இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்!   இலங்கையைத் தமிழில் குறிப்பிடும் நம்நாட்டுத்தமிழர்களும் இலங்கைத்தமிழர்களும் ஈழத்தமிழர்களும் உலகத்தமிழர்களும் அரசுமுறைப் பெயரைச் சரியாகக் குறிப்பிடுவதாக எண்ணிச் சிரீ இலங்கா என்றே குறிப்பிடுகின்றனர்.   ஈழம், இலங்கை என்பன தொடர்புடைய பெயர்களே! ஈழத்துப் பூதன்தேவனா் என்னும் புலவர் சங்கக்காலத்தில் வாழ்ந்துள்ளார். ஈழத்து உணவு என்பதைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. சங்க இலக்கியத்தில் இலங்கை என்றும் சொல்லாட்சி உள்ளது. ‘தொன்மாவிலங்கை எனச் சிறுபாணாற்றுப்படை குறிக்கிறது. ‘இலங்கை கிழவோன்’ எனப் புறநானூறு(379) குறிப்பிடுகிறது.   ஈழம் என்றால் பொன் எனப் பொருள்….

பாவேந்தர் புரட்சிக்கவிஞர் 125 ; தமிழ்க்கவிஞர் நாள், திருவள்ளூர்

பங்குனி 15, 16 – 2048 / மார்ச்சு 28, 29 – 2047 பாவேந்தர் புரட்சிக்கவிஞர் 125  தமிழ்க்கவிஞர் நாள்  திருவள்ளூர் வாழ்த்தரங்கம் கவியரங்கம் இசையரங்கம்   (அழைப்பிதழ்களைச் சொடுக்கிப் பார்த்தால் பெரிதாகக் காணலாம்) முனைவர் கோ.விசயராகவன் இயக்குநர் தமிழ்வளர்ச்சித்துறை & உலகத்தமிழராய்ச்சி நிறுவனம்

‘கலாச்சாரம்’ தேவையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

‘கலாச்சாரம்’  தேவையா? – இலக்குவனார் திருவள்ளுவன்   ‘கலையும் கலாச்சாரமும்’, ‘கலாச்சாரமும் பண்பாடும்’, ‘கலையும் கலாச்சாரமும் பண்பாடும்’ என்றெல்லாம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கலாச்சாரம் என்பதைப் பண்பாடு என்னும் பொருளில்தான் பெரும்பாலும் கையாள்கின்றனர். சில இடங்களில் கலை என எண்ணிக் கையாள்கின்றனர். கலை – பண்பாட்டுத்துறை என்பதைக் கலை – கலாச்சாரத்துறை என்றே குறிப்பிடுகின்றனர். எனவே, கலையும் கலாச்சாரமும் என்றால்  கலையும் பண்பாடும் என்று கருதுவதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், கலாச்சாரமும் பண்பாடும் என்றால் என்ன பொருள்? நாகரிகமும் பண்பாடும் என்று பொருள்  கொள்ள இயலவில்லை,…

தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன   தமிழ்ப்பயிற்றுமொழியை வலியுறுத்தும் கட்சியினரும் அமைப்பினரும் தலைவர்களும் ஆர்வலர்களும் தங்கள் குடும்பத்தினரைத் தமிழ்வழிக் கல்விக்கூடங்களிலேயே சேர்க்க வேண்டும். தரமான தமிழ்வழிப்பள்ளிக்கூடம் இன்மையால் தமிழ்வழிக்கல்வி அளிக்க இயலவில்லை என்னும் குறைபாட்டைப் போக்கவேண்டும். எனவே, ஊராட்சி தோறும் தமிழ்வழிக்கல்விக்கூடங்களைத்தொடங்க வேண்டும். அரசு மூடிவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தமிழ்வழிக்கல்விக்கூடங்களை எடுத்துச் சிறப்பாக நடத்த வேண்டும். தமிழ்வழிப்பள்ளிகளைத் தத்து எடுத்துத் தரம் உயர்ந்தனவாக மாற்ற வேண்டும். தாங்கள் நடத்தும் ஆங்கிலக் கல்வி நிலையங்களைத் தமிழ்வழிக்கல்விக்கூடங்களாக மாற்ற வேண்டும். தமிழ்வழிக்கல்விக்கு எதிரானவர்களைப் பொறுப்புகளிலிருந்து நீக்க…

பனுவல் வழங்கும் குமுகாய நீதி நிகழ்வுகள் : ஏப்பிரல் முழுவதும் சனி, ஞாயிறுகளில்

  பனுவல் வழங்கும்  குமுகாய நீதி நிகழ்வுகள் ஏப்பிரல் முழுவதும் சனி, ஞாயிறுகளில்   நூல்கள் வெளியீடு திரைக்காட்சி உரையாடல்  

