சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 4

(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 3. தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள்   4 வீர நெஞ்சத்தாலும் ஈர உணர்வாலும் நிகரற்று விளங்கியவன் வேள்பாரி. அவன் ஆண்ட பறம்பு மலை, பகை வேந்தர் பல்லாண்டு முற்றுகையிடினும் ‘கொளற்கரி தாய்க் கொண்ட கூழ்த்தாகி அகத்தார் நிலைக்கெளிதாய்‘ (குறள், 745) அரண் ஆற்றல் மிக்கதாய் விளங்கியது. கலப்பை ஏந்தும் உழவர் எல்லாரும் கூர்வாள் ஏந்திப் போர் முனை புகினும் சிறியிலை மூங்கிலின் நெல்லும், தீஞ்சுவைப் பலாவின் சுளையும், வள்ளிக்கிழங்கும், நறுஞ்சுவைத் தேனும் வேண்டளவும் கிடைக்கும் வற்றா வளமுடையது அவன்…

வைரமுத்துவும் ஆண்டாளும் – குவியாடி ,இ.எ.தமிழ்

அனலும் புனலும் :   தண்டிக்கப்பட வேண்டிய குருமூர்த்தியும் கண்டிக்கப்படும் வைரமுத்துவும் தேவதாசி என்பது அக்காலத்தில் தவறில்லைதான். இக்காலத்தில் தவறுதான். ஆனால் வைரமுத்துவின் அன்னையை – வேசி என்று சொல்லும் எச்சு.இராசா மீது எந்தக் கண்டனமும் பாயவில்லை! ஒரு சொல் என்பது எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது, எந்தக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பவற்றைப் பொருத்தே பொருளைத்தரும். யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொருத்தும் பொருள் மாறுபடும். தாசி என்பது வேலைக்காரியைக் குறிக்கும். எனவே, இறைவனுக்கு – இறைவன் கோயிலில் வேலை செய்யும் பெண் தாசி எனப்பட்டாள். தாசன் என்பது…

வைரமுத்துவும் ஆண்டாளும் –  இரவிக்குமார், இ.எ.தமிழ்

சொன்னால் முடியும் : ஆண்டாள் சர்ச்சை – மதவெறிக்கு மாற்று சாதிப் பெருமிதம் அல்ல  வைரமுத்துவை ஆதரிப்பதா கண்டிப்பதா எனப் பார்க்காமல் இதனூடாக நிலைபெற முயலும் வகுப்புவாதத்தை எதிர்ப்பது எப்படி என்றே பார்க்க வேண்டும். மார்கழி முடிந்து தை பிறந்துவிட்டது. இன்னும் ஆண்டாள் சச்சரவு முடிவுக்கு வரவில்லை. கவிஞர் வைரமுத்து வருத்தம், விளக்கம் என வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனாலும் அவர் மீதான தாக்குதல்கள் நிற்கவில்லை. தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு கலவரத்தை மூட்டிவிடவேண்டும் என்று திட்டமிட்டு சிலர் இதை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. ஆண்டாளின்…

தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்! – தமிழ்நாடன், நக்கீரன்

தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!  ‘ஆண்டாள் தமிழ் மரபில் மலர்ந்தவர். பக்தி இலக்கியத்தில் உச்சம் தொட்டவர். அவரைப்பற்றிப் பேசும் தகுதி மதவெறியர்களுக்கு இல்லை’என்கிறார்கள் தமிழ்க் கவிஞர்கள். கவிஞர் வைரமுத்துவை மையமாக வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கும் தீப்பந்தம்… இங்கு மக்களாட்சிதான் நடக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. வைரமுத்துவுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு பக்கம் பதற்றப் பரபரப்பைப் பற்றவைக்க… இன்னொரு பக்கம் வைரமுத்து மீது வழக்குகள் பதிவாகிக்கொண்டேயிருக்கின்றன. இஃது இலக்கியவாதிகள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இவ்வளவு பதற்றப் பரபரப்பிற்கும் காரணம்,…

அகல் விளக்கு – மு.வரதராசனார். 4.

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 3 . தொடர்ச்சி) அகல் விளக்கு 4.      நெல்லிக்காய் விற்றவளும் பாக்கியமும் மற்றப் பெண்களும் இவ்வாறு அன்பு செலுத்தியது பற்றி மனம் வருந்தியது ஒரு பக்கம் இருக்க, ஆண்களிலும் பலர் அவனிடம் அன்பு காட்டியதும் எனக்கு வருத்தமாக இருந்தது. சிற்றுண்டிக் கடையில் பரிமாறுபவன் முதல் பேருந்பது விடுபவன் வரையில், பள்ளிக்கூட ஆசிரியர் முதல் கல்வி அதிகாரி வரையில் சந்திரனிடமே மிக்க அன்பு செலுத்தியதைக் கண்டேன். வந்த சில நாட்களுக்கெல்லாம் சிற்றுண்டிக் கடைக்காரன் அவனுக்கு நண்பன் போல் ஆகிவிட்டான்….

காலத்தின் குறள் பெரியார் : 4 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 3 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி)   காலத்தின் குறள் பெரியார்  அதிகாரம்  4. பெரியார் வாழ்த்து.   1.அறியார் வறியார் எளியார்க்(கு) உரியார் பெரியாரைப் போற்றும் உலகு. 2.அய்யா மொழியும் குறள்போல் உலகுக்குப் பொய்யா மொழியாம் புகல். 3.பிறப்பொக்கும் என்றார் சிறப்பினை நம்மை உரைக்கவைத் தார்பெரி யார். 4.குளிர்ப்பேச்சா அன்றுநம் அய்யாவின் பேச்சே ஒளிவீச்(சு) எனநீ உணர். 5.உண்மையைச் சொல்லத் தயங்கா அவர்குணமே வன்மையுள் எல்லாம் தலை.                                                        6.சாதி மதங்களை மோதி மிதித்தவர் நீதி அளக்குமோர்…

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 3.

