நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் : இராகவ(ஐயங்கா)ர் – 1.

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் 1. முகப்புரை பூவெலாம் புகழும் நாவலம்பொழிற்கண் அமிழ்தினு மினிய தமிழ்பயில் தென்னாட்டின் பண்டை அறிவுவளர்ச்சி, அரசியன்மேம்பாடு, இல்லற வாழ்க்கை கலம், கொடைவீரம், படைவீரம், கடவுள்வழிபாடு இவற்றைச் செவியும் உள்ளமும்களிகூரக் கவர்ந்துண்ணும்வண்ணம் இயற்றும் விழுமிய செய்யுட்டிறன் முதலிய நாகரிகப் பெருமைகள் எத்துணையோ அறிந்துகொள்ளற்கு வாயிலாக ஒப்புயர்வற்று விளங்குவன, சங்கக்காலத்து வழங்கிய இலக்கண இலக்கிய நூல்கள். அவ்வரியபெரிய நூல்களாற் றெளியக் கிடக்குந் தமிழர் சிறப்பியல்புகள் பலவற்றுள் அறிவுவளர்ச்சியில் ஆண்மக்க ளொப்பப் பெண்பா லாரும் தலைசிறந்து நிலவிய பேரியல்பு, நல்லோர் பலரானும் மிகவும் பாராட்டப்படுவது…

தமிழ்ப்புலவர் சரிதம் – பரிதிமாற்கலைஞர் : 1. முகவுரையும் முன்னுரையும்

தமிழ்ப்புலவர் சரிதம் முகவுரையும் முன்னுரையும் ஆசிரியர் ஒரோவோர் காலத்தில் மாதாந்த பத்திரிகைகளிலும், தாம் பதிப்பித்த சில நூல்களின் முகவுரைகளிலும் எழுதியுள்ள ஒரு சில தமிழ்ப் புலவர்களின் சரிதைகளை யொரு சேரத் தொகுத்துத் தனிப் புத்தகமாக வெளியிட்டால் தமிழ் பயிலும் இளைஞர்க்குப் பயன்படுமென்று கருதி, ஆசிரியர்தம் குமாரராகிய நீ.வி.கு. சுவாமிநாதன் அவர்கள் அவற்றைத் திரட்டித் ‘தமிழ்ப் புலவர் சரித்திரம்‘ எனப் பெயர் தந்து இந்நூலைப் பிரசுரித் துள்ளார். பல வாண்டுகளுக்கு முன்னர்த் தமக்குக் கிடைத்த சில ஆதாரங்களைக் கொண்டு ஆசிரியர் வரைந்த இவ்வரலாறுகளிற் கண்ட காலவரையறை…

தமிழ்ப்பாட்டை உயர்த்தி வெல்வோம்! – கவிக்கோ துரை வசந்தராசன்

தமிழ்ப்பாட்டை உயர்த்தி வெல்வோம்!   தண்ணீரின் நரையைத்தான் பனியே என்பேன்! தாவரங்கள் தலைநரைப்பைப் பூக்க ளென்பேன்! கண்ணீரின் நரையைத்தான் நெருப்பே என்பேன்! காற்றுக்குள் நரைவிழுந்தால் புயலே என்பேன்! மண்நரையைத் தரிசென்பேன்! மலட்டு வான மனநரையைத் துறவென்பேன்! புழுக்கம் உண்ட விண்நரையை வெண்மேக மென்ற ழைப்பேன்! வெளிச்சத்தின் நரைதானே இருட்டே என்பேன்! சொல்நரையை இழிவென்பேன்! சோகம் தின்னும் சுகம்நரைத்தால் பிணியென்பேன்!பல்ந ரைபோல் வில்நரைத்தால் என்னென்பேன் ? கோழை யென்பேன்! விழுமழையின் நரையைத்தான் வாடை யென்பேன் அல்நரையை ஔியென்பேன் ! ஏழை வீட்டு அடுப்புக்குள் எழும்நரையை வறுமை…

