பெரியார் 43-ஆவது நினைவு நாள் – பல்வழி அழைப்புக் கூட்டம்

பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா பெரியார் 43-ஆவது நினைவு நாள் பல்வழி அழைப்புக் கூட்டம் பேரா.சுப.வீரபாண்டியன்:  பெரியாரும் இன்றைய தமிழகமும் மார்கழி 08, 2047 / திசம்பர் 23, 2016  அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8.00 முதல் 9.00 வரை அழைப்பு எண் (712)4321500  குறி: 951521# தரவு: சோம.இளங்கோவன்

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 39(2.09). சிற்றினம் விலக்கல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 38(2.08) தொடர்ச்சி]    மெய்யறம் இல்வாழ்வியல் 39. சிற்றினம் விலக்கல் சிற்றினங் குணத்திற் குற்றமிகு மாக்கள்; சிற்றினம் என்பவர் தனது குணநலன்களில் குறைகளை உடையவர்; பெருமிதந் தன்னைப் பேணா மாக்கள்; தன்னுடைய மதிப்பைப் பேணிப் பாதுகாக்க இயலாதவர்கள்; அற்பத் தன்மை யளாவிய மாக்கள்; சிறுமைக் குணங்களை விரும்புபவர்கள்; பொறியின் பங்களிற் செறிவுறு மாக்கள்; ஐம்புலன்களினால் கிடைக்கும் இன்பங்களில் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள்; சுயநயங் கருதும் பயனிலா மாக்கள். தம் நலத்தையே எப்பொழுதும் எண்ணும் சுயநலம் உடையவர்கள் ஆகியோர் ஆவர். சிற்றினம்…

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6

(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் :3 / 6 தொடர்ச்சி)     மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6 அவர்கருத் தறிந்தே அன்பாய் ஒழுகும்                                               110 தம்பியும் மக்களும் தமரும் பெற்றவர். கோவிந்த சாமியாம் கூறும் தம்பி கொடுப்பதும் கொள்வதும் குறைமிக வின்றி அறநெறி போற்றிடும் அரிய வணிகர். புன்னகை தவழும் நன்னல முகத்தர்.                                                  115 அடக்கமே வடிவம்; அன்பே பண்பு அண்ணனுக் கேற்ற அருள்உளத் தம்பியர் உடலால் இருவர் உளத்தால் ஒருவர் பகுக்க முயல்வோர் பயன்பெறத்…

பன்னீர் தொடர்தலே சாலவும் நன்று! – இலக்குவனார் திருவள்ளுவன்

பன்னீர் தொடர்தலே சாலவும் நன்று!   மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆனால், முதலிரு முறையும் முதல்வர் என்ற பெயரில் இரண்டாமவராகத்தான் இருந்தார். இப்பொழுதுதான் உண்மையாகவே முதல்வராகவே பொறுப்பேற்றுள்ளார் எனலாம். எனவே, அவரது தனித்த செயல்பாடுகள் வெளிவருகின்றன.   ‘வருதா’ புயல் என்னும் பெரும் சூறைக்காற்றின் பொழுது எடுத்த நடவடிக்கையும், களத்திலிருந்து சிக்கல்களை எதிர்நோக்கி அலுவலர்களை ஒருங்குபடுத்தி ஆவன செய்தனவும் அனைத்துத் தரப்பாரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.   இப்பொழுது சிலர் சசிகலாவே தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்…

மறக்க முடியுமா? : மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் : எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்     “தேவதாசி/தேவடியாள் (தேவ அடியாள்) ஆஃகா! என்ன திவ்வியமான திருப்பெயர்கள். தெய்வத்திற்குப் பக்தி சிரத்தையுடன் தொண்டு புரிபவளே தேவதாசி/தேவடியாள்.” “தேவதாசிகளின் மகிமையைத் தெரிந்து சாத்திரங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையாவது வைய வேண்டுமானால் ‘தேவடியாள் மகனே’ – அஃது ஒன்றே அவர்களுடைய தெய்வீக இலட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்கி நிற்கிறது”   “சாத்திரிகளைக் காட்டிலும், சத்தியமூர்த்தி சாத்திரிகள் ‘தேவதாசிகள் இருக்க வேண்டும், தேவதாசி முறையை ஒழிப்பது தெய்வ விரோதம்-சட்ட விரோதம்’ என்று கூச்சல் போட்டுப்…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை: திருக்குறள் ஆராய்ச்சி 5/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6 பொருளியலிலும் நாட்டியல் ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்                                (திருக்குறள் 463)   இக்குறளுக்குப் பொருள்சார் விளக்கம் மட்டும் தராமல், ‘‘பிறர் நாட்டை அடிமைப்படுத்தச்  சென்று தம் நாட்டை இழந்த செயல்கள் வரலாறுகளில் நிறைய உள’’ [18] எனப் புதுமையாக நாட்டாசை அடிப்படையிலும் விளக்குகிறார். பேராசிரியரின் திருவள்ளுவர் கால ஆராய்ச்சி   பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பிற அறிஞர்கள்…

திருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை 108. கயமை தொடர்ச்சி)     திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல்     அதிகாரம் 109. தகை அணங்கு உறுத்தல்                    தகுதிமிகு தலைமகளது அழகு,                    தலைமகனது  மனத்தை  வருத்துதல்                                                           (01-10  தலைமகன்  சொல்லியவை)   அணங்குகொல்…? ஆய்மயில் கொல்லோ…? கணங்குழை       மாதர்கொல்….? மாலும்என் நெஞ்சு.        தெய்வ மகளோ….? மயிலோ….? மண்மகளோ….? என்மனம் மயங்கும்.   நோக்கினாள்; நோக்(கு)எதிர் நோக்குதல், தாக்(கு)அணங்கு       தானைக்கொண்(டு)…

‘ஐக்கூவோடு கைகுலுக்குவோம்!’ – சென்னை

  பனுவல் புத்தக நிலையம், தமிழ் ஐக்கூ கவிதை இயக்கம் இணைந்து நடத்தும்       ‘ஐக்கூவோடு கைகுலுக்குவோம்!’   தலைமை: கவிஞர் ஈரோடு தமிழன்பன்   மு.முருகேசு எழுதிய   ஐக்கூ நூல்கள் வெளியீட்டு விழா: ’தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ ஐக்கூ கவிதை நூலை வெளியிட்டு ‘நானும் ஐக்கூவும்’ பட்டறிவுப் பகிர்வு: இயக்குநர் என்.லிங்குசாமி                                                      …

பாரதியைப் போற்றுநாடே! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்

பாரதியைப் போற்றுநாடே!  பெண்விடுதலைக்குக் கண்ணென கவிதையாத்த முன்பெரியார் பாரதியைப் போற்றுநாடே! மண்விடுதலைக்கு மனிதர்க்கு சொரணைதந்த மகாகவியின் பாடல்களைப் பாடுநாடே! மனவிடுதலைக்கு சாதிமறுத்துக் களமாடிய மாமனிதரின் கட்டுரைகளைப் பரப்புநாடே! தண்டமிழ் இனிமைஇயம்பிப் புதுமைசெய்த மக்கள்கவிஞனைப் பின்பற்று தமிழ்நாடே!   – மாம்பலம் ஆ.சந்திரசேகர், எழுத்தாளர்    

இன்னும் உறங்கிடும் ஞாபகமோ! – கவிஞர் அம்பாளடியாள்

  முல்லைப்பூ வாடுமுன் வாரா யோ! செந்தமிழ் போற்றிடும்  சேவக னே -உன்னைச் சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள் அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ! கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு கைவிர லாலெனை வென்றவ னே கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா கோடிச்சு கம்தரும்  மோகன மே! என்னை ஈர்த்தவன்  நெஞ்சினி லே  – பொங்கும் இன்தமிழ்க்  கற்பனைக் காவிய மே தன்னில் சரிபாதி என்றவ னே -உள்ளம் தஞ்சமென் றுன்னடி தேடுதிங் கே! தென்னை…

திருச்சியில் மலேசியா எழுத்தாளருக்குப் பாராட்டு விழா

திருச்சியில் மலேசியா எழுத்தாளருக்குப் பாராட்டு விழா   நந்தவனம்  நிறுவம், திருக்குறள் கல்வி மையம், கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் இணைந்து மலேசியா முத்தமிழ்ப் படிப்பகத் தலைவர் பெ.இராமன் அவர்களுக்கான பாராட்டு விழாவைத் திருச்சிராப்பள்ளியில் சிறப்பாக  நடத்தின.   திருக்குறள் கல்வி மையத்தலைவர் சு.முருகானந்தம் தலைமையில் எழுத்தாளர் மழபாடி இராசாராம் முன்னிலையில்  இவ்விழா நடைபெற்றது.   நந்தவனம் சந்திரசேகரன், கப்பல் கவிஞர் கிருட்டிணமூர்த்தி சூரியக்குமார்,  புலவர் தியாகசாந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.    முன்னதாகக் கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தலைவர் ப.நாகராசன் அனைவரையும் வரவேற்றார்.   …

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 38(2.08) : பரத்தனை விலக்கல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 37(2.07) தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 38. பரத்தனை விலக்கல்     தன்றுணை யலாளைத் தழுவுவோன் பரத்தன். தன்னுடைய மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன் இன்பம் அநுபவிப்பவன் பரத்தன். பரத்தை யினுமிகக் கொடியவன் பரத்தன் அவன் பரத்தையை விடத் தீயவன். பொதுமக ளாதலம் முழுமக னாலே. அந்த அறிவிலியால் தான் ஒரு பெண் பரத்தை ஆகிறாள். 374.நன்மகன் கெடுதலப் புன்மக னாலே. அந்தத் தீயவனால் நல்லவனும் கெடுவான். 375.மறனெலா நிகழ்வதம் மாபாவி யாலே. அத்தீயவனால் தான் அறத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறுகின்றன….

1 3 4 5 7