யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 – கருமலைத்தமிழாழன்

(யாதும் ஊரே யாவரும் கேளிர் 5/8 – தொடர்ச்சி) யாதும் ஊரே யாவரும் கேளிர் 6/8 அறிவியலில்    உலகமெல்லாம்    அற்பு   தங்கள் அரங்கேற்றக்    கலவரங்கள்    அரங்க    மேற்றி அறிவிலியாய்க்   குறுமனத்தில்   திகழு   கின்றோம் அணுப்பிளந்து   அடுத்தகோளில்    அவர்க    ளேற வெறியாலே   உடன்பிறந்தார்    உடல்பி   ளந்து வீதியெலாம்    குருதியாற்றில்   ஓடம்   விட்டோம் நெறியெல்லாம்   மனிதத்தைச்   சாய்ப்ப   தென்னும் நேர்த்திகடன்   கோயில்முன்   செய்கின்    றோம்நாம் !   வானத்தை   நாம்வில்லாக    வளைக்க   வேண்டா வாடுவோரின்   குரல்கேட்க   வளைந்தால்    போதும் தேனெடுத்துப்   பசிக்குணவாய்க்    கொடுக்க   வேண்டா தேறுதலாய்   நம்கரங்கள்  …

உயிர்ச்சமாதி அடைய 3 ஆவது நாளாகச் சிறையில் முருகன் உணவு மறுப்பு!

உயிர்ச்சமாதி அடைய 3 ஆவது நாளாக சிறையில் முருகன்  உணவு மறுப்பு!  இராசீவு காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முறையின்றித் தண்டிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முருகன். இவரைச் சந்திக்க உறவினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடத்திய  பேச்சுக்குப் பிறகும் சிறை விதிகளை மீறி முருகன்  உணவுமறுப்பு மேற்கொள்வதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்கின்றனர். ஏற்கெனவே தடைவிதித்துள்ளதால் போராடுபவரை அதற்காகத்தான் சந்திப்பு மறுக்கப்படுவதாகப் பரிவின்றிக் கூறுகின்றனரே!  உயிர்ச்சமாதி அடைவதற்காக கடந்த 18.08. இல் தனது உண்ணா நோன்பை முருகன் தொடங்கினார். சிறையில் 3-…

முதல்வர் பதவி விலகத், தடையை மீறி நாளை (21.8.)ஆர்ப்பாட்டம் . வைகோ

முதல்வர் பதவி விலகத் தடையை மீறி நாளை (21.8.)ஆர்ப்பாட்டம் . வைகோ   முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தி நாளை  (21.8.17) சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.   மேகதாதுவில் கருநாடக அரசு அணை கட்டுவதற்கு எந்த  மறுப்பையும் தெரிவிக்காத தமிழக அரசைக் கண்டித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தியும் நாளை மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர்  இசைவு வழங்கவில்லை…

முத்துக்குமாரசுவாமி எனும் நூலக நல்முத்து -இரெங்கையா முருகன்

முத்துக்குமாரசுவாமி எனும் நூலக நல்முத்து   தமிழ் ஆய்வுலகில் மிக  முதன்மையான இடத்தை வகிப்பது மறைமலையடிகள் நூலகம். அந்த நூலகத்தின் தோற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர் தாமரைச் செல்வர் வ.சுப்பையா(பிள்ளை). அந்த நூலக வளர்ச்சிக்குத் தனது அளப்பரிய ஆற்றலைச் செலுத்தியவர் அவரது மருமகன் இரா. முத்துக்குமாரசுவாமி. ‘நூலக உலகில் நல் முத்து’ என்று போற்றப்படும் முத்துக்குமாரசுவாமி (வயது 80) கடந்த செவ்வாய் அன்று காலமானார்.   உலக அளவில் தமிழ் அறிஞர்கள் பலரின் ஆய்வுகளில் உதவியவர் முத்துக்குமாரசுவாமி. தமிழாய்வு தொடர்பான குறிப்புதவிகளைத் தனது நினைவுகளிலிருந்தே தந்து…

இன்றைய தேவை குறுஞ்சொற்களே! . இலக்குவனார் திருவள்ளுவன்

இன்றைய தேவை குறுஞ்சொற்களே!   ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக்’ கலைச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு பான்மை கூட்டுச்சொற்களாக அமைகின்றன. சொலலாக்கம் கூடியவரை தனிச்சொற்களாக அமைக்கப்பட வேண்டும். இவையும் மூன்று அல்லது நான்கு எழுத்துகளுக்கு உட்பட்டக் குறுஞ்சொற்களாய் இருத்தல் வேண்டும்.  நெடுஞ்சொல் அஞ்சி அயல்மொழியிலுள்ள குறுஞ்சொல்லையே எடுத்தாளக் கூடாது என வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். எளிமையும் வழமையும்   அயற்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை உருவாக்குகையில் பெரும்பாலானவை பொருள் விளக்கமாக அமைகின்றன. இதனால் வினைவடிவம், பெயர் வடிவம் போன்று வெவ்வேறு சொல்வடிவங்களில் இதுபோன்ற சொற்களைக் கையாளுகையில்…

ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3   ஒரே பொருளைச் சுட்டும் பல்வேறு சொற்களும்  பல்வேறு பொருள்களை உணர்த்தும் ஒரே சொல்லும் உள்ள நிலைமை அனைத்து மொழிகளிலும் காணப்பெறும் இயல்புதான்.  இந்நிலைமையைத் தமிழிலும் மிகுதியாய்க்; காண்கிறோம். இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருளை உணரும் நிலை வெளிப்படையாய் இருப்பின் குறையொன்றும்  இல்லைதான். ஆனால், அதே நேரத்தில் பொருளை உணரும் இடர்ப்பாடு இருப்பின் சொற்களஞ்சியத்தை வளப்படுத்த வேண்டியது இன்றியமையாதது அல்லவா?   ஒரு சொல்-பல்பொருள் என்ற நிலைமை கலைச்சொற்களைப் பொருத்தவரை தவிர்க்கப்பட்டாக  வேண்டும். கலைச்சொற்கள் குழப்பமின்றித்…

அருள்மிகு இசக்கி அம்மன் கோயில் குடமுழுக்கு

புரட்டாசி 01, 2048 / 17.09.2017 காலை 8.00 அருள்மிகு இசக்கி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கனக்காவிளை, தெருவுக்கடை அஞ்சல் குமரி மாவட்டம் 629 157  

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா : இணையவழி உரையாடல் காணுரைகள்

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா   இணையவழி உரையாடல் காணுரைகள்   மலேசியாவின் இரண்டாம் பெரிய நகராமான பேராக்கில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உலகத்தமிழிணையமாநாடு  ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. இது குறித்துச் சென்னையில் ஆடி 21, 2048 ஞாயிறு  ஆக.06, 2017  அன்று மாலை நடைபெற்ற இணைய வழிஉரையாடல் பதிவுகள்.   உரையாளர் மரு.மணவை மு.செம்மல் கருத்துரை https://www.facebook.com/DrSemmal/videos/1488288084570609/   Posted by Semmal Manavai Mustafa on Sunday, August…

சுப.வீரபாண்டியனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

  ஆவணி 03, 2048 / சனிக்கிழமை / 19.08.2017 மாலை 6.00 மணி இராசரத்தினம் கலையரங்கம்,அடையாறு சென்னை 600020 சுப.வீரபாண்டியனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா   திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர்  சுப. வீ  எழுதிய நான்கு நூல்கள் வெளியீட்டு விழா     . நூல்கள் தலைப்பு   வலி (சமூகவியல்கட்டுரைகள்) காற்றைக் கைது செய் (மேடை இலக்கியம்) எதுவாக இருக்கும் (கவிதைகள்) ஒரு நிமிடம் ஒரு செய்தி – 2 (குறுந்தகவல்கள்)   தலைமை: முன்னாள்…

பதவி நலன்களுக்காக அடிமையாகிக் கட்சியைச் சிதைக்காதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

பதவி நலன்களுக்காக  அடிமையாகிக் கட்சியைச் சிதைக்காதீர்! “அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்” (ஔவையார், மூதுரை 17) இருப்பவர்களே, அரசியல்வாதிகள் என்பது இன்றைய இலக்கணமாகி விட்டது. எனவே, “ஒருவீர் தோற்பினும் தோற்பதுநும் குடியே”(கோவூர்கிழார், புறநானூறு 45) எனப் பிறர் அறிவுறுத்த வேண்டிய நிலையில் அதிமுக தலைவர்கள் உள்ளனர்.   இயல்பான போக்கில் அதிமுக வளர்ந்தாலும் தளர்ந்தாலும் ஒன்றுமில்லை. ஆனால், அதிகாரச் சுவையைப் பறிப்பதாகவும் தருவதாகவும் அச்சுறுத்தியும் ஆசைகாட்டியும் தமிழர் நலனுக்கு எதிரான ஒரு கட்சி அதனைச் சிதைத்துக் கொண்டுள்ளது. இதனால், அடிமைத்தனத்தின் உச்சக் கட்டத்தில் அதன்…

உலகத் திருக்குறள் மையம் நூல்கள் வெளியீட்டு விழா

உலகத் திருக்குறள் மையம் நூல்கள் வெளியீட்டு விழா நிறுவனரின் 70ஆம் அகவை நிறைவுவிழா ஆவணி 03, 2048 சனி ஆகத்து 19.08.17 காலை 9.00 – மாலை 5.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை

உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 3/3 : சந்தர் சுப்பிரமணியன்

(உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3 தொடர்ச்சி) உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 3/3 இதைத் தவிர உங்களின் சொந்தப் படைப்புகள் வேறேதும் உளதா? சொந்தப் படைப்புகள் என்று நிறையச் சொல்ல முடியாது. ‘சிந்தனைச் சுவடுகள்’ என்கிற என் பட்டறிவு சார்ந்த படைப்பு உள்ளது. இது நான் வாழ்க்கையில் கண்ட – சந்தித்த – நிகழ்வுக் குறிப்புகளின் தொகுப்பு. ஆனாலும், என்னுடைய தமிழ்க் கட்டுரைகள் 8 தொகுதிகளாக உள்ளன. அதில் வரும் அத்தனை கட்டுரைகளும் மொழி, குமுகாயச் (சமுதாயச்)…