திருக்குறள் முற்றோதல், தட்டாஞ்சாவடி

திருக்குறள் முற்றோதல், தட்டாஞ்சாவடி      புதுவைத் திருக்குறள் மன்றமும் தனித்தமிழ்இயக்கமும் இணைந்து திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியைத் தட்டாஞ்சாவடி சமரசசன்மார்க்க சங்கத்தில் நடத்தின.   தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமைதாங்கிப் பேசினார். புதிமத்தின் தலைவர் சுந்தரஇலட்சுமிநாராயணன் முற்றோதலைத் தொடங்கி வைத்தார். அறத்துப்பாலின் 38 அதிகாரங்கள் படிக்கப்பட்டன.   ஒருவர் சொல்ல மற்றவர் அதைத் தொடர்ந்து சொல்லித் திருக்குறள் படிக்கும் வாய்ப்பை மகிழ்வுடன் பயன்படுத்திக் கொண்டனர். இராசாராம்,பாலசுந்தரம், கடலுார் பா.மொ.பாற்கரன், வெல்லும் துாயதமிழ் ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி, தமிழ்த்தென்றல், அரங்கநாதன், சமரசசுத்தசன்மார்க்க சாதனைச் சங்கத்தின் செயலர் கோவிந்தசாமி,…

தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா? – வைகோ கண்டனம்

தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா?    தமிழ்நாடு அரசுப் பணிக்கான போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவருக்கு ஒப்புதலளித்துத் தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) – வைகோ கண்டன அறிக்கை தமிழ்நாடு அரசுக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்து வரும் தேர்வுகளில் இனி வெளி மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலைமை ஏற்படும் எனப் பல்வேறு தரப்பினரும் பதறுகின்றனர்….

காக்கா காக்கா இயல் கொண்டுவா! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்

  காக்கா காக்கா இயல் கொண்டுவா!     காக்கா காக்கா இயல் கொண்டுவா காடைக்குயிலே இசை கொண்டுவா மயிலே மயிலே நடை கொண்டுவா மானத் தமிழா இனம் கொண்டுவா சொல்லால் மனதால் மொழி கொண்டுவா சோலைக்கிளி போல் திறம் கொண்டுவா கருத்தால் எழுத்தால் உரம் கொண்டுவா காணும் பெயரிலே தமிழ் கொண்டுவா பையப் பைய நம்மொழி கொண்டுவா பகைவர் பழிப்பினும் பண்கொண்டுவா நைய நைய இவ்வன்னியம் வேண்டா நாறும் ஆங்கிலம் இனி வேண்டா படிக்கும் மறையாய் குறள் கொண்டுவா பாடல் இனிக்கக் கலி கொண்டுவா செவிக்கும்…

வவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்!

வவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்! தமிழர் தேசத்தின் இதயமாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்திச் சிறப்பிக்கின்ற – மதிப்பளிக்கின்ற ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2017’ எழுச்சி நினைவேந்தல்,  வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லச் சூழலில், வவுனியா மாவட்ட மக்கள் குழுவின் ஒழுங்கமைப்பில் திங்கள்கிழமை மாலை 6.00 மணிக்குக் கடைப்பிடிக்கப்படவுள்ளது.  குறித்த…

மாவீரர் திருநாள்! உண்மையான அஞ்சலி இதுதான்! இ.பு.ஞானப்பிரகாசன்

  மாவீரர் திருநாள்! உண்மையான அஞ்சலி இதுதான்!   உலகெங்கும் வாழும் தமிழ்மிகு நெஞ்சங்களே! இதோ, மாவீரர் திருநாள்! இன்னுயிர்ச் சொந்தங்களைக் காக்கத் தன்னுயிர் துச்சமென நீத்த காவல் தெய்வங்களின் நாள்! உரிமைப் போருக்காக உயிராயுதம் ஏந்திய ஈகச் செம்மல்களின் நாள்! உலக வல்லரசுகள் எல்லாம் ஒன்று திரண்டு வந்தும் இறுதி வரை களமாடிய மாவீரத் திலகங்களின் நாள்! இப்பேர்ப்பட்ட நாளில் அப்பேர்ப்பட்ட வீரப் பெருமக்களுக்காக நாம் செய்யப் போவது என்ன? வழக்கம் போல் மெழுகுத்திரி ஏற்றியும் பாமாலை போற்றியும், மலர்கள் தூவியும் மேடைகளில் கூவியும்,…

