திருக்குறள் கல்வெட்டு குறித்த கலந்தாய்வு, சென்னை

கார்த்திகை 24, 2048 / 10.12.2017 காலை 10.00 முதல் மாலை  5.00 மணி வரை திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் நீலாங்கரை, சென்னை 600 115 திருக்குறள் கல்வெட்டு குறித்த கலந்தாய்வு   [பதிப்பிடம்: மலையப்பாளைய மலை,  ஈரோடு] குறள்மலைச்சங்கம், வளசரவாக்கம், சென்னை 600 087

திருக்குறள் ந.மணிமொழியன் நினைவேந்தல், மதுரை

ஐப்பசி 27, 2048 /திங்கள்/ 13.11.2017/மாலை 5.00     உலகத்திருக்குறள் பேரவை, தமிழ்நாடு ஆயிர வைசியர் சங்கம் தரவு:  கவிஞர் இரா.இரவி

பவளவிழா காணும் திருவேலன் இலக்குவனாரின் பணியாளுமைகள் –  இலக்குவனார் திருவள்ளுவன்

  பவளவிழா காணும் திருவேலன் இலக்குவனாரின் பணியாளுமைகள்     ‘திருவேலன் ஒரு  பொறியாளர்’ என்று மட்டும் அறிந்திருப்போம். ஆனால் விரிந்து பரந்த அறிவு மிக்கவர். தரக்கட்டுப்பாட்டை நிலைப்படுத்தல், மேம்படுத்தல், ஆய்விடல், பயிற்சி யளித்தல் எனப் பல்துறைத் தொழில் நுட்பட அறிவராகத் திகழ்கிறார். வெளிநாடுகளில் பணியாற்றியதால் ஆங்கிலம்,செருமானியம், சப்பானியம்முதலான பல மொழிகள்  அறிந்தவர். பன்மொழிகள் அறிந்திருந்தாலும் தாய்த்தமிழை மறக்காதவர்.   பொறியாளராகப் பல நாடுகளில் பணியாற்றியவர் எனப் பொதுவாக எண்ணுவதைவிட அவர் எத்தகைய பணியாற்றிவர், ஆற்றிவருபவர் என்பதை அறிந்தால்தான் அவரின் சிறப்பை உணர முடியும்….

மறைமலையடிகள் 5/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி)   மறைமலையடிகள் 5/5  ‘நூறாண்டு வாழ்வது எப்படி?’ என்று ஒரு நூலை எழுதி வெளியிட்ட அடிகளார் அவர்கள் 75 ஆண்டுகளில் இயற்கை எய்தினார்கள். அவர்களது உடலை எரியூட்ட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அவரது உடலை எரியூட்டாமல் அடக்கம் செய்து ஒரு நினைவுச் சின்னத்தை அங்கு எழுப்ப வேண்டும் என்று அவருடைய மக்கள் மாணிக்கவாசகத்திடமும், திருநாவுக்கரசிடமும் தெரிவித்தேன். அதைக் கேட்டு அவர்கள் வருந்தி “‘அடிகளாரே தமது உடலைப் புதைக்காமல் எரியூட்ட வேண்டுமென்று கட்டளையிட்டிருக் கிறார்கள் அண்ணா” என்று…

எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்!

  எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்!    திராவிட இயக்கத்தில் பற்றுக்கொண்ட தமிழறிவை எளியவருக்கும் புகட்டிய தமிழறிஞர் முனைவர் மா.நன்னன் அகவை முதிர்வால் தம் 94 ஆம் அகவையில்  இயற்கை எய்தினார். [சில நினைவுகள்: அறிஞர் நன்னன் ஐயா அவர்களுடனான நினைவுகளில் சிலவற்றைப் பகிர விரும்புகின்றேன். அவர் தமிழ்வளர்ச்சி இயக்குநராக இருந்தபொழுது தமிழ்வளர்ச்சி இயக்ககத்தின் செயல்பாடின்மைபற்றி  கருத்து தெரிவித்தேன். அதற்கு அவர், “நான் பெரியார்வழி வந்தவன். உங்கள் கருத்தைத் தமிழ் ஆர்வத்தில் எழுந்ததாக உணர்கிறேன். ஆனால், பிறர் அவ்வாறு எண்ணாமல்…

ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்!    ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்க உள்ள தமிழ்ப்பீடத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கி.பழனிச்சாமி, தமிழக அரசு சார்பில் பத்துகோடி உரூபாய் நன்கொடை அளித்துள்ளார். எனவே நாமும் அவரைப் பாராட்டி நன்றி கூறுகிறோம். மக்கள் அவரை எளிதில் சந்திக்க முடியும் வகையில்  காட்சிக்கு எளியராக அவர் உள்ளமையே நன்கொடை வேண்டுகோள் உடனே பயனித்துள்ளது எனலாம்.   இசையமைப்பாளர் அ.இர.(ஏ.ஆர்.) இரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் பெற்ற நிதியில்  இருந்து கனடா நிறுவனம் ஒன்று…