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 2. தொடர்ச்சி)      நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – 3 மற்றும் அவ் வடநூலுள் ஒருசாரார், சூத்திரசாதியாரும் பெண்பாலாரும் வேதத்தின் சொல்வழக்கும் பொருளுணர்ச்சியும் மெய்யுணர்தலும் வீடும் எய்தப்பெறார் என்று கூறி, அவரை அறியாமையுள்ளே நிறுத்துப. இஃதெல்லார்க்கும் உடன்பாடன்று. பெரும்பாலார் வேதத்தை முறையே நியமிக்கப்பட்ட ஒலியுடன் ஓதற்கண் சூத்திரசாதியாரையும் பெண்பாலாரையும் விலக்குபவல்லது, அதன் சொல்வழக்கினும் பொருளுணர்ச்சியினும் மெய்யுணர்ந்து வீடுபெறுதலினும் விலக்கார். இதுவே இத் தமிழ்நாட்டுச் சிறந்த சைவ வைணவ நல்லாசிரியர் தொன்னெறி மரபாம். சைன பௌத்தரும் மெய்யுணர்ந்து வீடு…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 – வல்லிக்கண்ணன்

 (ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 8. தன்னம்பிக்கையும் தன்மான வீரமும்   பெருங்கவிக்கோ தன்னம்பிக்கை மிகுந்தவர்; தனது திறமைகளை நன்கு உணர்ந்தவர்; தன்மானம் மிக்கவர்; அதில் முகிழ்த்த வீரமும் துடிப்பும் கொண்டவர். அவருடைய இப்பண்புகள் அவரது கவிதைகளில் ஒளிப்பொறி சிதறிப் பல இடங்களிலும் பரவிக் கிடப்பதைக் காணலாம். காலமெல்லாம் விழித்திருந்தே கடமையாற்றும் கவிஞன் நான் அவனும் இவனும் எவனும் ஒன்றாய் ஆகும் கொள்கை யுடையவன் யான் விருப்பு வெறுப்பை வென்று வாழும் வேதாந்தி போல்…

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 3.

 (சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 2. தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள்   3 1. கபிலர்  தொடர்ச்சி  மாவும் பலாவும், வாழையும் வள்ளியும், ஆரமும் கமுகும், வேங்கையும் விரிமலர் வெட்சியும், தேனும் தினையும் பெருகிக் கிடக்கும் குறிஞ்சி நிலத்தில் இயற்கை அன்னையின் இன்பத் திருவிளையாடல் ஏற்றமுற்று விளங்குவது இயல்பேயன்றோ? அத்தகைய பல்வளமும் மல்கிக் கிடக்கும் பேறு பெற்று விளங்கியது மாவண்பாரியின் புகழ் பரப்பும் கலங்கரை விளக்கமாய்த் திகழ்ந்த பறம்பு மலை. பறம்பின் வளத்தைக் கபிலர் பாடியுள்ள திறத்தினை என்னென்று போற்றுவது! சங்கச் சான்றோர்க்கே உரிய…

எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 3.

(எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 2. தொடர்ச்சி) எங்கே போகிறோம்? – 3. புறநானூற்றுக் காலத்திற்கு வந்தால், பன்னாட்டுத் தேசிய இளைஞனைப் போல விளங்குகின்றான் கணியன் பூங்குன்றன். ஓர் உலகம் என்னும் கருத்து அறிவியல் பூத்துக் குலுங்கிய பின்னர் மேற்றிசை நாட்டில் தோன்றிய கருத்து. இன்னும் சொல்லப் போனால் அச்சத்தில் தோன்றிய கருத்து. ஆனால் கணியன் பூங்குன்றன் அன்புதழுவிய நிலையில் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடுகின்றான். “எல்லா ஊர்களும் என்னுடைய ஊர். எல்லாரும் என்னுடைய சுற்றத்தார்” என்ற கணியன்…

அகல் விளக்கு – மு.வரதராசனார். 3 .

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 2 .  தொடர்ச்சி)   அகல் விளக்கு.  3 .     மூன்றாம் வீட்டில் பாக்கியம் என்று ஓர் அம்மா இருந்தார். அவருடைய தம்பி கன்னெய்(பெட்ரோல்) கடையில் கணக்கு எழுதுபவர். அந்த அம்மா இளமையிலேயே கணவனை இழந்தவர். குழந்தையும் இல்லை. அதனால் அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். குழந்தையாக இருந்த என்னோடும் என் தங்கையோடும் அன்பாகக் கொஞ்சுவார். ஆட்டங்களில் கலந்து கொள்வார். வீட்டில் ஏதாவது அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தால், எங்கள் அழுகுரல் கேட்டு விரைந்து வருவார்….

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 3

(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 2 தொடர்ச்சி) திருவள்ளுவர்  : 3   தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். (263)   நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் மறையாவா நெஞ்சத்திற் குறுகிய கரியில்லை யாகலின். (கலி. நெய்தல்-8)   களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும். (928)   . . . . . . . . . காமம் மறையிறந்து மன்று படும். (1138)   தோழிநாங், காணாமை யுண்ட கருங்கள்ளை…