அதிரடிகள் தொடரட்டும்… பாசகவினர் இல்லங்களிலும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிரடிகள் தொடரட்டும்… பாசகவினர் இல்லங்களிலும்!  ஒரு  செயல் சரியா அல்லது தண்டனைக்குரியதா? என்பது அச்செயலைப்பற்றி மட்டும் முடிவெடுப்பதல்ல! அதனை ஒத்த பிற  செயலைச் செய்தவர்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொருத்தே முடிவெடுக்கப்படுகிறது. அதுபோல் நல்ல  செயலும் அதிகாரத்தினரிடம் உள்ள  செல்வாக்கின்மையால் குற்றச் செயலாக மாறுவதும் நிழ்கிறது. எனவே, எந்த ஒரு  செயலின் மதிப்பும் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகின்றது என்பதே  இன்றைய நம் நாட்டின்   இலக்கணமாக மாறிவிட்டது.  சசிகலா குடும்பத்தினர், அவர்களின் நண்பர்கள், பணியாளர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நடந்த, நடக்கின்ற வருமானவரித்துறையின் அதிரடி ஆய்வுகள் ஊழலை ஒழிக்க …

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28)   தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 பகைமை வளர்த்து நாட்டு வளர்ச்சியைக் கெடுக்கிறார்கள். அரசியல்வாதிகளை நோக்கிப் பெருங்கவிக்கோ கடுமையாகக் கண்டனக்குரல் கொடுக்கிறார். பொய்கை போன்ற பொற்றிரு நாட்டில் பொய்நீர்ச் சாக்கடை புகுந்திடச் செய்தீர்! கால மெல்லாம் கட்சிகள் வளர்த்து ஞாலம் இன்று ஏல மிடுகிறீர்! மனச்சாட்சி கொன்று மறுபடி மறுபடி தினச்சாட்சி பொய்மை திளைத்து மகிழ்கிறீர்! தன்னலம் இன்றி இந்நாடு உயர என்ன செய்தீர்? எல்லாம் சுயநல வேட்டைக் காடாய் வேடிக்கை செய்தீர்! ஆட்டுக்(கு) ஓநாய்…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  03 –  சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  03 முன்னுரை   `இலக்கியம்’ என்பது தூய தமிழ்ச்சொல். இதனை ‘இலக்கு+இயம்’ எனப் பிரிக்கலாம். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். ஆகவே, இலக்கியத்தின் துணை கொண்டு அவ் விலக்கியத்திற்குரிய மக்களின் வாழ்வியலை அறிதல் கூடும். தமிழிலக்கியத்தின் துணை கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை அறியலாம்.   தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத்…

அறிஞர் மா.நன்னன் படத்திறப்பு, சென்னை 600 007

 கார்த்திகை 10, 2048 – ஞாயிறு – நவம்பர் 26, 2017 காலை 11.00 நடிகவேள் மன்றம், பெரியார் திடல்,  சென்னை 600 007 அறிஞர் மா.நன்னன் படத்திறப்பு நினைவேந்தல்   தமிழர் தலைவர் கி.வீரமணி  இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் தளபதி மு.க.தாலின் முனைவர் மறைமலை இலக்குவனார் கவிஞர் கலி.பூங்குன்றன் இரா. கோவிந்தன்   -நன்னன் குடி

பெயரிடாத நட்சத்திரங்கள், நூல் வெளியீட்டு விழா  , மும்பை

கார்த்திகை 09, 2048 – சனி – நவம்பர் 25, 2017  மாலை 6.00 மாதுங்கா, மும்பை ஈழப்பெண்போராளியின் கவிதைகள் பெயரிடாத நட்சத்திரங்கள், நூல் வெளியீட்டு விழா அன்புடையீர், வணக்கம். நிகழ்வுக்கு உங்கள் வாழ்த்துகளும் பங்களிப்பும் பெருமை சேர்க்கும் புதியமாதவி மும்பை பேச: 091 9969647854 இலெமூரியா அறக்கட்டளை  

இலக்கு, கிருட்டிணா  இனிப்பக கார்த்திகை  நிகழ்வு

கார்த்திகை 08, 2048 – 24.11.2017  வெள்ளிக்கிழமை –  மாலை  06.30 மணி  பாரதிய வித்யாபவன் சிற்றரங்கம்,                  மயிலாப்பூர், சென்னை 600004. தோள்கள் நமது தொழிற்சாலை   வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு  தலைமை : மருத்துவர் மா.மகேசுவரி           [நிறுவனர் : நல்வாழ்வுப் புத்தாக்கங்கள் (HEALTH INNOVATIONS)] அறிவுநிதி விருது பெறுபவர் : திரு த. செல்வராசு                (துறை : சுருள்பாசி வளர்ப்பு )…