இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 3/3 – மு.இளங்கோவன்

(இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 2/3 தொடர்ச்சி) இரவிச்சந்திரனின்  ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 3/3  ‘கொட்டாப்புலிக் காளைகள்’ என்ற தலைப்பில் இரவி எழுதியுள்ள செய்திகள் படிப்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் நிகழ்வுகளாக விரிந்துள்ளன. அப்பா பட்டுக்கோட்டைச் சந்தையிலிருந்து வாங்கிவந்த கன்றுக்குட்டிகள் வளர்ந்து ஏரோட்டவும், வண்டியில் பூட்டவும் பழக்கிய நிகழ்ச்சிகளைக் கண்முன்கொண்டுவந்து இரவி நிறுத்துகின்றார். அப்பா, அம்மா, வீட்டு வேலையாள் நாகநாதன் மூவர்தான் அந்தக் கொட்டாப்புலிக் காளைகளைப் பிடிக்கமுடியும் என்ற நிலையில் ஊரில் சண்டியராக வலம்வந்த வேணு ஆலம்பிரியரை அந்த மாடுகள் முட்டி வேலியில் தள்ளியதையும் அம்மாவின்…

கம்பன் புகழைப் பாடு மனமே ! – அம்பாளடியாள்

கம்பன் புகழைப் பாடு மனமே !   கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே வம்பன் எனினும் வசப்படுவர் ! -செம்பொன் நிகர்த்த கவிதைகள் நெஞ்சுள்  இனிக்க விகர்ப்பம் தணியும் விரைந்து! விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர் ! நெஞ்சும் உரைக்கும் நினைவாளர்!- அஞ்சாதே கம்பன் இருக்கக் கவலைகள் தாம்எதற்கு?! செம்பட்டுப் போன்றே செழிப்பு! அஞ்சும் மனத்தின் அவலம் குறைக்கவே கொஞ்சும் தமிழைக் குவித்தவர்! -நெஞ்சும் சுவைக்கும்  பொருளைச்  சுரந்தவர் கம்பர் ! அவைக்கும் அவரே அழகு ! பாட்டால்  உயிர்கொடுத்த பாவலர் !கம்பரே வாட்டம் தணிக்கவல்ல வாழ்வுமாவார்!- கேட்டாலே…

கலைகளால் செழிக்கும் செம்மொழி – முதல் நிகழ்வு

  மாசி 02, 2048 / செவ்வாய்  / பிப்பிரவரி 14, 2017 மாலை 6.30 சென்னை 600 004 அன்புடையீர், வணக்கம் . இலக்கியவீதியின் ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ என்கிற தொடரின்,  இந்த ஆண்டுக்கான முதல் நிகழ்விற்கு உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.  என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன். இலக்கியவீதி & பாரதிய வித்தியாபவன்

பனுவல் வரலாற்றுப் பயணம் 7 : தூசி – மாமண்டூர்

பனுவல் வரலாற்றுப் பயணம் 7 : தூசி – மாமண்டூர்   தூசி, மாமண்டூர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர், காஞ்சிபுரம் அருகே உள்ளது. தூசி என்றால் குதிரை படை நிறுத்துமிடம் என்பது பொருள். இவ்வூரில் உள்ள மலை அடிவாரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவருமன் காலக் குடைவரைக்கோயிலும் அவன் பெயரிலேயே அமைக்கப்பட்ட சித்திரமேகத் தடாகம் என்ற மிகப்பெரிய ஏரியும் அமைந்திருக்கின்றன. அக்கோயிலில் உள்ள கல்வெட்டு மிகவும் பெரியது.   இம்மலைமேல் சமண முனிவர்கள் வாழ்ந்த  இயற்கையான குகைத்தலமும் அதில் தமிழ்ப் பிராமி கல்வெட்டும்…

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 2 – ஞா.தேவநேயர்

(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 1 தொடர்ச்சி) 2 தமிழின் தனிப்பெருந் தன்மைகள் மென்மை     தமிழர் மாந்தன் வரலாற்றிற் குழந்தைபோல் முந்தித் தோன்றிய இனத்தவராதலால், அவர் வாயில் குழந்தைகளும் முதியவரும் களைத்தவரும் நோயாளிகளும்கூட எளிதாய் ஒலிக்கத் தக்கனவும், பெரும்பாலும் எல்லா மொழிகட்கும் பொதுவானவுமான (உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாக) முப்பது எழுத்தொலிகளே பிறந்திருந்தன.  அதோடு, தனி மெய்யொலியில் தொடங்கும் சொற்களும், வல்லின மெய்யொலியில் இறுஞ் சொற்களும், சில மெய்யொலிகட்குப் பின் சில மெய்யொலிகள் தமித்தோ உயிர்மெய்யாகவோ  இடையில் வருஞ் சொற்களும், அவர் வாயில் வந்ததில்லை….

உலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்! – பெ. சிவசுப்பிரமணியன்

உலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்!    உலகெங்கும் அவரவர் தாய்மொழியே ஆட்சியிலும் கல்வியிலும் கோலோச்சுகின்றன. ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள 49 நாடுகளிலும்கூட அந்நாடுகளின் தாய்மொழிகளே கோலோச்சுகின்றன; நம் மனத்தில் உருவகப்படுத்தப்பட்டதுபோல ஆங்கிலம் அல்ல. ஆங்கிலம் உலகம் முழுவதுமே காணப்படுகின்றது என்பதில் உண்மை இல்லை! இங்கிலாந்திலும்கூட 7 மொழிகள் கோலோச்சுகின்றன. அங்குள்ள மாநிலங்களின் தாய்மொழிகள் –  காட்டிசு(இசுகாத்துமொழி), ஐரீசு, வேலிசு, கார்னிசு, மாணக்சு, பிரெஞ்சு மொழிகளே ஆட்சி மொழியாக, கல்வி மொழியாகக் கோலோச்சுகின்றன. ஆங்கிலம் மத்திய அரசின் ஆட்சிமொழி நம் நாட்டில் இந்தி போல! (படிக்க…

தமிழெனப் பொங்கிடு! – ப.கண்ணன்சேகர்

தமிழெனப் பொங்கிடு!   உழைத்திடப் பொங்கிடு!  உரிமைக்குப் பொங்கிடு உதவிடப் பொங்கிடு  ஊருக்குப் பொங்கிடு தழைத்திடப் பொங்கிடு  தமிழெனப் பொங்கிடு தருமத்தைப் பொங்கிடு  தளராது பொங்கிடு பிழையறப் பொங்கிடு  பெருமையாய்ப் பொங்கிடு பிணக்கிலாப் பொங்கிடு  பார்போற்றப் பொங்கிடு மழையெனப் பொங்கிடு  மலரெனப் பொங்கிடு மதமிலாப் பொங்கிடு  மனிதனாய்ப் பொங்கிடு இயற்கையோடு பொங்கிடு இரக்கதோடு பொங்கிடு இணக்கமெனப் பொங்கிடு  எழிலாகப் பொங்கிடு தயங்காமல் பொங்கிடு  தவறாது பொங்கிடு தடுக்காமல் பொங்கிடு  தணிந்திடப் பொங்கிடு வியந்திடப் பொங்கிடு  விடுதலைக்குப் பொங்கிடு வேளாண்மை பொங்கிடு  வெற்றியால் பொங்கிடு சுயமாகப்…

தகரக்குப்பிகளைக் கொண்டாடுவோர் சங்கம் – தமிழ்சிவா

தகரக்குப்பிகளைக் கொண்டாடுவோர் சங்கம்   பெரியாரே!  பெரியாரே! நீங்களோ ஓயாமல் படித்தீர்கள் ஆளும் உங்கள் சீட சிகாமணிகளோ ஓயாமல் நடிக்கிறார்கள். இது எந்தச் சித்தாந்தில் வரும்? முன்னணி  என்று பெயர் வைத்தவனெல்லாம் மானுட  இனத்தையே பின்னணிக்கு இழுக்கின்றான் இங்கே நந்தினிகள் மீண்டும் மீண்டும் கூட்டு வல்லுறவில் கொல்லப்படுகிறார்கள் ஏலம் விடப்பட்ட நீதிதேவதை பணக்காரர்கள் வீட்டில் பற்றுப் பாத்திரம் தேய்த்து ஈட்டிய வருமானத்தில் வாழ்க்கைப்படி(சீவனாம்சம்) கேட்டு வழக்குத் தொடுத்தாள்bgupah தள்ளித் தள்ளி வைக்கப்பட்டதில் வயதாகிப்போனதால் முதியோர் உதவித்தொகை கேட்டும் கையூட்டில்லாமல் கிடைக்காத நிலையில் சிலபல  ஆண்டுக்கு…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16). துயி லொழித்தல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 46. துயி லொழித்தல் உடம்புள வயர்வினை யொழிப்ப துறக்கம். உடலில் உள்ள களைப்பை நீக்குவது உறக்கம் ஆகும். அவ்வயர் வளவிற் கதிகமா வதுதுயில். அளவிற்கு அதிகமான உறக்கம் களைப்பை ஏற்படுத்தும். சுழுத்தியா முறக்கஞ் சுகத்தை வளர்க்கும். கனவுகள் அற்ற உறக்கம் ஆரோக்கியமான வாழ்வைத் தரும். கனவுக ளாந்துயில் கவலையை வளர்க்கும். கனவுகள் உடைய உறக்கம் நோயை ஏற்படுத்தும் 455.துயில்கொள வழிவாந் துயில்விட வாக்கமாம். அதிகமான உறக்கம் அழிவை ஏற்படுத்தும். அளவான உறக்கம் செல்வத்தைத் தரும்….