நடைமுறைப் புத்தாண்டில் நனிசிறந்து வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

எல்லா நாளும் ஒரு நாளே! இன்பமும் துன்பமும் வரு நாளே! இன்பம் வந்தால் மயங்கா தீர்! துன்பம் கண்டால் துவளா தீர்! பிறர் துன்பம் நீங்க உதவிடு வீர்! அவர்இன்பம் காண முயன்றிடு வீர்! மொழிச் சிதைப்பரை ஒதுக்கிடு வீர்! இனக்கொலைஞரை ஒழித்திடு வீர்! சாதிக் கொலைகள் இல்லாத சமயச் சண்டை மறைந்திட்ட ஏழ்மை எங்கும் காணாத நன்னாள்தானே எந்நாளும்! நாளும் மாறும் நாளில் இல்லை, உயர்வும் புகழும் வாழும் முறையும்! அல்லன நீக்கி நல்லன எண்ணில் ஒவ்வொரு நாளும் புது நாளே! இலக்குவனார்…

இரசினி கட்சி தொடங்குவதை எதிர்ப்பது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்

  இரசினி கட்சி தொடங்குவதை எதிர்ப்பது ஏன்? “புலி வருகிறது புலி வருகிறது” எனப்  பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார் இரசினி. இப்பொழுது ”வாசலில் நிற்கிறது, நான் சொல்லும் பொழுது வரும்” என்பதுபோல் கட்சி தொடக்கம் குறித்து அறிவித்துள்ளார். இதற்கே ஆதரவு, எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன. சட்டமன்றத் தொகுதிகள் அனைத்திலும் போட்டியிடப்போகும் அவர் கட்சியானது சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புவந்த்தும் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்ததும் முடிவெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்பு விரைவில் வந்தால்,  போதிய…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 கலைத்துறையில் காணப்படும் கீழ்நிலைகள் எண்ணிக் குமைகின்றார் பெருங்கவிக்கோ. அன்புத் தமிழர்கள் வளர்த்த அருங்கலையை இன்று “நாய் நரிகள் எல்லாம் புகுந்தே ஆடும் நாசத்தின் தலையுச்சி” ஆக்கி விட்ட அவலநிலையை நினைத்துக் கொதிக்கின்றார். படக்கலையில் காணப்படுகிற சிறுமைச் செயல்களை வருணித்து வருந்துகிறார். கலையின் பேரால் போடப்படுகிற கும்மாளங்கள், “நாடி நலக் கலை வளர்த்த தமிழர் நாடே! நாசமாய் நீ போவதும் உன் தலையெழுத்தா?” என்று வேதனைப்படுகிறார். நம் நாட்டு நாடகத்தை…

சிந்தனையாளன் பொங்கல் மலர் 2018 வெளியீட்டு விழா. சென்னை

  மார்கழி 23, 2048 ஞாயிறு சனவரி 07, 2018 சந்திரசேகர் திருமண மண்டபம், மாம்பலம், சென்னை 600 033 சிந்தனையாளன் பொங்கல் மலர் 2018 வெளியீட்டு விழா உண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கோரிக்கை மாநாடு நிறைவுரை : வே.ஆனைமுத்து

சங்கக்காலத்தமிழரின் சடங்குகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

மார்கழி 20,21, 2048 * வியாழன், வெள்ளி  * சனவரி 4,5, 2018 தமிழ் உயராய்வு மையம் திரு சேவுகன் அண்ணாமலை கல்லூரி   மலேசியா தமிழ் இலக்கியக் கழகம் மலேசியா இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் “சங்கக்காலத்தமிழரின் சடங்குகள்”

மோடி அரசின் முத்தலாக்கு தடைச் சட்டக் கண்டனப் பொதுக்கூட்டம்,குவைத்து

குவைத்து தமிழ் அமைப்புகள் & அரசியல் கட்சிகள் பங்கேங்கும் மோடி அரசின் முத்தலாக்கு தடைச் சட்டக் கண்டனப் பொதுக்கூட்டம் நாள் & நேரம் : மார்கழி 20, 2048 04.01.2018 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல்… இடம்: கு.த.ச.(K-TIC) தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்து இந்திய இறையாண்மையைக் காக்க, வேற்றுமையில் ஒற்றுமையைப் பேண, அநீதிக்கான எதிர்ப்பைப் பதிவு செய்ய குவைத்து வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இதையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு அலைகடலெனத் திரண்டு வருக! தேசம் காப்போம்! நேசம் வளர்ப்போம்!!…

“தமிழரசனின் காலத்தின் குறள் பெரியார்” குறித்து மின்னூர் சீனிவாசன்

குளறுபடி நீங்கக்           குறள்படிக்க வாங்க! – மின்னூர் சீனிவாசன்     குறள் வெண்பாவின் நடையே – நமக்குக் கொடுக்கும் கருத்துப் படையே! அறமும் புதிதாய்க் கொண்டு – வேல் அரசு உரைத்தார் விண்டு!   ஆழ்ந்து படிப்போம் நூலை – நம் அறிவுக் கூர்மை “வேலை” சூழ்ந்த தோழர் எடுப்பார் – மடமைத் தொல்லை தீரத் தடுப்பார்!   சாதிச் சழக்கும் இன்றி – மதம் சார்ந்த வழக்கும் இன்றி நீதி மனித நேயம் – தோன்றின் நிகழும் மனத்தில் மாயம்!…

எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1. அணிந்துரையும் பதிப்புரையும்

