தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு – அ.கி.பரந்தாமனார்

தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு   தமிழ்மொழி, வடமொழியினின்று தோன்றியது என்று ஒரு சிலர் தவறான உணர்ச்சியினால் பல ஆண்டுகளாய் அறியாது கூறி வந்ததுண்டு. இத்தவற்றுக்குக் காரணம் பல வடசொற்கள் தமிழில் புகுந்திருப்பதேயாகும்.   வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்த தவஞானச் செல்வரான சிவஞானயோகிகளும், வடமொழியும், தமிழ் மொழியும் நன்குணர்ந்த மொழிநூலறிஞர் முனைவர் பி. எசு.சுப்பிரமணிய (சாத்திரியாரும்) பிறரும், “வடமொழி வேறு; தமிழ் மொழி வேறு” என்பதை நன்கு எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்கள். மொழி நூலறிஞர் முனைவர் கால்டுவெல், திராவிடமொழிகளையும் வடமொழியையும் நன்கு ஆராய்ந்து, வடமொழியினும்…

காவல்துறையில் 2500-க்கும் மேல் காலிப் பணியிடங்கள்!

காவல்துறைப் பணிச்சேர்க்கை 2017 காவல்துறையில் 2500-க்கும் மேல் காலிப் பணியிடங்கள்! காவல்துறையில் சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்புவோர் காவல்துறையில் உள்ள புதிய காலிப் பணியிடங்களைப் பற்றிய முழுமையான பட்டியலை இங்கு காணலாம். இந்திய அரசுப் பணிகள் வலைப்பூ காவல்துறையிலுள்ள எல்லாக் காலிப் பணியிடங்களையும் பற்றிய முழுப் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தத் தகவலை ’அகரமுதல’ இதோ உங்களுக்கெனத் தமிழில் வழங்குகிறது. துறை மொத்தப் பணியிடங்கள் பணி நிலை கடைசி நாள் முழு விவரம் சார்க்கண்டு காவல்துறை 1500 உதவிக்…

கடலூரில் தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா

  தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா, கடலுார் கடலூர் மாவட்டத்தமிழ்ச்சங்கம் சார்பில் திருப்புமுனைப் பயிற்சி நடுவத்தில்  நடைபெற்றது. பேரா.இராச.குழந்தை வேலனார் தலைமை தாங்கினார்.  ‘தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள்‘ என்னும் தலைப்பில் முனைவர் க.தமிழமல்லன் சிறப்புரை நிகழ்த்தினார். புலவர் சிவ.இளங்கோவன், கதிர்.முத்தையன் ஆகியோர் பாவேந்தர், பாவாணர் அளித்த தனித்தமிழ் இயக்கப் பங்களிப்புக்குறித்துப் பேசினர். முன்னதாகப் படத்திறப்பும் பாவரங்கும்  நடைபெற்றன.

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ)  தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ)   பேராசிரியர் இலக்குவனார் அவர்கள், தந்தை (ஈ.வெ.இராமசாமிப்) பெரியார் அவர்களுடனும் இணைந்து சொற்பொழிவுகள் மேற்கொண்டார். தந்தை பெரியார் அவர்கள், பல ஊர்களில் பேராசிரியரைத் தனி ஊர்தியில் ஊர்வலமாக அழைத்து வரச் செய்து சிறப்பித்தார்; எத்தகைய இடர் வந்தாலும் எதிர்கொண்டு தமிழுக்காகப் போராடும் ஒரே தலைவர் எனக் குறிப்பிட்டுப் பேராசிரியர் இலக்குவனாருக்குத் ‘தமிழர் தளபதி’ என்னும் பட்டத்தையும் அளித்தார். தந்தை பெரியார் அவர்களின் வேண்டுதலால் அவர் உறவினர் ஈரோட்டில் நடத்தி வந்த சிக்கையா…