தேர்தல் ஆணையத்தின் வன்முறை : இன்றைக்குப் பலி அதிமுக! நாளைய பலி திமுக? – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையத்தின் வன்முறை : இன்றைக்குப் பலி அதிமுக! நாளைய பலி திமுக?  ஓர்ந்துகண்  ணோடாது  இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. (திருவள்ளுவர், திருக்குறள் 541)  வழக்காயினும், சிக்கலாயினும் வேறு தீர்விற்கு உரியதாயினும் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு பாராதே! எப்பக்கமும் சாயாமல் நடுவுநிலையோடு அணுகுக! வழங்கவேண்டிய தீர்ப்பை ஆராய்க! அதனைச் செயல்படுத்துக! அதுவே உண்மையான நீதியாகும் எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுகிறார்.   சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பது நமது நாட்டில் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் சாதிக்கேற்ற நீதி! இருப்பவனுக்கு ஒரு…

தமிழ்த்தாய் வணக்கம் 1-5 : நாரா. நாச்சியப்பன்

தமிழ்த்தாய் வணக்கம் 1-5   நல்ல தமிழ்நூல் நடையெழுத நீயெனக்கு வல்லமைதா வென்று வணங்கினேன்-தொல்லைப் பலகாலந் தொட்டுப் பருவங் குலையா திலகுதமிழ்த் தாயே இனிது   என்றும் உனது புகழ் யான்பேச வேண்டுமென நின்று தொழுகின்றேன் நீயருள்வாய்-தொன்று முதலாகத் தோன்றி முடிபுனேந்து பாவோர் இதழ்வாழும் தாயே இனிது   உலக மொழியெல்லாம் உன்னடியில் தோன்றி இலகும் எழில்கண்டேன் இன்ப-நலமிக்க ஆதித் தமிழே அழியாத தத்துவமே சோதிப் பொருளே துதி.   காலை மலரின் கவினழகும் கற்பகப்பூஞ் சோலைக் கனியின் சுவைநயமும்-ஆலயத்துத் தெய்வ அருளும் திருவும்…

தமிழின்பம் தனி இன்பம் 1/3 – முடியரசன்

தமிழின்பம் தனி இன்பம் 1/3   வள்ளுவப் பெருந்தகை, தமிழ் இன்பம் எத்தகையது என்பதை ஓர் உவமை வாயிலாக விளக்கிக் காட்டுகிறார். பழகப் பழகப் பண்புடையாளர் தொடர்பு எப்படிப்பட்ட இன்பம் தரும்? படிக்கப் படிக்கச் சிறந்த நூல்கள் தரும் உள்ளார்ந்த இன்பம் போலப் பழகப் பழகப் பண்புடையாளர் தொடர்பு இன்பம் தரும் என்று கூறுகிறார். முதல்முறை படிக்குங்கால் ஒருவகையின்பம்; மறுமுறை படிக்குங் கால் வேறுவகையான இன்பம்; அடுத்தமுறை படிக்குங்கால் அதனினும் சிறந்த இன்பம். இவ்வாறு பயிலப் பயிலப் புதுப்புது இன்பம் வளர்ந்து கொண்டே இருக்கும்….

இலக்கிய ஆளுமைகளுடன் ஞாயிறுதோறும் சந்திப்பு, சென்னை

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இலக்கிய ஆளுமைகளுடன் ஞாயிறுதோறும் சந்திப்பு    போட்டித் தேர்வுக்கு  ஆயத்தமாகும் மாணவர்களுக்கென  இ.ஆப., இ.கா.ப., இ.வ.ப., (இந்திய வனப்பணி)  முதலான  அனைத்து இந்தியப் பணிகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள், துறை வல்லுநர்களுடன் சந்திப்பு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கோடைக் கொண்டாட்டம், சென்னை

குழந்தைகளுக்கான கோடைக் கால முகாம்   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகர்கள், குழந்தைகள் நலனுக்காகப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  ‘கோடைக் கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான கதை சொல்லி,    இசை, ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்தல், அறிவியல் செயல்திறன், பொம்மலாட்டம், ஓகம்(யோகா), ஞாபகத்திறன் பயிற்சி, சதுரங்கம், வினாடி வினா,  புத்தகங்களைப் பற்றிய அறிமுகம், படக்கதை எழுதும் பயிற்சி, காகிதத்தில் பொம்மை செய்தல் போன்ற நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும் பங்குனி 19,  2048 / 01.04.2017 முதல் வைகாசி 17, 2048 /  31.05.2017 வரை…

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமைதோறும் பொன்மாலைப் பொழுது

  பொன்மாலைப் பொழுது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ‘பொன்மாலைப் பொழுது’ என்ற தலைப்பில் புகழ்மிகு இலக்கிய ஆளுமைகளுடன் சந்திப்பு  வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளது.  ஏப்பிரல் மாதத்தில் கீழ் வருமாறு  ஆளுமைகளுடன் சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்குனி 19,2048 / 01.04.2017 : திரு நெல்லை செயந்தா பங்குனி 26, 2048/08.04.2017 : திரு சு.வெங்கடேசன் சித்திரை 02, 2948/ 15.04.2017 : திரு எசு.இராமகிருட்டிணன் சித்திரை 09, 2948/ 22.04.2017 :…

1 2 8