தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங)– இலக்குவனார் திருவள்ளுவன்

( தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙௌ) தொடர்ச்சி )   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங)    ஆய்வுரைப் போர்வையில் தமிழுக்கு எதிராகப் பரப்பும் கருத்துகளுக்கு எதிரான  போர்! கால ஆராய்ச்சி என்ற பெயரில் முந்தைத் தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவோருக்கு எதிரான போர்! தாய்மொழித் தமிழைப் படிப்பிப்பதால் தமிழாசிரியர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்பதற்கான போர்! என்றும் தமிழ் எங்கும் தமிழ் துலங்க  வேண்டும் என்பதற்கான போர்! அயல் மொழிகளில் மறைக்கப்படும் உயர்தனிச்  செந்தமிழ்ச் சிறப்புகளை வெளிக்கொணருவதற்கான போர்!  தமிழால் வாழ்ந்தும் தமிழையே தாழ்த்துவோருக்கு…

வட்டுக்கோட்டை இந்து  இளைஞர்  சங்கத்தினர்  மாணவர்களுக்கு  மிதி வண்டிகள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து  இளைஞர்  சங்கத்தினர்  மாணவர்களுக்கு  மிதி வண்டிகள் அன்பளிப்பு   வட்டுக்கோட்டை இந்து இளைஞர் (வாலிபர்) சங்கத்தினால் வட்டு மத்திய கல்லூரி நவாலி அமெரிக்கன்  அறக்கட்டளைப்(மிசன்) பாடசாலை மற்றும்  யாழ்ப்பாணக்கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகளுக்குச் சங்கத் தலைமைச்செயலகத்தில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.   மேற்படி விண்ணப்பம் கடந்த காலப் போரின் போது தந்தை காணாமல் ஆக்கப்பட்ட தாய் தந்தை இருவரையும் இழந்த, தந்தையினால் கைவிடப்பட்ட மூன்று மாணவிகளுக்குப் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் சமூகநல அலுவலர் மூலமும் எமது சங்கத்திடம் கடிதம் மூலம் தெரிவிக்கபட்டதைத் தொடர்ந்து…

நீதிமன்றம் அறம் காக்கவே! செல்வாக்கினரைக் காக்க அல்ல! – இலக்குவனார் திருவள்ளுவன்

நீதிமன்றம் அறம் காக்கவே! – செல்வாக்கினரைக் காக்க அல்ல!   நீதிமன்றத்தில் உரைக்கப்படும் தீர்ப்பு ஒவ்வொன்றும் சட்டத்தின் பகுதியாகின்றது. சட்டம் என்பது அறத்தை நிலை நிறுத்தவே என்னும் பொழுது தீர்ப்புகளும் அறத்தை நிலை நிறுத்தவே வழங்கப்பெற வேண்டும். மக்களுக்கு அறம் வழங்கும் வகையில் தீர்ப்புகள் வந்து கொண்டுள்ளன. அதே நேரம், “சட்டத்தின் முன் யாவரும் சமம்” என்பது பல நேர்வுகளில் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் உள்ளது. செய்தி யிதழ்களைப் பார்த்தே நடவடிக்கை எடுக்கும் நீதிபதிகள், தங்கள் முன் வரும் வழக்குகள்பற்றிய செய்திகளைக் கண்டு கொள்வதில்லை.  …

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (21) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (20)   தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (21)   வீண் சண்டை வேண்டாம் விவேகமில்லா மதம் வேண்டாம். எல்லா மதங்களிலும் இருக்கின்ற நற்கருத்தை நல்நோக்கத்தோடு நாமெல்லாம் ஏற்றே மனிதர்கள் ஒற்றுமையால் மன்பதையில் வாழ்வதற்கு இனி ஒருவகை செய்வீர் என்றுதான் கேட்கின்றேன்! வழிவகை என்னவென்று வகையறிந்து காண்கையிலே கழிகொள்கை நீக்கிக் காரிருள் ஒளியாக சமனிதமதம் என்ற ஒரேமதம் உலகில் ஏற்படுத்திப் புனிதம் அடைவோம் போற்றிப்புகழ் அடைவோம்என ஆசையாய்க் கூறுகின்றேன் அழைக்கின்றேன் மனத்துணிவாய்   என்று பெருங்கவிக்கோ தன் எண்ணத்தை…

தொல்காப்பியர் பேரவை – அட்டோபர் திங்கள் அமர்வு, பேரூர்

  புரட்டாசி 15, 2048 ஞாயிறு  01-10-2017 காலை 9.30 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை  தவத்திரு.சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர்.   தொல்காப்பியர் பேரவை-அட்டோபர்- திங்கள் அமர்வு, பேரூர் வரவேற்புரை:அகவைமுதிர்ந்த தமிழ் அறிஞர் பூவரசி.மறைமலையன் சிறப்புரை: கோவை நம்பி புலவர் வீ.மாரப்பன் (நூலாசிரியர் தமிழ்நாட்டரசுப் பாடநூற் குழு.) பேச்சரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் அரசியல் கலப்பில்லாத் தலைப்பு 3 நிமிடம் கவியரங்கம்:அனைவரும் பங்கு பெறலாம் (24வரிகள்மட்டும்) மகாத்மா காந்தி/ கருமவீரர் காமராசர் தொல்காப்பியப்பயிலரங்கம்: (இலக்கணம்) தொல்காப்பியச்செம்மல் புலவர்.ஆ.காளியப்பன் நன்றியுரை: கவிச்சுடர்.கா.உமாபதி,முதுகலை ஆசிரியர் ஒருங்கிணைப்பு:புலவர்.வேலவன்…

காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 2/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி

(காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: தொடர்ச்சி)  காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு (பாடல்கள்). 2/2 பாடல் 3 :  நோக்கம்   ஒவ்வொரு நாளும் வகுப்பில் பாடம் தொடங்கும் முன் பாடப்பட்டப் பாடல்கள்: கலைமகள் மலரடி பணிந்திடுவோம் கருத்துடன் கல்வியைப் பயின்றிடுவோம் அமிழ்தினும் இனியது தமிழ்மொழியே அது தான் என்றும் நம் விழியே இமை போல் நாம் அதைக் காத்திடுவோம் இயல் இசை நாடகம் வளர்த்திடுவோம் –  கலைமகள் மலைகளில் சிறந்தது நம் நாடு சரித்திரப் புகழ்ப்பெற்ற  திருநாடு தாய் என நாம்…

நவோதயா வேண்டாம்! நாம் என்ன செய்ய வேண்டும்? – நக்கீரன் செவ்விகள்

நவோதயா வேண்டாம்! நாம் என்ன செய்ய வேண்டும்?    “தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை மாவட்டம்தோறும் தொடங்கத் தடையில்லாச் சான்றிதழையும் 30 காணி (ஏக்கர்) நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கித் தர வேண்டும்” என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அதிரடி ஆணை அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் போன்றோரைக் கொந்தளிக்க வைத்துள்ளது.   ‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி’யின் தலைவர் வேல்முருகன் அவர்கள், “முதலில் மருத்துவ நுழைவுத்தேர்வு மூலம் மருத்துவம் முதலான உயர்கல்வியைத் தமிழர்களுக்கு மறுக்கும் சூழ்ச்சி எனில், நவோதயாப் பள்ளிகளோ அடிப்படைப்…

கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு ‘-உலகத் தமிழ்க் குறும்புதினப் போட்டி 2018’ – வள்ளுவராண்டு 2049

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு ‘-உலகத் தமிழ்க் குறும் புதினப் போட்டி 2018’ – வள்ளுவராண்டு 2049   காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி  அமைகிறது. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது. இதற்கமைய இம்முறை ‘உலகத் தமிழ்க் குறும்…

இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 30  ஆவது நிகழ்வு

புரட்டாசி 14, 2018  சனிக்கிழமை  30-09-2017  மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation)                            அம்புசம்மாள் தெரு                                                    ஆழ்வார்பேட்டை, சென்னை 600018    இலக்கியச் சிந்தனையின் 568 ஆவது நிகழ்வு  ‘கவியோகி சுத்தானந்த பாரதி’ –    உரையாற்றுபவர்                          திரு. புதுவை  இராமசாமி தொடர்ந்து   குவிகம் இலக்கிய வாசலின் 30  ஆவது நிகழ்வு நூல் அறிமுகம்:  ‘நான் என்னைத் தேடுகிறேன்’ – சுரேசு இராசகோபால்  கவிதைத்  தொகுப்பு அறிமுக உரை : திரு ஆர். அரவிந்தகுமார்                               (கல்வியாளர், புதுவை)   நூல் வெளியீடும்…

பெரும்பசிக்காரர்களின் தீராவேட்கை – தமிழ்சிவா

பெரும்பசிக்காரர்களின் தீராவேட்கை    அறிவின் சுடுகாட்டிற்கென அமைந்த வழிகள் ஏராளம் ஏராளம் எழுதுங்கள் எழுதுங்கள் எல்லாத் தேர்வுகளையும்   பாடத்திட்டப் படுகுழிகள் எப்போதும் பயன்பாட்டிலேயே இருக்கின்றன   மதிப்பெண்களால் சிதைக்கப்பட்ட மனித மூளைகள் வரலாற்றுப் பெட்டிகளில் பாதுகாப்புடன் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன   பெரும்பசிக்காரர்களின் தீராவேட்கையுடன் அறுப்பதற்காகவே ஆடுகளும் கோழிகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன   நித்திரை மன்றங்களின் சுத்தியல்பட்டு சிந்திய இரத்தவாந்திகள் அவ்வப்போது உடனுக்குடனே ‘சுடச்சுட’ அலசப்படுகின்றன   பற்பலவற்றை ஆவணப்படுத்தாமலிருப்பது அருமை மீயருமை   வருணவழிப் ‘பட்ட’ கல்வியில் கல் மண் முள் கழிவுகள்   காளைகளின்…

நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 – சந்தர் சுப்பிரமணியன்

  நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2  பெரும்பேராசிரியர் திரு இலக்குவனார் அவர்களின் புதல்வர் பேராசிரியர் திரு மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு, அண்மையில் தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கிச் சிறப்பித்தது.  பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட காணல். 1.? அண்மையில் தமிழக அரசால் திரு.வி.க. விருது உங்களுக்கு வழங்கப்பட்டது. என் சார்பிலும் இலக்கியவேல் வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகள். அது குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? அரசு பல்வேறான விருதுகளை…

1 2 6