எங்கே போகிறோம்?  1.அணிந்துரையும் பதிப்புரையும் அணிந்துரை – முனைவர். த. பெரியாண்டவன் நிறைமொழி மாந்தராக விளங்கும் தவத்திரு குன்றக் குடி அடிகளார் சைவத்தையும், தமிழையும் இரண்டு கண்களாகக் கொண்டொழுகும் செந்தண்மையாளர், சமயமும், தமிழும் சமுதாயத்தை வளர்ப்பதுடன் தமிழும் வளர வேண்டும் என்னும் கொள்கையர். மொழி வளர்ச்சி என்பதையே பண்பாட்டின் வளர்ச்சி என்பதை பறைசாற்றி வரும் பண்பாளர். ஒழுக்கத்தில் குன்றின் மேல் இட்ட விளக்காக இலங்கி வரும் அடிகளார் அவர்கள் மதுரை வானொலி நிலையத்தில் தொண்ணுற்று நான்காம் ஆண்டு பல்வேறுநாட்களில் விடுதலைநாள் விழாச் சிந்தனைகள், கல்விச் சிந்தனைகள்,…

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 1. அணிந்துரையும் முன்னுரையும்

சங்கக்காலச் சான்றோர்கள்  1. அணிந்துரையும் முன்னுரையும் அணிந்துரை – பேராசிரியர் திரு. ம.சண்முக சுந்தரனார் ‘சங்ககாலச் சான்றோர்கள்’ என்னும் தலைப்புக்கொண்ட இந்நூலில் திரு. ந. சஞ்சீவி அவர்கள், விருந்தினர்க்கு அறுசுவை அடிசில் சமைத்து அளிப்பது போல, பழந்தமிழ் நூல்களின் சுவைகளையெல்லாம் பிழிந்து தமிழருக்கு ஒர் இலக்கிய விருந்து அளித்துள்ளார். வீரமும் பரிவும், நேர்மையும் நெறியும், வள்ளன்மையும் தெளிவும் இக்கட்டுரைகளில் ஊறி வழிகின்றன. பழந்தமிழ்ப் புலவர்களும் அவர்கள் அறிவுரைகளைக் கேட்டு ஒழுகி அவர்களைப் பெருமைப்படுத்திய புரவலர்களும் இதில் கண் நிறைந்த காட்சியளிப்பதோடு, தங்கள் சுவை மிக்க…

தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 1

தனித்தமிழ் மாட்சி 1 பண்டைக்காலந் தொட்டு இன்றுகாறும் நடைபெறும் மொழி தமிழ் ஒன்றே ஆகும். பண்படுத்தப்பட்ட பழைய மொழிகளில் தன்னைத் தவிர மற்றையவெல்லாம் இறந்து போகவுந், தான்மட்டும் இறவாமல் நடைபெற்றுப், பன்னூறாயிரம் மக்களுக்குப் பெரிது பயன்பட்டு வரும் பெருஞ்சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியைக் கல்லாதவர் எல்லாந் தூயதாய் வழங்கியவர், அதனைக் கற்று அதனாற் பேரும் புகழும் பொருளும் அடைந்துவருஞ் சிற்சிலர் மட்டுந் தமக்கு எல்லா நலங்களையுந் தந்து தாயினுந் தம்மைப் பாதுகாத்துவரும் அதனை நிலைகுலைத்து அழித்தற்குக் கங்கணங்கட்டி நிற்கின்றார்கள். இவர்களின் இக்கொடுஞ் செயல் தன்னைப் பெற்ற…

அகல் விளக்கு – மு.வரதராசனார் 1. அறிமுகம்

அகல் விளக்கு  1 அறிமுகம்   சந்திரனும் வேலய்யனும் இளமை நண்பர்கள். இருவரும் இளமையில் ஒரே வகுப்பில் பயின்று, ஒன்றாகவே விளையாடி, ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஆனால், பத்தாவது வகுப்புக்குப் பின்னர், அவர்கள் வாழ்வில் பிரிவு ஏற்பட்டது. பிரிவு விரிந்து பரந்து ஒருவரை ஒருவர் எட்டாத அளவிற்குக் கொண்டு சேர்த்துவிட்டது. சந்திரனுடைய வாழ்வு மேடு பள்ளம் நிறைந்தது. வேலய்யனுடைய வாழ்வு சமவெளியில் அமைதியாகச் செல்லும் பெரிய ஆற்றை ஒத்தது. சந்திரனுடைய வாழ்க்கை அரளிச் செடியைப் போல், ஒருபுறம் கண்ணைக் கவரும் அழகும் நறுமணமும் உடைய மலர்களைக்…

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 1

திருவள்ளுவர்: 1   சங்கப் புலவர் சரிதங்களுள் ஒன்றுமே சரியாகத் தெரிந்தபாடில்லை. நீண்ட இடைக்கால இருளால் விழுங்கப்பட்ட இலக்கியங்கள் பலவாக வேண்டும். சிதிலமான பழைய சுவடிகளைத் தேடியெடுத்துச் சென்ற சில வருடங்களாக அச்சியற்றி வெளிப்படுத்திவரும் சில பேருபகாரிகளின் அரிய முயற்சியாற் கிடைத்துள்ள சில சங்க இலக்கியங்கள் தவிரப் பழம்பண்டைத் தமிழகச் செய்தி தெரிவிக்கும் தக்க சாதனங்கள் வேறு கிடையா. கிடைக்கும் சில சங்க நூல்களிலும் சங்கப் புலவர் சரிதம் பற்றிய குறிப்புக்கள் காண்பது அரிது. இந்த நிலையில், திருவள்ளுவரைப் பற்றிய சரிதக் குறிப்புக்களைத் தெளிந்து…

1 2 9