கவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது

கவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது     சென்னை. ஐப்பசி 12, 2048 / அக். 29. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் புது நூற்றாண்டுப் புத்தக இல்லமும் (என்.சி.பி.எச்.) இணைந்து நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற நூல்களுக்கு சென்னை முகப்பேரிலுள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.  இவ்விழாவில்,  வந்தவாசியை அடுத்த  அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ எனும் நூல், 2016-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சிறுவர் இலக்கிய நூலாகத் தேர்வு…

கொள்கைக்காகவே கட்சிகளும் தலைவர்களும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

கொள்கைக்காகவே கட்சிகளும் தலைவர்களும்!   நாம் விரும்பும் கருத்துகளுக்கேற்ற தலைவர்களைப் பின்பற்றி அவர்களது கட்சியில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். அல்லது நமது கொள்கைகளுக்கேற்ற கட்சியை விரும்பி அதன் தலைவர் மீது பற்று வைக்கின்றோம். ஆனால், நாம் விரும்பும் கொள்கைகளில் இருந்து அல்லது நம்மை ஈர்த்த கொள்கைகளில் இருந்து தலைவர்கள் விலகினாலும், நாம் கொத்தடிமைகளாக இருந்து அவற்றுக்கு மாறான கருத்துகளைத் தெரிவிக்கும் தலைவர்களைப் போற்றுகிறோம். இந்தக் கொத்தடிமைத்தனத்தால்தான் நாடு அழிவினைச் சந்திக்கிறது. எனவே, நாம் கொள்கைளுக்கு மாறாகக் கடசியும் தலைவர்களும் தடம் புரண்டால் நம் எதிர்ப்பைத்…

பாரதிதாசன் விழா, மும்பை

04.11.2017 சனிக்கிழமை மாலை 6.30 05.11.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 பாவேந்தர் பாரதிதாசன் விழா, மும்பைத் தமிழ்ச்சங்கம் சிறப்பு விருந்தினர் : முனைவர் ய.மணிகண்டன் சிறப்புரை : வெ.பாலு   எசு.இராமதாசு, தலைவர் கு.ஆறுமுகப்பெருமாள், சுந்தரி வெங்கட்டு, செயலர்கள்  

மாற்றுத் திறனாளிகளைக் காப்போம் – தி.வே. விசயலட்சுமி 

  மாற்றுத் திறனாளிகளைக் காப்போம்!   உலகத்தில் இயல்பான மனிதர்கள் படைக்கும் அருவினையை/சாதனையைவிட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் அருவினைகள் பல என்றே சொல்லலாம். சாதனைகள் படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்குச் சான்றாய் உலகில் பலர் திகழ்ந்தனர்; திகழ்கின்றனர். கண்பார்வையற்ற கிரேக்கக் கவிஞர் ஓமர், இலியம், ஒடிசி போன்ற காவியங்களைப் பாடி இறவாப் புகழ் பெற்றனர். தமிழகத்தில் அந்தகக்கவி வீரராகவர் போன்ற எண்ணற்றோர் தீந்தமிழ்ப் பாக்களைத் தீட்டியுள்ளார்.   பார்வையற்ற, காது கேளாத, பேச வியலாத பெண்மணி எலன் கெல்லர் ஆடம் என்ற அமெரிக்க…

இலை அறிவியல் (science of leaf )-இலக்குவனார் திருவள்ளுவன்

இலை அறிவியல் (science of leaf )    காம்புடன் கூடிய தண்டின் பக்கப்புற வளர்ச்சியே இலை எனப்படுகிறது. இலைகளில் உள்ள பச்சையம் என்னும் பொருள், இலைகளுக்குப் பச்சை நிறம் கொடுக்கிறது. இலைகளில் உள்ள மிக நுட்பமான குழாய்களே நரம்புகள் எனப்படுகின்றன. இந்நரம்புகளே வேரில் இருந்து வரும் நீரைச் செடி முழுவதற்கும் பரப்புகின்றன. இலைக்கு அடிப்புறத்தில் கண்ணுக்குப் புலப்படாத பல்லாயிரக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இவற்றின் மூலமே காற்று இலைகளுக்குள் செல்கிறது. இவ்வாறு புகும் காற்றில் இருந்து கரி வளியை இலைப்பச்சையம் பிரித்து எடுக்கிறது. காற்றில்…

மூ மா(Dinosaur) – இலக்குவனார் திருவள்ளுவன்

  மூ மா(Dinosaur)    ஊழித் தொடக்கக் காலத்தில் தயனோசர்(Dinosaur) முதலான விலங்குகள் வாழ்ந்தமையாகக் கண்டறிந்துள்ளனர். அவற்றைத் தமிழில் கூற இயலுமா என்றால் மிகச் சிறப்பாகக் கூற முடியும் என்பதே உண்மை.  நீரில் வாழும் உயிரினங்களை நீரி என்றும் ஊர்ந்து வாழும் உயிரினங்களை ஊரி என்றும் வயிற்றால்-அகட்டால் ஊர்ந்து செல்லும் பாம்பினை அகடூரி என்றும் அழைத்துள்ளனர். இவை போல் மிக மிக மிக மூத்தக் காலத்தினைச் சேர்ந்த – அழிந்து ஒழிந்து போன பேரளவிலான ஊரும் உயிரினங்களை – ஊர்வனவற்றை  மூ ஊரி – மூவூரி…

திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் – மலர்

திருப்பூர்தேவியின் குறும்பாக்கள்    மது அருந்தாமலே வாழ்ந்து முடித்தவனை மது நிரம்பிய மலர்களால் போர்த்தி இருந்தனர் அவன் அந்திமத்தில்! ++ பூவாங்கக் காசு போதாததால் அதை விற்கும் வேலையை வாங்கிக் கொண்டாள் ஏழைச் சிறுமி! ++ சிதைந்து உடன்கட்டை ஏறின இறந்தவருடன்… சாலையில் இறைக்கப்பட்ட மலர்கள்…! ++           வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (25)   தொடர்ச்சி)   ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26)  7. அறச் சீற்றமும் புதுமை நோக்கும்  துறை தோறும் மண்டிக் கிடக்கின்ற சிறுமைகளும் சீரழிவுகளும் பெருங்கவிக்கோவின் உள்ளத்தை உறுத்து கின்றன. அவரைக் கோபம் கொள்ளச் செய்கின்றன. ஐயோ, நம் நாடும் நம் மக்களும் இப்படி இருக்கிறார்களே என்ற வேதனையால் எழும் அறச்சீற்றம் அவர் கவிதைகளில் சூடாகப் பரவிப் பாய்வதை பல இடங்களில் காண முடிகிறது. நமக்குள் தமிழர்க்குள் நாம் காணும் பெருங்குறை என்? நமக்குள் நாமே நாவளர்த்து நயம்…

வேண்டாமே இந்தப் ப(பு)கை! – அகரம்.அமுதா

வேண்டாமே இந்தப் ப(பு)கை!    நகைக்கிடங் கான நறுவாய் நகைபோய்ப் புகைக்கிடங் காதல் புதிர்!   வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை நம்புகையில் வீழும் நலம்!   நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல் தகையில்லை வேண்டும் தடை!   காற்றிற்கும் மாசாகும் கைப்பிடித்தார் வாழ்வடைக்கும் கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்!   புகையின் சுவைகண்டார் போயொழிய வேறோர் பகையில் புகையே பகை!   சிறிதும் கரித்தூளைத் தேடற்க தேடின் பொறியைந்தும் பாழாம் புரி!   பற்றவைக்கும் பாழ்சுருளால் பாலன்ன நெஞ்சினிலும் புற்றுவைக்கும் வேண்டாம் புகை!  …

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இரத்தத்தான முகாம்

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இரத்தத்தான முகாம் துபாய் : துபாய் ஈமான் அமைப்பு  ஐப்பசி 17, 2048 / 03.11.2017  / வெள்ளிக்கிழமை இரத்தத்தான முகாம் ஒன்றை நடத்துகிறது. இந்த முகாம் காலை 9 மணி முதல்நண்பகல்  1.30 மணி வரை நடைபெறும். துபாய் அல் நக்தா பகுதியில் அமைந்துள்ள என்.எம்.சி.  மருத்துவமனை பின்புறம் உள்ள திறன் மண்டல(talent zone)நிறுவனத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் அமீரக அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள…

மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 2/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 3/5   குறித்த நாளில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக் கால் மண்டபத்தில் சைவ சித்தாந்த சபையின் ஆண்டு விழா தொடங்குகின்ற நேரம். எல்லோரும் வந்துவிட்டார்கள். 9.15 ஆகியும் தலைவர் வரவில்லை. கூட்டத்தில் ஒரு பெரிய சலசலப்பு. எல்லோர் கையிலும் துண்டு அறிக்கைகள். அதில் ‘மறைமலையடிகள் ஒரு சைவரா?’ என்ற தலைப்பில் சில கேள்விகள் அச்சிடப் பெற்றிருந்தன. இது வந்திருந்தோர் உள்ளத்தில் ஒரு குழப்பத்தையும், தலைவர் உள்ளத்தில் ஒரு வருத்தத்தையும் உண்டாக்கிவிட்டது. தலைவர் வராமைக்குக் காரணம் அது…

புறநானூற்றுச் சிறுகதைகள்:  நா. பார்த்தசாரதி: தோற்றவன் வெற்றி!

புறநானூற்றுச் சிறுகதைகள் 4. தோற்றவன் வெற்றி! ‘வெண்ணிப் பறந்தலை’ என்ற இடத்தில் நிகழ்ந்த அந்தப் பயங்கரமான போரில் கரிகாலன் வெற்றி அடைந்தான். அந்த வெற்றியைக் கொண்டாடும் விழா அன்று அவையில் சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது! பாவாணர் பலர் அவன் வெற்றி மங்கலச் சிறப்பைப் பாடல்களாகக் கூறிப் பாராட்டிப் பரிசு பெற்றுச் சென்று கொண்டிருந்தனர். எல்லோருடைய பாடல்களும் அந்தப் போரில் வெற்றி பெற்றவனாகிய கரிகாலனையே சிறப்பித்துப் பாடியிருந்தன. வென்றவனைப் பற்றி வெற்றிமங்கலம் பாடும்போது அப்படிப்பாடுவதுதானே இயற்கையும் ஆகும்?   ஆனால், இறுதியாக வெண்ணிக்குயத்தியார் என்ற ஒரு…

1 2 6