அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது – அண்ணா

அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது – அண்ணா   அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும் அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை துய்த்தவர்கள்(அனுபவப்பட்டுவிட்டவர்கள்), வெகு  எளிதில் அதனைக் கைவிடத்துணியார். என்றும் தன்னிடத்திலேயே அதிகாரம் (சிரஞ்சீவியாக) நிலைத்திருக்கப் பார்த்துக்கொள்வதில் மிக்க கவலை எடுத்துக்கொள்வர். அதிகாரம் தரும் மயக்கத்தில் சிக்கிக்கொண்டவர்கள், கூட்டுத் தோழர்கள் நண்பர்கள் இடத்தும் கூட பகைமை கண்டு மிரள்வர். இந்நிலையில் ஒரு சிறு எதிர்ப்பு-தன் சொல்லுக்கு ஒரு மாற்றுச் சொல்-போக்கை மாற்றிக்கொள்வது முறை எனும்…

புதைகுழியில் தள்ளும் பொய்ப் பரப்புரைகள்! – நளினி முருகன்

7 புதைகுழியில் தள்ளும் பொய்ப் பரப்புரைகள்! ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி எழுதி, இதழாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் நிறைவுப் பகுதி இது.     கடந்த 2005 ஆண்டளவில் இந்தியன் எக்சுபிரசு – தினமணிக் குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஏறக்குறைய 70 விழுக்காடு பேரும், குமுதம் கிழமை இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஏறத்தாழ 80 விழுக்காடு பேரும் என் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனாலும் அரசு முன்பு எடுத்த முடிவில் இருந்து…

நம்மைக்காக்கவேனும் உழவர்களைக் காப்பாற்றுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

நம்மைக்காக்கவேனும் உழவர்களைக் காப்பாற்றுங்கள்! உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை (திருவள்ளுவர், திருக்குறள் 1036).   இந்தியா முழுமையும் வேளாண்பெருமக்கள் தற்கொலை புரிவது என்பது தொடர்நிகழ்வாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் முதன்மைக் கருத்து செலுத்தி வேளாண் பெருமக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ வழிவகை செய்ய வேண்டும்.   வேளாண் பெருமக்கள்  சொல்லொணாத் துயரத்தில்  மூழ்குவதும் மடிவதும் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் நிகழ்வதும் வழக்கமாக உள்ளன. காவிரியாற்றுச் சிக்கல், முல்லை-பெரியாற்றுச் சிக்கல் என அண்டை மாநிலங்களினால் உருவாகும் சிக்கல்களும் மத்திய அரசின் பாராமுகமும்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙி] – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  (ஙாஙா) –தொடர்ச்சி)] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  (ஙாஙி] 3. தமிழ்நலப் போராளி  தொடர்ச்சி  தமிழ்ப்பகைவர் என்போர் தமிழ்த்துறையுடன் தொடர்பற்றவர்கள் எனக் கருதினால் அதுவும் தவறாகும். எடுத்துக்காட்டிற்கு ஒன்று. திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியில் பேராசிரியர் சேரும் முன்பு தமிழ் வகுப்பிலும் ஆங்கிலம்தான் தவழ்ந்தது. ஆங்கிலம் மூலம் தமிழை விளக்குவதில் பெருமை கண்டனர் தமிழ்த்துறையினர். ஆங்கிலத்தில் பேசுவதே தம் உயிர் மூச்சு எனக் கொண்டனர் அவர்கள். ஆனால் பேராசிரியர் அங்குத் தமிழ்த்துறைத் தலைவராகச் சென்ற பின்பு தமிழ்த்துறை மட்டுமல்ல கல்லூரியே தமிழ்மணத்தில் மணந்தது….

இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 2/3 – மு.இளங்கோவன்

(இரவிச்சந்திரனின்  ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 1/3 தொடர்ச்சி) இரவிச்சந்திரனின்  ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 2/3   ‘வெட்டிக்காடு’ என்னும் முதல் தலைப்பில் ஊர் அமைவிடம், உழவுத்தொழில் செய்யும் மக்களின் நிலை, ஊரின் காலைக்காட்சி முதலிய தாம் பதினேழு ஆண்டுகள் வாழ்ந்த ஊரின் சிறப்புகளை இரவி பதிவுசெய்துள்ளார். உழுதல், விதைத்தல், பறித்தல், நடுதல், அறுத்தல் என்று ஆறு மாதம் ஊர் அமர்க்களப்படும். இங்கு நடவுப்பாடல் வழியாகவும், தெருக்கூத்துகள் வழியாகவும் இசைத்தமிழ் வளர்ந்ததை இரவிச்சந்திரன் குறிப்பிடுகின்றார். மாடுமேய்த்தலும், ஆடுமேய்த்தலும் சிற்றூர்ப்புறத் தேசியத்தொழிலாகும். கபடி விளையாடுதல், ஓரியடித்தல், கிளிகோடு…

