ஒற்றுமையால் ஒடுக்குவோம்! – தி.வே.விசயலட்சுமி

ஒற்றுமையால் ஒடுக்குவோம்!   குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றே என்பர். குழந்தைகளும், தெய்வச் சிலைகளும் திருடப்படுவதும், விலைக்கு விற்கப்படுவதுமாகிய நிகழ்வுகள் நாடெங்கும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற குற்றங்கட்குத் தண்டனை விரைவில் கிடைத்து விடும் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாமற் போனது. அண்மையில் மதுரை சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பவித்திரா என்ற ஐந்து அகவைச் சிறுமி, அரசு மருத்துவ மனைமுன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், ஐந்து பேர் கொண்ட குழு அக்குழந்தையைக் கடத்திச் சென்று மகப்பேறு இல்லாத் தம்பதியருக்கு விற்று விட்டதாகவும் அறிந்தோம். காவல்துறை நடவடிக்கை சரியின்மையால் சென்னை…

வா, தமிழா! தமிழா! – நக்கீரன் பாலசுப்பிரமணியம்

வா, தமிழா! தமிழா!   வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம் கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம் வாளெடுத்து வா தோழா அந்தப் பகையை வென்று முடிப்போம் தோள்கள் சேர்த்து வா தோழா நம் தேசத்தைக் காத்திடுவோம் எமனையும் கண்டு அஞ்சோம் பனங்காட்டுப் புலியிது என்போம் நெற்றியில் இந்த மண்ணை நாம் திலகமாகச் சுமந்திடுவோம் வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம் கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம் ஆயிரம் நாடுகள் அன்று நம்மைச் சுற்றியழித்தது பழங்கதையே தீரத்துடன் நாம் நின்று இனி வெல்லப்போவது புதுக்கதையே…

தமிழ்த் தென்றல் – 2/2 : கி.ஆ.பெ.

தமிழ்த் தென்றல் 2/2   பெரியாரைக் கொலை செய்யும்படி மறைமலையடிகள் தூண்டினார் என்று அடிகளார்மீது வழக்குத் தொடரப் பட்டிருந்தது. அதைக் கண்டு பெரிதும் கவலைப்பட்டுப் பல்லாவரத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போய் மறைமலையடிகளிடம் ஒரு கடிதத்தை வாங்கச் செய்து அதைப் பெரியாரிடம் காட்டி, அவ்வழக்கைத் திரும்பப்பெறச் செய்தற்கு முதற்காரணமாயிருந்து என்னைத் தூண்டியவரும் திரு, வி. க. அவர்களே யாவார்.   திரு.வி.க. அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள தன்னுடைய வரலாற்று நூலில் என்னைப்பற்றி நீண்ட தொரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அது அவர் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல்…

தமிழ்க்கூடல், மாதவரம், சென்னை

கார்த்திகை 23, 2048 சனி  09.12.2017 பண்ணைத்தமிழ்ச்சங்கம் தமிழ்க்கூடல், மாதவரம், சென்னை – 51   கவியரங்கம் சிறப்புரை விருதுகள் வழங்கல்   கவிக்கோ துரை.வசந்தராசன்

தமிழக வரலாறு  5/5 – மா.இராசமாணிக்கனார்

(தமிழக வரலாறு 4/5 தொடர்ச்சி) தமிழக வரலாறு  5/5  மனிதனது நேர்மையான வாழ்க்கைக்கு உரிய கொள்கைகளின் தொகுப்பே சமயம் எனப்படும். அச்சமயம் – இறையுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், காலப்போக்கில் சமயக் கதைகள் பலவற்றையும் மூடநம்பிக்கைகள் பலவற்றையும் புகுத்திச் சிலர் சமயத்தின் பேரால் வணிகம் நடத்தலாயினர். இக்கதைகளையும் நம்பிக்கைகளையும்பற்றி விரிவான முறையில் எழுதப்பட்டவையே புராணங்கள் என்பவை. ஆங்கில அறிவும் எதனையும் எண்ணிப்பார்த்துச் செய்யும் ஆற்றலும் மிகுந்த நம் நாட்டு அறிஞர் பலர், இப்போது இவற்றின் பயனின்மையை உணர்ந்து வருகின்றனர்; இவற்றிற்கும் சமயத்திற்கும் கடுகளவும் தொடர்பில்லை…