சொல்ல முடியாத சொல் – அப்துல்ரகுமான்

சொல்ல முடியாத சொல் உன் பாதையும் என் பாதையும் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் அவை ஒரே கையின் இரேகைகள் நீ கண்ணீரை விட ஆழமானவள் (ன்) சோகத்தை விட அழகானவள் (ன்) பாவத்திற்கு கிடைத்த மன்னிப்பை போல நீ எனக்குக் கிடைத்தாய் என்னை மறந்துவிட்டதாகச் சொல்கிறாய் பிறகு ஏன் உன் கண்ணில் நீர் ஒவ்வொரு மூச்சும் உன்னை சந்திக்கப் புறப்படுகிறது ஏமாற்றத்தோடு திரும்புகிறது நான் உன் மூச்சு என்னை நீ விட்டாலும் மீண்டும் வாங்கித்தான் ஆகவேண்டும் உன் மௌனத்தில் என் காயம் உறங்க இடம்…

திருக்குறள் அறுசொல் உரை: 130. நெஞ்சொடு புலத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : தொடர்ச்சி)     திருக்குறள் அறுசொல் உரை   3.காமத்துப் பால்  15.கற்பு இயல்  130.நெஞ்சொடு புலத்தல் ஊடாமல் கூடவிரும்பும் தலைவியின் நெஞ்சோடான உணர்வுப் போராட்டம்.   (01-10 தலைவி சொல்லியவை) அவர்நெஞ்(சு) அவர்க்(கு)ஆதல் கண்டும், எவன்நெஞ்சே!       நீஎமக்(கு) ஆகா தது?        அவர்நெஞ்சு அவரிடம்; என்நெஞ்சே! நீஏன், என்னிடம் இல்லை?   உறாஅ தவர்க்கண்ட கண்ணும், அவரைச்       செறாஅ(ர்எ)னச், சேறிஎன் நெஞ்சு. நெஞ்சே! பொருந்தார்என அறிந்தும், வெறுக்கார்எனப் பின்செல்கிறாய்…

வாழிய பெரும! வண்டமிழ் போன்றே! – இளங்குமரனார்க்கு வாழ்த்து : மறைமலை இலக்குவனார்

வாழிய பெரும! வண்டமிழ் போன்றே!   அகவை தொண்ணூறு நிறைந்த ஆசான் இளங்குமரனார்க்கு அகங்கனிந்த வாழ்த்து வாழிய பெரும! வண்டமிழ் போன்றே! புலவர்மணி,முதுமுனைவர் இளங்குமரனார்க்கு வாழ்த்து (பிறந்த நாள் தை 17, 1958 /  சனவரி 30, 1927) பளிங்கெனத் துளங்கிடும் பண்புசால் உள்ளம்; உளங்கவர் முறுவல் விளங்கிடும் திருமுகம்; தமிழ்நலன் காத்தல் தம்கடன் என்றே தளரா துழைத்திடும் தறுகண் உறைவிடம்; மறைமலை யார்போல் நிறைவுறு புலமை; பாவாணர் நெறியில் ஓய்விலா ஆய்வு; இலக்குவர் வழியில் இயங்கிடும் தமிழ்மறம்; இனம்,மொழி பேணிட இன்றமிழ் மக்களை…

பெரியாரும் பெரியோரும் நூல் வெளியீட்டு விழா

  வைகாசி 22, 2048 / சூன் 05, 2047 இக்சா மையம், எழும்பூர், சென்னை 600 008 சி.நாச்சியப்பனின் ‘பெரியாரும் பெரியோரும்‘ நூல் வெளியீட்டு விழா    

நீயின்றி இயங்காது எம் உலகு! – கவிஞர் கனிமொழி

நீயின்றி இயங்காது எம் உலகு!   பேசுவதை நிறுத்திக்கொண்டாய். “உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது” என்று நினைத்துவிட்டாயா? பேசிப் பேசி அலுத்து விட்டதா? சொல்வதற்கு இருந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் என்றா? உன் வார்த்தைகளின் எசமானர்கள் நாங்கள் என்று உனக்குத் தெரியாதா? மௌனம் கனத்துக்கிடக்கிறது எங்கள் பாதையை அடைத்துக்குக்கிடக்கும் அசைக்க முடியாத பாறையாய்… வெடித்துக் கிடக்கும் வறண்ட வயலின் வரப்பில், செய்வது அறியாது நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல நாங்களும் காத்துக்கிடக்கிறோம் கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக. கடல் பிளந்து மறுகரை சேர்க்கிறேன் என்ற கிழவனை, பறித்துச்…

