வேண்டாமே … நமக்கு நவோதயா பள்ளிகள் – சுசிலா

வேண்டாமே … நமக்கு நவோதயா பள்ளிகள்   பொதுத் தேர்வாகிய ‘நீட்’ எனும் அரக்கனைத் தொடர்ந்து, நம்மை நோக்கி குறி வைக்கப்படும் அடுத்த அம்பு நவோதயா பள்ளிகள். இது நம் தமிழ்மொழிக்கும், குமுகநீதிக்கும் பெருங்கண்டத்தை – பேராபத்தை விளைவிக்கக்  கூடியது. இதனை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால், நம் தமிழ்ச்சமூகத்தை மிகவும் கல்வி மறுக்கப்பட்ட பின்தங்கிய நிலைக்குக் கொண்டு சென்று விடும். மத்திய பா.ச.க அரசு தொடர்ந்து நம்மை போராட்டக்களத்திலேயே வைத்திருக்க முடிவு செய்திருக்கிறது போலும்.!  இந்த நவோதயா பள்ளிகளைப்பற்றி சற்று விரிவாக பார்ப்போமா….

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙோ) தொடர்ச்சி)   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙௌ)  5. ஞாலப் போராளி தாழும் தமிழர்களை மீட்பதற்காக வாழும் வரை போராடிய  பேராசிரியரே  ஓர் இயக்கம் என்றும் வலிமை மிக்கப் படை என்றும் இன்றும் நினைவில் போற்றப்படுகிறார். இவ்வாறு, தமிழ்ப்பேராசிரியர் சி.இலக்குவனார் உலகப்  போராளியாக உயர்ந்து நிற்பதை அறிஞர்கள் பலரும் உரைத்துள்ளனர். “பேராசிரியர் இலக்குவனார் தமிழ் காக்கப் பிறந்த பிறவி! அதற்கு ஊறு நேரும் எனின் தம் தலை தந்தும் காக்க முந்தும் போராளி!” என்கிறார் முதுமுனைவர் இரா.இளங்குமரன் (பக்கம்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (20) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (19) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (20) 6. மதங்களைச் சாடும் சிந்தனை வேகம்   உள்ளத்தில் பெருக்கெடுக்கும் உணர்வின் ஊற்றுக்களாகப் பக்திப் பாடல்கள் பாடியுள்ள பெருங்கவிக்கோ முழுக்க முழுக்க ஆத்திகக் கவிஞர் அல்லர். சிந்தனை வேகம் பொங்கிப் பாயும் சுடர் அறிவுக் கவிதைகளை மதங்களைச்சாடியும், போலிமதவாதிகளை வன்மையாகக் கண்டித்தும் அவர் பாடியிருக்கிறார். இவர் ஒரு நாத்திகரோ என்ற மயக்கத்தை உண்டாக்கும் அவற்றை மட்டுமே படிக்க நேர்ந்தால். கவிஞரை நன்கறிந்த கவிக்கொண்டல் மா. செங்குட் டுவன் இது…

எச்சு இராசாவின் தோல்வி அரசுகளுக்கு எச்சரிக்கை மணி – இலக்குவனார் திருவள்ளுவன்

எச்சு இராசாவின் தோல்வி அரசுகளுக்கு எச்சரிக்கை மணி    பாசக, தன் காவி ஆணவத்தைப் பல இடங்களிலும்  விரித்து வருகிறது. தமிழக அரசியலில் உள்ள குழப்பமான சூழலைப் பயன்படுத்தித் தமிழக அரியணையில் ஏறவும் முயன்று வருகிறது. இவற்றிற்குத் தமிழக மக்களின் உடன்பாடு இல்லை என்பதை நம்பாமல் பொதுத்தேர்வு(நீட்டு தேர்வு)த் திணிப்பு, தமிழக நலன்களுக்கு எதிரான திட்டங்களைச் செயற்படுத்தல், நவோதயா பள்ளிகள் மூலமும் பிற வகைகளிலும் இந்தி, சமற்கிருதத்தைத் திணித்தல் எனத் தமிழ்நாட்டைச் சிதைத்து வருகிறது. இவையெல்லாம் இந்தியத் துணைக்கண்டத்தின் வலிமைக்கு ஊறுநேர்விக்கும் என அறிந்தும் தன்னை…

கம்பன் விழா, பிரான்சு

புரட்டாசி 07 & 08 , 2048 சனி 23& 24.09.2017 15.00 மணி முதல் கம்பன் விழா, பிரான்சு நாட்டியம் வாழ்த்துரை விருதுகள் வழங்கல் சிறப்புரை பாட்டரங்கம் பட்டிமன்றம் ஆய்வுரை கவிமலர் பாவலர் பட்டம் வழங்கல் வழக்காடு மன்றம் சுழலும் சொற்போர் விருந்தோம்பல்

திருக்குறள் கல்வெட்டுகள் – கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா

புரட்டாசி 18, 2048 புதன் 04.10.2017  பிற்பகல் 3.00 இலயோலா கல்லூரி, சென்னை திருக்குறள் கல்வெட்டுகள் – கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா அன்புடன் பா.இரவிக்குமார் நிறுவனர், குறள்மலைச்சங்கம் பேசி : 9543977077

பொதுத் தேர்வும் (நீட்/NEET)இளந்தளிர் அனிதாவின் இழப்பும் – அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்

