். 7.அமைச்சர்களே முதலமைச்சரைப் பார்க்க  இயலாமை. முதல்வர் ஊடகங்களிலிருந்து விலகி நிற்றல். அமைச்சர்கள் தங்கள் துறை குறித்துக் கூறவும் வாய்ப்பூட்டு…

எழுத்தாளர் சார்வாகன் முதலாமாண்டு நினைவஞ்சலி

எழுத்தாளர் சார்வாகன் முதலாமாண்டு நினைவஞ்சலி   மார்கழி 10, 2047 /   ஞாயிறு    25-12-2016 காலை 10.30   எழுத்தாளர்  சாரு நிவேதிதா, எழுத்தாளர் குப்புசாமி, சார்வாகனின்  உடன்பிறப்பு மரு.இராசன் அரிகரன் பேசுகிறார்கள் பரிசல் புத்தக நிலையம் இராமகிருட்டிணா மடம் சாலை, மயிலாப்பூர்     (பெ.சு.பதினிலைப்பள்ளி எதிரில்)

தமிழரின் பெருமை – அறிஞர் கால்டுவெல்

தமிழரின் பெருமை  குமரி முனைக்குத் தென்பால் உள்ள பெருநாட்டில் முதன் முதல் தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர் திராவிடர் என்று அழைத்தனர்.   குமரிக் கண்டத்தைக் கடல் கொண்ட பொழுது இவருள் சில பகுதியினர் கடல் வழியாகவும், நில வழியாகவும் பெலுசித்தான், மெசபடோமியா முதலிய வடமேற்கு ஆசிய நாடுகளில் சென்று வாழ்ந்தனர்.  – அறிஞர் கால்டுவெல்

சார்சாவில் ஒவ்வொரு மாதமும் பல் மருத்துவ இலவச முகாம்

சார்சாவில் ஒவ்வொரு மாதமும்  பல் மருத்துவ இலவச  முகாம்  சார்சா  இரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள தமிழ்ப் பல் மருத்துவமனையான அல் சுரூக்கு  பல்துறைமருத்துவமனையில்(பாலிகிளினிக்கில்  பல் மருத்துவ இலவச முகாம்  அனைத்து மாதமும் முதல் வாரம் நடைபெற இருக்கிறது.   இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த  மருத்துவர் சிராசுதீன் பற்களுக்குத் தேவையான அனைத்து விதமான  பண்டுவங்கள்(சிகிச்சைகள்) குறித்து இலவச  அறிவுரை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர்,  0562861120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மருத்துவர் சிராசுதீன்  : dr…

இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா-நளினி சந்திப்பும் 01

1. குண்டு வெடித்த பிறகு தணு நடந்து போனார்!  ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி முருகன் தனது எண்ணங்களை நூலாக ஆக்கி உள்ளார். இதழாளர் பா.ஏகலைவன் இந்த நூலைத் தொகுத்து எழுதியுள்ளார். நவம்பர் 24-ஆம் நாள் சென்னையில் இந்த நூல் வெளியிடப்பட்டது.   மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் எண்ணங்களை இந்த நூலில் நளினி சொல்லி இருக்கிறார். திகைப்பூட்டும் தகவல்கள் பல முதன்முறையாக வெளிவந்துள்ளன. அவற்றில் சில பகுதிகள் மட்டும் இங்கே! இருட்டறையில் இருந்து!…

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)யின் தமிழிசைத் திருவிழா, சென்னை .

கார்த்திகை 12, 2047 / திசம்பர் 29, 2016  பிற்பகல் 2.00 மணி முதல் பசும்பொன் தேவர் மண்டபம், சென்னை 600 017 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)யின் தமிழிசைத் திருவிழா, சென்னை .   வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) தமிழகத்தில் தமிழிசைப்பணியை முன்னெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவைத் திசம்பர் மாதத்தில் நடத்தி வருகின்றது.  சென்னையில் உள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையோடு இணைந்து பேரவை, 4-ஆம் ஆண்டுத் தமிழிசை விழாவினை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. தமிழிசை ஆர்வலர்கள்…