கொன்றவர் எவரும் வென்றதில்லை! – அம்பாளடியாள்

கொன்றவர் எவரும் வென்றதில்லை! மரண ஓலம் கேட்கிறதே! – எங்கள் மனத்தை அதுதான் தாக்கிறதே இரண்டுங் கெட்ட நிலையினிலே – எங்கள் இதயம் இங்கே துடிக்கிறதே! வெடி குண்டு வைத்துத் தாக்காதே விடியலை எங்கும் போக்காதே தீவிரவாதம் ஒழிக ஒழிகவென தீட்டிய பாக்களை வெறுக்காதே! குழந்தைகள் செல்லும் வண்டியில்  கூடக் குண்டுகள் வைப்பதில் நியாயமென்ன? எதிரியைக் கொல்லும் கொலைவெறியதனால் எவரையும் அழிப்பதில் நீதி என்ன? மனித மனங்களில் வன்மங்கள்- இதை மாற்றிட வேண்டும் வாருங்கள்! உலகம் அழிவதைப் பாருங்கள்- இதை ஒவ்வொருவருமே உணருங்கள்! சங்கடம்…

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் – ஞா.தேவநேயர்

1 தமிழின் தனிப்பெருந் தன்மைகள்     மூவாயிரத்திற்கு மேற்பட்ட உலக மொழிகளுள், இன்றும் பல்வேறு வகையில் முதன்மையாகவுள்ளது, பொன்னினும் மணியினுஞ் சிறந்ததாக வும், உணவினும் மருந்தினும் இன்றியமையாததாகவும், தெய்வமும் திருமறையுமெனக் கண்ணியமாகவும் நம் முன்னோர் போற்றி வளர்த்த செந்தமிழே யென்பது, முகடேறி நின்று முரசறைந்து விளம்பத்தக்க முழு வுண்மையாகும். அதற்கேதுவான தமிழின் தனிப்பெருந் தன்மைகள் வருமாறு: முன்மை     இஞ் ஞாலத்தில் மிகப் பழைமையான நிலப்பகுதி யென்று தமிழ் வரலாற்றால் அறியப்பட்டதும், நிலநூல், கடல்நூல், உயிர்நூல் ஆராய்ச்சி யாளரால் உய்த்துணரப்பட்டதும், மாந்தன் பிறந்தகமென்று மாந்தனூலாராற்…

கவிஞாயிறு தாராபாரதி 9 & 10 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 7  & 8 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 9  & 10 பொய்யுரையை முதலீடாய்ப் போட்டு நாட்டின் பொதுசனத்தை விற்கின்ற புதிய சாதி! கையிரண்டு போதாது கயமைக் கென்றே கைந்நூறு வேண்டிவிழும் கடவுள் தாளில்! மெய்ந்நெறியை மறைத்துயர்தல் மேன்மை என்ற ‘மெய்ப்பொருளை’ அரசியலாய் விற்கும் கூட்டம்! செய்கையிலே தன்மானம் சிதைத்தோர் தம்மைச் சேர்த்தீன்ற கருப்பையும் சினந்து நாணும்! (9) வெறுங்கரங்கள் என்செய்யும்? வினவு வோர்க்கு, விரல்பத்தும் மூலதனம்! விளங்க வேண்டும்! நொறுங்கட்டும் மதிமயக்கும் நோயாம் சோம்பல்! நோகாமல் இலக்கடையும் நுட்பம்…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 7 & 8

(திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 5 & 6 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை 7 & 8 ஏழாம் பாசுரம் தமிழ் இலக்கிய வரலாறு   பாட்டும், தொகையும், கணக்கும், நுதல்மீது தீட்டும் சமயமிரண் டூட்டும் இலக்கியமும், நாட்டும் பெருஞ்,சிறு நல்லணிஐங் காப்பியமும், வாட்டும்போர் பாடும் பரணியொடு, தூது,உலா கூட்டும் சுவைபிள்ளை, பள்ளு, கலம்பகமென் றேட்டில் புகழ்சிற் றிலக்கியமாய் ஏத்த,பிற நாட்டு மதநூல்கள், நல்லுரைகள், சொல்லெளிய பாட்டு, கவி, கூத்துதமிழ் போற்றடவா, எம்பாவாய்!   எட்டாம் பாசுரம் தொல்காப்பியம் தமிழின் முதுகெலும்பு நூல் ! செந்தமிழின் தண்டெலும்பு தொல்காப்…

1 2 10