தமிழ்ப்பேராய விருதுகள் – 2017 : பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்ப்பேராய விருதுகள் – 2017 Thamizh Academy Awards – 2017 பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன (Nominations Invited) பரிந்துரைகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள்: வைகாசி 01, 2048 / மே 15, 2017     முகவரி: தமிழ்ப்பேராயம் திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் நான்காவது தளம், மைய நூலகக் கட்டடம், தி.இ.நி.(எசு.ஆர்.எம்) நகர், காட்டாங்குளத்தூர் – 603 203, காஞ்சிபுரம் மாவட்டம். தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி : +91-44-2741 7375, 2741 7376

இந்தியன் குரல் அமைப்பின் தமிழ்நாட்டுத் தொண்டர்கள் கூட்டம்

நன்மக்களே! வணக்கம், இ.கு.அ. (இந்தியன் குரல் அமைப்பு), தமிழ்நாடு தொண்டர்கள் கூட்டத்தில் தாங்கள் தவறாமல் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரியப்படுத்தி வழிநடத்திட அன்புடன் அழைக்கின்றோம் நாள்: வைகாசி 01, 2048 / 13-05-2017,  மாலை 4.00 மணிக்கு  இடம்: கும்பத்து வளாகம்,முதல் தளம், 29,  பிரம்பு அங்காடி(rattan bazaar), (பூக்கடை காவல் நிலையம் எதிரில்), சென்னை 3 நிகழ்ச்சி நிரல்:- 1. அறிவார்ந்த குமுகாயத்தை உருவாக்குதல். 2.அரசு அலுவலகங்கள் செயல்பாடுகள் மற்றும் அரசு அலுவலர்கள் கடமைகள் அறிவோம். 3. ஊழல் ஒழிப்புக்கான பயிற்சி பெறுதல்….

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (1.) – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 1   தமிழ்மொழிக்குப் புதுமலர்ச்சியும் புதிய வேகமும் புதிய சிந்தனைகளும் சேர்த்த மாக்கவி பாரதியார், ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோரா திருந்தல்’ என்று அறிவித்தார். நாட்டு மக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தோர் மேனிலை எய்தவும், தமது பாட்டுத் திறத்தைப் பயன்படுத்தினார் பாரதியார்.  மாக்கவி பாரதியார் வழியில் அடி எடுத்து வைத்து முன்னேறி மேலே மேலே சென்று கொண்டிருப்பவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். “தமிழருக்குப் புதிய வாழ்வும், புதிய எழுச்சியும்’ புதிய சிந்தனையும், உள்ளத்தெளிவும் ஏற்பட…

இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே! – இரா.திருமுருகன்

இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே!   பாட்டியல்கள் சிற்றிலக்கியங்களின் தொகை தொண்ணூற்றாறு என்று கூறினாலும் தமிழில் 360 வகைச் சிற்றிலக்கியங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஆற்றுப்படை, பிள்ளைத்தமிழ், கோவை, உலா, தூது, பரணி, கலம்பகம், பள்ளு, குறவஞ்சி, அந்தாதி, புராணம் ஆகியவை பெருவழக்கில் உள்ளன. … …. ….   இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே. தமிழ்ச் சிற்றிலக்கியங்களுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு சிற்றிலக்கியங்கள் தரும் இசைச் செய்திகள், சிற்றிலக்கியங்களில் காணப்படும் இசைப்பாடல்கள், இசைப்பாடல்களாகவே அமைந்த சிற்றிலக்கியங்கள் என்ற மூன்று வகையில் அடங்கும். -முனைவர் இரா.திருமுருகன்:…

இன அழிப்பில் நீதி கோரிப் போராடுவோம்! – இலண்டன்

  ஒன்றுபடுவோம்! செயல்படுவோம்! நீதி கோரிப் போராடுவோம்!  வைகாசி 04, 2048 / 18-05-2017, வியாழக்கிழமை     மாலை 5மணி  நிலக்கீழ் தொடருந்து நிலையம்:, இலண்டன் [Hyde Park, London W2 2UH,  Marble Arch]   தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று எமக்குள்ளே  நிறையவே கதைத்தாகி விட்டது. போர் முடிந்து 8 வருடங்கள் ஆகியும் மிலேச்சத்தனமான போரின் காயங்கள் ஆறவில்லை. வீர சுதந்திரம் கோரிய எம் தமிழினம் இன்று தம் நிலத்தை விட்டு உலகெங்கும் துரத்தியடிக்கப்பட்டுள்ளது. நம் கடல், நிலம், வீடு,…

பாவேந்தரும் பொதுவுடைமையும் 1/4 – முனைவர் நா.இளங்கோ

பாவேந்தரும் பொதுவுடைமையும் 1/4   உலகம் உண்ண உண், உடுக்க உடுப்பாய் என்று உலகு தழுவிய பார்வையால் மானிட சமுத்திரம் நானென்று கூவிய புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டு தந்த பாவலர்களில் தலைசிறந்தவர். பாவேந்தரின் கவிதை வீச்சு தனித்தன்மை வாய்ந்தது. செம்மாந்த மொழிநடையும் செழுமையுடைய சொல்லழகும் பொருளழகும் ஒரு சேர இணைந்து அவரின் பாடல்களுக்குத் தனியழகையும் மெருகையும் ஊட்டவல்லன. தமிழ்க் கவிஞர்களில் மட்டுமில்லாது இந்தியக் கவிஞர்களிலும் கூட வேறு எவரோடும் இணைவைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவருடைய கவிதைகள் தமிழ், தமிழர்…

