தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) தொடர்ச்சி)    தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி)   தமிழியக்கச் செய்திகளைப் பொதுவான இதழ்கள் இருட்டடிப்புச் செய்தன. ஆனால், தி.மு.க. அன்பர்கள் நடத்தும் இலக்கிய இதழ்கள் மூலம் அவைபற்றி அறிய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், ஆங்கிலத்தில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைப் பேராசிரியர் இலக்குவனார் நடத்திய ஆங்கில இதழ் போக்கியது. வட மாநிலங்களிலும் படைத்துறையினரிடமும் இவ்விதழுக்கு நல்ல வரவேற்பிருந்தது. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு    என்னும் திருக்குறள் மூலம் தெய்வப்புலவர் திருவள்ளுவர்…

சிங்கப்பூரில் ‘மானுடம் போற்றும் மாணவர்கள்’ நிகழ்ச்சி

சிங்கப்பூரில் சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய ‘மானுடம் போற்றும் மாணவர்கள்’ நிகழ்ச்சி   வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் சிங்கப்பூரில் நடைபெற்று வரும் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, திருச்சி சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), ஞாயிற்றுக்கிழமை  சித்திரை 03, 2048 / 16-04-2017  அன்று, சிங்கப்பூரிலுள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில், “மானுடம் போற்றும் மாணவர்கள்” என்ற இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியது.   சிங்கப்பூரில் தமிழ் மொழியை அடுத்த…

பிச்சைப் பாத்திரத்திடம் கையேந்தலாமா? – ஆரூர் தமிழ்நாடன்

பிச்சைப் பாத்திரத்திடம் கையேந்தலாமா? உழவர்களே! நாட்டின் அட்சயப் பாத்திரமான நீங்கள் பிச்சைப் பாத்திரத்திடம் கையேந்தலாமா? தாய் வீடான  தமிழகம் திரும்புங்கள்! நீங்கள் இதுவரை வடித்த கண்ணீரைக் கொண்டே இருபோகச் சாகுபடியை இங்கே முடித்திருக்கலாம். அழுகிய காயங்களிடம் மருந்து கேட்காதீர்கள்! வெளிச்சத்தின் புத்திரர்களே! விழி ஈரம் துடைத்துத் தாய் வீடான தமிழகம் திரும்புங்கள்! அதிகாரப் பசியெடுத்த ஆதிக்கக் கழுகுகளுக்கு இதயம் இல்லை. செவிகளும் கூடச் சேர்ந்தாற்போல் செத்துவிட்டன அவற்றின் கண்களும் கல்லறைக்குப் போய்விட்டன இறக்கத்தில் கிடக்கும் அவற்றிடம் இனியும் இரக்கத்தை எதிர்பார்க்கலாமா? தாய் வீடான தமிழகம்…

பெங்களூர் மீனாட்சிசுந்தரம் பவளவிழா வாழ்த்தரங்கம்

சித்திரை 17, 2048 ஞாயிறு ஏப்பிரல் 30, 2017 மாலை 5.00 – இரவு 8.00 நாரதகான சபா, சென்னை 600 018 அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம் – ஆனந்தம் சேவா சங்கம் நடத்தும் இலக்கியப் பெருவிழா வைணவத் தமிழ் -தொடர்சொற்பொழிவு பெங்களூர் மீனாட்சிசுந்தரம் பவளவிழா வாழ்த்தரங்கம்

ஔவை தி.க.சண்முகம் 105 ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்

சித்திரை 13, 2048 /புதன்/ ஏப்பிரல் 26, 2017 மாலை 6.00  இரசியப்பண்பாட்டு அறிவியல் மையக்கண்காட்சி அரங்கம் சென்னை 600 006 ஔவை தி.க.சண்முகம் 105 ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்  தி.க.ச.கலைவாணனின் ‘மனைவி அமைவதெல்லாம்’  நூல் வெளியீடு  விருதுகளும் பொற்கிழிகளும் வழங்கல்    

நாட்டுப்புறப்பாடல், ஆடல் வகைகள்

நாட்டுப்புறப்பாடல், ஆடல் வகைகள் ஓராட்டு ஒப்பு கும்மி (கொம்மி) ஒயில் கொம்மி / கும்மி மாரியம்மன் பாட்டு தெம்மாங்கு தாலாட்டுப்பாடல் கும்மிப்பாடல் ஏற்றப்பாடல் உடுக்கைப்பாடல் ஒப்பாரிப்பாடல் காவடிச் சிந்து கோலாட்டு கழியல் பொய்க்கால் குதிரை சாமியாட்டம் சாட்டை வீச்சு களியான் கூத்து/ கணியான் கூத்து கழைக்கூத்து இராம நாடகம் குறவஞ்சி நாடகம் நொண்டி நாடகம் தரவு :  இலக்குவனார் திருவள்ளுவன்: தமிழ்ச்சிமிழ்

