தி.வே.விசயலட்சுமியின் ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் ‌வெளியீடு

சித்திரை 11, 2048 / 24-4-2017 அன்று சென்னை  மயிலாப்பூர்  பாரதிய  வித்தியா பவன்  அரங்கில்,  புலவர் தி.வே.விசயலட்சுமி எழுதிய ‘இலக்கிய  ஆய்வுகள்’ என்ற நூல‌ை மாண்புமிகு  நீதியரசர்  வள்ளிநாயகம் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.   முனைவர்  பெ. அருத்தநாரீசுவரன், முனைவர்  சரசுவதி இராமநாதன், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர். கிருட்டிணன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர்  கலந்துகொண்டு வாழ்ந்துரை நல்கினர்.  முனைவர் கோ பெரியண்ணன்  தலைமையுரை ஆற்றினார்.  முனைவர் உலகநாயகி பழனி நிரலுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.

தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரன்  கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்!   பொதுவாகக் கையூட்டு பெறுபவரைத்தான் கைது செய்வார்கள். ஆனால், இங்கே அவ்வாறு கையூட்டு பெறுபவரையோ கேட்டவரையோ கைது செய்யவில்லையே! பணம் கொடுத்து இரட்டை இலைச்சின்னத்தை வாங்க முயன்றதாகத்தானே கைது செய்துள்ளார்கள்?  ஒரு வேளை கையூட்டு பெற விருப்பம் இல்லாத ஒருவர், அவரிடம்  யாரும் குறுக்கு வழியில் ஒரு செயலை முடிக்கக் கையூட்டு  தர முயன்றால், அவ்வாறு தர முயல்பவரைப்பற்றிப் புகார் செய்தால் பணம்கொடுக்க முயன்றவரைக் கைது செய்வார்கள்.  இங்கே அவ்வாறு  தேர்தல் ஆணையர் யாரும்…

கா.பூ.முனுசாமியைப் பன்னீர் அணியின் தலைவராக்கலாமே! – இலக்குவனார் திருவள்ளுவன்

கா.பூ.முனுசாமியைப் பன்னீர் அணியின் தலைவராக்கலாமே!   அ.தி.மு.க. மூன்றாகப் பிளவுபட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அவ்வாறில்லை. தீபா மாதவன் இக்கட்சியைச் சாராதவர். அவர் பக்கம் அதிமுக ஆதரவாளர் சிலர் போனாலும், இதைப் பிளவாகக் கூறமுடியாது. இரத்தத் தொடர்பு உறவு என்று மட்டும் ஒருவரை ஆதரிக்கும் முட்டாள்தனம் உள்ள சிலர் சில காலம் அவர் பக்கம் இருக்கலாம். அதனால், கட்சி உடைந்ததாகக் கூறமுடியாது.   பா.ச.க. ஆதரவு பன்னீர் செல்வம் பக்கம் சிலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கலைஞர் எதிர்ப்பு என்ற அதிமுக கொள்கையைச் சசிகலா…

இந்தித்திணிப்பு : தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்? – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தித்திணிப்பு:  தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்?   இந்தித்திணிப்பு என்பது, ஆங்கிலேயர் ஆட்சியில் 1918  இல்  தென்பாரத இந்திப் பரப்புரை அவை (‘தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா’) என்னும் அமைப்பு தொடங்கியபொழுதே தொடங்கிவிட்டது. இந்தியா விடுதலை அடைந்ததும்  வேரூன்றியது. இந்தியா, குடியரசானதும் கிளை பரப்பியது. 1965 இல் இந்தியா என்றால் இந்தி என்பது முழுமையாக மாறும் நிலை இருந்தது. இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் முன்னெடுப்பால் கிளைகள் பரவாமல் வெட்டப்பட்டன. எனினும் அவ்வாறு அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தி …

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙீ

[செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி :  தொடர்ச்சி] செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙீ  இளம் அறிஞர் விருது – 2015-16   முனைவர் மு. வனிதா   முனைவர் மு. வனிதா 1979இல் வேலூர் மாவட்டம் வீரமுட்டிப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர். திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், திராவிடப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இலக்கியம்-இலக்கணத்தில் புலமை பெற்றவர். திராவிடப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்திட்ட உதவியாளராக…

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி

[செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙா :  தொடர்ச்சி] செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி இளம் அறிஞர்கள் – 2014-2015 முனைவர் அ. சதீசு   முனைவர் அ. சதீசு 1982 இல் விழுப்புரம் மாவட்டம் கண்ணியம் என்னும் ஊரில் பிறந்தவர். மயிலம், சிரீமத்து சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியில் இலக்கிய இளங்கலை (பி.லிட்.), சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைப்…

மேநாள் சிறப்பு இலக்கிய நிகழ்ச்சி, புழுதிவாக்கம்

சித்திரை 24, 2048 / ஞாயிறு / மே 07, 2017 பிற்பகல் 3.00 மேநாள் சிறப்பு இலக்கிய நிகழ்ச்சி தந்தை பெரியார் அரசு மேனிலைப்பள்ளி, புழுதிவாக்கம் கவியரங்கம் கருத்தரங்கம் த.மகாராசன் தமிழ் இலக்கிய மன்றம்

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙா

[செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ங :  தொடர்ச்சி] செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள்  (2013 -14, 2014-15, 2015 – 16)  –  ஙா   தமிழியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள 30-40 அகவைக்குட்பட்ட இளம் அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புச் சான்றிதழும், நினைவுப் பரிசும் உ.ரூ.1 இலக்கம் பரிசுத்தொகையும் அடங்கிய இளம் அறிஞருக்கான விருது ஒவ்வோராண்டும் ஐவர்க்கு வழங்கப்படுகின்றது. இளம் ஆய்வறிஞர் விருது – 2013-14 முனைவர் உல. பாலசுப்பிரமணியன்     முனைவர் உல….

இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்! இடம்: இந்திப் பிரச்சார சபை, தியாகராயர் நகர், சென்னை. காலம்: தி.பி. 2048 – சித்திரை 25 (08.05.2017) திங்கள் காலை 10 மணி தலைமை : தோழர் கி. வேங்கடராமன் பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.    இந்தி மொழியைத் தமிழ்நாட்டின் கல்வி மொழியாக, பேச்சு மொழியாகத் திணித்திடப் பா.ச.க.அரசு கடற்புயல்(சுனாமி) வேகத்தில் செயல்படுகிறது. அதே வேகத்தில் தமிழைப் புறந் தள்ளித் தீர்த்துக் கட்டவும் முயல்கிறது. அண்மையில் பா.ச.க. அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்விவாரியப் (C.B.S.E.) பள்ளிகளிலும், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை இந்தி        கட்டாய மொழிப்பாடமாக்கப்படும் என்று…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ)     சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரே சமயம்,ஒரே மொழி, ஒரே இனம் முதலான ஒற்றை யாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார்.   “பரதகண்ட முழுவதும் ஒரே ஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ளவைத்துப் பலமொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது.  இந்து மதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக்…

மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே! – உலகப் புத்தக நாள் விழாவில் பேச்சு –

மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே!       வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற உலகப்புத்தக நாள் விழாவில், “ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வதற்குப் படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்கள” என்று முன்னாள் மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் எசு.குமார் பேசினார்.        இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி வரவேற்றார்.         வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் 100 பள்ளி…

1 2 10