தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙை) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙே) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙை)    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் தொகுதிக்கான மேலவைத் தேர்தல் வந்தது. சட்ட மன்றத்தில் போட்டியிடுவதாக இருந்த பேராசிரியர் இலக்குவனாரிடம் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதாகக் கூறியவர்கள் மேலவைக்காவது அனுப்பி இருக்கலாம். கழகத்தின் ஆதரவைப் பேராசிரியர் கேட்ட பொழுது நடுநிலை வகிப்பதாகக் கூறி மற்றொருவருக்கு ஆதரவான நிலையை எடுத்தனர். தமிழுக்காக அனைத்தையும் இழந்தவருடன் மற்றொருவரையும் இணையாக எண்ணி நடுநிலை வகிப்பதாகக் கூறியதை நாடகம் என்று சொல்வதல்லாமல் வேறு என்ன சொல்வது? இருப்பினும் பேராசிரியர் இலக்குவனார் முனைப்பாக…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (17) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (16)   தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (17) 4. உலகம் தழுவும் நோக்கு   விசாலப் பார்வையால் உலகத்தை நோக்கி ச் சிந்தனைகள் வளர்க்கும் கவிஞர், தென் வியத்துனாம் விடுதலைப்படையின் வெற்றி குறித்து உவகைப் பெருக்கோடு பாடியிருக்கிறார். பாகித்தான் பாதகத்தை  எதிர்த்து வீரமுழக்கம் செய்கிறார். எகிப்து இசுரேல் போர் பற்றி உணர்ச்சியோடு கவிதை இயற்றியுள்ளார். இக்கவிதைகளில் அவருடைய நேர்மை உள்ளமும் நியாய உணர்வும் ஒலிசெய்கின்றன. பெருநாடு சிறு நாட்டைப் பிய்த்து வீழ்த்தல் பிழையென்றால் அப்பிழையைச் சிறுநாடும் செய்யாமல்…

ஆளுநரின் நேர்மை (!) – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆளுநரின் நேர்மை (!) – இலக்குவனார் திருவள்ளுவன்   இந்தியத் துணைக்கண்டத்தில்  மாநில ஆளுநர் என்பவர்  நடைமுறையில் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையேயான  மாநில நலம்நாடும் தூதுவராக இருப்பதில்லை. மத்திய அரசின், சொல்லப்போனால் மத்திய ஆளுங்கட்சியின் கைப்பாவையாக,  ஏவலராக, எடுபிடியாக,  மத்திய அரசின் சார்பில் மாநில அரசை ஆட்டுவிக்கும் முகவராக  இருக்கின்றார் என்பதே அரசியலாரின் – அனைவரின் கருத்தாகவும் உள்ளது. இதற்கு விதிவிலக்கானவரல்லர் தமிழகப் பொறுப்பு ஆளுநர். பொறுப்பு ஆளுநர், பொறுப்பான ஆளுநராக இல்லாமல்,  தன் முதலாளியான மத்திய ஆளுங்கட்சியின் கட்டளையை நிறைவேற்றும் …

இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(இன்றைய தேவை குறுஞ்சொற்களே! – 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 2/3   தெரிபொருளும் புரி பொருளும்     சொல் இடத்திற்கு ஏற்பப் பொருளைப் பெறுகின்றது என்பதை மறந்து நாம் ஏற்கெனவே அறிந்த பொருளையே பொருத்திப் பார்க்கும்பொழுது சொல்லாக்கம் தவறாய் அமைகிறது. இத்தவறு நேரக்கூடாது என விழிப்புடன் இருக்கையில் சொல் விளக்கமாய் அமைந்து விடுகிறது. அதையே மற்றொரு வகையாகவும் கூறலாம். ஒவ்வொரு சொல்லும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் பொருள் ஒன்று உண்டு. அதே சொல் உணர்த்திப் புரிய வைக்கும் பொருள் பல உண்டு….

ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3   Department – துறை என்கிறோம். அரசு பல்வேறு துறைகளாகச் செயல்படுகின்றது. இவற்றை மேலாண்மைப்படுத்தும் செயலகத்திலும் பல்வேறு துறைகள் உள்ளன. ஆனால், இரண்டிற்கும் வேறுபாடு தேவை. ஏனெனில், செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறையும் தன்னுள் பல துறைகளை அடக்கியது. எடுத்துக்காட்டாகச் செயலகத்தில் உள்ள உள்துறையில் காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை போன்ற பல துறைகள் அடங்கும். ஆங்கிலத்தில் உள்ளதுபோல் தமிழிலும் இரண்டிற்கும் துறை என்ற ஒரே சொல்லையே பயன்படுத்துவது குழப்பத்தைத்தான் தருகின்றது. இரண்டிற்கும்…

‘கவிதை மழை’ நூல் வெளியீடு, சென்னை

புரட்டாசி 01, 2048  / 17/09/2017  காலை 10.00 மணி தமிழகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான கவிஞர்கள் பங்கேற்றுள்ள ‘கவிதை மழை’ நூல் சென்னை, பெரம்பூர், மீனாட்சி தெரு, எண். 3 இல் அமைந்துள்ள அன்னதான சமாச அரங்கில் வெளியிடப்படுகிறது. திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி முத்துலிங்கம் வெளியிடுகிறார்.   சோலைப் பதிப்பகம் தொகுத்தளிக்கிறது.