பகுத்தறிவு முத்து மீனாட்சிசுந்தரம் – இலக்குவனார் திருவள்ளுவன்

பகுத்தறிவு முத்து மீனாட்சிசுந்தரம்    விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்-நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள் 548)    தொகுத்து இனிமையாகச் சொல்பவர்  கூறுவதை உலகம் விரைந்துகேட்கும் என்கிறார் தெய்வப்புலவர்.   இவ்வாறு இனிமையாகவும் தணிமையாகவும் சொல்லும் வல்லமை மிக்கவர் முத்துச்செல்வன் என்னும் திரு மீனாட்சி சுந்தரம். எனவேதான் அவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்த பொழுது எண்ணியவற்றை எளிதில் நிறைவேற்றினார்.   சொந்தஊரான திருச்சிராப்பள்ளியில் இருந்து பெங்களூர் வந்த ஆண்டு 1966. வந்தவுடன் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். உறுப்பினராகவும் தலைவர் முதலான பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். இப்பொழுதும் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து  தொண்டாற்றிவருகிறார்.   பெங்களூரில்,…

மே நாள் – கோவைக்கோதை

மே நாள் – கோவைக்கோதை உழைப்பின் ஊதியம் இளைத்தது. உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர். களைப்பில் மனிதர் வளைந்தனர். சளைக்கவில்லை பலர் விழித்தனர். நுழைந்தது கேள்விகள் – கொதித்தனர். விளைந்தது போராட்டம் – குதித்தனர். சிக்காகோ நியூயோர்க்கு  பாசுடனீறாக அக்கிரமம் அழிக்கத் திரண்டனர். நோக்கம் நிறைவேறப் போராட்டம், சிறை. உக்கிரமானது பன்னாட்டுப் புரட்சி. உழைக்கும் நேரம் எட்டுமணியாக உரிமையைப் போராடி வென்றனர். தொகுதியாய்க் கூட்டங்கள் உரிமைபேச தொழிலாளர் நாளானது மே ஒன்று. எப்போதும் பணத்தில் குறியானவர்கள், தப்பாக மக்களை ஏமாற்றுபவர்கள், எப்போது தானாகத் திருந்துவார்கள், அப்போதன்றோ…

குடிப்பீரா உழவனின் கண்ணீர்? – ஆரூர் தமிழ்நாடன்

குடிப்பீரா உழவனின் கண்ணீர்?    அதிகார மேடையில் சதிராடும் பேய்களே அநியாயம் செய்யலாமா? – உங்கள் அலட்சிய வேள்விக்கு வேளாண் தோழர்கள் விறகாக எரியலாமா?   விதியற்றுக் கதியற்று உழவனும் துயரிலே வெந்துபோய்க்  கதறலாமா? -எங்கள் வேளாண் தோழர்கள் படும்பாட்டை இன்னமும் வேடிக்கை பார்க்கலாமா?   நதிநீரைக் கேட்பதும் கடன்நீக்கச் சொல்வதும் நாட்டோரின்   உரிமைதானே! -தீய நரிகளே உழவனின் கண்ணீரைக் குடிக்கவா நாற்காலி ஏறினீர்கள்?   சதிகாரக் கும்பலே கதியற்ற உங்களைச் சடுதியில் விரட்டுவோமே! -சற்றும் வெட்கமே இல்லாத வேதாந்தக் கூட்டமே விரட்டியே துரத்துவோமே!…

செம்மொழிக்குப் பொம்மலாட்டக்கலையின் பங்கு

அன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின்  இந்த ஆண்டுக்கான தொடர்:  ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி‘ செம்மொழிக்குப்  பொம்மலாட்டக்கலையின் பங்கு  சித்திரை 26, 2048 / 09.05.2017 /  மாலை 06.30  இடம் : பாரதிய வித்தியா பவன், மயிலாப்பூர் ) தலைமை : முனைவர் சுப. வீரபாண்டியன்  முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  சிறப்புரை : திரு மு. கலைவாணன்  அன்னம் விருது பெறுபவர் :  திரு மு. க. முத்தரசன்  நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி  தகுதியுரை :  திருமதி வாசுகி பத்ரிநாராயணன் உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச்…

விளையாட்டு – சந்தர் சுப்பிரமணியன்

விளையாட்டு பந்துருட்டி ஆடுகின்ற பாலகர்கள் ஓர்புறம்! பந்தயத்தில் முந்திமுந்திப் பாயுமன்பர் ஓர்புறம்!   மூச்சடக்கி நீர்க்குளத்தில் மூழ்குமக்கள் ஓர்புறம்! பேச்சடக்கி யோகமங்குப் பேணுமன்பர் ஓர்புறம்!   தட்டியொன்றை நோக்கியோடித் தாவுமன்பர் ஓர்புறம்! விட்டெறிந்த ஈட்டிதேடி விரையுமன்பர் ஓர்புறம்!   எட்டிநின்று பார்த்துளத்துள் ஏங்குகின்ற பையனே! மட்டிலாத இன்பமுண்டு! வாட்டமென்ன? வாஉளே!    – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்  புன்னகைப் பூக்கள்  பக்கம் 35