அடுத்தவன் வாயில் உண்பான் உண்டோ?  – அ.பு.திருமாலனார்

அடுத்தவன் வாயில் உண்பான் உண்டோ?   அவனவன் வாயா லன்றிப் பிறனெவன் உண்ண வல்லான் அவனவன் கண்ணா லன்றிப் பிறனெவன் காண வல்லான் அவனவன் செவியா லன்றிப் பிறனெவன் கேட்க வல்லான் அவனவன் மொழியினத்தைப் பிறனெவன் காப்பான் வந்தே!   தன்னினம் காப்ப தற்கே தகவிலான் தன்னி னத்தின் திண்ணிய நெறியைப் போற்றுந் திறனிலான் தேர்வார் தம்மை அன்னிய ரென்றே யெண்ணி ஆழ்குழி வெட்டி யதனுள் கண்ணிலா னாய் வீழும் கதையிவன் கதையாய்ப் போயிற்றே! பட்டங்கள் பெற்றா லென்ன? பதவிகள் பெற்றா லென்ன? கற்றவர்க்…

காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார் பழனிசாமி, காயத்திரி மனோகரன், தமிழரசி இளங்கோவன்

காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு (பாடல்கள்). 1/2     மலேசியாவில் தமிழர் பண்பாடு பல காலமாக வளர்ந்து வேரூன்றியது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்பண்பாடுகளில் பல காலத்தால் அழிந்துவிட்டன. விடுதலைக்குப் பின்பு பல பண்பாடுகள் கால ஓட்டத்தால் இருந்த சுவடு தெரியாமல் போய்விட்டன, இவற்றுள் குறிப்பிடத்தக்கது தமிழ்ப்பள்ளிகளில் வழக்கத்திலிருந்த பல பண்பாட்டு நடவடிக்கைகளாகும். அவற்றுள் பாடல்கள், விளையாட்டுகள், பள்ளியின் அமைப்பு, பெற்றோர் ஆசிரியர் ஈடுபாடு ஆகியன குறிப்பிடத்தக்கன.  இக்கருத்தாய்வில் அந்தக் காலத்தில் பள்ளியில் பாடப்பெற்ற சில பாடல்களையும் பள்ளிகளில் மேற்கொண்ட சில…

மறக்க முடியுமா? – பேராசிரியர் நா.வானமாமலை : எழில்.இளங்கோவன்

  மறக்க முடியுமா? – பேராசிரியர் நா.வானமாமலை  இவர் எந்த ஒரு கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ பேராசிரியராகப் பணியாற்றவில்லை. தொழில் முறைப் பேராசிரியராகக் கூட இருந்ததில்லை. ஆனாலும் இன்றும் கூட அறிவுத் தளங்களில் இவர் பேராசிரியர் என்றே அழைக்கப்படுகிறார் என்பது இவரின் பெருமைக்குச் சான்று.  திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இவரின் சொந்த ஊர். கார்த்திகை 22, 1938 / 7-.12.-1907 அன்று இவர் பிறந்தார்.  திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பயின்ற இவர் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.   பொதுவுடமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட…

தமிழ்ப்பல்கலைக்கழக நிலத்தை, இந்தி சமற்கிருதப்பள்ளிக்குத் தாரை வார்ப்பதா? –  பெ.மணியரசன் கண்டனம்

சீரழியும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்: கொந்தளிக்கும் பெ.மணியரசன்!   தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா (சி.பி.எசு.இ.பள்ளி) அமைப்பதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு இறங்கியுள்ளதற்குத் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், இந்திய அரசின் இந்தித் திணிப்புப் பள்ளியான கேந்திரியா வித்தியாலயா பள்ளி தொடங்கப்படுவது கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் முதன்மொழியான தமிழுக்கு உலகிலுள்ள ஒரே பல்கலைக்கழகம், தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகமாகும். 1981…

அனித்தாவின் பெயரில் புலமைப்பரிசில் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அனித்தாவின் பெயரில் புலமைப்பரிசில் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் !   தனது கல்வி உரிமைக்காகப் போராடி சாவடைந்து கொண்ட தமிழக மாணவி அனித்தாவுக்கு தனது மரியாதை வணக்கத்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அவரது பெயரில் புலமைப்பரிசில் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் பணிமனை  விடுத்துள்ள அறிக்கையின் முழுவிவரம் :   தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி செல்வி அனித்தா சண்முகம் தன்னைத்தானே அழித்துத் தனது உயிரை மாய்த்த நிகழ்வு, உலகத் தமிழ்…

மலேசியாவில் தமிழ்க்கல்வி – இருநூறாம் ஆண்டு விழா, சென்னை

மலேசியாவில் தமிழ்க்கல்வி – இருநூறாம் ஆண்டு விழா, சென்னை புரட்டாசி 03, 2048 / செவ்வாய் / 19.09.2017  பிற்பகல் 2.00 – 5.30 சென்னைப்  பல்கலைக்கழகம் & மலேசியக் கல்வி அமைச்சகம்    தலைமை: பேரா.இ.சுந்தரமூர்த்தி  

