புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம், இலக்கிய நிகழ்ச்சி

மாசி  2048 / மார்ச்சு 05, 2017 பிற்பகல் 3.00 கவியரங்கம் கருத்தரங்கம் த.மகராசன்  தமிழ் இலக்கிய மன்றம் புழுதிவாக்கம்

செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(மாசி 18,  1984 /  மார்ச்சு 01, 1953) செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே!  இன்றைய அரசியலின் திருப்புமுனையாகச் செயல்பட்டு வருபவர் மு.க.தாலின்.   தன் பதினாறாம் அகவையிலேயே  அரசியலில் காலடி எடுத்து வைத்தார்; கட்சியில் படிப்படியாகப் பல முன்னேற்றங்களைக் கண்டார். தந்தையின் ஒத்துழைப்பால் இவர் வட்டச்சார்பாளர், மாவட்டச்சார்பாளர், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணிச் செயலர், துணைப்பொதுச்செயலர் எனப் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்துள்ளார்.  வேறு உயர் பதவிக்கு வர விழைந்தும், தந்தையின்  இப்போதைய உடல்நிலையில் தி.மு.க.வின் செயல்தலைவராக உயர்ந்துள்ளார். இருப்பினும் ஒவ்வொரு…

பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் மாதம்தோறும் முப்பது சொற்பொழிவுகள்

பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் மாதம்தோறும் முப்பது சொற்பொழிவுகள்  பெரும்புலவர் இ.மு.சுப்பிரமணியன் 1934ஆம் ஆண்டு உருவாக்கிய ‘சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்’ முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு செல்லப் பாண்டியன் தலைமையில் ‘மாநிலத் தமிழ்ச் சங்கம்’ என்னும் பெயருடன் திகழ்ந்தது. ‘பவள விழாக் கண்ட தமிழ்ச் சங்கத்தில்’ இருநூறு உறுப்பினர் செயலாற்றுகின்றனர்.  இரண்டாவது செவ்வாய்க் கிழமை தோறும் ‘உலகத் திருக்குறள் பேரவை’ சார்பில் திருக்குறள் ஆய்வுச் சொற்பொழிவுகள் நடைபெறும்.   காரி(சனி)க்கிழமை தோறும் மாலை ஆறு மணி முதல் திருக்குறள் ஒரு தொடர் சொற்பொழிவுகள்…

திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல்    திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்  15.கற்பு இயல்  பசப்புஉறு பருவரல்   பிரிந்த தலைவி, தன்உடலின் நிறமாற்றம் கண்டும், வருந்துதல்.   (01-10 தலைவி சொல்லியவை)         நயந்தவர்க்கு, நல்காமை நேர்ந்தேன்; பசந்தஎன்       பண்புயார்க்(கு) உரைக்கோ பிற? பிரிவுக்கு ஒப்பினேன்; பசலை படர்ந்தது; யாரிடம் உரைப்பேன்?   அவர்தந்தார் என்னும் தகையால், இவர்தந்(து),என்       மேனிமேல் ஊரும்…

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 5 – ஞா.தேவநேயர்

(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4  தொடர்ச்சி) தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 5. செம்மை  சொற்களும் சொற்றொடர்களும் வடிவிலும் பொருளிலும் இலக்கண முடிபிலும் வழாநிலை, வழுநிலை, வழுவமைதிநிலை என முந்நிலைப்படும். அவற்றுள், வழுநிலையில்லது செந்தமிழ் என்றும், அஃதுள்ளது கொடுந் தமிழ் என்றும், தமிழை இருவகையாக வகுத்தனர் இலக்கண நூலார். மக்கட்கு ஒழுக்க வரம்பு எத்துணை இன்றியமையாததோ, அத்துணை இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பும். சொற்களின் திருந்திய வடிவையும் ஓரிய லொழுங்கையும் தமிழிற்போல் வேறெம்மொழியிலுங் காண முடியாது. எ-டு: தமிழ்                                                     …

தமிழணங்கே ! மாமணி நீ! – ஒ.சுந்தரமூர்த்தி

தமிழணங்கே ! மாமணி நீ! – ஒ.சுந்தரமூர்த்தி   தமிழணங்கே ! காணலுறும் தேவதைநீ  கண்ணே பெண்ணே கண்ணிலுறு மாமணிநீ மண்ணே விண்ணே! பாணதனில் வீரமுடைப் பாலும் தந்தாய் பாடலுறக் கூடவரும் இன்பம் சிந்தாய் பூணுகின்ற பாவதற்குள் அமிழ்தம் பொங்கும் புத்துணர்வின் உச்சமது என்னுள் தங்கும் காணுகின்ற காட்சிகளில்உன்னைக் கண்டேன் கன்னியெனக் காதலியாய்த் தாயாய்ப் பாவாய் !   கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி தமிழாசிரியர், நஞ்சப்பா அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, திருப்பூர்

