தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) இன்னா செய்தாரை இனிமைச் செயல்களால்  ஒறுத்தல் நன்றென உரைத்த பொருளுரை  படித்து மேடையில் பாங்காய்ப் பொழிந்தும்  தமிழ்நலம் நாடிய தகைசால் உரையைப்  பொறுக்கலா ற்றாது வெறுக்கும் இயல்பால்  அரசின் சார்பில் அளிக்க இருந்த  பரிசைத் தடுத்த பரிசை  என்னென  நற்றமிழ்நாடே நவில்க! நற்றமிழ்த்  தொண்டு புரிதல் துயர்க்கே  கூட்டும்  தமிழ்ப் பகைத்தோர் தள்ளினர் சிறையில்  தமிழின் பேரால் தகுநிலை அடைந்தோர்  தமிழ்ப் புகழ்பாடினும் தமிழை அடக்கி  வாழவே முனையும் வன்கண்மையால்  இழக்கச்…

இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு

அன்புடையீர் , வணக்கம் .  ஆடி 23, 2048  செவ்வாய் ஆடி 08, 2017 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும்,   இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு  ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ – தொடர் நிகழ்வு   செம்மொழியின்  செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் சிறப்புரை : கவனகக்கலை மாமணி – கலை. செழியன்  அவர்கள் அன்னம் விருது…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) –  தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (13)   நாட்டில் வீண் பேச்சுப் பெருகி விட்டது. பேச்சைக் குறைத்து செயலைப் பெருக்க வேண்டும் என்பதையும் கவிஞர் அறிவிக்கிறார். ஆண்மைசால் பேருழைப்பை அன்னை நம் நாட்டுக்காக்கி,  வீண்பேச்சைக் குறைத்துத் தீய வீணரை ஒழித்தே அன்பாம் காண்தகு நிலைகள் எல்லாம் கடும் உழைப் பொன்றால் என்ற மாண்பெழில் கொள்கை வெல்லும்  வரலாறு படைக்க வேண்டும்! முன்னேற்றம் காண்பதற்கு ஒற்றுமை அவசியம். மக்களின் சக்தியை ஒன்று திரட்ட வேண்டுவதும் அவசிய…

மறக்கமுடியுமா? – ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) :- எழில்.இளங்கோவன்

மறக்கமுடியுமா?   ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்(பிள்ளை) கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாடுதான் இவரின் சொந்த ஊர். தொழில்  தொடர்பாக, நாஞ்சில் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து, கேரளம் மாநிலம் ஆலப்புழையில் குடியேறியவர்கள் பெருமாள்பிள்ளை, மாடத்தியம்மாள்  இணையர். இவர்களின் மகனாக ஆலப்புழையில் பங்குனி 23, 1886 / 1855ஆம் ஆண்டு ஏப்பிரல் 4ஆம் நாள் பிறந்தவர் ‘மனோன்மணீயம்’ பெ.சுந்தரம்(பிள்ளை). தமிழ் மொழி இயல், இசை, கூத்து என மூன்று பிரிவுகளைக் கொண்டது. கூத்து என்பது நாடக வடிவத்தின் பெயர். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற…

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல்

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல் நாள் : ஆடி 21, 2048 ஞாயிறு  ஆக.06, 2017 மாலை 6.00 – 7.30 இடம் : வெள்ளை மாளிகை, மணவை முசுதபா நினைவகம் ஏஈ 103. 6 ஆவது தெரு, பத்தாவது முதன்மைச்சாலை, அண்ணாநகர் மேற்கு, சென்னை 600 040 நேரலை/ உரையாடலில் பங்கேற்க இணைய  முகவரி : https://www.fb.com/DrSemmal பதிவான காணொளிகளைக் காண : https://www.youtube.com/user/naalayatamil இணைய உரையாடலில் பங்கேற்க அழைக்கிறோம்! http://www.wtic.my/

உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3 – சந்தர் சுப்பிரமணியன்

உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் முனைவர் கே.எசு.சுப்பிரமணியன் 1/3    [தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற முனைவர் கே.எசு.சுப்பிரமணியன் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணலின் எடு பகுதி.] வணக்கம்! அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துக்கள்! அந்த விருது உங்களுடைய ஒட்டுமொத்த மொழிபெயர்ப்புச் சேவைக்காக வழங்கப்பட்டதா அல்லது ஒரு தனிப்படைப்பிற்கு வழங்கப்பட்டதா? நன்றி! இவ்விருது என்னுடைய ஒட்டுமொத்தமான பங்களிப்புக்காக வழங்கப்பட்டது….

நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3 – நாகலட்சுமி சண்முகம்

நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3  தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணல்.   வணக்கம்! அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டதற்கு ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துகள்! அந்த விருது குறித்துச் செய்திகளைச் சொல்லுங்களேன்! வணக்கம்! பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புப் படைப்புகளை ஆக்கும் படைப்பாளிகளுக்கான இவ்விருது ஆண்டுதோறும் ஒருவருக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் செய்திக்குறிப்பைப் பார்த்துவிட்டு இதற்காக…

யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8 – கருமலைத்தமிழாழன்

(யாதும் ஊரே யாவரும் கேளிர் 2/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8   அவையோர் வணக்கம் மாநாட்டை   அமைத்தளித்த  முத்துசிதம்பர  சான்றோரை மாநாட்டில்  பங்கேற்ற  மாத்தமிழ்  பேராளர் மன்றில் கவிபாடும்  கவிஞர்கள்  அனைவரையும்  வணங்கி மகிழ்கிறேன்   கவியரங்கக்  கவிதை ஈரமண்ணாய்    மனம்கசிந்து   வீட்டுப்   பக்கம் இருப்போரின்    துயரினிலும்   பங்கு   கொண்டு வேரடியாய்   அன்புதனில்   கிளைய    ணைத்து வெறுப்பின்றிக்   கூட்டமாக    ஒன்றி    ணைந்து தூரத்தே   அடிபட்டு   வீழ்ந்த   வர்க்கும் துடிதுடித்தே   ஓடிப்போய்   உதவி   செய்தும் பாரத்தைப்   பிறருக்காய்    சுமந்து   நின்ற…

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம்  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவரான, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கி.பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆடி 10, 2048 / 26.07.2017 அன்று தலைமைச் செயலகத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஐந்தாம் ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.   இந்தக் கூட்டத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் திட்டங்கள், செயற்பாடுகள், பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.   அண்மையில் ஊடகங்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், திருவாரூர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில்…

செய்திகளில் மலேசியா இணையத் தமிழ் மாநாடு

செய்திகளில் மலேசியா இணையத் தமிழ் மாநாடு   மாலைமுரசு விகடன்  மலேசியாவில் தமிழ் இணைய மாநாடு! இரா.தமிழ்க்கனல்   மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், வரும் ஆகத்து 26 முதல் 28-ஆம் நாள் வரை, ’உலகத் தமிழ் இணைய மாநாடு 2017’ நடத்தப்படுகிறது.   சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த, மாநாட்டின் இணைத்தலைவர் முனைவர் இலட்சுமி கார்மேகம், நெறியாளர் திருவள்ளுவன் இலக்குவனார் ஆகியோர் இதைத் தெரிவித்தனர்.   மலேசியாவில், பேராக்கில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியல்…

மத்தியப் பாடத்திட்டம் தமிழக நலனுக்கு எதிரானது! – இலக்குவனார் திருவள்ளுவன்

மத்தியப் பாடத்திட்டம் தமிழக நலனுக்கு எதிரானது!   இந்திய அரசியல் யாப்பின் இணைப்புப்பட்டியல் 7 இன்படி மத்திய மாநில அரசின் அதிகாரங்கள் குறித்து அ.) ஒன்றியப்பட்டியல், ஆ.) மாநிலப்பட்டியல்,  இ.) பொதுப்பட்டியல் என 3 பட்டியல்கள் உள்ளன. தொடக்கத்தில் மாநிலப்பட்டியலில் இருந்த துறைகள் 66. அதில் இருந்து ஒவ்வொன்றாகப் பிடுங்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை மாநில அரசின் அதிகார வரம்பில் வரிசை எண் 11இல் இருந்தது. அதனைப் பொதுப்பட்டியலாக்கி மத்திய அரசின் அதிகார வரம்பிற்குக் கொண்டுவந்தபொழுதே பலரும் எதிர்த்தனர். இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மாநிலக்…

1 2 6