மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் உரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்

  மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் உரூபாய்க்கான பரிசுப் போட்டிகள் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணப் போட்டிகள்: கம்பராமயண ஒப்பித்தல் போட்டி –1   பேரா. மு.பழனியப்பன் தன் தந்தையார் பெயரால் நிறுவியுள்ள தமிழாகரர் பழ. முத்தப்பனார் பரிசு.   பிரிவு -9,10,11,12 மாணாக்க மாணக்கியர்களுக்கானது.   நாள்- தை 15, 2048 / 28.1.2017 நேரம் 0 9.30 மணி இடம்- கிருட்டிணா கல்யாணமண்டபம், கல்லுக்கட்டி மேற்கு, காரைக்குடி   எதிர்பார்க்கும் தகுதிகள்: உச்சரிப்பு, ஒலிநயம், மெய்ப்பாடு இவற்றோடு பொருள் அறிந்து வருதலும்…

இலக்கியவீதியின் தமிழ்க்கூடல் தனிப்பாடல்

 மார்கழி 19, 2047  செவ்வாய் சனவரி 03, 2017  மாலை 6.30  இலக்கியவீதியின் தமிழ்க்கூடல் தனிப்பாடல்   தமிழ்நிதி விருது பெறுநர்:  புலவர் தி.வே.விசயலட்சுமி கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யா பவன்

மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! – தாமோதரன் கபாலி

மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! உண்பதுவும் உறங்குவதும் வாழ்க்கை யல்ல! உடமைகளும் உரிமைகளும் இழக்க வல்ல! உண்மைகளும் உணர்வுகளும் சாக வல்ல! உள்ளொளியும் உயிரினையும் போக்க வல்ல! பண்ணிசையும் பாத்தமிழாய் வாழ வேண்டும்! பரிவோடும் பண்போடும் நோக்க வேண்டும்! மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! மாசற்ற வாழ்வினையே போற்ற வேண்டும்!   – தாமோதரன் கபாலி

காந்தி இலங்கையரா? அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்? – செந்தமிழினி பிரபாகரன்

காந்தி இலங்கையரா?  அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்?      எங்கள் தமிழீழ மண்ணில் எமக்காக ஈகைச் சாவெய்திய தமிழக தொப்புள் கொடி உயிர் கொடுத்த தோழர்களான முத்துக்குமார் முதலான ஈகியர்களுக்குச் சிலை இல்லை.   மண்ணில் நின்று போராடி வீரச் சாவெய்திய மாவீரர்களுக்கு நினைவாலயங்கள் வைக்கத் தடை.   இருந்த மாவீரர் இல்லங்கள் தகர்க்கப்பட்டு விட்டன..  மாமனிதர் இரவிராசு சிலை ‘மாமனிதர்’ என்ற பட்டம் நீக்கப்பட்டு அரச விசிறிகளால் அவமானப்படுத்தப்படுகின்றது.   ‘அடங்காப்பற்று’ என வன்னி மண்ணை அயலவரோடு போராடிக் காப்பாற்றி…

நடைமுறைப்புத்தாண்டில் நல்லன நடக்கட்டும்! நானிலம் சிறக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

நடைமுறைப்புத்தாண்டில் நல்லன நடக்கட்டும்! நானிலம் சிறக்கட்டும்!     2017 ஆம் ஆண்டுப் பிறப்பிற்கு அனைத்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்துகள்!   தமிழ்நாட்டில் புதிய அரசு மலர்ந்துள்ளது!   ஆளுங்கட்சியிலும் புதிய தலைமை மலர்ந்துள்ளது!   எதிர்க்கட்சியிலும் புதிய தலைமை மலர உள்ளதாகக் கூறப்படுகிறது!   இவற்றால் தமிழ்நாட்டில் புதிய மலர்ச்சி ஏற்படட்டும்!       பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்         அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து   (திருவள்ளுவர், திருக்குறள் 738) என்பதற்கேற்பப் பசிப்பிணியும் பிற நோயும்…

கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 – சந்தர் சுப்பிரமணியன்

கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 அவருக்குள் தமிழ்மணக்கும், அறிந்தே முன்னர் அன்னைபெயர் புட்பமென அமைந்த தாமோ? குவளைக்குள் பூகம்பம்! கொடையாய்ச் செந்தீ! கொடுங்காலூர் வரையெழுந்து கொதித்த செந்நா! திவலை க்குள் பொறியேற்றுத் தீயைச் சேர்த்துத் திரையாக்கிச் செந்தமிழாய்த் தெறிக்கும் தாரா! இவருக்கோர் கவிமலரை இயற்றி வந்தேன்! இவரெழுத்தை என்குரலில் இயம்பு கின்றேன்! (1) காவியங்கள் பாடவில்லை; காதல் என்னும் கற்பனைக்குள் கரையவில்லை; கானல் நீரைத் தூவிநஞ்சை வளர்க்கவில்லை; சொல்லால் பொய்யைத் தொடுத்தளிக்கும் கவிதையில்லை; சொகுசு வாழ்க்கை மேவுதற்காய் மாறவில்லை; மேன்மை கொன்று மேனிலையை…

தாயினுஞ் சிறந்தது தமிழே! – ஞா.தேவநேயப் பாவாணர்

தாயினுஞ் சிறந்தது தமிழே! எமுனாகல்யாணி – ஆதி தாயினுஞ் சிறந்தது தமிழே தரணியி லுயர்ந்தது தமிழே வாயுடன் பிறந்தது தமிழே வாழ்வெல்லாந் தொடர்வது தமிழே. பாலூட்டி வளர்த்ததும் தமிழே தாலாட்டி வளர்த்ததும் தமிழே பாராட்டி வளர்த்ததும் தமிழே சீராட்டி வளர்த்ததும் தமிழே தேம்படு மழலையுந் தமிழே திருந்திய வுரைகளும் தமிழே தேம்பி யழுததுந் தமிழே தேவையைக் கேட்டதும் தமிழே முந்தி நினைந்தலும் தமிழே முந்தி மொழிந்ததும் தமிழே குந்தி யெழுந்ததும் தமிழே குலவி மகிழ்ந்ததுந் தமிழே பயன்படு கல்வியும் தமிழே பணிபெறப் படுவதும் தமிழே…

செயலலிதா வழியில் பணியாற்றுவேன்! – சசிகலா

செயலலிதா வழியில் பணியாற்றுவேன்! – பொதுச்செயலர் பொறுப்பேற்று சசிகலா பேச்சு   அ.தி.மு.க. பொதுச் செயலாளராகச் சசிகலா  ( மார்கழி 16, 2047 / திசம்பர் 31, 2016 அன்று) பொறுப்பு ஏற்றார்.   இராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் எம்ஞ்சியார், செயலலிதா படங்களைத் தொட்டு வணங்கி விட்டுப் பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்ந்த அவர் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன்  நெறியாடல் நடத்தினார். பின்னர் முதல்மாடியில் உள்ள அரங்குக்குச் சென்று அ.தி.மு.க.  பொறுப்பாளர்கள் மத்தியில் பேசினார். ‘‘தலைமைக் கழகப் பொறுப்பாளர்களே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டக் கழகச் செயலாளர்களே,…

தமிழே வாழ்க! – தாராபாரதி

தமிழே வாழ்க!  – தாராபாரதி தமிழே வாழ்க! தாய்மொழி தமிழே! எந்தன் தனிமொழி முதலே, வாழ்க! வாய்மொழி பலவென் றாலும் வழிமொழி நீயே ஆனாய்! காய்மொழி சிலவற் றுள்ளும் கனிமொழி நீதான் என்பேன்! தாய்மொழி தமிழே, எந்தன் தனிமொழி முதலே வாழ்க!   கவிஞர் தாராபாரதி

1 9 10