புள்ளிகளும் கோலங்களும் ! – மெல்பேன் செயராசர்

புள்ளிகளும் கோலங்களும் ! வெள்ளை மனத்தினிலே கறுத்தப்புள்ளி வந்துவிட்டால் வினையாவும் குடிபுகுந்து விட்டதென  நாம்நினைப்போம் புள்ளியினால் கோலங்கள் மாறுவதைக் கண்டுவிட்டால் நல்லபுள்ளி வருவதற்கு நாம்முயன்று நிற்போம் ! புள்ளியினால் கோலங்கள் புறப்பட்டு வந்துநிற்கும் புள்ளியது பிழைத்துவிடின் அலங்கோலம் ஆகிவிடும் புள்ளியினை நாமென்றும் எள்ளிநகை யாடிவிடின் நல்லகோல மெல்லாமே நரகலோக மாகிவிடும் ! நல்லவராய் இருப்போரை நல்லபுள்ளி எனவழைப்போம் வல்லவராய் இருப்போரும் நல்லபுள்ளி ஆகிடுவார் சொல்லவல்ல விசயமெல்லாம் நல்லபுள்ளி பெற்றுவிடும் நல்லபுள்ளி நிறைந்துவிடின் நன்மையங்கே குவிந்துவிடும் ! எழுத்துக்குப் புள்ளிவைத்தால் மெய்யெழுத்தாய் மிளிர்ந்துவிடும் இழுக்குடைய செயல்செய்தால்…

கூட்டம் போடும் கூச்சல்! – கெருசோம் செல்லையா

கூட்டம் போடும் கூச்சல்!    கூட்டம் போடும்  கூச்சலுக்கிணங்கி, கொடுக்கும் தீர்ப்பு அறமாமோ? ஆட்டம் போடும் தலைகளுக்கடங்கி, அடிமையாதலும் திறமாமோ? மாட்டிற்காகப் பொங்கும் மக்கள், மனிதரைக் கொல்தல் முறையாமோ? வேட்டை நாய்போல் வெறியும் திரும்பும், விண்ணின் அறத்தில் குறையாமோ? – கெருசோம் செல்லையா

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ்7/8 – கருமலைத்தமிழாழன்

(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 7/8    சொற்பொழிவு    கேட்பதற்கும்   அறிஞ   ரோடு சொல்லாடல்   நிகழ்த்துதற்கும்   கவிஞர்   தம்மின் நற்கவிதை    அவர்சொல்லத்   துய்ப்ப   தற்கும் நாளிதழின்    செய்திகளை    அறிவ   தற்கும் பல்வேறு   விளையாட்டில்   திளைப்ப   தற்கும் பலநாட்டுப்   பொருட்களினை    வாங்கு   தற்கும் அற்புதமாய்   நமக்குவாய்த்த   இணையம்   இந்த அகிலத்தை   வீட்டிற்குள்   அடைத்த   தின்று !   அறிவியலுக்   கேற்றமொழி   அல்ல   வென்னும் அறிவிலிகள்   கூற்றையெல்லாம்   பொய்யா   யாக்கி செறிவான   கணிப்பொறியின்   மொழியா   யாகி செம்மையான  …

புதிய காலக்கட்டத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும்.

தமிழ்த் திரையுலகில் பாடலாலும் இசையாலும்  புதிய காலக்கட்டத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும்.        வந்தவாசி. வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில்  ஆனி 10 / சூன் 24 இல் நடைபெற்ற கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எசு.விசுவநாதன் பிறந்த நாள் விழா, உலக இசை  நாள் ஆகிய முப்பெரும் விழாவில்,  தமிழ்த் திரையுலகில் வாழ்வின்  பொருள்மிக்க பாடல் வரிகளாலும், மனத்தை மீட்டும்  இசையாலும் புதிய  காலக்கட்டத்தைப் படைத்த  அருவினைக்குரிய இரட்டையர்கள் கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் எம்.எசு.விசுவநாதனும் என்று கவிஞர்…

சுவிசு நாட்டில் கலை இலக்கியப் பெருவிழா

சுவிட்சர்லாந்தில் பெரன் (Bern) நகரில் இனிய நந்தவனம் நடத்தும் கலை இலக்கியப்  பெருவிழா புரட்டாசி 08-15, 2048 / செட்டம்பர் 24 – அத்தோபர் 01, 2017 அன்புடன் இனிய நந்தவனம்