முகிலை இராசபாண்டியனின் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு 26

ஆவணி 25, 2048 ஞாயிறு 10.09.2017 மாலை 5.00 நேரு அரசு மேனிலைப்பள்ளி கல்லூரிச் சாலை, நங்கநல்லூர்   ஞாலம் இலக்கிய இயக்கம் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு 26   திருநாவுக்கரசர் 3 : தொடர் பொழிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் தலைமை : கவிமாமணி க.குணசேகரன்

யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 – கருமலைத்தமிழாழன்

 (யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 – தொடர்ச்சி)   யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 பலமொழிகள்   பேசினாலும்   அன்பு   என்னும் பாலத்தால்   ஒருங்கிணைந்தே   வாழ்வார்  அங்கே கலக்கின்ற   கருத்தாலே   மொழிக   ளுக்குள் காழ்ப்புகளும்   உயர்வுதாழ்வு   இருக்கா  தங்கே இலக்கியங்கள்   மொழிமாற்றம்   செய்தே   தங்கள் இலக்கியமாய்ப்    போற்றிடுவர் !   கணினி   மூலம் பலரிடத்தும்   பலமொழியில்    பேசு   கின்ற பயனாலே   மொழிச்சண்டை   இல்லை  அங்கே !   நாடுகளுக்    கிடையெந்த   தடையு   மில்லை நாடுசெல்ல   அனுமதியும்   தேவை   யில்லை நாடுகளுக்    கிடையெந்த    பகையு   மில்லை…

தினகரன் நிழல் அமைச்சரவை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரன் நிழல்  அமைச்சரவை அமைக்கட்டும்!      ‘‘எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை’’ என அதிமுக தலைவர்கள் கூறினாலும் அதிமுகவைத் தடுமாற்றத்தில் தள்ளி இயக்கிக்கொண்டிருப்பது பாசக தலைவர்கள்தாம் என்பது அனைவரும் அறிந்ததே! ஆளுங்கட்சிக்கு இணையான வலிமை உடைய எதிர்க்கட்சித்தலைவரைக்கூடச் சந்திக்காத தலைமையர் நரேந்திரர்(மோடி), பத்துபேர் கூட இல்லாத  சிறு பிரிவின் தலைவரை அடிக்கடி சந்திப்பதன்  காரணமும் இதுதானே!  வேளாண்மை நாட்டின் தலைவக இருந்து கொண்டு  வாழ்வாதாரத்திற்காகப் போராடும் வேளாண்குடிப் பெருமக்களைச் சந்திக்க மறுத்துவிட்டுப் பதவிகளுக்காகப் போராடுபவர்களைச் சந்திப்பதன் காரணமும் என்ன? அதிமுகவில் பிளவை உணடாக்க…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (16) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (15) –  தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (16)   4. உலகம் தழுவும் நோக்கு   தாய்மொழிப் பற்றும் தம் இனப் பற்றும் கொண்டுள்ள பெருங்கவிக்கோ, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டு உணர்வை வலியுறுத்துவதுடன், உலக ஒற்றுமையை வளர்ப்பதிலும் கருத்துடைய கவிஞராகத் திகழ்கிறார்.    உலக ஒற்றுமை ஓங்கிட வேண்டும் வையம் ஒன்றே எனப்புவி ஒழுகிட வேண்டும். கலகம் செய்யும் கயமைகள் எல்லாம் இன்றே  கண்டிப்பாக நீங்கிட வேண்டும் மக்கள் எல்லாரும் ஒரு தாய் மக்கள் பூமி…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙே) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ) தொடர்ச்சி]   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙே) பயிற்று‌ ‌மொழி குறித்த அரசின் வஞ்சகச் ‌செயல்பாடுபற்றிய ‌பேரா.இலக்குவனாரின் கருத்து வருமாறு:  தமிழ்ப் பயிற்று மொழியை விரும்பாத ஒருவரைத் தலைவராகக் கொண்ட வல்லுநர்க் குழுவை நியமித்தது. அதன் பயனாகப்  பயிற்று மொழி உரிமை கொடுத்து விட்டோம் என்று கூறி விட்டது.  எந்த நாட்டிலும் இந்த உரிமை கிடையாது. அங்கெல்லாம் இவ்வாறு வேற்று மொழியில் பயில உரிமை கேட்டால், நாட்டுப் பற்றற்ற தன்மையாகக் கருதப்பட்டு, மிகவும் வெறுக்கப்படும். இங்கு உரிமை கிடைத்து…

மாணவர்கள் மனம் வைத்தால், எதையும் ஆற்ற முடியும் – கவிஞர் மு.முருகேசு

வறுமை நிலையை எண்ணிக் கலங்காமல், மாணவர்கள் மனம் வைத்தால், எதையும்  ஆற்ற முடியும்                         – கவிஞர் மு.முருகேசு-      வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு உரையரங்கில், வறுமை நிலையை எண்ணிக் கலங்காமல் மாணவர்கள் மனம் வைத்தால், எதையும் அவர்களால்  ஆற்ற – சாதிக்க- முடியும் என்று கவிஞர் மு.முருகேசு பேசினார்.      வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு உரையரங்க நிகழ்விற்கு, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர்…

1 2 4