கவிக்கோ ஞானச்செல்வன் நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை

பங்குனி 02, 2048 / மார்ச்சு 15, 2017 மாலை 6.00   கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய ‘அறிவோம் அன்னைமொழி’ ‘சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே’ நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை      

‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர் நிகழ்வு, சென்னை

அன்புடையீர்,  வணக்கம். இலக்கியவீதியின்  – இந்த ஆண்டுக்கான தொடர் – ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி‘     பங்குனி 01, 2048 –  செவ்வாய் —  14.03.2017. மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்  நடைபெற இருக்கும்     ‘வில்லிசையால் செழிக்கும்  செம்மொழி‘ நிகழ்ச்சிக்கு    தலைமை : திரு சிவாலயம் மோகன்     தொடக்கவுரை  : கலைமாமணி சுப்பு ஆறுமுகம்   அன்னம் விருது பெறுபவர் : கவிஞர் காந்தி சுப்பு ஆறுமுகம்   சிறப்புரை : கலைச்சுடர்மணி பாரதி திருமகன் அவர்கள் …

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   “பேராசிரியர் இலக்குவனார் இலங்கைத் தமிழர் நலன் குறித்து அப்பொழுதே பேசினார். வரைபடம் ஒன்றில் இலங்கையில்  தமிழர்பகுதியைத் தனியாகக் காட்டிப்  புத்தகம் ஒன்றில் வெளியிட்டார். திருச்சி வானொலி உரை ஒன்றில், இலங்கையில் உள்ள தமிழர்கள் தன்னுரிமையுடன் வாழ்ந்தால்தான் அவர்கள் அங்கே உரிமையுடன் நிலைத்து வாழ முடியும் என்றார். அக்காலக்கட்டத்தில் இலங்கைக்குச் செல்ல அழைப்பு வந்தபொழுது இவர் வந்தால் இலங்கை இரண்டாகும் என்று காரணம்…

மகளிர் நாள் விழா, திருச்சிராப்பள்ளி

 மாசி 28, 2048 / மார்ச்சு 12, 2017 மாலை 5.00 இளையோர் இந்தியக் கழகமும் நந்தவனம் நிறுவமும் நிகழ்த்தும் மகளிர் நாள் விழா, திருச்சிராப்பள்ளி

தமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை?   நிலவளத்தையும் மக்களின் பொருள் வளத்தையும் சுரண்டிப்பிழைக்கும் சாமியார் ஒருவர், சிவனுக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லியுள்ளார். தமிழ் தெரியாத மாந்தருக்கே தமிழ்நாட்டில் இடம் இல்லை என்னும்பொழுது தமிழ் தெரியாத அவரின் சிவனுக்கு இங்கு என்ன வேலை?  அவருடைய சிவனுக்கே இங்கே இடமில்லாத பொழுது அவரும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!   சிவ வழிபாட்டைப் பழமையானதாகச் சிலர் கூறி வந்தாலும் தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இல்லை. “மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன்…

“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” – கி. வேங்கடராமன்

“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் பேச்சு! “இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” என ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் பேசினார்.   “இந்திய அரசே! இனக்கொலை இலங்கைக்குத் துணை போவதை நிறுத்து! இலங்கையைக் கூண்டிலேற்றத் தீர்மானம் கொண்டு வா!” என்ற கோரிக்கையுடன், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், மாசி 21, 2048  – 05.03.2017 மாலை, சென்னை வள்ளுவர்…

இனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

இனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்  மாசி 27, 2048 / 11.03.2017 சனி காலை 9.00 மணி, சென்னைச் செய்தியாளர்கள் சங்கம், சேப்பாக்கம் ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை, போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்று வருவதை நீங்கள் அறிவீர்கள். இனப்படுகொலை முடிந்து 8 ஆண்டுகள் ஆனபிறகும்,  பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு போர்க்குற்றங்களை   உசாவுவதாக இலங்கையே ஒப்புக்கொண்டு 18 மாதம் ஆனபிறகும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்காத  இலங்கை, …

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க முழு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம், மதுரை

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க முழு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம்   வணக்கம். கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க வலியுறுத்தும் போராட்டம் மதுரை, சென்னையை மையப்படுத்தி நடந்து வருகிறது. வழக்கறிஞர்கள் போராட்டக் குழு தொடர் போராட்டங்களை நடத்திச் சென்னையில் கைதாகிச் சிறை சென்றதும், இடை நீக்கம் செய்யப்பட்டதும் நாம் அறிந்தனவே!   பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம் 2015இல் தொடங்கப்பட்டு மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் திரு வெள்ளையன்…

திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல்தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி   திருக்குறள் அறுசொல் உரை 3.காமத்துப் பால்  15.கற்பு இயல்   120. தனிப்படர் மிகுதி   பிரிந்து  தனித்து  இருக்கும்    தலைவியிடம்  படரும்  மிகுதுயர்   (01-10 தலைவி சொல்லியவை)                    தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர், பெற்றாரே       காமத்துக் காழ்இல் கனி. காதலிப்பார் காதலிக்கப்பட்டால், அக்காதல், விதைகள் இல்லாச் சுவைப்பழம்.   வாழ்வார்க்கு வானம் பயந்(து)அற்(று)ஆல், வீழ்வார்க்கு       வீழ்வார்…

அறிந்த சொல், அறியாத செய்தி : திருநங்கை – இ.பு.ஞானப்பிரகாசன்

அறிந்த சொல், அறியாத செய்தி : திருநங்கை    மூன்றாம் பாலின அல்லது இருபாலினத் தோழர்களைக் குறிக்கும் ‘அலி’ என்னும் பழைய சொல் இக்காலத்தில் தவறாக ஆளப்படுகிறது. ‘அல்’ என்றால் இல்லை எனப் பொருள். எனவே ஆண், பெண் ஆகிய இரு பால் தன்மைகளும் ‘அல்லாதவர்’ எனும் பொருளிலேயே ‘அலி’ எனும் சொல் பண்டைக் காலத்தில் உருவாக்கப்பட்டது. எனினும் இதுவே பிற்காலத்தில் மூன்றாம் பாலினத்தவரைக் கிண்டலுக்கும் பகடிக்கும் ஆளாக்கப் பயன்படுத்தப்பட்டதால் ‘திருநங்கை’ எனும் அழகுத் தமிழ்ப் புதுச் சொல்லால் இன்று அழைக்கிறோம்.   எழுத்தாளர்கள்,…

ஆந்திர – கருநாடக நெல் வராமல் தடுக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை!

தமிழ்நாட்டில் நெல் விற்பனையாகாமல் தேக்கம் ஆந்திர – கருநாடக நெல் வராமல் தடுக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை!    ஆந்திரத்திலிருந்தும் கருநாடகத்திலிருந்தும் அன்றாடம் ஆயிரக்கணக்கான பாரம்(டன்) நெல்லை, தமிழ்நாட்டில் உள்ள பெரும் பெரும் அரைவை ஆலைகளுக்குத் தனியார் வணிகர்கள் கொண்டு வந்து குவிக்கிறார்கள். இதனால், தமிழ்நாட்டில் காவிரி நீர், பாலாற்று நீர் தடுக்கப்பட்ட நிலையிலும் கடுமையான வறட்சியிலும் உழவர்கள் பெருஞ்செலவு செய்து உற்பத்தி செய்த நெல், விலை போகாமல் தேங்கிக் கிடக்கிறது.     கடும் உழைப்பைச் செலுத்தி விளைவித்த…