ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26)   தொடர்ச்சி)   ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27)   தீமைகள் வளர்த்து, மோசத் தீமையே. முன்னேறும்படி செய்வோர்பற்றி வருத்தத்துடன் அவர் குறிப்பிடுகிறார்.  வேசித் தனத்தை முதலாய் வைத்தார்-நாட்டில் வீறு கொண்டே எழுந்து விட்டார்-நன்மை பேசி வாயால் மழுப்புகின்றார்-அந்தோ பேடிமைத் தீம்ை வளர்த்து விட்டார்-விந்தை மோசத் தீமையே முன்னேறும்-என்ன . . . . . . .* இன்று இங்கு, நம் நாட்டில் உள்ள நிலைகள் பற்றி பெருங்கவிக்கோ நிறையவே கருத்துக்கள் சொல்லியிருக்கிறார் தன் கவிதைகளில்….

நான்!  –  அகரம் அமுதன்

நான்!    துன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன்!   கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன்  – அதன் குரல்வளை நெரித்துயிர் குடிக்கின்றவன்!   வன்முறை யார்செயினும் வெடிக்கின்றவன் – அந்தப் புன்முறை போய்மாளப் பொடிக்கின்றவன்!   பெயருக்கா எழுதுகோல் பிடிக்கின்றவன்? –என்றன் எழுத்தாலே இனப்பகை இடிக்கின்றவன்!   அகரம் அமுதன் http://agaramamutha.blogspot.in/2016/03/blog-post_76.html

தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 1/3 சிறுமி பேரரசி முத்துக்குமார்

தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 1/3     முன்னுரை   உலக நாடுகளின் அறைகூவல்களை(சவால்களை) எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும்   புது உத்திகளைத் தகவல் தொழில் நுட்பத்துறையில் மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின்  உயிர்நாடி  தகவல் தொழில் நுட்பத்தில் தொலைத்தகவல் பயன்பாடாகும். 2017 மலேசிய உலகத் தமிழ் இணைய மாநாட்டில் மலர்ந்த குறள் வெண்பா இணையக்குறளான உளம்புகு முதுமொழியே நின்தன் ஆளுமை இணையத் தளம்புகுவே மாமகுடம் (வெண்பா இணையக்குறள், 2017) எப்படித் தமிழ் இணையமொழியாக களம் புகுந்ததோ அப்படி தொலைத்தகவல் பயன்பாடும் பல துறைகளில்…

மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் – எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற என் நண்பர் ஒருவர் நல்ல படிப்பாளி, நிறைய படித்திருக்கிறார். அவரிடம் நான் கேட்டேன், “பூ.ஆலாலசுந்தரனார் குறித்து உங்களிடம் செய்தி ஏதாவது இருக்கிறதா?” அவர் சொன்னார், “இந்தப் பெயரையே நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன்” சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு நண்பரிடமும் இதே கேள்வியைக் கேட்டேன். “இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது!” இப்படிச் சொன்னார்…

புறநானூற்றுச் சிறுகதைகள்:  நா. பார்த்தசாரதி: பரணர் கேட்ட பரிசு

புறநானூற்றுச் சிறுகதைகள் 5. பரணர் கேட்ட பரிசு   பரணர் அந்தச்செய்தியைக் கேள்விப்பட்டபோது அவரால் அதை நம்பவே முடியவில்லை. வேறு யாரேனும் அப்படிச் செய்திருந்தால்கூடக் கவலை இல்லை. கேட்பவர்களும் தலை குனியத் தக்க அந்தக் காரியத்தைப் பேகன் செய்துவிட்டான் என்கிறார்கள். செய்தியின் வாசகங்களைப் பொய்யென்பதா? அல்லது அந்தச் செய்தியை நம்பத் துணியாத தம் மனத்தை நம்புமாறு செய்வதா! எதைச் செய்வதென்று தோன்றாது திகைத்தார் பரணர்.   அப்படி அவரைத் திகைக்கச் செய்த அந்தச் செய்திதான் என்னவாக இருக்கும்? உண்மையில் அது சிறிது அருவருப்பை உண்டாக்கக்கூடிய செய்திதான்….

மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 4/5   45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சன சபையில் மறைமலையடிகளார் பேசுகின்றபொழுது “கடவுள் நம்பிக்கை வர வரக் குறைந்து வருகிறது. கடவுள் இல்லை என்பவரும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணி(ப் பிள்ளை)யும், ச.ச.(J.S.) கண்ணப்பரும் “பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்” என நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள்.  நான் அதுசமயம்…