பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தினருக்குப் புதுத்துணி வழங்கல்

பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்குப் புத்தாடைகள் தைப்பதற்காகத் துணிகள் வழங்கல்     புலம்பெயர் உறவான இலண்டன் நாட்டை சேர்ந்த பரஞ்சோதி சிறிக்காந்து தனது பிறந்த நாளை முன்னிட்டு முள்ளியவளையில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்குப் புத்தாடைகள் தைப்பதற்காகப் துணிகள், காவிக்கண்டு(சொக்லேட்-Kandos) என்பவற்றை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக  கார்த்திகை 24, 2047 / 09.12.2016 அன்று வழங்கி வைத்துள்ளார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்

அன்புடையீர், வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த ஆண்டின் நிறைவு நிகழ்ச்சி –   கார்த்திகை 28, 2047 / 13.12.2016  செவ்வாய் அன்று  மாலை 06.30 மணிக்கு   ‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்’   முன்னிலை  : இலக்கியவீதி இனியவன்    தலைமை: முனைவர் மா.ரா.அரசு     சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து    அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு   இணைப்புரை: முனைவர் ப.சரவணன்   இடம் : பாரதிய வித்தியா பவன் – மயிலாப்பூர். உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் –  இலக்கியவீதி இனியவன் 

தமிழுக்கு முதலிடம் தந்த அம்மா! – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழக அரசியல்

தமிழுக்கு முதலிடம் தந்த அம்மா! இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ்க்காப்புக்கழகத்தலைவர்   மறைந்த முதல்வர் செயலலிதா   தமிழுக்கு முதன்மை அளித்தவர். ‘சிங்காரச் சென்னை’ என்பதை ‘எழில்மிகு சென்னை’ என மாற்றியவர்   கலைபண்பாட்டுத்துறையில் முத்தமிழ்க்கலையறிஞர்களின் நினைவு போற்றும் வகையில் நினைவில்லங்கள் எழுப்பும் திட்டம் அறிமுகமானது. இவற்றை நினைவில்லம் என்று அழைக்காமல்  மறைந்த கலை ஆன்றோர்களின் புகழைப் போற்றுவதால் ‘புகழரங்கம்’ என்று அழைக்க வேண்டும் என்று கலைபண்பாட்டுத் துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.  துறைச் செயலர் இதற்கு உடன்படவில்லை. ஆனால் முதலமைச்சர் செயலலிதா “புதிய நல்ல தமிழ்ச்சொல்லாக உள்ளது;…

எமனுலகு சென்றார் புரட்சித்தலைவி

எமனுலகு சென்றார் புரட்சித்தலைவி   புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, காவிரி தந்த கலைச்செல்வி,  எனப் பலவகையிலும், சிறப்பாக மக்களால் அம்மா என்றும் அழைக்கப்பெற்ற தமிழக முதல்வர் செ.செயலலிலதா காலமானார்(கார்த்திகை 20, 2047 / திசம்பர் 05, 2016 இரவு 11.30 மணி)   வெற்றிகரமான தலைவியின் இறப்பால்,   இந்திய அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும்  திறமை, துணிவு, தனித்துவம் மிக்க தலைவியை இழந்து தமிழ்நாடு தவிக்கின்றது என்றும்  வலிமை மிக்க தலைவி யின் இழப்பு  ஈடு செய்ய முடியாதது என்றும் பல வகையிலும் தலைவர்கள் இரங்கல்…

மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்

மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார் மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்  தமிழக உழைக்கும் மக்களின் பெருங்கவிஞர் இன்குலாபு இன்று கார்த்திகை16,2047/1.12.2016) இயற்கையோடு கலந்தார்.  உடல்நலக்குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் நோயிலிருந்து மீளாமல் காலமானார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இன்குலாபு தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், இதழாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். குமுகாயச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன.  …

பாடு மனமே பாடு ! – கவிஞர் அம்பாளடியாள்

பாடு மனமே பாடு !   எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள் ஏந்தும் இசையளிக்கும் இன்பம்! பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும் போதும் இனியெதற்குத் துன்பம் ! இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை என்றும் மனச்சுமையைப் போக்கும் ! அன்னை மொழியழகும் அரும்பும் அசையழகும் அமுதச் சுவையழகைத் தேக்கும் ! பாடும் குயிலுடனே பருவ மங்கையவள் ஆடிக் கழித்திடுவாள் தினமே ! நாடி வரும்துயரும்  நகரும் இன்னிசையால் நல்ல மருந்திதுதான் மனமே ! காதல் உணர்வுகளைக் கலந்து வந்தஇசை ஆளும் எமதுயிரை  இதமாய் ! பாழும்…

இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு! தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்

இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு! தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்?   இந்திய விடுதலைக்கு முன்னரே இந்தித்திணிப்பிற்குக் கால் கோளிடப்பட்டது. அதன் ஒரு பகுதிதான் இந்திப்பரப்புரை அவை(இந்திப்பிரச்சாரசபா). இந்தியா விடுதலை பெற்ற பின்னர்  இந்தித்திணிப்பு என்பது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப்  பேராயக்கட்சியால்(காங்கிரசால்) செயல்படுத்தப்பட்டது. இன்றைய நரேந்திரர்(மோடி) ஆட்சியில் வெகு விரைவாக இந்தித்திணிக்கப்பட்டு வருகிறது.   வாடிக்கையாளர்   நல மையங்கள் அல்லது ஊழியப் பகுதியில் பொதுவாக இந்தி அல்லது ஆங்கிலம் உள்ளது; குசராத்தி மொழி மிக விரைவாக எல்லா மத்திய அரசு, அரசு சார் நிறுவனங்களில்…

நினைவுகூர் நாள் 2016

நினைவுகூர் நாள் 2016   ஊடகப்பணியாளர்கள் அடக்குமுறைக்குள்ளும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இனத்திற்காகவும் மொழிக்காகவும் தம் ஊடகப் பணிக்காகவும் இன உணர்வோடும்  ஒப்படைப்புஉணர்வோடும் செயற்பட்டு உண்மையை வெளிப்படுத்தினர்; இதனால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர்களை நினைவுகொள்ளும் வகையில் தற்போதும் பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் மக்களுக்குச் சரியான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற வேணவாவுடன், துணிவோடும் ஒப்படைப்புஉணர்வோடும், தாயகத்திலிருந்து ஊடகப்பணியாற்றிவரும் ஆறு ஊடகப்பணியாளர்களுக்கு அவர்களை மாண்பேற்றும் வகையில் விருதுகள் வழங்கும் நிகழ்வு பிரித்தானியாவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பன்னாட்டுத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் பர்னட்டு ஓக்கு  பகுதியில்(St.Alphage…

இந்து இளைஞர் சங்கம் கம்பளி ஆடைகள் நன்கொடை

இந்து இளைஞர் சங்கம் கம்பளி ஆடைகள் நன்கொடை      குளிர் காலத்தை முன்னிட்டு இனிய வாழ்வு இல்லச் சிறார்களுக்குக் கம்பளி ஆடைகள் தந்துதவுமாறு  அதன் பொறுப்பாளர்கள் வேண்டினர்.  வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உரூ.38300 பெறுமதியான 50 கம்பளி ஆடைகள் கார்த்திகை 18, 2047 /  3.12.2016 சனிக்கிழமை இனிய வாழ்வு இல்லச் சிறார்களிடம் கையளிக்கப்பட்டன. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] athangav@sympatico.ca

திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர்

திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை உலகம் உய்ய வழிகாட்டியிருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவரது திருக்குறள் உலக வாழ்வியல் நூலாகவும் மனித குலத்திற்கு வழிகாட்டிக் கைந்நூலாகவும் திகழ்ந்து வருகிறது.   திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை நம் மனித குலத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ள கடவுளைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே வழிகாட்டுகின்றது.   இதில் என்ன வியப்பென்றால், திருவள்ளுவர் காலத்தில் பல தெய்வ வழிபாட்டு முறைகள்  தோன்றிவிட்டபோதிலும் திருவள்ளுவர் ஒரே கடவுள் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுதான்.  முதலதிகாரமான ‘கடவுள் வாழ்த்து’ எனும் இறை வாழ்த்து அதிகாரத்தில் இறைவனது…

மாணவர் ஆற்றுப்படை 2/6 – பேராசிரியர் சி.இலக்குவனார்

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 2/6   என்றே அலமரும் இளைஞனை நோக்கி “அயரேல் வருந்தேல் அடைவாய் உதவி; தமிழகச் செல்வர் தம்இயல் அறிவேன்;                            35 அறம்பல புரிந்து அறவோர்க் களித்துத் தமிழைக் கற்றுத் தமிழ்ப்பணி புரிந்து கல்விக் கூடம் காண்தக அமைத்து நாடும் நலம்பெற நல்லன புரியார்; அழியாப் புகழை அடைய விரும்பார்                               40 உரையும் பாட்டும் உடையார் அன்றி மறையிலை போல் மாய்வோர் பலரே; அறுவகைச் சுவையும் அளவில துய்த்து உறும்பல நோய்க்கே உறைவிட மாவார்; உண்ணவும்…

பிரான்சு பாராளுமன்ற ஆய்வுக்குழுவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கச் சார்பாளர்கள் சந்திப்பு

 தமிழர்களுக்கான பிரான்சு பாராளுமன்ற ஆய்வுக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாளர்கள் சந்தித்தனர்!   பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர்களது தமிழர்களுக்கான ஆய்வுக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாளர்கள் குழு சந்தித்துள்ளது.   பிரான்சு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற பல்வேறு கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்த ஆய்வுக்குழுவின் தலைவி மரி  சியார்சு புவே அவர்களுடன் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.   பிரான்சு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த இச்சந்திப்பில் ஈழத்தமிழர்களின் நீதிக்கும் உரிமைக்குமான போhராட்டத்தின் சமகால நிலைவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.   தமிழ்மக்களுடைய இனச்சிக்கல் தொடர்பில் நீண்ட காலமாகத், தான் கொண்டுள்ள…