உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா:ஆய்வுச் சுருக்க நாள் நீட்டிப்பு

  உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு, மலேசியா உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாளில் நடைபெற உள்ள உலகத்தமிழ் இணைய மாநாட்டிற்கான ஆய்வுச் சுருக்கம் அனுப்பும் இறுதி நாள்  ஆனி 13, 2048 /30  சூன் 30, 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளோர்  விரைவாக அனுப்ப வேண்டப்படுகின்றனர். கட்டுரை வரப் பெற்ற 3 நாளில் ஏற்பும் அறிவிக்கப்பெறும். முழுமையான கட்டுரை வர  வேண்டிய நாள் :…

5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்!    அ.இ.ம.அ.நி.(அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவம்) மருத்துவமனை (AIIMS) தமிழ்நாட்டில் 200 காணி பரப்பில் 2000 கோடி உரூபாய் செலவில் அமைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 2015 இல் தெரிவத்தது.   தமிழ்நாடு அரசு, செங்கல்பட்டு (காஞ்சிபுரம் மாவட்டம்), புதுக்கோட்டை,  செங்கிப்பட்டி(தஞ்சாவூர் மாவட்டம்), பெருந்துறை(ஈரோடு மாவட்டம்), தோப்பூர் (மதுரை மாவட்டம்) ஆகிய 5 இடங்களைப் பரிந்துரைத்தது.    இந்திய ஒன்றியத்தின் நல்வாழ்வு குடும்பநலத்துறை இணைச்செயலர்  தத்திரி பண்டா (Dharitri Panda)  தலைமையிலான குழு…

மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக!    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள்/ அவரது சட்டமன்றப் பணி மணி விழா,  தி.மு.க.வால் நடத்தப்பட்டுள்ளது. செயல்தலைவர் தாலின்(இசுடாலின்/ஃச்டாலின்) அனைத்து இந்தியத் தலைவர்களை அழைத்துச் சிறப்பாக நடத்தியுள்ளார்.   விழாவில் கனிமொழிக்கு முதன்மை அளிக்காததன் காரணம், விழாவின் பெருமையில் யாரும் பங்கு போடக்கூடாது என்ற எண்ணம்தான். அவர் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும்வரை இந்த எண்ணம் இருக்கும். எனவே, இதனை அரசியல் அடிப்படையில் தவறாகக் கருத இயலாது. மேடையில் தமிழகக் கூட்டணித் தலைவர்களை மேடையேற்றாததன் காரணம்…

திருக்குறள் அறுசொல் உரை: 133. ஊடல் உவகை : வெ. அரங்கராசன்

 (திருக்குறள் அறுசொல் உரை: 132. புலவி நுணுக்கம்: தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3.காமத்துப் பால்      15. கற்பு இயல்      133.         ஊடல் உவகை  கூடல் இன்பத்தைக் கூட்டும் ஊடல் பற்றிய உளமகிழ்ச்சி.   (01-04 தலைவி சொல்லியவை)   இல்லை தவ(று)அவர்க்(கு) ஆயினும், ஊடுதல்       வல்லது அவர்அளிக்கும் ஆறு. தவறுஇல்லை எனினும், இன்பத்தைக் கூட்டவே, அவரோடு ஊடுவேன்.   உடலில் தோன்றும் சிறுதுனி, நல்அளி       வாடினும், பாடு பெறும். ஊடல்தரும் சிறுதுயரம் வாட்டினும், கூடல் இன்பத்தைப்,…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ)    இவை மட்டுமல்ல, அனைத்து இதழ்களும் ஊடகங்களும் நல்ல தமிழே மக்களுக்கானது என்பதை உணர்ந்து தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளைத் தமிழ் அமைப்புகள் மேலும் முனைப்பாக ஆற்றி வெற்றி பெற வேண்டும். அன்று பேராசிரியர் இலக்குவனார் விதைத்த தமிழ்உணர்வு இன்றும் மங்காமல் தமிழ் ஆர்வலர்களிடம் உள்ளது. அவர்கள் இப்பணியில் வெற்றி பெறுவதே நாம்  பேராசிரியருக்குப் படைக்கும் காணிக்கையாகும் என்பதை உணரவேண்டும்.   குறள்நெறி ஆங்கில இதழுக்கு இருந்த வரவேற்பாலும்…

தமிழர் என்பதாலே இந்தச் சோதனை! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்

தமிழர் என்பதாலே இந்தச் சோதனை! யாதுமாகி நின்றே நம்தமிழை எங்கு நிறையச் செய்வோம் சூது அலட்சிமாய், இந்து அரசு செய்யும் சூழ்ச்சி அன்றோ? மோதும் பகைமை எல்லாம் நாம் தமிழர் என்பதால் அன்றோ ? நீதி நேர்மை எல்லாம் இந்தியர் கீதை ஏட்டில் மட்டும்தானே !! இந்தி புகுத்தி விட்டார் – இவர் சூதுநிறை மதஆட்சியாலே ; மந்திகள் ஆடவிட்டார் அவரை மந்திரி என்ற பெயராலே குந்தி மைந்தர் என்பார்; இவர் கோசலை குமரென்பார் ; விந்தியமலைக்கீழேஇருக்கு நமை வேற்றுகிரக மக்களென்பார் ; இராம…

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 – கருமலைத்தமிழாழன்

(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 கொல்லையிலே   பூத்துளது    என்ற  போதும் கொஞ்சுமெழில்    நறுமணத்தை   அறிவ   தற்கே முல்லைக்கும்   விளம்பரங்கள்   செய்யும்   காலம் முத்தமிழில்    உள்ளதென   நமக்கு   நாமே சொல்லுவதால்   யாறறிந்தார்   உலக   மெல்லாம் சொல்லுகின்ற   வகையினுக்கே   வழியென்   செய்தோம் வெல்லுகின்ற   இலக்கியத்துக்   கருத்தை   யெல்லாம் வெளிச்சத்தில்   கடைவிரித்தே   கூவ  வேண்டும் !   கணியனவன்   யாதும்ஊர்   என்று   ரைத்த கருத்தின்று   கணினிவழி   வந்த  திங்கே தனித்தீவாய்    வாழ்ந்துவந்த   மக்க   ளெல்லாம் தமராக   இணைகின்றார்  …

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.)  – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)   இம் மாபெரும் சாதனையைக் கவிதையில் பதிவு செய்யும் வகையில், பெருங்கவிக்கோ “தமிழ் நடைப் பாவை’ என்ற நூலை இயற்றியுள்ளார். தமிழ் இலக்கி: யத்தில் நித்தியமான நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ள திருப்பாவை: திருவெம்பாவை பாணியில் எழுதப்பட்டுள்ள தமிழ்நடைப்பாவை கவிஞரின் புலமைக்கு நல்ல சான்றாகத் திகழ்கிறது. இனிய சொல் லோட்டம், நல்ல கருத்துகள், உணர்ச்சி ஒட்டம், சந்த நயம் முதலியன கொண்ட அருமையான படைப்பாக…

1 2 7