நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 4.

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 3. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- 4. ஆதிமந்தியார் இவர் பெண்பாலர் என்பதும், இவர் நல்லிசைப்புலமை வாய்ந்தவர் என்பதும், ‘மக்க ணுதலிய வகனைந் திணையுஞ் சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஆ’ என்னும் அகத்திணையியற் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர், ‘மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் ண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலு மாடுகள மகனே’. (குறுந்தொகை-31) என்னும் பாடலை எடுத்தோதி, ‘இது காதலற் கெடுத்த…

தமிழ்க் குறும்பாக்கள்  புதிய உயரங்களைத் தொட்டுள்ளன  – கவிஞர் மு.முருகேசு

தமிழ்க் குறும்பாக்கள்  புதிய உயரங்களைத் தொட்டுள்ளன         – கவிஞர் மு.முருகேசு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்(காஞ்சி மாவட்டம்) சார்பில், கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய குறும்பா(ஐக்கூ)  நூல் வெளியீட்டு விழா செங்கற்பட்டிலுள்ள சைலா அரங்கில் நடைபெற்றது.    இவ்விழாவிற்குக் கலை இலக்கியப் பெருமன்றம் காஞ்சி மாவட்டத் தலைவர் ஓவியக்கவி நா. வீரமணி தலைமை தாங்கினார். கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய ‘கூடிழந்த பறவையின் குரல்’  எனும் குறும்பா நூலை மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா வெளியிட்டார்.  இதழாளர் கவிஞ்ர்  மு.முருகேசு பெற்றுக்கொண்டார். நூலைப் பெற்றுக்கொண்ட கவிஞர் மு.முருகேசு…

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் :  9

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் :  8 தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – 9 தகையணங்குறுத்தல்   தலைமகன் தலைவியைக் காணுங்கால் அவள் அழகால் உந்தப்பட்டு அதனால் உளம் வேறுபடுதல். அமைதியாக இருந்த ஆடவனின் உள்ளம் பெண்ணின் தோற்றத்தால் வருந்தத் தொடங்குதல். “தகை அணங்குறுத்தல்’  என்றால் “அழகு வருத்தத்தை அடைவித்தல்’  என்பதாகும். தலைவியைக் கண்ட தலைவன் கூறுகின்றான்:                 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை       மாதர்கொல் மாலும்என் நெஞ்சு             (1081)        அணங்குகொல்=வருத்தும் அழகுத் தெய்வமோ?; ஆய்மயில் கொல்லோ= ஆராய்ந்தெடுக்கப்பட்ட…

காலத்தின் குறள் பெரியார் : 5 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 4 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 5. பகுத்தறிவு.   1.அறிவுடன் ஆராய்ச்சி யாண்டும் துணையாய் நெறிகாத்து நிற்கும் நிலைத்து. 2.ஆராய்ச்சி ஆளும் உலகத்தை ஆய்வினைப் பேராட்சி செய்வ தறிவு. 3.மானம் அறிவாம் இரண்டையும் பேணுவோம் நாம்நம் பகுத்துணர் வால். 4.கொடுப்பாரும் கொள்ளாரும் இல்லா உலகைப் படைக்கும் பகுத்தறிவென் பார். 5.முன்னோர் உரைத்திட்டார்  மூத்தோர் வழிமொழிந்தார் என்றேபின் செல்லா திரு. 6.எப்பொருள் எத்தன்மை யார்சொன்னார் கேள்வி எழுப்புநீ வள்ளுவன் சொல். 7.மூடத்…

தமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்!

தமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்!   தமிழ்க்காப்பிற்காக . . . தமிழை அழிக்க முயலும் இந்திக்கு எதிராக … உயிரை ஈந்தவர்களுக்கும் குண்டடிபட்டும் சிறைத்தண்டனை அடைந்தும் பிற வகைகளிலும் துன்புற்றவர்களுக்கும் எங்கள் வீர வணக்கங்கள்! எனினும் இன்றைய கையாலாகாத தமிழ் மன்பதை சார்பில்  வேதனைகளைத் தெரிவிக்கிறோம்! அகரமுதல இதழினர் தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் அகரமுதல 222  தை 08 – 14, 2049, சனவரி 21-27, 2018

இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசல்   34 ஆவது நிகழ்வு

இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு  உ.வே.சாமிநாத(ஐய)ர் உரை :- திரு இந்திரா பார்த்தசாரதி தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல்   34 ஆவது நிகழ்வு  சென்னை புத்தககக் காட்சி – கற்றதும் பெற்றதும் – கலந்துரையாடல்   இடம் : சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு,    ஆழ்வார்பேட்டை    தை 14,    சனிக்கிழமை 27 -01 – 2018          மாலை 6.00  மணி

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்  – பல்வழி அழைப்பு வழியாகக் கலந்துரையாடல்

பேரன்புடையீர், வணக்கம்.  பேரவையின் மாத இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்   வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும் இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்,  வரும் தை 15,  ஞாயிற்றுக்கிழமை  சன.  28 அன்று, கிழக்கு நேரம் இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளது. இம்மாத இலக்கிய கூட்டத்தில் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கின்றார் முனைவர் மு. இளங்கோவன். இந்த இலக்கியக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம். இலக்கியச்…

கருத்தில் வாழும் கவிஞர்கள் :  மாக்கவி பாரதி -சென்னை

அன்புடையீர், வணக்கம் .   இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து கருத்தில் வாழும் கவிஞர்கள் என்கிற தொடர் நிகழ்வை மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமையன்று நடத்த இருக்கிறோம். இந்தத் தொடரின் தொடக்க நிகழ்வு தை 13, 2049 26.01.2018 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது. நிகழ்ச்சிக்குத் தலைமை : திரு வானவில் க. இரவி மாக்கவி பாரதிபற்றிச் சிறப்புரை  : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா  ‘அன்னம் விருது’ பெற இருப்பவர்  : கவிஞர் நிரஞ்சன் பாரதி…

சனவரி 25 இல் தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாடு, திருச்சிராப்பள்ளி            

  தை 12, 2049  வியாழன் சனவரி 25, 2018 மாலை 3.00   உலகமய ஆதிக்கத்திற்கு எதிராக, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு ஒற்றை இந்திய ஆட்சிக்கு எதிராக…… மொழிப்போர் ஈகியர் நாளில்   தமிழ்த்  தேசியத் தன்னுரிமை மாநாடு இடம்: தமிழ்நாடு பல்நோக்கு சமுகப்பணி  மையம், பாரதியார் சாலை, திருச்சிராப்பள்ளி பொதுவுடைமைக்கட்சி (மா.இலெ.) மக்கள் விடுதலை 9443079552/7299999168

மறைமலை நகரில் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா

  தை 13, 2049  வெள்ளி  26.01.2018 மாலை 5.00 முதல் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் விழா புலவர் புஞ்சனையரசன் அரங்கம் திருவள்ளுவர் மன்றம் மறைமலைநகர் சிறப்புரை:  பேரா.க.அருணன் தமிழிசை நடனம் திருக்குறள் ஓதல் பாராட்டுகள் பரிசு வழங்கல்

எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 4

(எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 3. தொடர்ச்சி) எங்கே போகிறோம்? – 4  கோசல நாட்டில் இராமனுக்கு முடிசூட்டப் போகிற செய்தியறிந்தபோதும் மக்கள் மகிழ்ந்தார்கள். இராமன் காட்டுக்குப் போகிறபோதும் அழுதார்கள். அது நாட்டு அரசோடு மக்கள் சேர்ந்து இயங்கிய, இயக்கத்தினுடைய விளைவு. இன்றைக்கு நம்முடைய நாட்டு அரசியலில், ஆட்சியில் அந்த இயக்கத்தோடு மக்கள் சேர்ந்து இயங்குகிறார்களா? இல்லையில்லை. நாடு கடன் வாங்கினால் நம்முடைய நாட்டு மக்கள் கவலைப்படுகிறார்களா? அழுகிறார்களா? நாட்டுக் கடனைத் தீர்ப்பதற்காக ஒருவேளை சாப்பாட்டைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்களா? சாப்பாட்டைத்…