கற்பூரத் தட்டுக்குத் தமிழ் கற்றுத்தா! – தாராபாரதி

கற்பூரத் தட்டுக்குத் தமிழ் கற்றுத்தா!   ‘வழிபாடு தமிழிலா? வரலாமா? – என்று மொழிபேதம் செய்து முட்டுக் கட்டை யிடுவார்!   ஒதும்மந் திரத்தில் ஊனமா நம்மொழிக்கு? வேதம்என்ப தென்ன? வெளிச்ச மனம்தானே!   திருக்கோயில் மணிஓங்கி தமிழ் பேசாதா? தேவாரத்தமிழ்  இறைவன் செவி ஏறாதா?   தாழ்திறவா மணிக்கதவும் தமிழ்கேட்டுத் திறந்ததே! வாய்திறவாத் தமிழனே வழியறியா மயக்கமென்ன?   உண்மையில்நீ அஃறிணையா? ஒப்பனையால் உயர்திணையா? கண்ணிமைகடந்து கருமணி களவு போகிறதே!   உள்ள எழுச்சியின்றி உறங்கும் தமிழனே பள்ளியறை பாசறையா? பாய்சுருட்டி வா!…

திருக்குறள் அறுசொல் உரை: 115. அலர் அறிவுறுத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 114. நாணுத் துறவு உரைத்தல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 14. களவு இயல் அலர் அறிவுறுத்தல்     தலைமக்களின் காதலை, ஊரார்அறிந்து பலவாறு பழிதூற்றல் (01-05 தலைவன் சொல்லியவை) அலர்எழ, ஆர்உயிர் நிற்கும், அதனைப்       பலர்அறியார் பாக்கியத் தால்.        “பழிச்சொல்லால், உயிரும் நிற்கிறது; இதனை, ஊரார் அறியார்”.   மலர்அன்ன கண்ணாள் அருமை அறியா(து),       அலர்எமக்(கு) ஈந்த(து)இவ் ஊர். “குவளைமலர்க் கண்ணாள் அருமை அறியாது, பழிதூற்றுவார் ஊரார்”.   உறாஅதோ ஊர்அறிந்த…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15). மடி யொழித்தல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 45. மடி யொழித்தல் மடிதஞ் செயல்களின் மந்த முறுதல். மடி என்பது செயல்களைச் செய்வதில் ஏற்படும் சோம்பல் ஆகும். மடிமெய்ம் முயற்சியின் மறுதலை ஆகும். மடி என்பது உடல் முயற்சியின் எதிர் நிலை ஆகும். அதாவது உடல் உழைப்பில் சுறுசுறுப்பற்ற தன்மை ஆகும். மடிதமை யொன்னார்க் கடிமைப் படுத்தும். மடி ஒருவனை அவனது பகைவர்களுக்கு அடிமையாக மற்றிவிடும் இயல்பு உடையது. மடியினை யுடையவர் குடியொடு கெடுவர். மடியுடையவன் தன் குடும்பத்தோடு அழியும் நிலை ஏற்படும்….

நயன்மையை(நியாயத்தை) விட நயன்மையின்மையையே(அநியாயத்தையே) காதலித்தார்கள்! – நளினி முருகன்

நயன்மையை(நியாயத்தை)விட நயன்மையின்மையையே(அநியாயத்தையே) காதலித்தார்கள்! – நளினி முருகன் ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி எழுதி, இதழாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் 6-ஆம் பகுதி இது. இந்த நூல் பேசுகிறதா? இல்லை, இந்த நூலினுள் நான் பேசுகின்றேனா என்கிற வியப்பு எனக்குள்! என் மீது வீசப்பட்ட கொடிய சொற்கள் எவ்வளவு? குடை சாய்ந்து போகும் அளவுக்குத் திணிக்கப்பட்ட மானக்கேடுகள் எவ்வளவு? என்னை நானே அறியாதபடி என் முகம் முழுக்கக் கட்டுக்கதைகளாகச் சேறு பூசப்பட்டிருந்ததே, ஏன்? என்றோ செத்துப்…

தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000

தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000   கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்பிக்காடு என்னும் ஊரில் தொல்காப்பியருக்குச் சிலை எழுப்பப்பட்டுள்ளது. அச்சிலையைச் சுற்றி எண்மாடக்கூடமும் உச்சித்தளமுமாக 9 தளங்கள் கொண்ட தொல்காப்பியர் கோபுரம் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.   சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் கல்வெட்டுகளாகவும் தொல்காப்பியர், தொல்காப்பியம்பற்றிய செய்திகளும் தொல்காப்பிய விளக்கப் படங்களும் அமைய உள்ளன. எனவே, தொல்காப்பியர் குறிப்பிடும் அறிவியல் செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாட்டுச்செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் அகத்திணைச் செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணைச் செய்திகள் எனப் பல்வேறு  கருத்துகளை விளக்கும் ஓவியங்கள் வரவேற்கப்படுகின்றன….

