சுந்தரச் சிலேடைகள் 11 : கண்ணும் கத்தியும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 11 கண்ணும் கத்தியும் ஒளிர்ந்திடும், காப்படையும் , நீர்காணும், ஒப்பில் பளிங்கொக்கும் ,போர்செய்யும் , பாயும்- தெளிந்தோரே நல்லுலகம் கண்ட  நடைமாதர் கண்களுக்கு வல்லோரின் கூர்வாளே ஒப்பு . கண் பெண்களின் கண்கள் ஒளி வீசும் இமை என்னும் உறைக்குள் பாதுகாப்பாய் இருக்கும் . சோகத்திலோ , மகிழ்ச்சியான நேரத்திலோ கண்களிலிருந்து நீர் வரும் . பளிங்கை ஒத்து வெண்ணிறம் கொண்டிருக்கும் . கண்கள் காதலனுடன் அடிக்கடி போர் புரியும் . ஆடவர் ஆழ்மனம் வரை ஊடுருவிப் பாய்ந்து…

திருக்குறள் அறுசொல் உரை : 126. நிறை அழிதல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை; 125. நெஞ்சொடு கிளத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை  3.  காமத்துப் பால்    15.   கற்பு இயல்    126.  நிறை அழிதல் மனத்துயரை அடக்க முடியாமல், தலைவி வாய்விட்டுப் புலம்புதல்.    (01-10 தலைவி சொல்லியவை) காமக் கணிச்சி உடைக்கும், நிறைஎன்னும்       நாணுத்தாழ் வீழ்த்த கதவு. நாணத்தாழ்ப்பாள் கொண்ட கற்புக்கதவைக், காதல்எனும் கோடரி உடைக்கும்.   காமம்என ஒன்றோ? கண்இன்(று),என் நெஞ்சத்தை,       யாமத்தும் ஆளும் தொழில். இரக்கம்இலாக் காதல், என்நெஞ்சை, நள்ளிரவிலும் அடக்கி…