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 5. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)                 பெண்ணின் பெருந்தக்க யாவுள?  கற்பென்னும்                  திண்மை உண்டாகப் பெறின்    (54)  பெண்ணின்=மனைவியைவிட,பெருந்தக்க=பெருமை மிக்கவை, யாவுள=எவை உண்டு, கற்பு என்னும்=கற்பு என்று சொல்லப்படும், திண்மை=கலங்கா நிலைமை, உண்டாகப் பெறின்=இருக்கப்பெறுமானால்.    நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக் கூடியவள் மனைவியேயாவாள். அவள் தான் கொண்ட கணவனிடம் நீங்காத அன்புடையவளாய் இருத்தல் வேண்டும்….

தமிழ் வளர்கிறது! 10-12 : நாரா.நாச்சியப்பன்

(தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன் தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 10-12    தமிழ்நாட்டில் வானொலியை இயக்கு விக்கும் தனியுரிமை பெற்றவரோ வடமொ ழிப்பேர் அமைத்ததனை அழைக்கின்றர் இந்தி தன்னை அருமுயற்சி செய்திங்கே பரப்பு கின்றார். சமைத்துவைத்த அறுசுவைசேர் உணவி ருக்கச் சரக்குதனைக் குடிப்பாட்டும் சழக்கர் போலே நமைத்துன்பப் படுத்துகின்ற ஆள வந்தார் நாட்டுமொழி வளர்ச்சியினைத் தடுக்க லானார் !   (10)   கொள்ளைகொலை ஆபாசச் செய்தி யென்னும் குப்பையெலாம் பரப்புகின்ற செய்தித் தாள்கள் கள்ளமிலா நாட்டினரின் உள்ளங் தன்னைக் கயமைவழிச் சேர்க்கின்ற கதையி தழ்கள்…

27-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா, ஆதம்பாக்கம்

   மார்கழி 17, 2048  திங்கட்கிழமை 01-01-2018  காலை 8.30 முதல் இரவு 9.00 மணி வரை  வி.எம்.அரங்கம் 8/இ,2 ஆவது தெரு. வி.வி.குடியிருப்பு, ஆதம்பாக்கம் சென்னை 600 088 27-ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா நிகழ்ச்சி நிரல்:  6–ஆம் தந்திர முற்றோதல் திருமுறை விண்ணப்பம், தமிழ்நாட்காட்டி வெளியீடு, திருமந்திர வினா விடை அரங்கம் திருமுறை இசைஅரங்கம் விருதரங்கம் பொருட்டமிழ் வேதப்பீடும் பெருமையும்

  இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்) 09 –  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  08  தொடர்ச்சி]   இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்) 09 மக்கள் நாடு மக்களால் உருவாகியது. மக்களே நாட்டின் செல்வம். மக்களின்றேல் நாடு ஏது?  மக்களின் சிறப்பே நாட்டின் சிறப்பு. மக்களிடையே இன்று பல வேற்றுமைகள் உள. இவ் வேற்றுமைகளுள் மக்களை அல்லலுக்கு ஆளாக்குவன சாதியும் மதமும் ஆகும். அன்று தமிழ் மக்களிடையே சாதி வேறுபாடுகள் தோன்றில. `சாதி’ என்னும் சொல்லே தமிழ்ச் சொல் அன்று.  இதனால் `சாதி’ பற்றிய பிரிவு தமிழகத்துக்குப்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34   பாலல்ல வெளுத்த தெல்லாம்! உண்டுடுத்திப் பவனிவரு வோரெல்லாம் மனிதரல்ல ஆலல்ல மரங்களெல்லாம்! அதனைப்போல அருங்கல்வி கற்றபுகழ் மாந்த ரெல்லாம் சாலபெரும் நல்லோரும் அல்ல! பல்லோர் சரியான முழுமூடக் கயவராகி ஏலமிடு பொருள்போலே ஆனார் இன்று! என்னென்பேன்! இது பெரிய வெட்கக்கேடு! வானகமே மழை நீரைப் பருகிவிட்டு வையத்தை வெறுப்பதுபோல், அறம் செய்கின்ற தானத்தான் பொருளையெலாம் ஏப்பம்விட்டுத் தன்கையை விரிப்பது போல், நேர்மை நெஞ்ச மானத்தை மாவீரன் துறப்பதைப் போல்,…

