இலக்கியச் சிந்தனை 47 ஆம் ஆண்டுவிழா, சென்னை

இலக்கியச் சிந்தனை 47 ஆம் ஆண்டுவிழா சிறப்புரை : திரு தமிழருவி மணியன் தலைப்பு : பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் பேசிய சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது 2016ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை உரூ. 2000 பரிசு:  திரு. இராமச்சந்திர வைத்யனாத்து  சூலை 2016 செம்மலர் இதழில் வெளியான  “கை படாமல் பனிக்குச்சி (குச்சி ஐஸ்) தயாரிப்பது எப்படி? –  கை படாமல் கிண்ணம் / கூம்பு (cup/cone) குளிர்களி (குல்ஃபி) சாப்பிடுவது எப்படி”  சிறுகதைத் தேர்வு : திரு இந்திரா பார்த்தசாரதி…

அய்மானில்(Ajman) இரத்தத்தான முகாம்

அய்மானில்(Ajman) இரத்தத்தான முகாம்   அய்மானில்  இரமதாஉறைவகம்(கருஞ்சதுக்கம் / Black Square) பின்புறம் அமைந்துள்ள அரேபியா வாடகை  ஊர்தி அலுவலகத்தில் பங்குனி 28, 2048 / 10.04.2017 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை  இரத்தத்தான முகாம் நடைபெற இருக்கிறது. இந்த  இரத்தத்தான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் முதுவை  இதாயத்து: 050 51 96 433 கீழை ஏ  அமீது யாசின்: 052 777 8341 ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இரத்தத்தான…

தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்ற தந்தை செல்வநாயகம்!

தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டுத் தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்றவர் தந்தை செல்வநாயகம்! (ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்களது 119-ஆம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை)  தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) அறப் போராட்டம், மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம், இப்பொழுது கடந்த 8 ஆண்டுகளாக அறப் போராட்டம். மீண்டும் தொடக்கப் புள்ளியில் வந்து நிற்கிறோம்.   அறப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்…

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கமும் அ.இ.த.பே.செயற்குழுக்கூட்டமும் – ஒளிப்படங்கள்

கடந்த திங்கள் திருவனந்தபுரத்தில் அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப்பேரவையின் செயற்குழுக் கூட்டம் திருமுத்துச்செல்வன் தலைமையில் புலவர் த.சுந்தரராசன், திரு முத்துராமன் முன்னிலையில் நடைபெற்றது.  தமிழ்நாட்டில் காப்பிக்காட்டு ஊரில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் சிலைப்பகுதியல் சிலையரங்கம் அல்லது கோபுரம் எழுப்புவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. [ படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

அடுத்தது என்ன? – கலந்துரையாடல் நிகழ்வின் படங்கள்

மாசி 13, 2048 / 25.02.2017 சனிக்கிழமை, நேரம்: காலை 10.00 மணி அளவில் சென்னையில், “ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன?” என்னும் தலைப்பிலான   34 ஆவது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல்  நிகழ்வின் ஒளிப்படங்கள் [ படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

இலக்கியவீதி இனியவன் பவழவிழா, சென்னை

  சித்திரை 03, 2048 : 16/4/17 : காலை 10.00 கந்தசாமி( நாயுடு) கல்லூரி, அண்ணாநகர், சென்னை     இலக்கிய ஆர்வலர் அனைவரும் வருக! அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம்

நூல்கள் வாங்குவதைக் காலமுறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

நூல்கள் வாங்குவதைக் காலமுறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும்!       தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்     கற்றனைத் தூறும் அறிவு.(திருவள்ளுவர், திருக்குறள் 396)   நமது அறிவுக்கண்களைத் திறக்க உதவுவன புத்தகங்களே! அத்தகைய புத்தகங்களை நல்கும்  நூலகங்களே நமக்கு வழிகாட்டிகள். ஒவ்வொருவர் வீட்டிலும் நூலகம் இருக்க வேண்டும் என்பர் அறிஞர்கள். அவ்வாறாயின் ஒவ்வோர் ஊரிலும் நூலகம் இருக்க வேண்டுமல்லவா? தமிழ்நாட்டில் 4028  பொது நூலகங்கள்தாம் உள்ளன. இவைதவிர, கன்னிமாரா பொதுநூலகம்,  அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என நூலகங்கள் உள்ளன. இருக்கின்ற நூலகங்களே  வளர்ச்சிநோக்கில் …