எத்தனை திலீபன்கள் வந்தாலும் நாம் விழித்தாலன்றி விடியாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

எத்தனை திலீபன்கள் வந்தாலும் நாம் விழித்தாலன்றி விடியாது! செட்டம்பர் திங்கள் திராவிட இயக்க வரலாற்றிலும் தமிழின வரலாற்றிலும் முதன்மையான திங்களாகும். செட்டம்பர் 15, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள். செட்டம்பர் 16 தன்மதிப்புச் சுடரொளி இராமச்சந்திரன் பிறந்த நாள். செட்டம்பர் 17  தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி பிறந்தநாள். தன்மானமும் உரிமையும் கொண்டவர்களாகத் தமிழர்கள் வாழ வேண்டும் என்று அவர்கள் கண்ட கனவு, அவர்களை எப்பொ ழுதாவது புகழ்வதால் நனவாகாது. செட்டம்பரில்  நம் உள்ளத்தை அரித்துக்கொண்டிருக்கும் மற்றொரு துயரம், திலீபன் இந்தியாவை நம்பி அளித்த உயிர்க்கொடை!…

தெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 1/2 : இலக்குவனார் திருவள்ளுவன்

  தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware 1/2  எந்த ஒரு சொல்லுக்குமான பொருளும் அச்சொல் பயன்படும் இடத்தைப் பொருத்தே அமையும். எனவே, வெவ்வேறு பயன்பாட்டுத்தளங்களில்  அல்லது இடங்களில் ஒரே சொல்லுக்கு வெவ்வேறு பொருள்  அமைவதும்  இயற்கை. நமக்கு அறிமுகமான சொற்கள்  நாம் கருதக்கூடிய பொருள்களிலேயே பிற இடங்களிலும் வருவதாகத் தவறாக எண்ணும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இப்போக்கால் கலைச்சொல் பெருக்கம் தடைப்படுகிறது; அறிவியல் துறையின் வளர்ச்சியும் இடர்ப்படுகின்றது.     இங்கு நாம் ஆங்கிலத்தில்  ஆர்டுவேர் / hardware எனச் சொல்வதைத்…

இளைஞர் கைகளில் இணையத்தமிழ் – இலக்குவனார் திருவள்ளுவன்

இளைஞர் கைகளில் இணையத்தமிழ்    தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அனைவரும் எதிரொலிக்கும் கவலை முதியோர் அவையாக இருக்கிறதே என்பதுதான். எந்தத் தமிழ்க்கூட்டம் என்றாலும், இளைஞர்களைக் காண முடிவதில்லை. ஒருவேளை உரையாளர்களின் குடும்பத்தினர் யாரும் வந்திருந்தாலும் அவர்கள் ஒருவர் அல்லது இருவராகத்தான் இருப்பர். கூட்டம் இறுதிவரை இருப்பார்கள் என்பதும் ஐயமே. இதற்காகவே நான் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தினேன். அங்கும் தமிழ் பயிலும் ஏதோ ஓர் ஆண்டின் மாணாக்கர்கள் மட்டும் அமர்ந்திருப்பார்கள். வருபவர்கள் ஆர்வமாகத்தான் இருப்பர். ஆனால், கல்லூரியில் இந்த நிகழ்ச்சிக்கு இத்தனாம் ஆண்டு…

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை : 2017 – 2020 பருவத்திற்குரிய பொறுப்பாளர்கள்

  அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை : 2017 – 2020 பருவத்திற்குரிய பொறுப்பாளர்கள்   தமிழகத்திலும் பிற  மாநிலங்களில் செயல்பட்டு வரும் பதிவு செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்ட தமிழ்ச்  சங்கங்களின் கூட்டமைப்பு ‘அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை’ பேரவையின் செயற்குழுக் கூட்டமும் பொதுக்குழுக் கூட்டமும் சென்னை வண்டலூரில் உள்ள தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தில் 10/09/2017 அன்று காலை முதல் மாலை 5 மணிவரை  நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2017 – 2020 பருவத்திற்குரிய பொறுப்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். . தலைவர்:திரு.மீனாட்சி சுந்தரம்(முத்து.செல்வன்) (பெங்களூர்த் தமிழ்ச்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙோ)   தம் உடல் நலனைக்கருதாமல் தமிழ் நலனைக் கருதி வாழ்ந்த பேராசிரியர் இலக்குவனாருக்குத் திடீர் நலக்குறைவு ஏற்பட்டது. செருப்புக் கடியால் காலில் ஏற்பட்ட புண் உடனே கவனிக்கப்படாமையால் முற்றி விட்டது; மருத்துவமனையில் சேர்ந்தார்.  பேராசிரியருக்கு நீரிழிவு நோய் உண்டு. அதனால் புண் புரையோடிப் போனதை மருத்துவர்களே கவனிக்கவில்லை. முருகன் தம்மைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் இருந்த பேராசிரியர்  நம்பிக்கை இழந்தார். தமிழுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் உள்ளனவே எனக் கருதினார்….