சல்லிகட்டுக்குத் தடையா? – ப.கண்ணன்சேகர்

சல்லிகட்டுக்குத் தடையா? சூரப்புலி பாய்ந்திடத் துரத்தினாள் முறத்தாலே சுவைத்தமிழ் இலக்கியம் வீரத்தை ஊட்டுமே! போரிடும் களத்திலே புறமுதுகைக் காட்டாத பெற்றமகன் வீரத்தைப் பெருமையெனக் காட்டுமே! வீரத்தமிழ் இனத்தினை விளையாட்டு பொம்மையென வேடிக்கை பார்த்திடும் வீணர்களின் கூட்டமே! ஓரவஞ்சச் செயலாலே ஒடுங்காது தமிழினம் வாக்களிக்கும் மக்களால் ஒடுங்கிடும் ஆட்டமே! ஏறுதழுவு விளையாட்டால் எங்களது வீரத்தை இவ்வுலகம் கண்டிட இரக்கமற்ற தடையேனோ? பேருபெற்ற தமிழரின் பாரம்பரிய விழாவினைக் கூறும்போடும் குரங்கெனக் கொள்கையே முறைதானோ? வேருவிட்ட ஆர்ப்பாட்டம் வீழ்த்திட நினைப்பது வீட்டுக்குள் அணுகுண்டு வைப்பதும் சரிதானோ! ஊருக்கு ஊரெலாம்…

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம், நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர்திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 22, 2048 / பிப்பிரவரி மாதம் 4ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச் சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம். நம் மொழி,பண்பாடு,வாழ்வியல் சார்ந்த தமிழியல் கூறுகளை முன்னிறுத்திச் செயல்படும் நமது சப்பான் தமிழ்சங்கம் முன்னெடுக்கும் இவ்விழாவிலும் நமது தாய்த்தமிழ் உறவுகள் உவகை கொள்ளும் வகையில் பல புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. அனைவரும்…

இலக்கு வழங்கும் சனவரி நிகழ்வு, 2017

  நாள்  :   தை 14, 2048  வெள்ளிக்கிழமை   சனவரி 27, 2017 நேரம்  :  மாலை 06.30 மணி இடம்  :  பாரதிய வித்யாபவன் , மயிலாப்பூர். வணக்கம். இளைஞர்களுக்காக, இளைஞர்களால் நடத்தப்படும் ‘இலக்கு’ இந்த ஆண்டு , துறைதோறும்  இருக்கிற தொழில் வாய்ப்புகளை அந்தந்தத்  துறை வல்லுநர்களைக்  கொண்டு எடுத்துச் சொல்ல இருக்கிறது.   பயன் பெற, இணைந்து பயணிக்க, இளைஞர்களையும்,  வழி நடத்த, பெரியவர்களையும்,  ‘இலக்கு’ அன்புடன் அழைக்கிறது .    தலைமை  :  திரு ம. முரளி        …

முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்

முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்     இன்று கனடா நாட்டில் வசிக்கும் செயசுந்தர் கலைவாணி இணையரின் 10 ஆவது திருமண ஆண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 27 சிறார்களுக்கு 30000 உரூபா பெறுமதியான புத்தாடைகளை வழங்கி வைத்துள்ளார்.   பாரதி பெண்கள் சிறுவர் இல்ல நிருவாகத்தினரால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இவ் புத்தாடைகள் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அவர்களது விண்ணப்பத்தில் தெரிவித்ததாவது தமது இல்லத்தில் 108 பெண் சிறார்கள் உள்ளதாகவும் இவர்கள் யாவரும் போர் வடுக்களை…

முடியவில்லை மொழிப்போர்! முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை! – இலக்குவனார் திருவள்ளுவன்

முடியவில்லை மொழிப்போர்! முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை! வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் (திருவள்ளுவர், திருக்குறள் 674).   மொழிப்போர் என்றால் நாம் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போரைத்தான்  குறிப்பிடுகிறோம்.  வரலாறு எழுதுவோர் அதற்கு முன்  1937 இல் கட்டாய இந்தித்திணிப்பிற்கு எதிரான போராட்டத்தைக் குறிப்பிடுவர். ஆனால், சமற்கிருதம் எப்பொழுது  தன்னைத் தேவ மொழியாகக் கற்பித்துக்கொண்டும் தமிழை நீச மொழியாகப் பழித்துக் கொண்டும் தமிழ்நாட்டில் வரத் தொடங்கியதோ,  அப்பொழுதே மொழிப்போர் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சமற்கிருதத்திற்கு முன்னர்…

ஈழத்தில் நான் : இலக்கியச் சந்திப்பு, ஈச்சிலம்பற்று

தை 12, 2048 புதன் ,சனவரி 25, 2017  மாலை முதல் தை 17, 2048 திங்கள் ,   சனவரி 30, 2017  மாலை வரை வீரம் விளையும் ஈழ மண்ணில் இருப்பேன். அங்குபங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாணாக்கர்க்குக்கல்விப்பொருள் வழங்கும் இந்நிகழ்வும் ஒன்று.     இனிய நந்தவனம் நிறுவம், தமிழ்நாடு அம்பாறை மாவட்டத் தமிழ் எழுத்தாளர்கள் மேம்பாட்டுப் பேரவை எழுத்தாளர் இலக்கியச் சந்திப்பும் நூல் வெளியீடும் விருதுகள் வழங்கல் மாணாக்கர்களுக்குக் கல்வித்துணைப் பொருள்கள் வழங்கல் தை 16, 2048   ஞாயிறு சனவரி 29,…

சல்லிக்கட்டிற்கான போராட்டம் தமிழர் நலனுக்கான குறியீடே! – இலக்குவனார் திருவள்ளுவன்

சல்லிக்கட்டிற்கான போராட்டம் தமிழர் நலனுக்கான குறியீடே! பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487)   சல்லிக்கட்டுத்தடையை எதிர்த்து  மார்கழி24/சனவரி 8இல் சென்னையில் தொடங்கிய போராட்டம் பிற இடங்களில் நடந்த கிளர்ச்சிகளுடன்சேர்ந்து இன்று நாடு முழுவதுமான அறப்போராட்டமாக மாறியுள்ளது.   அலங்காநல்லூர், சென்னை, மதுரை என அனைத்து நகர்களிலும், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி, மாணாக்கர்கள், இளைஞர்கள் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும்  நடந்து கொள்வதாக அனைத்துத் தரப்பாரும் பாராட்டி வருகின்றனர். கட்சிக் கொத்தடிமைகளையே பார்த்து வந்த நாட்டில் முதல்முறையாகக்…