நீலிக்கண்ணீரை நிறுத்தட்டும் நடிப்புத் திலகம் இரசனிகாந்து! – இலக்குவனார் திருவள்ளுவன்

நீலிக்கண்ணீரை நிறுத்தட்டும் நடிப்புத் திலகம் இரசனிகாந்து!   நடிப்பையும் தோரணையையும் பொருத்தவரை பெரும்பாலான நேயர்களின் உள்ளத்தைக் கவர்ந்துள்ளார் இரசனிகாந்து என்பதில் ஐயமில்லை. ஆனால், அதனாலேயே அவரது சொல்லுக்குக் கட்டுப்படும் மக்கள் பெரும்பான்மையர் இருப்பதாக எண்ணினால் தவறு. மக்கள் திலகம் ம..கோ.இரா.வின் (எம்ஞ்சியாரின்) கொடை உள்ளத்துடனும் தமிழ் உணர்வுடனும் ஒப்பிடக்கூட இயலாதவர்தான் இரசனிகாந்து என்பதில் ஐயமில்லை.   பணத்துக்கு விலை போவோரால் எழுதப்பட்ட  தமிழ்உணர்வு வரிகளுக்கு இரசனிகாந்து வாயசைத்துள்ளார். ஆனால்,  சொந்தக்கருத்தாக எப்பொழுதும் தன்னை வாழ  வைக்கும் தமிழ்நாட்டு நலன் சார்ந்தகருத்துகளைத் தெரிவித்தவர் அல்லர்.  மனித…

‘அதற்கும் அப்பால்’ நிகழ்ச்சிப் பதிவுகளுக்கான அழைப்பு

வணக்கம். சேக்கம் சமூகசேவை அமைப்பு வழங்கும் ‘அதற்கும் அப்பால்’ நிகழ்ச்சிக்கான பதிவுகள்,   பங்குனி 22, 2048, செவ்வாய் ஏப்பிரல் 04,   பங்குனி 23, 2048, புதன்கிழமை, ஏப்பிரல் 5  ஆகிய நாள்களில் இடம்பெறவுள்ளன. உங்களையும் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.   முதல்பதிவு வருகை: மாலை 6.00 மணி இரண்டாம் பதிவு வருகை: மாலை 7.30 மணி   இடம் :  இரா அரண்மனை விருந்துக்கூடம்  [ ERAA Palace Banquet Hall, 10 Karachi Dr, Markham, ON. L3S 0B6…

சங்கே முழங்கு – பாவலர் கருமலைத்தமிழாழன்

  சங்கே  முழங்கு !   வரிகளிலே முருகனையே முதலில் பாடி வளர்ந்திட்ட அறிவாலே பாதை மாற்றிப் பெரியாரின் பகுத்தறிவை நெஞ்சில் ஏற்றுப் பெரும்புரட்சி செய்தவர்தாம் பாவின் வேந்தர் அரிதான பாரதியின் தாச னாகி அடியொற்றி அவரைப்போல் எளிமை யாக உரிமைக்குக் குரல்கொடுக்கும் உணர்ச்சிப் பாட்டால் ஊரினையே மாற்றியவர் பாவின் வேந்தர் !   சாட்டையிலே சொற்களினை வீசி மூடச் சாதிகளின் தோலினையே உரித்த வர்தாம் வேட்டெஃக சொற்களிலே தமிழை வீழ்த்த வெறிகொண்ட பகைவரினைச் சுட்ட வர்தாம் கூட்டிற்குள் இருந்தபெண்ணைக் கல்வி கற்கக் கூட்டிவந்தே…

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017   வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக “உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழே!” என்ற மின்னூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக)ப் பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.   சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். அஃதாவது, நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து தாலர் பெறுமதியான வெகுமதி இதழ்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும்…