தமிழ்நலங் காக்க உறுதி மொழி – நாரா. நாச்சியப்பன்

தமிழ்நலங் காக்க உறுதி மொழி –  நாரா. நாச்சியப்பன்   தான்வாழத் தமிழ்கற்றுக்     கொண்ட கேடன் தமிழ்வளர்ச்சிக் கிடையூறு    செய்கின் றானால் வான்மீதும் தமிழுணர    வேண்டு மானால் வண்மொழியைக் கற்கவரும்    யாவ ரையும் “நான்வாழ வகைசெய்யும்    நற்றா யேநின் நலத்திற்கோர் இடையூறு   வருங்கா லத்தில் நான்மாள நேர்ந்தாலும்   அஞ்சா துன்றன் நலங்காப்பேன்” என உறுதி   பகரச் செய்வீர்   -பாவலர் நாரா. நாச்சியப்பன்

சுந்தரச் சிலேடைகள் 5 : கோயில்மாடும் இளைஞனும்

    சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 5 ஊர்சுற்றும், ஓரிடத்தில் உன்னதமாய் நில்லாதாம், தார்வேந்தன் போலத் தலைதூக்கும்-மார்தட்டும் சண்டையிடச் சக்திகொண்டு சாதிக்கும், கோமாடும் விண்ணேர் இளைஞனும் ஒன்று. பொருள் கோயில்மாடு & இளைஞன். 1) ஊர்சுற்றித் திரியும். 2) ஒரிடத்தில் நிற்காமல் அங்குமிங்குமாக அலையும். 3) மன்னன் தலைதூக்கிப் பார்ப்பதுபோல் பார்க்கும் 4) எதிரி யாரெனினும் மார்தட்டிச் சண்டையிடும். 5) வெற்றி பெறும்வரையில்  போராடும் எனவே, கோயில் மாடும் இளைஞனும் ஒன்றாம்  

தாத்தா – சந்தர் சுப்பிரமணியன்

தாத்தா – சந்தர் சுப்பிரமணியன்   தாத்தா எங்கோ நடக்கும் போதும் சத்தம் கேட்கிறது! ‘டொக்டொக்’ சத்தம் கேட்கிறது! – கோலைத் தாங்கித் தாங்கி நடக்கும் ஓசை பக்கம் கேட்கிறது! எனக்குப் பக்கம் கேட்கிறது!   சட்டைப் பையில் ‘சாக்லெட்டு’ எடுத்துத் தாத்தா தந்திடுவார்! எனக்குத் தாத்தா தந்திடுவார்! – நான் சரியாய்ப் பள்ளி செல்லும் நேரம் தாத்தா வந்திடுவார்! என்முன் தாத்தா வந்திடுவார்!   வீட்டில் இருக்கும் வேளை கணக்கில் விளக்கங்கள் சொல்வார்! வேண்டும் விளக்கங்கள் சொல்வார்! – என் வெள்ளைத் தாளில்…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 23 & 24

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 23 & 24   இருபத்து மூன்றாம் பாசுரம்  தமிழரின் பெருமை எங்கே? கரைநாடாம் மூன்று கடல்சூழ் தமிழ்மண் திரைமேவி நாவாய் செல,உயர்ந்த பண்டம் சரியாய்க் கொளக்கொடுத்தும் செய்தார் அறமாய் இறைச்சுங்கம் வாங்கிஉரு முத்திரையும் வைத்தார் ! கரையெங்கும் வாங்கிவிற்கும் குன்றாப் பொருட்கள் ! பெருமைகொளும் நெஞ்சம்;புகழ்பாடும் நம்வாய் அருமையெலாம் எங்குற்று? அருந்தமிழர் ஓங்கிப் பொருப்பில் தமிழ்க்கொடி ஏற்றவைப்போம், எம்பாவாய் !   இருபத்து நான்காம் பாசுரம்  அயல்நாட்டறிஞர்களை அழைத்தோம்புக! எங்கோ…

ஐ.நாவே நாங்கள் நாதி அற்ற இனமா? வவுனியாவில் கவனவீர்ப்புப் போராட்டம் – விழலுக்கிறைத்த நீராயிற்றே !

