விக்டர் இராசலிங்கத்தின் புத்தக வெளியீட்டு விழா, கனடா

புத்தக வெளியீட்டு விழா அன்புடையீர், தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் எனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். புத்தகத்தின் பெயர் : ‘ History of the dispossessed Sri lankan Tamils’”  ( உரிமை இழந்த இலங்கைத் தமிழரின் வரலாறு ) வைகாசி 23 / மே 6 மாலை 5.30 இடம் : இரா  அரண்மனை (Erra Palace, 10 Karachi Drive, Markham, Ontario) விழாத்தலைவர் : முனைவர் திருமதி செல்வம்  சிரீதாசு பேச்சாளர்கள் : திரு கரி ஆனந்தசங்கரி…

கொடுமை செய்வோர் வாழ்கின்றார்! – கெருசோம் செல்லையா

கொடுமை செய்வோர் வாழ்கின்றார்!   கொன்று, திருடி, ஏமாற்றி, கொடுமை செய்வோர் வாழ்கின்றார்!. இன்று இவரைப் பாராட்டி ஏற்போர் நாட்டில் ஆள்கின்றார். அன்று இறைவன் உரைத்திருந்தும், அவற்றை மறப்போர் வீழ்கின்றார். நன்று எதுவென உணர்பவர்தான், நன்மை வழியில் மீள்கின்றார்!   – கெருசோம் செல்லையா  

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ங

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் – ங (2013 -14, 2014-15, 2015 – 16)   2013-14, 2014-15, 2015 – 16 ஆம் ஆண்டுகளுக்கான (மூன்று ஆண்டுகள்)  செம்மொழி விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் சித்திரை 26, 2048 / 09.05.2017 செவ்வாய்க் கிழமை அன்று குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட உள்ளன.  இந்த மூன்று ஆண்டுகளுக்கான விருதுகள் பெறுவோரது  விவரம் வருமாறு:   தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞருக்கு ஒவ்வோராண்டும் சான்றிதழும், நினைவுப் பரிசும் உரூ.5…

போருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள் + அசோகமித்திரன் எழுத்துரை

போருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள் + அசோகமித்திரன் எழுத்துரை   போருக்குப் பிந்திய இரு நூல்கள் ‘புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்’ – நிலாந்தன் ‘இலங்கை: இது பகைமறப்பு காலம்’ – சிராசு மஃகூர் வழிப்படுத்தல்:  தோழர் வேலு   உரைகள்:  தோழர்கள் நடேசன் பாலேந்திரன், முத்து, சந்தூசு,இராகவன்   அசோகமித்திரன் எழுத்தும் ஆளுமையும் உரை- ஆ.இரா. வேங்கடாசலபதி கல்வியலாளர், ஆய்வாளர் (தமிழ் நாடு) வழிப்படுத்தல்:  எம்.பௌசர்   காலம் –  சித்திரை 23, 2048 / 06 மே 2017 சனி…

‘முதல் மொழி தமிழே!’ – மின்னூல் பதிவு நாள் நீட்டிப்பு

‘முதல் மொழி தமிழே!’  – மின்னூல் பதிவு நாள் நீட்டிப்பு!   வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக ‘உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!’ என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் கேட்டிருந்தோம்.   எமது அறிவிப்பைப் பணிவோடு ஏற்றுத் தமிழ்ப் பற்றாளர்கள் ஒன்பதின்மர்  தமது படைப்புகளை அனுப்பி இருந்தனர். சிலர் கால நீடிப்புக் கேட்டிருந்தனர். எல்லோரது ஒத்துழைப்பும் அல்லது எல்லோரது கூட்டு…

வண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன்

வண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன் மண்ணில் வீழ்ந்த மலரே மீண்டும் மரத்தை அடைகிறதோ! – அட! வண்ணப் பூச்சி வந்தென் முன்னர் வலம்தான் வருகிறதோ! விண்வில் ஒடிந்து விழுந்தொரு துண்டு விரைந்து வருகிறதோ! – அட வண்ணப் பூச்சி வனப்பின் நிறந்தான் வகையாய்த் தெரிகிறதோ!   தண்ணீர்ப் பரப்பில் தகதக வென்றே தங்கம் சொலிக்கிறதோ! – அட வண்ணப் பூச்சி வான்மண் எங்கும் வரைந்து களிக்கிறதோ!  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம் 34

சுந்தரச் சிலேடைகள் 10 : கறிவேப்பிலையும் சிப்பியும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 10 கறிவேப்பிலையும் சிப்பியும் பயனது உள்வைத்துப், பக்குவம் சேர்த்து, வியக்கப் பயனளித்து, வீழ்ந்து.-துயரடைந்து நற்பயன் தந்தளித்து நாணிக் கிடப்பதிலே பொற்சிப்பி வேப்பிலைக் கீடு. பொருள்: 1) பயன்களாகக், கறிவேப்பிலை மருத்துவத்தையும், சிப்பி முத்தையும் தன்னுள்ளே வைத்திருக்கின்றன. 2)இவ்விரண்டும் அடைந்தவரைப் பக்குவமாய்ப் பாதுகாக்கின்றன. 3) பிறர் வியக்குமளவிற்கு இவ்விரண்டும் பயனளிக்கின்றன. 4) பாரோர் இவற்றின் பயன்பெற்ற பின்னர் கீழே தூக்கி எறிந்து விடுகின்றனர். 5) அதனால் போவோர் வருவோர் காலில் மிதிபட்டுத் துன்புறுகின்றன. 6) நற்பயன் தந்தாலும் பயனைமட்டுமே எடுத்துக்கொண்டு…

