சாகித்திய அகாதமியின் புத்தகக்காட்சி, புதுச்சேரி

சாகித்திய அகாதமியின் புத்தகக்காட்சி,  புதுச்சேரி  ஆனி 11-15, 2048 / சூன் 25-29, 2017 காலை 10.00 முதல் இரவு 8.00 வரை தமிழ்ச்சங்கம், வள்ளளலார் சாலை, புதுச்சேரி 605 011   வாய்ப்புள்ள அனைவரும் வருக! அ.சு.இளங்கோவன் பொறுப்பு அலுவலர் சாகித்திய அகாதமி, சென்னை

மலேசியாவில் கற்பூரசுந்தரபாண்டியன் இணையர் நூல் வெளியீடு

மலேசியாவில் கற்பூரசுந்தரபாண்டியன் இணையர் நூல் வெளியீடு   அகில உலக ஆன்மிகமாநாடு 2017, மலேசியா நாட்டில் பத்துமலையில் வைகாசி 26 – 28, 2048 / 09.06.2017முதல்11.06.2017 வரை 3 நாள் நடைபெற்றது.   வைகாசி  26, 2048  / 09.06.2017 அன்று நடைபெற்ற தொடக்க விழா,வில், பவானி சத்தியத்தின் சக்திநிலை சங்கத்தின் தலைவர் ஞான இராசாம்பாள்,   சித்தர் செம்மல் இரா.கற்பூரசுந்தரபாண்டியன், கல்வியாளர் சாந்தா பாண்டியன் இணையர் எழுதிய ‘சித்தர்கள் கூறும் இரகசியங்கள்‘ என்ற நூலை,  வெளியிட்டார். சிங்கப்பூர் இராமகிருட்டிணா மடத்தின் தலைவர் தவத்திரு…

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ? – தமிழரசி

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ?  பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர், குழந்தையைப் பெற்றேடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும். அதிலும் கன்னியரையும் காளையரையும் சமுதாய நலம் பேணுபவராய் வளர்த்து எடுத்துக் கொடுப்பது மிகமிகக் கடினமான செயலாகும். அந்தக் கடினமான செயலைச் சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.   சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும், சங்க இலக்கியங்களையும், சங்கச்சான்றோர்களயும் நாம் கண்டிருக்க முடியுமா? “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே சான்றோன் ஆக்குதல்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) மேலும் கவிஞர் கூறுவது தமிழ்நலம் கருதுவோர் உளம் கொள்ள வேண்டிய உண்மைகள் ஆகும். “முற்றிலுமே தமிழ் முழக்கம் ஆகவேண்டும்! முத்தமிழின் இயல் பலவும் செப்பும் நூல்கள்  கற்றவர்கள் இன்றெழுத வேண்டும்! நல்ல கருத்தெல்லாம் தமிழ் முழங்கக் கருதவேண்டும்   நற்றவத்தால் தமிழறிந்த தலைவர் இந்த  நாடாள வேண்டும்;ஆம்! வேண்டும்! வேண்டும்  பற்றிவரு இந்திமொழி நீங்க வேண்டும் பார்போற்றத் தமிழ்முழக்கம் செய்வோம் வாரீர்!’ இன்று…

குவிகம் இலக்கிய வாசலின் 27 ஆவது நிகழ்வு

குவிகம் இலக்கிய வாசலின் 27 ஆவது நிகழ்வு ஆனி 10, 2048 /   24-06-2017 /  சனிக்கிழமை மாலை 6.00 மணி ‘தமிழில் அகராதிகள்’ உரையாற்றுபவர் : திரு நடராசன் – சந்தியா பதிப்பகம்  சீனிவாச காந்தி நிலையம், (Gandhi Peace Foundation) அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 அனைவரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in

மருந்தாகும் உணவுகளும் மகத்தான தொழில் வாய்ப்புகளும் – இலக்கு & கிருட்டிணா இனிப்பக நிகழ்வு

அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத்  துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும்,  கிருட்டிணா  இனிப்புகள் நிறுவனமும்  இந்த மாதம் ஆனி 09, 2048  / வெள்ளிக்கிழமை   23.06.2017 மாலை 06.30 மணிக்கு,  மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில் மருந்தாகும் உணவுகளும்  மகத்தான தொழில் வாய்ப்புகளும் பற்றி  எடுத்துச் சொல்ல இருக்கிறது. வரவேற்பு : செல்வி ப. யாழினி தலைமை :  மருத்துவர் கு.சிவராமன் இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் : திரு இரா. மகாலிங்கம்,  திரு சி. இரவி.  (துறை : பரம்பரை…