ஐ.நாவே நாங்கள் நாதி அற்ற இனமா? எங்களுக்கு நீதி சொல்ல எவரும் இல்லையா? வவுனியாவில் கவனவீர்ப்புப் போராட்டம்  விழலுக்கிறைத்த நீராயிற்றே!   தற்போது ஒரு ‘மறுசுழல் தீர்மானத்தின்’ வாயிலாக, சிறீலங்காவுக்கு மேலும் ஈராண்டுக்கால நீட்டிப்புத்தர முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த ‘மறுசுழல் தீர்மானத்தின்’ முதன்மைக்கூறாகிய, உசாவல்களில் அயல்நாட்டு நீதிபதிகளைச் சேர்த்துக்கொள்வது என்பதை ஏற்கெனவே சிறீலங்காவின் அதிபரும் -தலைமையரும்( பிரதமரும்) பகிரங்கமாக மறுத்துள்ளார்கள். அரசாங்கமே ‘மறுசுழல் தீர்மானத்தின்’ முதன்மைக்கூறினை நிராகரிக்கிறது என்றால், அதே அரசாங்கம் இந்த ‘மறுசுழல்  தீர்மானத்தைச் செயலாக்கும்’ என்று ஐநா மனித உரிமை மன்றம்…

இளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா? அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

இளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா? அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா?   இளைஞர்களின் நா இந்திப்பாடல்களை ஒலித்துக் கொண்டிருந்த  பொழுது –  திரும்பிய பக்கமெல்லாம் இந்தித்திரைப்பாடல்களே கேட்டுக் கொண்டிருந்த பொழுது – ஒட்டு மொத்த தமிழ்உலகையும் தன் இசையின்பால் ஈர்த்தவர் இளையராசா. அதற்காகத் தமிழுலகம் என்றைக்கும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.   இளையராசா , தமிழ்ப்பற்றால் இந்தியிசையை ஓட்டிவிட்டார் என்று கூற முடியாது. இந்தி மெட்டுகளைத் தழுவாமல் தனக்கு எது  முடியுமோ அதனைத் தந்தார். அது நாட்டுப்புற இசை. காலங்காலமாக நிலைத்து…

அடோபு படவிளக்கி – படைப்புத் தொகுதி 6 [ Adobe Illustrator CS 6]: ஒரு நாள் பயிற்சி வகுப்பு

சித்திரை 03, 2048 / ஏப்பிரல் 16, 2017 ஞாயிறு காலை 9.300 முதல் மாலை 5.00 வரை அடோபு  படவிளக்கி – படைப்புத் தொகுதி 6 [ Adobe Illustrator CS 6]: ஒரு நாள் பயிற்சி வகுப்பு தமிழ்க்கணிணி சிற்றரங்கம் 37, அசீசு முல்கு  2ஆவது தெரு, 2 ஆவது தளம் ஆயிரம் விளக்கு, சென்னை 600 006   ‘தமிழ்க்கணிணி’ இதழ் வழங்கும் கோவை வீரநாதன் நடத்தும் பயிற்சிக்குக்  கட்டணம் ஒருவருக்கு உரூ 1200/ மட்டும் 11.04.2017 க்கு முன்னரே…

ஓவியர் புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ தஞ்சாவூரில்வெளியீடு!

பங்குனி 12, 2048 / 25.03.2017  மாலை 5.00 தஞ்சாவூர் (பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெசண்ட்டு அரங்கு) ஓவியர் கு. புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ – தன் வரலாற்று நூல் வெளியீடு! தலைமை :              தஞ்சை அ. இராமமூர்த்தி முன்னிலை :         முனைவர் நல். இராமச்சந்திரன்,     திரு. துரை. பாலகிருட்டிணன் நூல் வெளியீடு : முனைவர் சுப. உதயக்குமார் பெறல்:         …