பேசு தலைவா பேசு! – சுப.வீரபாண்டியன்

பேசு தலைவா பேசு!   நீ என்றன் பள்ளிக்கூடம் – சிந்தை தெளியாப் பருவத்துச் சிறுவனாய்ப் படித்தேன் உன்னை உயர்கல்வித் தளத்தில் கூட உன்னைத்தான் படித்தேன் அப்போதே எனது திசைகளைத் தீர்மானித்த தொலைதூர வெளிச்சம் நீ தொடமுடியா விண்மீன் நீ!   நீ என்றன் பள்ளிக்கூடம் இலக்கியம் எப்படி எழுதுவதென்றும் மேடையில் எப்படிப் பேசுவதென்றும் வாதம் புரியும் வகைஎது என்றும் வடிவாய் உன்னிடம் பாடம் கற்றேன்   நீ என்றன் பள்ளிக்கூடம் – பத்து ஆண்டுகள் உன் பக்கம் இருந்தேன் பார்த்துக் கொண்டிருந்ததாய்ப் பலரும்…

சுந்தரச் சிலேடைகள் 15. தாமரையும் பெண்ணும் – ஒ.சுந்தரமூர்த்தி

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 15 தாமரையும் பெண்ணும் கூம்பி  விரிதலால், கூடை சுமத்தலால், தேம்பி அழுதலால் , தேனடையாம் – தாம்பதற்கும் வாசம் பலதந்து வாழ்வில் சிறக்கின்ற நேசமிவள்  தாமரைக்கு ஒப்பு . பொருள் தாமரை   இரவில் கூம்பிப் பகலில் விரியும். 2 )  தாமரை மலர்களைப் பறித்து விற்பனைக்குக் கூடைகளில் கொண்டு செல்வர் . 3 ) அலைகளின் மோதலால் தாமரை அசைவது தேம்புவது போன்றும், மலரில் அலைநீர் பட்டு வழிவது அதன் கண்ணீர் போன்றும் தோன்றும் . 4…

அவதூறு பரப்புவதை ஆளுநர் கிரண் பேடி நிறுத்துக! – முதல்வர் வி.நாராயணசாமி

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதை ஆளுநர் கிரண் பேடி நிறுத்துக! புதுச்சேரி: அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதைப் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என, முதல்வர் வி.நாராயணசாமி எச்சரித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் அவர் ம.சே.கு.(Centac) மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது: முந்தைய ஆண்டுகளில் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு இட ஒதுக்கீட்டு முறை இல்லை. தற்போது இந்த அரசின் விடா முயற்சியால் 50  விழுக்காடு இட…

தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு

செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும்  எசுஆர்எம் பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும், தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 7-ஆம் ஆண்டு (2017-2018) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கைகள் தொடங்கிவிட்டன. சூன் 2017-இல் வகுப்புகள் தொடக்கம் பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமனை புகுவிழா முதலான வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு, நாட்பூசைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும்….

தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது? – மறைமலை இலக்குவனார்

தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது?   தமிழ்ச்சொற்களெல்லாம் தேம்பித்தேம்பி அழுகின்றன. சொற்களுக்கும் பொருள்களுக்கும் சோடிப்பொருத்தம் பார்த்துச் சோடித்துவைத்த கவிஞர் மறைந்துவிட்டார். அவர் உருவாக்கிய கவிதைகளெல்லாமே காமதேனுக்கள்.   கேட்ட பொருளும் கேட்காத பொருளும் நினைக்கும் பொருளும் நினைக்காத பொருளும் வாரிவாரி வழங்கும் வள்ளற்பசுக்களாக அவர் படைத்த கவிதைகள் வரலாறு படைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தப் படிமச்சிற்பியின் படிமப்பட்டறை இழுத்து மூடப்பட்டுவிட்டதே!   உயிர்த்துடிப்பு மிக்க படிமச்சிற்பங்களைப் படைத்து உலகெல்லாம் உலாவரச்செய்த அவருடைய ஆற்றலைக்கண்டு தேவலோகத்து மயன் தற்கொலை செய்த கதை பழங்கதை. அவர் மேடையேறிய கவியரங்குகளெல்லாமே இலக்கிய…

தமிழர்களின் சிக்கல்களை அறியாதவர் வடக்கு ஆளுநர்!

தமிழர்களின் சிக்கல்களை அறியாதவர் வடக்கு ஆளுநர்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு!  வடக்குமாகாண ஆளுநர் தமிழ் மொழியைப் பேச மட்டும் தெரிந்து கொண்டுள்ளாரே தவிர, தமிழர்களின் சிக்கல்கள் தொடர்பான உண்மைகளைத் தெரிந்து கொள்ளாதவராக இருக்கிறார். இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் இணைப்பாளர் இலீலாதேவி ஆனந்த நடராசா குற்றம்சாட்டினார்.    கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த  பிப்பிரவரி மாதம் 20ஆம்  நாள்  முதல் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை 100…