தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தும் இலங்கைப் படையினர்!

தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தும் இலங்கைப் படையினர்! – உறுதிப்படுத்தும் பன்னாட்டு அமைப்பு!   இலங்கையின் சிங்களப் படையினர் தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தி ‘உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு’ தெரிவித்துள்ளது.   இலங்கைப் போரின்பொழுதும் அதன் பின்பும் தமிழ்ப் பெண்களைக் கைது செய்து, தடுத்து வைத்துப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தியதாகவும் அவர்களிடம் மேலும் பாலியல் குற்றங்கள் பலவற்றில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்படும் இலங்கைப் படை அலுவலர்கள் ஆறு பேரின் விவரங்களைப் பன்னாட்டு மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய…

குளங்களின் பாதுகாப்பை உணர்த்தும் ‘நடுகல் சிலை’

குளங்களின் பாதுகாப்பை உணர்த்தும் ‘நடுகல் சிலை‘  நீர் நிலைகளைப் பாதுகாத்தவர்களுக்கு, நடுகல் சிலை வைத்து அவர்களை வழிபாட்டுக்கு உரியவர்களாக மாற்றி முன்னோர்கள் முதன்மை அளித்துள்ளனர்.   மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில்,  பயிர் நிலங்களின் பரப்பை அதிகரிக்க, குளங்கள், தடுப்பணைகள் உருவாக்குவது  முதன்மைப் பணியாக இருந்துள்ளது. நீர் நிலைகளைப் பாதுகாக்க, அவர்கள் அளித்த  முதன்மை, நீர் வழித்தடங்களையும் நீர் நிலைகளையும் அழித்து விட்டு, வறட்சியில் வாடிக்கொண்டிருக்கும் நமக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.    மேடான தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிக்கு, வாய்க்கால் வெட்டித் தண்ணீர் கொண்டு வந்து,…

நன்மை நீஇ! தின்மை நீஇ!

நன்மை நீஇ!  தின்மை நீஇ!   நன்மை நீஇ;  தின்மை நீஇ; நனவு நீஇ; கனவு நீஇ; வன்மை நீஇ; மென்மை நீஇ; மதியு நீஇ; விதியு நீஇ; இம்மை நீஇ; மறுமை நீஇ; இரவு நீஇ; பகலு நீஇ; செம்மை நீஇ; கருமை நீஇ; சேர்வு நீஇ; சார்வு நீஇ; நீலகேசி உரை பெருந்தொகை தொகுப்பு: மு.இராகவையங்கார்: பக்கம் 187

நோர்வே : கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல்

நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல் நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (19.02.2017) நண்பகல் 13:00மணிக்கு  (Slora Idrettspark, Strømmen, Norway என்னும் இடத்தில்) நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள், வளர்ந்தோர் என 350பேர் கலந்துகொண்டனர். ஈழத் தமிழர்களாகிய நாம் கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் அறம்சார் உரிமைப்போராட்டத்தை ஆதரித்து, அவர்களுக்கு வேண்டிய ஒத்துழைப்புகளை வழங்குவது குமுக(சமூக)அமைப்பான எமது கடமை என்று கருதி நோர்வே தமிழ்ச்சங்கம் இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தது. நோர்வே தமிழச்சங்கம்…

சுந்தரச் சிலேடைகள் – மாணவரும் ஆடும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சுந்தரச் சிலேடைகள் மாணவரும் ஆடும் சிலேடை 1 அடைந்திருக்கும் ஓரிடத்தில் ஆளின்றேல் தாவும் கடைநிலையிற் கொம்படிக்கும் கத்தும்-இடைநின் றிழுக்க அசைபோட் டிறுதி விருந்தாம் எழுத்தறி வானாட்டுக் கீடு. பொருள் மாணவர்=வகுப்பறையில் அனைவரும் இருப்பர். ஆசான் இல்லாதபோது இங்குமங்கும் விளையாடுவர். படிக்காத கடை மாணவர் கொம்பால் அடிவாங்குவர். பள்ளிவராமல் உள்ளோர் சகமாணவர்களால் இழுத்து வரப்படுவர். அழுவர். கற்றதை அசைபோடுவர்.பின்னாளில் நல்ல விருந்தளிப்பர். ஆடு=கொட்டகையில் அடைந்து கிடக்கும். ஆளில்லை என்றால் இங்குமங்கும் தாவும் சேட்டை செய்யும் , சண்டையிடும் , கொம்பால் முட்டிக்கொள்ளும்.இடையிலே நின்றுபோனால்…

மலரினும் மெல்லியது காதல் ! – இரா.இரவி

மலரினும் மெல்லியது காதல் ! மலரினும் மெல்லியது காதல் ஆனால் மலையினும் வலியது காதல் ! ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால் உயிர் உள்ளவரை நேசிப்பது காதல் ! தடைகள் ஆயிரம் வந்த போதும் தகர்த்து இணைவதே உண்மைக் காதல் ! புறஅழகுப் பார்த்து வருவது அல்ல காதல் அகஅழகு ஈர்த்து வருவதே மெய்யான காதல் ! என்னவென்று விளக்கமுடியாவிடினும் ஏதோ ஒன்று இணையிடம் பிடித்து இருக்கும் ! இடையில் வந்தவள் என்றபோதும் மன எடையில் உயர்ந்து நிற்பவள் காதலி ! உன்னத காதலிக்கு…

‘திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?’ சென்னையில் நூல் அறிமுக விழா!

   தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எழுதிய ‘திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?’ – நூலின் அறிமுக விழா சென்னையில், இன்று  (ஞாயிறு /மாசி 14, 2048 /26.02.2017) மாலை 5.30 மணியளவில் நடைபெறுகின்றது. எழும்பூர் இக்சா அரங்கில் நடைபெறும் நிகழ்வுக்கு, தூயதமிழ்க்காவலர் கு.மு. அண்ணல் தங்கோ அவர்களின் பெயரன் திரு. செ. அருட்செல்வன் தலைமை தாங்குகிறார்.   சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பி. (இ)யோகீசுவரன் நூலை வெளியிட, தென்மொழி ஆசிரியர் முனைவர்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   அப்போதைய ஆளுநர் திரு சிரீபிரகாசா அவர்கள், “ஆடவர்கள் வெறித்துப் பார்ப்பதை மறுக்கும் ஒரு பெண்ணைக் கூட நான் இதுவரை சந்தித்ததில்லை” எனப் புதிய மண்டபத்திறப்பு விழா ஒன்றில் பேசினார். இது குறித்த கண்டனைக் கணைகளை விடுக்கப் பேராசிரியர் இலக்குவனார் தவறவில்லை. பின்வரும் பேராசிரியர் இலக்குவனாரின் உரையே அவரின் தமிழ்க்காப்பு உணர்வை வெளிப்படுத்தும்.   “பந்தயம் பார்க்கவும் பதக்கங்கள் வழங்கவும் கட்டடத் திறப்பு விழாக்களில்…

கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 கள்ளத்தின் போக்காலே காற்றின் தூய்மை காணாமல் போனதுபார்! கழிவே எங்கும்! அள்ளத்தான் நீரில்லை! ஆற்றின் தூய்மை அதற்கின்னும் வழியில்லை! அடுத்து வாழும் பிள்ளைக்கோர் நல்லுலகைப் பேணிக் காக்கும் பெருங்கடமை உனக்கிலையோ? பிழைகள் தீர உள்ளத்தின் பரப்பதனில் வெள்ளை தீட்டு! ஓசோனைத் தைப்பதற்கோர் ஊசி தேடு! (17) விண்ணதனை மின்னல்கள் வெட்டும் போக்கின் விளைவாக விரிசல்கள் வாரா தென்றும்! மண்ணதன்மேல் கலப்பையினை மடக்கி ஓட்ட மண்ணுக்கே புண்ணாகும் வழக்கம் உண்டோ?…

தன்மதிப்புப் பகுத்தறிவாளர் சிவகங்கை இராமச்சந்திரன் – செங்கோ

தன்மதிப்புப் பகுத்தறிவாளர் சிவகங்கை இராமச்சந்திரன் மருதிருவர் மண்ணிலே…   சிவகங்கை இராமச்சந்திரன் (புரட்டாசி 02, 1915)16.09.1884இல் பிறந்து  (மாசி 15, 1964)26.02.1933  இல் மறைந்த திராவிடர் இயக்கத் தன்மதிப்புப் பகுத்தறிவாளர். 1929இல் செங்கற்பட்டு மாநில  தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்க மாநாட்டில் பங்கு பெற்று, பெரியார் பாதையில் தம்  சாதி ஒட்டினை நீக்கி, “சிவகங்கை இராமச்சந்திரன் சேர்வை ஆகிய நான், இன்றுமுதல் சிவகங்கை இராமச்சந்திரன் என்றே அழைக்கப்படுவேன்” என்று சூளுரைத்துச் சாதியைத் துறந்தவர்.   ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட பெருந்தகையாளர். இரவுநேரப் பள்ளிகளைத் தொடங்கி, அந்த உழைக்கும்…

கலைச்சொல் : இடைநல அரசு – care taker government :- இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் : இடைநல அரசு – care taker government    காபந்து அரசு என்றால் என்ன   என்பது இன்றைய தலைமுறையினர் கேள்வி?  காவந்து(kawand) என்னும் உருதுச்  சொல்லில் இருந்து காபந்து என்ற சொல் உருவானதாகத் தமிழ்ப்பேரகராதியில் (பக்கம் 869) குறித்திருக்கும்.  “முந்தும் அரவம் நச்சுயிரிகளால் ஏதம் வந்து கெடாமலே காபந்து செய்தாயே‘  என்பது சர்வசமய சமரசக் கீர்த்தனை)   காபந்து அரசு என்பதற்கு, “மறு அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரையுள்ள காலத்தில் நாட்டை ஆளும்அரசு” என  விளக்குகிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. இது விளக்கமே…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 11 & 12 தொடர்ச்சி)   திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14 பதின்மூன்றாம் பாசுரம் புலவரின் முதற்சொல்லும் தமிழ்த்தாயின் பாடலும் வெண்டளைச் சொற்களையே வெண்பாவிற் பூட்டுதலான் கொண்டமுதற் சீரே புலவோர்க் குரிமையதாம்! பண்டு புனைந்தோர் படைத்தார் முதற்சொல்லே; வண்டமிழ்த்தாய் யாத்து வடித்தாள்காண் பாடலெலாம் ! தண்டை யணிந்து தளிர்க்கொடியாள் ஆடுகிறாள் ; வண்டிசை மேவ மயங்கிடவே பாடுகிறாள் ; கண்திறப்பாய், கோதாய்! கடைதிறப்பாய் ;சொல்,முதற்சொல்; கொண்டேத்தும் பாடலொன்று தாய்தருவாள் எம்பாவாய் !   பதினான்காம் பாசுரம்…