முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா? – இலக்குவனார் திருவள்ளுவன்

முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா?     அதிமுகவில் பன்னீர் அணி உருவானதால், சசிகலாவிற்கான எதிர்ப்பு அலை கூடியது; அதிமுக  ஆட்சிகவிழும்;   தாலின் முதல்வராவார் என்ற பேச்சு உலவியது. ஆனால் திமுக செயல் தலைவர் தாலின் அதிமுக இயல்பாகக் கவிழ வேண்டும்; திமுகவின் முயற்சியால் கவிழ்ந்தால் மக்களின் நல்லெண்ணம் திமுகவிற்குக் கிட்டாது எனச்சொல்லி எந்தப் பிரிவிற்கும் சார்பாக இராமல் நடுநிலையாக இருந்தார்.   பன்னீர் செல்வம் ஆட்சி கவிழும் நிலை வரும், அப்பொழுது திமுக துணைநிற்கும் என்பதுபோன்ற பேச்சுகள் வந்தாலும்…

திருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 117. படர் மெலிந்து இரங்கல் தொடர்ச்சி)     திருக்குறள் அறுசொல் உரை  3. காமத்துப் பால்  15.கற்பு இயல்  கண் விதுப்பு அழிதல் காதலனைக் காணும் வேட்கையால், காதலியின் கண்கள் துடித்தல்.   (01-10 தலைவி சொல்லியவை) கண்தாம் கலுழ்வ(து), எவன்கொலோ? தண்டாநோய்,       தாம்காட்ட யாம்கண் டது.         தீராத்துயர் ஆக்கிய கண்களே!         நீங்கள், அழுவது ஏனோ? தெரிந்(து)உணரா நோக்கிய உண்கண், பரிந்(து)உணராப்       பைதல் உழப்ப(து) எவன்?         விளைவை ஆராயாமல் கண்டகண்,…

இலக்கியச்சிந்தனையின் 563 ஆவது நிகழ்வு, சென்னை

  மாசி 13, 2048 சனிக்கிழமை 25-02-2017 மாலை 6.00 மணி    இலக்கியச் சிந்தனையின் 563 ஆவது நிகழ்வு             ஒரு பதிப்பாளரின்  பட்டறிவுகள்: உரையாற்றுநர்: திரு சேது சொக்கலிங்கம் கவிதா பதிப்பகம்  தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 23 ஆவது நிகழ்வு “சிறுகதைகள் – அன்றும் இன்றும்” –    திரு  செ.இரகுநாதன் சீனிவாச காந்தி நிலையம் (காந்தி அமைதி நிறுவம்/Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018 அனைவரும் வருக! இலக்கியவாசலின் வலைப்பூ காண அரங்கம் அடைய

“ புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பில் உரையரங்கம், திருச்சிராப்பள்ளி

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, நவலூர்குட்டுப்பட்டு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு. எதிர்வரும் மாசி 15, 2048 _ 27/02/2017 அன்று  தமிழ்த்துறையில் “ புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெறுகிறது. சிறப்புச் சொற்பொழிவாளர்: திருமதி மதிவதினி. சுவிட்சர்லாந்து

கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 15 & 16   பேரிருளில் தீச்சுடராய்ப் பொலிந்து நன்மை புரிகின்ற பிறப்பதுவே பெண்மை! உண்மை! ஈரமிலா இயல்பேற்ற இரும்புத் தன்மை, இதயத்தில் நல்லெண்ண மின்மை வன்மை! பாரதனில் மங்கையரின் பங்கு தம்மைப் பாடலினால் அவர்விரித்தார்! பன்மை மென்மை சேருமெனில் தோள்புடைக்கச் சேரும் திண்மை! செந்தமிழில் தெரிவித்தார் தெண்மை! நுண்மை! (15) வேருக்கு நீருழவன் விடுவ தாலே விளைவிங்கே வருகிறது! விழலே நாமும்! பாருக்குள் தெய்வதத்தைப் பாராப் போதும் பயிரெல்லாம் அவன்சிரிப்பைப் படைத்து…

ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன?

“ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன?”  – 34 ஆவது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல் கூட்டம் –  மாசி 13, 2048 / 25.02.2017 சனிக்கிழமை, நேரம்: காலை 10.00 மணி   இடம்: ஆசா நிவாசு, 9, இரட்லண்டு வாயில் 5 ஆவது தெரு, நுங்கம்பாக்கம், சென்னை 6. (நுங்கம்பாக்கம் தாசு உறைவகம் எதிர்ப்பக்க சாலை) [ Asha Nivas, 9, Rutland Gate, 5th Street, Nungambakkam, Chennai, Tamil Nadu 600006. (Opp To Taj Coromandel)]…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு)  தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குப் பெருந்தலைவர் காமராசரும் சி.டி.நாயுடு என அழைக்கப்பெறும் அறிவியல் அறிஞர் கோ.துரைசாமி அவர்களும் போட்டியிட்டனர். பெருந்தலைவர் தமிழ்நாட்டை வழி நடத்த வேண்டும் எனக் கூறிய பேராசிரியர் இலக்குவனார், அறிவியல் அறிஞர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது நாட்டிற்கே நலம் பயக்கும் என அவருக்காக முனைப்பான பரப்புரை மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கல்லூரிச் செயலர் திரு…

சிலப்பதிகாரப் பெருவிழா, சென்னை

அன்புடையீர், வணக்கம். மாசி 15, 2048 / திங்கட்கிழமை / 27-02-2017  காலை 10 மணி முதல் மதியம் 1. 30 மணிவரை, முனைவர் எம்ஞ்சிஆர். சானகி மகளிர் கலை- அறிவியல் கல்லூரி அரங்கில், சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை –  முனைவர் எம்ஞ்சிஆர். சானகி மகளிர் கலை -அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் சிலப்பதிகாரப் பெருவிழா நடைபெறவுள்ளது.   நீதியரசர் வள்ளிநாயகம், நயவுரைநம்பி முனைவர்  செகத்துரட்சகன், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பமை திருச்சி சிவா,பழனி  சி. பெரியசாமி, தாளாளர் திருமதி இலதா  இராசேந்திரன், கவிப்பேரருவி…

உ(யு)கபாரதி நூல்கள் வெளியீட்டு இருநாள் விழா

உ(யு)கபாரதி நூல்கள் வெளியீட்டு இருநாள் விழா   மாசி 12 & 13 2048 / வெள்ளி & சனி /   பிப்பிரவரி 24 & பிப்பிரவரி 25, 2017  மாலை 4.30 கவிக்கோ மன்றம், சென்னை 600 004 நேர்நிரை

தோள்கள் நமது தொழிற்சாலை – இலக்கு & கிருட்டிணா இனிப்பகக் கூட்டம்

அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத்  துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகமும்   இந்த மாதம் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்     பரம்பரை ஆடைகளையும் அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளைப்பற்றியும்  எடுத்துச் சொல்ல இருக்கிறது.  வாய்ப்பிருப்பவர்களும், ஆர்வமுள்ளவர்களும் வருகை தர வேண்டுகிறோம்.   இலக்கு கிருட்டிணா இனிப்பகம்

அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப்போட்டி 2016

அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப்போட்டி 2016   முடிவு நாள் : பங்குனி 17, 2048  மார்ச்சு 30, 2017 படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி :  ஞானம், கிளை அலுவலகம், எண் 38, 46 ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.