வடக்கை வாழ வைக்கும் தெற்கைப் புறக்கணிப்பது ஏன்? – கார்க்கோடன்

வடக்கை வாழ  வைக்கும் தெற்கைப் புறக்கணிப்பது ஏன்?   தமிழுக்காகவும் திருக்குறளுக்காகவும் தமிழ் அரசியல்வாதிகளைவிட அதிகம் குரல் கொடுத்து வரும், தன்னைத் தமிழ்த்தாயின் தத்துபிள்ளை என்று சொல்லிக் கொண்ட தருண் விசய்,  இந்தியாவின் இன-நல்லிணக்க நோக்கத்தையும் கண்ணோட்டத்தையும் தற்காத்துப் பெருமைபடுத்திப் பேசுவதாக நினைத்து, “ நாங்கள் (இந்தியர்கள்) இனவெறியர்கள் அல்லர். எங்களைச் சுற்றியும் கறுப்பு நிறத் தென்னிந்தியர்கள் இருக்கிறார்கள். நாங்கள் இனவாதிகளாக இருந்தால் தென்னிந்தியர்களோடு எப்படிச் சேர்ந்து வாழ்கிறோம்?”  என்று பேசியுள்ளார்..    அவர் பேசிய நோக்கம் எதுவானாலும்,  சொற்கள் தென்னிந்தியர்களை அயன்மைப்படுத்தி(அன்னியப்படுத்தி)க் காயப்படுத்துவதாக…

இந்தித் திணிப்புக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அரசேற்பு அளிப்பதா?- வைகோ கண்டனம்

இந்தித் திணிப்புக்கு இந்தியக் குடியரசுத் தலைவர்  அரசேற்பு அளிப்பதா? வைகோ கண்டனம்   இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு எங்கும் எதிலும் இந்தி மொழி கட்டாயம் என்பதைச் செயல்படுத்தி வருகின்றது. பா.ச.க. அரசின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு அரசேற்பு அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் இனி இந்தி மொழியில்தான் பேசவும், எழுதவும் மற்றும் அறிக்கை வெளியிடவும் வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டு இருக்கின்றார். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்றக் குழு கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த…

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை – இல. பிரகாசம்

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை பெண்ணுரிமைச் சிந்தனை: “ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் இந்த நாட்டிலே” எனும் பாரதியாரின் பெண்ணியச் சிந்தனையையும், தந்தை பெரியார் அவர்களது பெண்ணியம், பகுத்தறிவுக் கொள்கையினையும் தனது சஞ்சீவி பர்வதத்தின் சாரலின் வழியாக வஞ்சி என்னும் பெண்ணின் பகுத்தறிவுக் குரலினை எதிரொலிப்புச் செய்கிறார். பெண்ணுரிமை இல்லாமையால் ஏற்படும் விளைவு:   பெண்ணிற்குப் பேச்சுரிமை இல்லாமையால், ஒரு  குமுகம்(சமூகம்) எத்தகைய இழிநிலைக்குத் தள்ளப்படும் என்று தான் படைத்த பாத்திரமான வஞ்சியின் நிலையிலிருந்து எடுத்துரைக்கிறார்.  “பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டா…

இந்தித் திணிப்பு : ஆக்கத் திட்டத்தை முன்வைத்து ஆகாத திட்டத்தை எதிர்ப்போம்! – பெ. மணியரசன்

இந்தித் திணிப்பு : ஆக்கத் திட்டத்தை முன்வைத்து ஆகாத திட்டத்தை எதிர்ப்போம்!     சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லை; இந்தி பேசுவோர் இந்தியாவில் ஆளும் இனம்; இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாதோர் இந்தியாவில் ஆளப்படும் இனம் – என்பதை இந்திய ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்ப நிலைநாட்டி வருகிறார்கள். இந்தி மொழி இந்தியாவில் நடுவண் அரசில் மட்டுமின்றி, மாநிலங்களிலும் ஆட்சி  மொழி; மற்ற மொழிகள் இந்தி  மேலாதிக்கத்தின் கீழ் இடைக்கால பேச்சு மொழியாய்  இருக்கலாம். இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாபு(முகர்சியின்) கையொப்பத்துடன் மேற்கண்ட கூற்றுகள் சட்டமாகவும்  நடுவணரசின் நடைமுறைகளாகவும் இப்போது வருகின்றன….

தமிழியக்கக் கனல் மூட்டிய பாரதிதாசன்! – கவிக்கோ ஞானச்செல்வன்

தமிழியக்கக் கனல் மூட்டியவர்   நீருக்குள் போட்டதொரு கல்லைப் போல நெஞ்சுக்குள் கிடந்ததொரு தமிழின் பற்றை ஆர்தடுத்து நின்றாலும் அஞ்சேன் என்றே ஆர்த்தெழுந்து மேலோங்கச் செய்த செம்மல்! பேருக்குத் தமிழென்று நெஞ்சில் வைத்துப் பேசுவதால் பயனொன்றும் இல்லை யென்று போருக்குப் புறப்படுவோம் தமிழுக் காகப் புறங்கொடோம் என்றறைந்த புரட்சிக் காரர்! மங்காத தமிழெங்கள் வளமும் வாழ்வும் மாநிலத்தில் தமிழ்க்கீடு மற்றொன் றில்லை! சங்கேநீ முழங்கிதனை!தாழா இன்பம் தமிழின்பம் தனையன்றிப் பிறிதொன் றில்லை! மங்கைதரும் சுகங்கூடத் தமிழுக்கு கீடோ? மலர்மணமும் குளிர்நிலவும் கனியும் சாறும் செங்கரும்பும்…