விந்தைத் தமிழை விரும்பிப் போற்று ! – ‘வாசல்’ எழிலன்

விந்தைத் தமிழை விரும்பிப் போற்று ! – ‘வாசல்’ எழிலன்   அழகும் தமிழும் ஒன்றே தானாம் அறிவைச் சேர்க்க அதுவே தேனாம் பழகும் பாங்கில் பணிவே சீராம் பண்பை உரைக்கும் பகுத்தறி தேராம் உழவர் உணவை ஈட்டல் போல உணர்வைத் தமிழே உலகுக் கீட்டும் மழலை போல மகிழ்வைக் காட்டி மலரும் முல்லைபோல் மணத்தைஈட்டும் இளமை இனிமை இணைந்தே இருக்கும் இன்பம் துன்பம் ஒன்றாய்ப் பிணைக்கும் இலக்கை நோக்கும் இதயம்கொடுக்கும் இல்லற வாழ்வை என்றும் மிடுக்கும் கலக்க மில்லா நெஞ்சை நிறைக்கும் கலையாய் அறத்தைக்…

நல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே! – செந்தமிழினி பிரபாகரன்

நல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே! ஆராரோ ஆரிரரோ ஆராரோ யார் இவரோ? ஆராரோ நிலம் பறிக்க ஆராரோ அழுகின்றோம். கண்ணே நீ விழித்து விடு கண்ணீரை விட்டு விடு காலம் எங்கள் வசமாகும். அழுவதை நிறுத்தி விடு சொந்த மண்ணில் படை வரலாம் வெந்த புண்ணில் சீழ் வரலாம் ஆர் ஆற்றி தீருமம்மா ஆறாத எம் துயரம்? எமக்காக குரல் கொடுக்க எவர் குரலும் இரங்கவில்லை எதிர்காலம் இருண்டிடினும் எதிர் கொண்டு வெல்வோமடி! கண்ணே நீ எழுந்திடம்மா கண் விழித்துப் போராடு கண்ணுறங்க நேரமில்லை…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16 பதினைந்தாம் பாசுரம் தமிழே பிற உயிரினங்களிலும் ஐவண்ணப் பைங்கிளிபோல் ஐம்மிளிரும் நாயகியாள் ! தூவிறகு அன்னம்போல் தன்சொல் பிரித்துயர்வாள் ! ஓவியக்கண் பீலிப்புள் ஒய்யாரம் காட்டுதல்போல் மேவும் சபைதன்னில் மேதைமை செய்திடுவாள் ! மாவரசு சிங்கம்போல் மேலாண்மை கூடியவள் ! மூவாத ஆல்போல் மண்ணுள் விழுதூன்றிப் பாவாணர் போற்றப் பரந்துவிரிந் தோங்கிடுவாள் ! நாவால் தமிழன்னை நற்புகழ்சொல் எம்பாவாய் !   பதினாறாம் பாசுரம்…

தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது! – திருமாவளவன்

தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது! – திருமாவளவன் கண்டன அறிக்கை  “இலங்கைப் படையினரால் தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது” எனத் திருமாவளவன் தெரிவித்துள்ளார். “தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்களப் படையினரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.   இலங்கை இனப்படுகொலையின்பொழுது தமிழ்ப் பெண்களை இலங்கைப் படையினர் பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாகத் தென் ஆப்பிரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு’ தெரிவித்துள்ளது. அதற்கான சான்றுகளையும் அந்த…

பாலியல் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் சித்திரவதை! – கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம்!

பாலியல் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் சித்திரவதை! – கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம்!   கம்பி வேலிகளின் பின்னால், சுவர்களின் பின்னால், இருட்டறைகளில் தமிழ்ப் பெண்களை அடைத்து வைத்துப் பாலியல் முகாம்களை நடத்தும் சிங்களப் படைகள் பற்றி அண்மையில் வெளிவந்துள்ள செய்தி குறித்து இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “சிங்களப் படைகள் முள்ளிவாய்க்காலில் நூற்று ஐம்பதாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த இன அழிப்பு நிகழ்வு நடந்து எட்டு ஆண்டுகள் கழிந்த…

1 2 7