பொதுத் தேர்வும் (நீட்/NEET) இளந்தளிர் அனிதாவின் இழப்பும் – அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்     அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் எனும் சிற்றூரில் கூலித் தொழிலாளியான திரு.சண்முகம் அவர்களின் குழந்தை அனிதா ‘நீட் (NEET)’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வினால் தனது வாழ்நாள் கனவான மருத்துவக் கல்வியை இழந்தார். முறையான மருத்துவச் சேவை கிடைக்காததால் தனது சிறு வயதிலேயே தாயை இழந்தார் மாணவி அனிதா. இப்பேரிழப்பு தந்த வலியால், தான் மருத்துவராகி தனது சிற்றூர் மக்களுக்கு உதவ வேண்டுமென்ற உயரிய குறிக்கோளுடன் தன்…

தைவானில் தமிழ்ப் பள்ளி தொடக்க விழா-  முப்பெரும்விழா

புரட்டாசி 07, 2048 / 23-09- 2017, சனிக்கிழமை மாலை 5.30 – 7.00 தைவானில் தமிழ்ப் பள்ளி தொடக்க விழா-  முப்பெரும்விழா தேசியத் தைவான் பல்கலைக்கழக விளையாட்டு வளாகம், தைவான் தைவானில், தமிழ்ப் பள்ளி  தொடக்க விழா, தமிழ்ச் சங்கத் தலைவர்  முனைவர்  (இ)யூசி அவர்களுக்கு பாராட்டு விழா, தமிழ்ஆராய்ச்சி மாணவர்களுக்கு வரவேற்பு என முப்பெரும் விழா நடைபெறுகிறது.  சீன மண்ணில் பொங்குதமிழோசைதனை பரவச்செய்த தைவான் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் (இ)யூ சி அவர்களின் தமிழ்த் தொண்டு அளப்பரியது. உலகப்பொதுமறை திருக்குறள், பாரதியார்…

தோள்கள் நமது தொழிற்சாலை – இலக்கு நிகழ்வரங்கம்

புரட்டாசி 06, 2048   – வெள்ளிக்கிழமை    22 . 09. 2017  மாலை – 06.30 மணி   பாரதிய வித்யா பவன், சிற்றரங்கம்,  மயிலாப்பூர், சென்னை 600 004.   வணக்கம். இயற்கை, இயற்கை உணவு, உடல் நலன், சுற்றுச்சூழலைப் பாதிக்காத  பரம்பரைத் தொழில் – இவற்றில் அக்கறையுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு தலைமை : திரு வீ . அரிதாசன்,  (நிறுவனர் :  எக்கோ கேர் / ECO CARE )…

பன்னீர்செல்வம் அணியினர் தகுதியிழப்பு – தனபால் அறிவிப்பு (கற்பனைதான் – இலக்குவனார் திருவள்ளுவன்)

பன்னீர்செல்வம் அணியினர் தகுதியிழப்பு – தனபால் அறிவிப்பு (கற்பனைதான்)    சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு ப.தனபால் இன்று திடீரென்று  ஊடகத்தினரை வரவழைத்தார். அப்பொழுது அவர்,  முதல்வர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எதிராக வாக்களித்த பன்னீர் அணியைச்சேர்ந்த  11 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாகவும் இப்பொழுது் தகுதி நீக்கம செய்த தினகரன் அணியினரின் தகுதி நீக்கத்தை விலக்கிக் கொள்வதாகவும் தி.மு.க. உறுப்பினர்கள் 21 பேர் மீதான நடவடிக்கையைக் கைவிடுவதாகவும் தெரிவித்தார். அவர் கூறியதாவது, “ஆளாளுக்கு அம்மா ஆவி பேசியது, ஆதன்(ஆன்மா) பேசியது என்றெல்லாம் சொல்கிறார்களே! நம்முடன் அம்மா…

அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே! – இலக்குவனார் திருவள்ளுவன்

அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே!      அறிவியல் என்றால் நம்மில் பலர் ஆய்வகத்தில், குடுவைகளில் ஆய்வு செய்வது எனத் தவறாகக் கருதுகிறோம். ஆனால், “கூர்ந்து நோக்குவதாலும்  ஆய்வாராய்ச்சியாலும் கண்டறியப்பட்டு முறைமைப் படுத்தப்படும்” எல்லாம் அறிவியலே.   இத்தகு அறிவியலில் தமிழ் மக்கள் தொடக்கக் காலத்தில் இருந்தே சிறந்து விளங்கியுள்ளமையை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார் தொல்காப்பியர். இவ்வாறு பொருள் குறித்து அமையும் சொற்கள் எல்லாம் அறிவியல் தன்மை கொண்டுள்ளமைதான் தமிழுக்கே உள்ள சிறப்பு. காலம் செல்லச் செல்ல பல…

தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்

(தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware  1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware 2/2 ware என்பது பொருள் அல்லது பண்டம் என்பதைக் குறிக்கும் என்பது உண்மைதான். எனவே, ஆட்சியியலில்   warehouse –  கிடங்கு, பொருளறை, பண்டக மனை என்றும்  வேளாணியலில் பொருளைத தேக்கி அல்லது சேமித்து வைக்குமிடம் என்னும் பொருளில்  warehouse   –  தேக்ககம், கிட்டங்கி வங்கியியலில் காப்பகம், பண்டகச்சாலை  என்றும் பொறியியலிலும் மனையியலிலும்  glassware – கண்ணாடிப் பொருட்கள்  என்றும் குறிக்கின்றனர். மேசையில் வைக்கப்படும்…