தனிமங்கள்(Chemical Elements) – இலக்குவனார் திருவள்ளுவன்

 பெட்டகம் தனிமங்கள்(Chemical Elements)  அணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல சேர்ந்தது தனிமம்(நடநஅநவே) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல் மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. ஆதலின் ஒரே அணு எண் கொண்ட அணுக்களால் முழுவதுமான பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம். இதில் இரும்பு அணுக்களின் பொருளைத் தவிர வேறு எந்தப் பொருளின் அணுக்களும் இரா. தனிமமானது மாழை(உலோகம்), அல்மாழை(அலோகம்) என இருவகைப்படும்.   இயல்பான நிலையில் தனிமங்கள்  திண்பொருளாகவும்(எ.கா. பொன், செம்பு) நீர்ப்பொருளாகவும் [(எ.கா. …

நமது தேவை நவோதயா பள்ளி அல்ல! தாய்த்தமிழ்ப்பள்ளிகளே! – இலக்குவனார் திருவள்ளுவன்

பெட்டகம் நமது தேவை நவோதயா பள்ளி அல்ல! தாய்த்தமிழ்ப்பள்ளிகளே! . இந்தியா என்பது இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ இயற்கையாய் அமைந்த நாடன்று. அயலவர் ஆட்சி நலனுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை அரசமைப்பு. இந்த அமைப்பு அனைத்துத் தேசிய இனங்களின் கூட்டமைப்பாகச் செயல்பட்டால் வலிவும் பொலிவும் மிக்கதாக விளங்கும். மாறாக ஒரே மொழி ஒரே நாடு என்ற அடிப்படையில் இன அழிப்பு முயற்சியில் ஈடுபட்டால் சிதைவுண்டு போகும்   ஆனால் இந்தியாவிற்கு அமைந்த நலக்கேடு என்னவெனில் மத்திய அரசு எப்பொழுதும் நாட்டு ஒற்றுமையைப் பேசிக் கொண்டே…

இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை

இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை கார்த்திகை 22, 23& 24, 2048  /  8,9,10 திசம்பர் 2017 இடம் : மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகம்   பேரன்புடையீர், வணக்கம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியற்புலம், மொழியியல், தகவல் தொடர்பியற்புலம், திருமூலர் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியன உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினை இவ்வாண்டு மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. மாநாட்டின் முதன்மைக் கருப்பொருள்: இரட்டைக் காப்பியங்கள் துணைக் கருப்பொருள்:…

வகுப்பறையில் தொடங்கும் நல்ல மாற்றங்களே   மன்பதையையும் மாற்றும்  ஆற்றல் படைத்தது! – மு.முருகேசு

வகுப்பறையில் தொடங்கும் நல்ல மாற்றங்களே   மன்பதையையும் மாற்றும்  ஆற்றல் படைத்தது! – கவிஞர் மு.முருகேசு    வந்தவாசி.நவ.05. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம்,  எசு.ஆர்.எம்.இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையம் ஆகியன இணைந்து நடத்திய கல்வி நூல் வெளியீட்டு விழா, நூலகத்திற்கான அதிக உறுப்பினர்களைச் சேர்த்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, நூலகத்திற்கான தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரு விழாவில், வகுப்பறைச் சூழலில் குழந்தைகளின் மனநிலையில் ஆசிரியர்கள் உண்டாக்கும்  நல்ல மாற்றங்களே நாளைய சமூகத்தையும் மாற்றும் ஆற்றல படைத்தது என்று…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  01–  சி.இலக்குவனார்

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  01–  சி.இலக்குவனார்   அ.  முகவுரை, பதிப்புரை முகவுரை   இமிழ்கடல் உலகில் இனிதே வாழும் மக்கள் இனங்களுள் தமிழ் இனமே தொன்மைச் சிறப்புடையது. ஆயினும், தமிழ் இனத்தின் தொன்மை வரலாற்றைத் தமிழரே அறிந்திலர். முன்னோர் வரலாற்றைப் பின்னோரும் அறிந்து கொள்ளுதல் மக்களின் முன்னேற்றதிற்குப் பெருந்துணை புரிவதாகும்.   தமிழர் வரலாறு இன்னும் புதைபொருளாகவே இருந்து வருகின்றது. வெளிவந்துள்ள வரலாற்று நூல்களில் தமிழரைப்பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளுள் பல உண்மையொடு பொருந்தாதனவாய் உள்ளன. வரலாற்றாசிரியர் பலர்க்குத் தமிழிலக்கிய…

தமிழக வரலாறு 1/ 5 – மா.இராசமாணிக்கனார்

தமிழக வரலாறு 1/ 5  அரசியல் வரலாறு  இன்றுள்ள தமிழ் நூல்களுள் தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்கள், பத்துப் பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன சங்க நூல்கள் என்று பெயர் பெறும். இவையாவும் ஏறத்தாழக் கி. பி. 300-க்கு முற்பட்டவை. இந்நூல்களில் உள்ள செய்திகள் எல்லாம் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆட்சியையே குறிக்கின்றன. இம்முடி யுடைய மூவேந்தர் நெடுநில மன்னரென்றும், இவர்க்கு அடங்கியும் அடங்காமலும் இருந்த பாரி, பேகன் முதலியோர் குறுநில மன்னர் என்றும் பெயர் பெற்றிருந்தனர்….