காலத்தின் குறள் – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

காலத்தின் குறள் அதிகாரம் 1.நூன்முகம்   1.அறிவுறச் செய்தார் பெரியார் அவரைச் செறிவுற ஏற்கும் உலகு. 2.அறிவாசான் சொல்லை அழகுக் குறளில் அறிவிக்கா விட்டால் தவறு. 3.வள்ளுவன் வாய்ச்சொல்லை எண்ணித் துணிந்தேன்நான் தெள்ளுதமிழ் செப்பும் குறள். 4.உள்ளத்தில் உள்ளார் பெரியார் அவரை உலகுக்(கு) உரைக்கும் குறள். 5.உள்ளவரை நல்லமுறை தந்தவரைக் கூறத்தான் வள்ளுவரைப் பின்தொடர்ந் தேன். 6.குறள்வெண்பா கற்றேன் பெரியார் முழக்கக் குரலென்பா கூறிநிற் கும். 7.முடியாது எனவொரு சொல்லை நினையேல் முடியும் பெரியாரைப் பற்று. 8.பெரியார் நெறியைக் குறள்வழிக் கூற அரிதாய் இருக்குமிந்…

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 5.

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 4. தொடர்ச்சி)     வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல்  (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)   வாழ்க்கைத் துணைநலம்                   இல்லற வாழ்க்கை ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கணவனும் மனைவியுமாகக் கூடி வாழும் வாழ்க்கையாகும். இருவருள் ஒருவர் இல்லையானாலும் இல்லறம் சிறப்புறாது. இல்வாழ்வு அமையப் பெறுவதற்கே இருவரும் ஒன்று கூட வேண்டும். இல்லற வாழ்வில் இருவருமே தலைவர்கள். கணவன் தலைவன்; மனைவி…

தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன்

(தமிழ் வளர்கிறது! 4-6 : நாரா.நாச்சியப்பன் தொடர்ச்சி)   தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன்   பொய்யான கருத்தெல்லாம் தமிழர் நாட்டில் புகுத்துகின்ற கதைகளையே வெறுத்தொ துக்கச் செய்யாரோ எனநினைத்தால் கலைந யத்தைச் செந்தமிழில் இறக்கிவைத்த கவிதை யென்று மெய்யாக விழாக்கள்பல நடத்தி வைத்து மேன்மேலும் அக்கதையே பெருக்கு வார்கள் செய்யாதே என்பதனைச் செய்வ தற்கே திரண்டோடி வருவாரிம் முரண்டர் கண்டீர் !    (7)   தென்றமிழில், வடமொழியின் சொற்கள் வந்து திரிந்ததென ஆராய்ச்சி நடத்திக் காட்டி அன்றிருந்த தமிழ்ச்சொல்லும் வடசொல் லென்றே அழிவழக்குப்…

திமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

திமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்!  கடந்த 13 ஆண்டுகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில்  இப்பொழுது முதன் முறையாக ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆளுங்கட்சியுடன் சேர்ந்து முதன்மை எதிர்க்கட்சியான திமுகவும் தோற்கடிக்கப்பட்டு விட்டது.  இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் திமுக தோற்றதன் காரணம் தாலின் என்பதுபோலும் திமுக தொண்டர்கள் விலைக்குப் போனதும்தான் எனவும் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. உண்மையில் முற்றிலும் தவறான செய்திகளாகும் இவை. தினகரன், தி.மு.க. கூட்டணி என அதிமுக கூறுவது தன் தோல்வியை மறைக்கத்தான். எதிர்க்கட்சி கூட்டணி வைத்தால் தோல்வியுறும் என்றால் அதிமுக வலிமையாக…