திருக்குறள் அறுசொல் உரை : 125. நெஞ்சொடு கிளத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை; 124. உறுப்பு நலன் அழிதல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் கற்பு இயல் 125. நெஞ்சொடு கிளத்தல்   பிரிவுத்துயர் மிகுதியைத் தலைவி, தனது நெஞ்சுக்குச் சொல்லுதல்.   (01-10 தலைவி சொல்லியவை) நினைத்(து)ஒன்று சொல்லாயோ? நெஞ்சே! எனைத்(து)ஒன்றும்,       எவ்வநோய் தீர்க்கும் மருந்து. நெஞ்சே! என்துயரைத் தீர்க்கின்ற மருந்துஒன்றைச் சிந்தித்துச் சொல்லாயோ?   காதல் அவர்இலர் ஆக,நீ நோவது,       பேதைமை வாழிய!என் நெஞ்சு. நெஞ்சே! காதலர்க்குக் காதல்தான் இல்லையே! நீஏன் வருந்துகிறாய்?   இருந்(து)உள்ளி…

இந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது!   மத்திய அரசின் துணையுடன் இந்தி, ஆழமாக வேரூன்றித் தன் நச்சுக்கிளைகளைப்  பரப்பி வருகிறது. நம்மை எதிர்ப்பவரை நாம் எதிர்க்கவோ, நம் இனத்தை அழிக்க முயல்பவனை நாமும்  வேரறுப்பதிலோ தவறில்லை. உலகெங்கும் நடைபெறும் உரிமைப்போரின் அடிப்படையே இதுதான். ஆனால், அவ்வாறு இந்தியை எதிர்க்க நம்மவர்களுக்கு அச்சம். அதனால், இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என்கின்றனர். இது தவறான கூற்று.   இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்கள் மாநிலத்தில் இந்தியை வளர்க்க எல்லா உரிமையும் உண்டு. அதனைப் பரப்ப எண்ணினாலும்…

தோள்கள் நமது தொழிற்சாலை – முத்திரைத்தொடர்

அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத்  துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பு, சிரீ கிருட்டிணா இனிப்பகம், பாரதிய வித்தியா பவன் இணைந்து சித்திரை 5 / ஏப்பிரல் 28  வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில் பரம்பரை வேளாண்மை  அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகள் பற்றி  எடுத்துச் சொல்ல இருக்கின்றன. வரவேற்பு : செல்வி ப. யாழினி தலைமை : திரு  சிவாலயம்  செ. மோகன் இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் :…

சசிகலா குடும்பத்தினரின் ஆளுமையைக் கண்டுஅஞ்சும் பா.ச.க. – இலக்குவனார் திருவள்ளுவன்

சசிகலா குடும்பத்தினரின் ஆளுமையைக் கண்டுஅஞ்சும் பா.ச.க.    நாயகன் இல்லா நாவாய் (தலைவன் இல்லாத கப்பல்)போல ஆளுங்கட்சி தடுமாறித் தத்தளித்துக் கொண்டுள்ளது- மேனாள் முதல்வர் செயலலிதா நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் படுத்திருந்த பொழுதே ஆட்சிச் சக்கரம் சுற்றுவதில் இடையூறு ஏற்பட்டது. அவர் மறைந்த பின்னர் ஆளுங்கட்சியின் பிளவால் குளிர் காயலாம் எனச் சிலர் எண்ணினர்.  ஒற்றைஇலக்க எண்ணிக்கையைத் தாண்டாச் சிலர் தனி அணி கண்டாலும், கட்சியில் பிளவு இல்லை என்றுதான்சொல்ல வேண்டும். இந்தச்சூழலில் எந்தக் கட்சியிலும் ஏற்படும் பிணக்குதான் இது. ஆனால், மேலே உள்ள ஒருவன்,…

பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி – ஆரூர் தமிழ்நாடன்

பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” – என்று முரசறைந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.  ஏப்பிரல் 29-இல் அவரது 127-ஆவது பிறந்தநாள் வருகிறது. இதைத்தொடர்ந்து, அவர் பிறந்த மாநிலமான புதுவையில், மாநில அரசு அவருக்கு மணிமண்டபம்  அமைக்கவேண்டும் என்றும், அவருக்கு மேலும் சிறப்புகளைச் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கைக்குரல், தமிழன்பர்கள் மத்தியில் வலுவாக எழுந்திருக்கிறது.   தமிழுக்கு வளமும் நலமும் சேர்த்தவர் கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைக் கொண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மொழிப்பற்றையும் இனப்பற்றையும் தன் உணர்ச்சிமிகும்…