அன்றாடம் எழுத்தாளர்களுடன் வாசகர் சந்திப்பு ஏற்பாடு – பாரதி புத்தகாலயம்

அன்றாடம் எழுத்தாளர்களுடன் வாசகர் சந்திப்பு அன்புடையீர், வணக்கம் சென்னையில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் அன்றாடம் எழுத்தாளர்களுடன் வாசகர் சந்திப்பு நிகழ்வுகளுக்கு இடம் ஒதுக்கித் தரப்படுகிறது. வாசகர்களைச் சந்திக்க விரும்பும் எழுத்தாளர்கள் தங்களது விவரங்களுடன், தங்களது எந்தப் புத்தகம் குறித்து வாசகர்களுடன் உரையாட விரும்புகிறீர்கள் என்ற விவரத்தையும்  அனுப்பி வைக்க வேண்டுகிறோம். வாசகர் சந்திப்பு அன்றாடம் 4.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெறும். எழுத்தாளர் ஒவ்வொருவருக்கும்   ஒரு மணிநேரம் ஒதுக்கித் தரப்படும். புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் செய்து தரும் வசதிகள்: திறந்தவெளியில் அழகுபடுத்தப்பட்ட அரங்கு…

திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம்   அன்புடையீர் வணக்கம், ஆனி 08, 2048  – 22-06-2017 வியாழன் அன்று மாலை 6.00 மணிப் பொழுதில் சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ அரங்கில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்க…

மறக்க முடியுமா? : நாரண துரைக்கண்ணன் – எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? : நாரண துரைக்கண்ணன் உ.வே.சாமிநாதரின் கையெழுத்துப் படிகள் அச்சிடுவதற்காக ஆனந்த போதினி அச்சகத்திற்கு வந்தன. அந்தக் கையெழுத்துகளைப் படித்துப் பார்த்த அச்சகப் பொறுப்பாளர் சீவா, அதில் சில பிழைகளைக் கண்டு, அவற்றைத் திருத்தி அச்சுக்கு அனுப்பிவிட்டார்.   சற்றுத் தாமதமாக அப்பிழையை உணர்ந்த உ.வே.சா, தன் உதவியாளர் இராசகோபால(ஐயங்கா)ரை அனுப்பித் திருத்தி வரச்சொன்னார். இராசகோபால் அச்சகம் வந்தபோது, படிகள் அச்சாகி இருந்த-குறிப்பிட்ட பிழைகள் திருத்தத்துடன்.  சீவாவின் தமிழறிவை வியந்த இராசகோபால், சீவாவை உ.வே.சாவிடம் தமிழ் கற்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். ஆனால்…

வண்ணப்பாடல் வகையிலான திருப்புகழ் போல் இசைநூல் வேறு மொழிகளில் இல்லை. – இரா.திருமுருகன்

வண்ணப்பாடல் வகையிலான திருப்புகழ் போல் இசைநூல் வேறு மொழிகளில் இல்லை!   அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் போன்றதொரு இசைநூல் உலகில் வேறு மொழிகளில் இருப்பதாகத் தெரியவில்லை. சமற்கிருதம், தெலுங்கு, மலையாள மொழிகளில் இத்தகையநூல் இல்லை. அவ்வளவு அருமையான இந்நூலின் பெருமையை அதைப் பெற்ற தமிழர்களே அறிந்து கொள்ளவில்லை என்பது வருந்தக்கச் செய்தி. அருணகிரிநாதரே தம் திருப்புகழை, “நான் உனை நிகர் சந்தத்தமிழ் சொரிந்து பாடவும்” என்று சந்தத்தமிழ் என்று குறிப்பிடுகின்றார். என்றாலும் சந்தப் பாடல்களுக்கும் திருப்புகழ்ப் பாடல்களுக்கும் இடையே உள்ள நுட்பமான அமைப்பு வேறுபாடு…

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் இலக்கிய நிகழ்ச்சி, புழுதிவாக்கம்

தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் இலக்கிய நிகழ்ச்சி ஆனி 18, 2048 / சூலை 02, 2017 மாலை 4.00 த.மகாராசன்

இசைத்துறைக் கலைச்சொற்கள் – இரா.திருமுருகன்

இசைத்துறைக் கலைச்சொற்கள் மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம், சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை முதலிய பழந்தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் மருதம், குறிஞ்சி, நைவளம், காமரம், மருவின்பாலை முதலிய பண்களின் பெயர்கள் காணப்படுகின்றன. திருப்புகழில் அருணகிரிநாதர் இந்தளம், சாதாரி, தேசி, குறிஞ்சி, நாதநாமக்கிரியா, கௌள, சீராகம் முதலிய பெயர்களைக் குறிப்பிடுகிறார். இவற்றில் பழைய பண்களின் பெயர்களும் இக்காலத்து இராகங்களின் பெயர்களும் கலந்து காணப்படுகின்றன. தோடி, முரளி, வராளி, பைரவி முதலிய இராகத்தின் பெயர்களைத் திருக்குற்றாலக் குறவஞ்சி குறிப்பிடுகிறது. மோகனம், முகாரி இராகங்களை அண்ணாமலையாரின் காவடிச் சிந்து குறிப்பிடுகிறது. முனைவர் இரா.திருமுருகன்: ஏழிசை எண்ணங்கள்:…